வெள்ளி, ஏப்ரல் 29, 2005

Windows 98 / Me பயனர்களுக்கு (Firefox matter)

உங்கள் இயங்கு தளத்தில் Firefox பிரச்சனைக்குத் தீர்வில்லை என்று பொதுவாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது. ஆனால் அது உண்மையாகாது. உங்கள் கணினியிலும் Firefox உலாவியில் தமிழை அழகாகத் தெரியப் படுத்தலாம். செய்முறை பின்வருமாறு:

1. இந்த கோப்பை இறக்கி, கீழ்க்கண்ட folderஇல் சேமியுங்கள்:

C:\WINDOWS\Application Data\Mozilla\Firefox\Profiles\xxxxxxx.default\chrome

(Note: the file userContent.css has been revised to enable all Windows versions to support Firefox for tamil browsing)

2. விரிவான விளக்கத்துக்கு என் முந்திய பதிவை ஒரு முறை பார்த்துக் கொள்ளுங்கள்.

3. உங்கள்் கணினியில் "TSCu_Paranar", "ThendralUni", "TSCu_InaiMathi", "TheneeUni" ஆகியவற்றில் ஏதாவது ஒரு எழுத்துரு நிறுவப் பட்டிருக்க வேண்டும், அவ்வளவே. thamizha.comஇலிருந்து இவற்றை இறக்கிக் கொள்ளலாம்.

4. Firefox menuவில் Tools > Options > General > Fonts and Colorsஇல் Always use my fonts என்ற checkbox tick செய்யப் பட்டிருக்கக் கூடாது.

இணையத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள் :)

10 கருத்துகள்:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) சொன்னது…

thanks 'voice on wings'.

appreciate it.

(note: will add the ''http://www.getfirefox.com/'' now. ;) )
hope the tamil firefox would soon carry this modification.

பெயரில்லா சொன்னது…

voice on wings,

மிக்க நன்றி. என்னால் இப்பொழுது ஒழுங்காக தமிழ் எழுத்துக்களை ஃபயர் ஃபொக்சில் பார்க்க முடிகிறது! :)

-ஒரு வின்டோஸ் 98 பயனாளீ

அன்பு சொன்னது…

அஹா...
கேளுங்கள் கொடுக்கப்படும்-னு நிரூபிச்சிருக்கீங்க. மிக மிக நன்றி. பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

Voice on Wings சொன்னது…

மதி, anonymous மற்றும் அன்பு, உங்கள் ஆதரவுக்கு நன்றி. நானும் ஒரு Windows 98 பயனாளிதான் :) இனி Firefoxதான் என் கணினியின் பிரதான உலாவி :)

Yagna சொன்னது…

voice on wings, எங்களை மாதிரி எளியோருக்கும் சட்டென புரிய இலகுவா 1,2,3 அப்படினு பட்டியல் போட்டா நல்லா இருக்குமே.
அடுத்து ஃபயர்ஃபாக்ஸ் தமிழ் பொதியில் இதை சேர்க்கவேண்டும்.

Voice on Wings சொன்னது…

யக்ஞா, இப்பொ பதிவு நல்லா புரியுதான்னு எளியவரான நீங்கதான் பாத்து சொல்லணும் :)

ஒரு கண்டுபிடிப்பு - Firefoxல தமிழ் நல்லா தெரியறத்துக்கு MILS (Microsoft Indic language support) அவசியமே இல்லபா. அதன்படி என் இரண்டு பதிவுகளையுமே கொஞ்சம் மாற்றியிருக்கிறேன். குறிப்பா, 'பாஷா இண்டியா'வுக்கு கல்தா :) MILS இல்லாதவங்க கஷ்டப் பட்டு CDல்லாம் தேடி எடுத்து அத install பண்ணிக்கிட்டு இருக்கவேண்டாம்.

How to uninstall Internet Explorer - இது நம்ம அடுத்து யோசிக்க வேன்டியது :)

பெயரில்லா சொன்னது…

"How to uninstall Internet Explorer - இது நம்ம அடுத்து யோசிக்க வேன்டியது :) "

அது அத்தனை சுலபம் இல்லை :( . இப்போ "thatstamil.com" ஃபயர் ஃபொக்சில் படிக்க முடியாது. "thatstamil.com" ஒருங்குறிக்கும் மாறும் வரைக்குமாவது "Internet explorer" தேவை! :)

-ஒரு வின்டோஸ் 98 பயனாளி

Yagna சொன்னது…

ஒரு வின்டோஸ் 98 பயனாளி அவர்களே, "thatstamil.com"'ஐ பார்க்கனும்னா,

1. அவங்க தளத்தில் 'font problem?' அப்படினு ஒரு தொடுப்பு இருக்கு. அதுல துழாவினா அவங்க பயன்படுத்தர எழுத்துரு இறக்கிக்கலாம்.

2.அந்த எழுத்துருவை நிறுவின பின், ஃபயர்ஃபாகஸை ரீஸ்டார்ட் செய்யனும்.

3. இப்பொ தட்ஸ்தமிழ் பக்கம் போனா தெரியும்.

4. தெரியலைனா, அந்த View மெனுல Encoding வந்து User defined ஆக இல்லாமல், western-... அப்படினு இருக்கனும். User defined வெச்சா வெறும் ஜாங்கிரிதான் தெரியும். :)

சரியா வருதானு சொல்லுங்க.

பெயரில்லா சொன்னது…

யக்ஞா அவர்களே,
"userConteint.css" எனும் கோப்பை தரவிறக்கமுதல் ஃபயர் ஃபொக்சில் "thatstamil.com" பார்ப்பதில் சிக்கல் இருந்ததில்லை. தற்பொழுது மீண்டும் அவர்களின் எழுத்துருவை தரவிறக்கி முயன்று பார்த்தேன். சரிவர்வில்லை:( நீங்கள் சொல்வாது போல் "character encoding western " இல் தான் உள்ளது.

ஆனால் "userContent.css" எனும் கோப்பை "chrom folder" இல் இருந்து அகற்றினால் "thatstamil.com" எழுத்துக்கள் தெரிகிறது. ஆகையால் நான் கருதுகிறென் "userContent.css" இல் உள்ள ஏதோ பிழையால்தான் இந்த சிக்கல் எழுகின்றது.

நான் இப்பொழுதெல்லாம் ஒருங்குறியில் உள்ள பக்கஙக்ளைத்தான் பெரும்பாலும் பார்வையிடுவது, ஆதலால் எனக்கு இது பெரிய சிக்கல் இல்லை. திஸ்கி, தாம், தாப், மற்றும் பிற எழுத்துருக்களுக்கு என்ன நிலை என நான் அறியேன்?! ஆகையால் பிற வின்டோஸ் 98 பயனாளிகள் அவற்றப்ப் பற்றி சொல்லலாம். இந்தப் பிழகளை உறுதிப்படுத்திய பின்னர், அதை வெற்றிகரமாக நிவர்த்தி செய்ய வாழ்த்துகள்!
எதுவாகினும் ஒருங்குறியெழுத்துகளை ஒழுங்காக படிப்பதற்கு உதவிய "voice on wings" க்கு மீண்டும் நன்றி.

Voice on Wings சொன்னது…

anonymous நண்பரே, நீங்கள் கூறுவது உண்மைதான். western encodingஇல் உள்ள தமிழ் எழுத்துருக்கள் இந்த userContent.css இருந்தால் வேலை செய்வதில்லை. userContent.cssஐ அகற்றினால் ஒருங்குறி எழுத்துருக்கள் வேலை செய்வதில்லை. Firefoxஸுக்கு சமர்பிக்க இன்னொரு ஓட்டு வேட்டையைத் தொடங்க வேண்டியதுதான் போலும் :)

யக்ஞா பதிவிலும், இங்கும் நீங்கள் இட்ட பின்னூட்டங்களால் பலவற்றைத் தெரிந்து கொள்ள முடிந்தது, அவற்றிற்கு நன்றி :)