சனி, ஏப்ரல் 23, 2005

Firefox பிரச்சனைக்குத் தீர்வு (only for Windows XP/2000)

மன்றத்தில் பதித்த இந்த செய்தியை மறுபடி இங்கு தமிழில் பதிக்கிறேன். தமிழெழுத்துக்கள் Firefox உலாவியில் சிதைவுறுவதைத் தடுக்க நீங்கள் செய்ய வேண்டியது இதுவே:

இந்த கோப்பை இறக்கி, கீழ்க்கண்ட folderஇல் சேமியுங்கள்:

C:\Documents and Settings\[User Name]\Application Data\Mozilla\Firefox\Profiles\xxxxx.default\chrome

இதில் கவனிக்க வேண்டியவை:

1. [User name] என்பது உங்களது Windows 2000/XP user name ஆகும்.

2. xxxxx.default என்பது '.default' என முடியும் ஒரு folderஇன் பெயர். Windows Explorerஇல் பார்த்தால் உங்களுக்கே தெரியும்.

3. 'Application Data' எனப்படும் folderஇன் பாதை (path) வெவ்வேறு கணினிகளில் வேறுபடலாம், மறைக்கப்பட்டும் இருக்கலாம் (i.e. hidden). Start > Run உரையாடல் பெட்டியில் %AppData% என கட்டளையிட்டால் அது 'Application Data' folderஐத் திறக்கும். அங்கிருந்து மேற்குறிப்பிட்ட folderருக்குத் தாவிக்கொள்ளலாம்.

4. கோப்பை சரியான இடத்தில் சேமிப்பது மிக மிக முக்கியம்.

5. Firefox menuவில் Tools > Options > General > Fonts and Colorsஇல் Always use my fonts என்ற checkbox tick செய்யப் பட்டிருக்கக் கூடாது.

இந்த மாற்றங்களைச் செய்வதற்கு முன் Firefoxஆல் காணப்பட்ட ஒரு வலைப்பதிவின் தோற்றமிது. மாற்றங்களுக்குப் பின் அதே வலைப்பதிவு Firefoxஇல் இப்படிக் காட்சி அளிக்கும். முன்னேற்றம்தானே?

இது தொடர்பாக நான் கூறவிரும்பும் இன்னொன்று. அன்பார்ந்த (Windows 2000/XPயைப் பயனிக்கும்) Internet Explorer பயனர்களே,


Get Firefox!

10 கருத்துகள்:

Badri Seshadri சொன்னது…

Good show!

By the way, this could also work in Win 98. I will test the same in Win 98 and revert on whether this works or not.

Voice on Wings சொன்னது…

Badri, the only reason it wont work in Windows 98 or Me is because of the lack of Indic language support on these platforms. I've already tried out in Win'98 (which is my home PC's OS) without success.

I was reading your blog yesterday where you had indicated about a new initiative to make things easier. I want to recommend an open source technology called ICU (International Components for Unicode). If it can be localized for Tamil, it would be a multi-platform solution for Tamil Computing, as it is available on platforms starting from '98/Me to Linux, Mac etc. It requires VC++ / Java expertise which i do not currently have :) If the necessary skilled resources can be roped in, we have a promising technology in this ICU.

பெயரில்லா சொன்னது…

நன்றிகள்.

அன்புடன்
நவன் பகவதி

பெயரில்லா சொன்னது…

Gr8 Job :)
Thanks for taking my blog as an example. I will give these directions and link in my blog too.
Thanks again.

Love,Arun Vaidyanathan

jeevagv சொன்னது…

user css எப்படி சேர்ப்பது என்று விளக்கியதற்கு நன்றி.

Yagna சொன்னது…

பிரமாதம்! voice on wings, ICU VC++ மேட்டரை என்னன்னு பார்க்கறேன். நம்ம லெவலுக்கு இருந்தா ஏதாவது செய்யலாம். என்ன செய்யனும்னு உங்களுக்கு தெரிஞ்சா மின்னஞ்சல் அனுப்புங்களேன்.

Voice on Wings சொன்னது…

நவன் பகவதி, my pleasure :)

Arun, your blog was a good example because the entire posts were jinxed, unlike others where only the titles were messed up. :)

Jeeva, பூந்து விளையாடுங்க user CSSஅ வச்சிகிட்டு :)

யக்ஞா, எனக்குப் புரிந்த வரையில் ICUவை தமிழ்ப்படுத்தினால் இப்போதிருக்கும் Microsoft Indic Language Supportஐச் சார்ந்திருக்கும் நிலையிலிருந்து தமிழ்க் கணிமை விடுபடும் என்பதே. எனது புரிதலில் பிழை இருந்தால் திருத்தவும்.

மேற்கூறிய இன்றைய நிலையால் நமது செயல்திறன்கள் மிகவும் கட்டுப்பட்டு இருக்கின்றன. XP/2000 (both from Microsoft) ஆகிய இரு இயங்கு தளங்களே உள்ளன நாம் முழுமையாக கணினியில் தமிழை பயன் படுத்துவதற்கு. Monopoly என்று ஆங்கிலத்தில் இதைக் கூறுவார்கள், தமிழில் என்னவோ. இத்தகைய monopoly சூழல் வணிகருக்கு சாதகமாகவும் வாடிக்கையாளருக்குப் பாதகமாகவும் உள்ள ஒன்று என்பதனாலேயே சட்ட ரீதியிலும் MRTP, Antitrust போன்ற சட்டங்களால் இதற்கு எதிர்ப்புகள் உண்டு. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், நம்ம பாடு பேஜார்தான் :) We need an alternative for MS Indic Language Support that is more flexible and extensible. Eagerly await your response.

இராதாகிருஷ்ணன் சொன்னது…

அருமை! இனிமேல் உடைந்து தெரியும் வலைப்பதிவுகளுக்குச் சென்று மாற்றுங்கள் எனக் கேட்க வேண்டியதில்லை. நன்றி!

Yagna சொன்னது…

Voice on wings, இதை பாருங்களேன் - http://web.ics.purdue.edu/~ykalyana/blog/2005/04/firefox.html.
இரண்டு நாள் கூகிள்,மொசில்லா வலைத்தளம், தமிழ்லினக்ஸ் மற்றும் இதர இடங்களில் ஆராய்ச்சி செய்தது. தங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

பெயரில்லா சொன்னது…

வலைப்பதிவு templateல ஒரு script எழுதி சேர்த்துட்டா, firefoxல பார்க்கும்போது text-align=leftன்னு மாத்தறதுக்கு என் வலைப்பதிவில் ஒன்னு: http://www4.brinkster.com/shankarkrupa/blog/default.asp?entryid=42