புதன், ஏப்ரல் 06, 2005

பழையன கழிதலும், புதியன புகுதலும்

Bloggerல வலைப்பதிவ பதிச்சிட்டு அதப் பாத்து பெருமிதப் பட்டுக்கிட்டிருக்கீங்களா? அப்பொன்னா நீங்களும் என்னை மாதிரி ஒரு பழமைவாதிதான். தப்பா எடுத்துகிடாதீங்க, இதவிட இன்னும் என்னன்னவோ சந்தைக்கி வந்துடுச்சின்னுதான் சொல்ல வரேன்.

இப்பொழுது வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு தொழில்நுட்பம் podcasting ஆகும். சுலபமாக சொல்லப்போனால், ஒலிவடிவ இணையம். அதாவது, நீங்கள் எழுத்தாக கணினித்திரையில் படிப்பதைவிட பேச்சாக, ஒலிவடிவமாக கேட்டு அறிந்து கொள்ளக்கூடிய படைப்புகள் மற்றும் செய்திகள் (கொன்று போட்டாலும் 'உள்ளடக்கம்' என்ற போலியான சொல்லை உபயோகப் படுத்துவதாக இல்லை). இது எங்கு பயன்படும்? எங்கு வேண்டுமானாலும் என்பதே விடை! iPod போன்ற ஒலிக்கருவிகள் நாம் அறிந்ததே. கையில்(அல்லது பையில்) அடக்கமான, தனிச்சிறப்பு பெற்ற ஒரு கணினியைக் கொண்டு உருவான இக்கருவி, mp3 போன்ற ஒலிக்கோப்புகளை நம் செவிகளில் ஒலிக்கச் செய்யும் தன்மையுடையவை. ஆயிரமாயிரம் பாடல்களை தமக்குள் தக்க வைக்கும் சிறப்புடையவை. அளவில் சிறிதாக இருப்பதால் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்ல ஏதுவாக இருப்பவை. இவ்வாறான iPod புராணத்தை முன்னமே அறிந்தவர்கள், "விஷயத்துக்கு வா மச்சி" என பொறுமையிழக்கலாம். ஆதலால், நேரங்கடத்தாது விஷயத்துக்கே வந்துவிடுகிறேன்.

இந்தப் பதிவு இப்படி எழுத்தாக உங்கள் முன் தோன்றாமல் ஒரு பேச்சாக (எனது இனிய குரலில்) உங்கள் காதுகளில் ஒலித்தால் எப்படியிருக்கும்? podcasting என்றால் அதே, அதே! என் பதிவை கண்கள் வழியாக அல்லாது செவிவழியாக உட்கொண்டு புரிந்து கொள்ளுதல். இது ஒன்றும் புதிய அனுபவமல்ல. வானொலிகளில் உரையாடல்களையோ, உரையாற்றல்களையோ கேட்டு நாம் புரிந்து கொண்டதில்லையா? அதே போல்தான் இதுவும். சரி, podcast. அதுக்கென்ன இப்பொ? என்று இந்நேரம் உங்களுக்குத் தோன்ற ஆரம்பித்திருக்கும்.

இப்போது Bloggerஇல் பழம் தின்று கொட்டை போட்டவர்களுக்கு தெரிந்த ஒரு சமாச்சாரம் - RSS. 'செய்தியோடை' என்று தப்பாகத் தமிழாக்கிய 'செய்தித் தொகுப்பு'. podcastகளையும் இவ்வாறு தொகுக்க முடியும், தொகுக்கிறார்கள். நீங்கள் சந்தாதாரராகிய எல்லா podcast தொகுப்புகளும் உங்கள் கணினியில் வந்து விழும், நீங்கள் கேட்குமுன்னரே. இதற்கு podcatcher எனப்படும் (RSS Readerஐப் போலச் செயல்படும்) செயலியை உங்கள் கணினியில் நிறுவ வேண்டும். வெளியில் கிளம்புவதற்கு முன், iPod கருவியை உங்கள் கணினியுடன் இணைத்து அவையிரண்டும் கொஞ்சம் மனம் விட்டு பேசிக்கொள்ள அனுமதிக்க வேண்டும். அவ்வளவுதான், உங்களுக்கு வேண்டிய எல்லா podcastகளும் இப்போது, உங்கள் iPodஇல் சேமிக்கப் பட்டு, உங்கள் செவிகளுக்கு எந்நேரமும், எங்கு வேண்டுமானாலும் விருந்து படைக்கத் தயாராக இருக்கும். காலையில் அலுவலகத்திற்குச் செல்கையில் தமிழ்மணத்திலுள்ள எல்லாருடைய பதிவுகளையும் உங்கள் iPod அல்லது அதனுடன் இணைக்கப் பட்ட car stereo வாயிலாக கேட்டுக் கொண்டே பயணிக்கலாம். இது எப்டி இருக்கு?

சரி, podcastகளை தயாரிப்பது எப்படி என்கிறீர்களா? இப்போது கடைபிடிக்கப் பட்டு வரும் முறை மைக்கில் பதிவை படித்து, ஒலிதிருத்தச் செயலிகளைக் (sound editors) கொண்டு mp3 ஒலிக்கோப்புகள் உருவாக்குவதே. (அதனுடன், பின்னணி இசை என்று ஜிகினா வேலைகளும் செய்கின்றனர்) இதற்குப்பின், உருவாக்கிய podcastஐ serverருக்கு ஏற்றம் செய்து அதை இணையத்திலுள்ள அனைவரும் அடைய வழிவகுக்க வேண்டும். இந்த podcastஐ கேட்டுப் பாருங்கள், புரிந்துகொள்ள வசதியாக இருக்கும். இவ்வலைபக்கத்தில் இது குறித்து விவரமாக குறிப்பிடப் பட்டுள்ளது.

இவ்வாறு செய்வது மிகப்பெரிய ஒலிக்கோப்புகளை உருவாக்குவதால் அவற்றை இறக்கம் செய்ய அதிவேக இணைய இணைப்புகள் தேவைப்படும். iPodஇல் சேமிப்பதற்கும் அதிக இடம் தேவைப்படும். இதனால் எனக்குத் தோன்றும் ஒரு யோசனை என்னவென்றால், பதிவுகளையும் செய்திகளையும் எழுத்து வடிவமாகவே iPodக்குள் சேகரித்து, iPodஇல் உள்ள ஒரு செயலியைக் கொண்டு 'எழுத்திலிருந்து பேச்சு' (text to speech conversion) என மாற்றம் செய்து, அதனை ஒலிக்க வைப்பது என்பதே. (ஆங்கிலத்தில் ஏற்கனவே உள்ள இந்த தொழில்நுட்பம் தமிழிலும் வரவேண்டுமென்றால் நாம்தான் கொஞ்சம் மெனக்கெட வேண்டும்) இது ஒரு படி முன்னேற்றம். மற்றொரு படி, iPod கருவி தந்தியற்ற இணைப்பாற்றல் (wireless connectivity) பெறுவது. இது நிகழ்ந்தால், இணையத்தில் பதிவாகும் செய்திகளையும் படைப்புகளையும் 'உடனுக்குடன்' செவிவழியாக கேட்டுத் தெரிந்து கொள்ளலாம், நாமெங்கிருந்தாலும். இந்த முன்னேற்றங்கள் விரைவில் நிகழலாம் என்ற நம்பிக்கையில்தான் இந்த சாத்தியங்களைப் பற்றியும் 'அளந்து' கொண்டிருக்கிறேன்.

இணையத்தில் உலவுவதற்கு கணினியின் முன் உட்கார்ந்திருக்க வேண்டும் என்ற நிலையிலிருந்து விடுபட்டு, நடை, ஓட்டம், காரோட்டம், கடைத்தெருவில் பவனி என வேண்டிய பணிகளை செய்துகொண்டே இணையத்தில் பதிக்கப்படும் படைப்புகளை நுகரும் ஆற்றலை நமக்கு அளிக்கிறது இந்த podcast தொழில்நுட்பம். இது ஒரு வகையான ஊடுருவிய கணினிச் செயல் (pervasive computing) எனலாம் (என்று நினைக்கிறேன் :) ) விரைவில் நாமனைவரும் podcastடுவோமாக!

6 கருத்துகள்:

Boston Bala சொன்னது…

How to leave feedbacks to a podcaster ;;-)

துளசி கோபால் சொன்னது…

உங்க இமெயில் அட்ரஸ் கிடைக்காததாலே இதை இங்கே போடரதுக்கு மன்னிச்சுக்குங்க ப்ளீஸ்.
அன்புள்ள Voice on Wings,
பின்னூட்டத்துக்கு நன்றி!!

எங்க நாட்டிலேதான் ஒரு அரவாணி எம்.பி.
(உலகத்து முதல் அரவாணி எம்.பி)கூட இருக்காங்க.
முந்தி அவுங்க ஒரு நகரத்துக்கு மேயரா இருந்தாங்க.
இப்ப எம்.பி!!

ஜார்ஜ்ன்னு இருந்த அவுங்க இப்ப ஜார்ஜினா!!!!
பெண்ணாத்தான் அவுங்களை இப்ப எல்லோரும்
பார்க்கறாங்க!

அது சரி. இப்பத்தான் எல்லாத்துலேயும் 'யூனி செக்ஸ்' டிஸைன்ஸ்
வந்துருச்சே. இது எவ்வளவு செளகரியம்!!!!!

Aruna Srinivasan சொன்னது…

Podcasting -எனக்கு இது தலைக்கு மேலே எங்கேயோ காணாமல் போகும் சமாசாரம். ( Over Head Transmission :-) ) ஆனாலும் இந்த விஷயம்.....

"....இணையத்தில் உலவுவதற்கு கணினியின் முன் உட்கார்ந்திருக்க வேண்டும் என்ற நிலையிலிருந்து விடுபட்டு, நடை, ஓட்டம், காரோட்டம், கடைத்தெருவில் பவனி என வேண்டிய பணிகளை செய்துகொண்டே இணையத்தில் பதிக்கப்படும் படைப்புகளை நுகரும் ஆற்றலை நமக்கு அளிக்கிறது......"

....கேட்க ரொம்ப சுவாரசியமாகதான் இருக்கு!

Voice on Wings சொன்னது…

Hi bala, leaving feedback may not be possible from an iPod. However, since podcasters usually maintain a corresponding text blog (accessible using a PC), feedback can be left there against the appropriate post/cast. Another option is for the podcaster to give an email address in the podcast, to which feedback can be sent.

துளசி, உங்கள் செய்திக்கு நன்றி :) உங்கள் பதிவிலேயே உங்களுக்கு விடை கூறியுள்ளேன். எனது மின்னஞ்சல் முகவரி: metal_strings2000@yahoo.com

Aruna, podcasting உண்மையிலேயே ஒரு ஜாலியான விஷயம்தான். OHT போல இன்று உங்களுக்குத் தென்பட்டாலும், இன்னும் சில மாதங்களிலோ அல்லது ஒரு வருடத்துக்குப் பிறகோ, நீங்கள் ஒரு podcasterஆக வளர்ச்சி பெறும் தருவாயில், இன்றைய நம் உரையாடலை நினைவு கொள்வீர்கள் என நம்புகிறேன் :)

தமிழ்மணத்தில் ஏற்கனவே கவிதன் என்பவர் செய்து வரும் ஒலிப்பதிவு முயற்சிகளுக்கும் podcastingஇற்க்கும் மிகுந்த ஒற்றுமை இருப்பதாகத் தோன்றுகிறது. வழக்கிலுள்ள நெறிமுறைகளை பின்பற்றினால் அவரது ஒலிப்பதிவுகளும் podcastகளாகலாம்.

பெயரில்லா சொன்னது…

RSS--¦ºö¾¢§Â¡¨¼ ¬¸¡Ð;ºÃ¢. ¦ºö¾¢ò ¦¾¡ÌôÒ--þýÛõ ºÃ¢.
podcast-ìÌ ´Õ ºÃ¢Â¡É ¾Á¢ú¡ø¨Ä þô¦À¡Ø§¾ ÌÈ¢ôÀ¢ðÊÕó¾¡ø,¾Á¢Æ¢ø «Ð ±í¦¸í§¸¡ þØÀ¼ô§À¡Å¾¢ø¨Ä. ¾ó¾¢ÂüÈ þ¨½ôÀ¡üÈø IPodìÌ ¯ÕÅ¡ì¸ «¸²üÀ¡ð¨¼ò ¦¾¡Ìì¸ ¦Áý¦À¡Õû ¯ñ¼¡? þó¾ì ¸½¢É¢î¦ºÂüÀ¡Î §ÅÚ «¾¢ÃÊìÌÃøŨİÎÕÅ¢¸ÙìÌ ÅƢŢ¼ìÜÎÁ¡?-«.ÀÍÀ¾¢('§¾Å¨Áó¾ý')

Voice on Wings சொன்னது…

மேலுள்ள பின்னூட்டம், ஒருங்குறியில்:

RSS--செய்தியோடை ஆகாது;சரி. செய்தித் தொகுப்பு--இன்னும் சரி.
podcast-க்கு ஒரு சரியான தமிழ்ச்சொல்லை இப்பொழுதே குறிப்பிட்டிருந்தால்,தமிழில் அது எங்கெங்கோ இழுபடப்போவதில்லை. தந்தியற்ற இணைப்பாற்றல் IPodக்கு உருவாக்க அகஏற்பாட்டைத் தொகுக்க மென்பொருள் உண்டா? இந்தக் கணினிச்செயற்பாடு வேறு அதிரடிக்குரல்வலைஊடுருவிகளுக்கு வழிவிடக்கூடுமா?-அ.பசுபதி('தேவமைந்தன்')

என் விடை:

தேவமைந்தரே, RSSஇன் தமிழாக்கம் குறித்து நீங்கள் என்னுடன் உடன்படுவதில் மகிழ்ச்சி. Podcast என்பது வலைப்பதிவின் ஒலிவடிவமாதலால், அதனை 'ஒலி வலைப்பதிவு' என அழைக்கலாமென எண்ணுகிறேன். சிலர் 'ஒலிப்பதிவு' என்றும் சுருக்குகின்றனர். ஆனால் 'ஒலிப்பதிவு' என்ற சொல் காலகாலமாக song recordingஐக் குறிக்கப் பயன்பட்டு வந்திருக்கிறது. ஆகவே, இது குழப்பங்களை உண்டாக்கலாம்.

iPod கருவியில் தந்தியற்ற இணைப்பு வருமா எனத் தெரியவில்லை (அது அதன் உற்பத்தியாளர்களான Apple நிறுவனத்தின் முடிவைப் பொறுத்தது). ஆனால் பல கைக்கணினிகளில் இத்தகைய வசதியுண்டு. GPRS, CDMA போன்ற தொடர்பாடல் நுட்பங்களின் வாயிலாக இணைய இணைப்பை இக்கருவிகள் பெற்றுள்ளன. இவற்றில் mp3 ஒலிப்பான்களும் உள்ளன. Missing link: podcatchers (ஒலிப்பிடிப்பான்கள்?). கைக்கணினிச் சூழலில் செயலாற்றத் தக்க இத்தகைய நிரலிகள் புழக்கத்திற்கு வரவேண்டும். வளர்ந்து வரும் இந்நுட்பம் குறித்த தகவல்களை இங்கு காணலாம். இது வளர்ச்சியடைந்தால், நான் என் பதிவில் குறிப்பிட்டுள்ளது போல், புதிதாகப் பதிந்த ஒலி வலைப்பதிவுகளை உடனுக்குடன் இறக்கி, கேட்டுக் கொள்ளலாம்.

//அகஏற்பாட்டைத் தொகுக்க மென்பொருள் உண்டா?// மன்னிக்கவும், உங்கள் கேள்வி எனக்கு சரியாக விளங்கவில்லை.

//இந்தக் கணினிச்செயற்பாடு வேறு அதிரடிக்குரல்வலைஊடுருவிகளுக்கு வழிவிடக்கூடுமா?//

பொதுவாகவே, இணைய இணைப்பும், இயங்குதள ஓட்டைகளும் உள்ள வரை, அனைத்து வகையான நச்சுக்களும் ஊடுருவலாம். Podcastingஐப் பொருத்தவரை, அவை வெறும் ஒலிக் கோப்புகளே. அவற்றின் வழியாக ஊடுருவிகள் பரவ வாய்ப்பில்லையென்றே எண்ணுகிறேன். ஆனால், திறந்த பாதுகாப்பற்ற இணைப்பை சாதகமாக்கிக் கொண்டு வேறு ஊடுருவல்கள் நிகழும் அபாயமுள்ளது. அது முற்றிலும் நீங்கள் பயன்படுத்தும் கணினியின் தன்மையைப் பொறுத்தது.