புதன், டிசம்பர் 14, 2005

டெக்னோராட்டி - சில தகவல்கள், யோசனைகள்

டெக்னோராட்டி தேடுபொறியை, சில உத்திகளைக் கையாண்டு, ஒரு வலைப்பதிவுத் திரட்டியைப் போல் பயன்படுத்துவதைப் பற்றி முன்பு ஒரு பதிவிட்டிருந்தேன். அதன்படி இன்று (என்னையும் சேர்த்து) சில வலைப்பதிவர்கள் இம்முறையைப் பின்பற்றி, அவர்களின் பதிவுகள் டெக்னோராட்டி தேடல்களில் கிடைக்கும் வண்ணம் அவற்றை இடுகின்றனர். மேலும் சிலர் இதனை முயற்சித்துவிட்டு, முடியாமல் கைவிட்டு விட்டனர் என்று நினைக்கிறேன். இச்செய்முறையில் பொதுவாக நேர்ந்து விடும் சில தவறுகள், அவற்றைத் தவிர்ப்பது, சில புதிய உத்திகள், மற்றும் டெக்னோராட்டி அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய வசதிகள் ஆகியவற்றைத் தெரியப்படுத்துவதே இப்பதிவின் நோக்கம்.

1.சின்னத்திரை - 'டெக்னோராட்டி மினி' என்றழைக்கப்படும் இவ்வசதியால், பதிவுகளின் பட்டியல் ஒரு சின்னத்திரையில் காண்பிக்கப்படும், கீழே உள்ளது போல்.

இத்திரை நிமிடத்திற்கொரு முறை தன்னை புதுப்பித்துக் கொள்ளும் ஆற்றலுடையது என்பதால், சென்ற நிமிடத்தில் டெக்னோராட்டியால் சேர்த்துக் கொள்ளப்பட்ட பதிவுகளும் தாமாகவே இந்த நிமிடத்தில் உங்கள் பார்வைக்குக் கிடைத்து விடும். இதனைச் செயல்படுத்த http://technorati.com/tag/தமிழ்ப்பதிவுகள் என்றப் பக்கத்திற்குச் சென்று, அதன் வலதுபுறத்திலிருக்கும் 'View in Mini' என்று குறிப்பிடப்பட்ட சுட்டியைச் சொடுக்க வேண்டும், அவ்வளவே. குட்டித்திரையை minimise செய்து நாள் முழுவதுமாக அவ்வப்போது பார்த்துக் கொண்டிருக்கலாம், புதிதாக பதிவுகள் வந்துள்ளனவா என்று (அலுவலக நேரங்களில் அவ்வப்போது வேலையும் செய்யுங்கள் :) )

2.பதிவில் வகைப்பெயர் (tag) சேர்க்கை: முன்பே கூறியது போல், பதிவுகளை tag செய்வது எளிது. கீழே கொடுக்கப்பட்ட html நிரலை, பதிவின் கடைசி வரியாக சேர்த்துக் கொள்ள வேண்டும். அதாவது பதிவை உள்ளிடும் எழுதிப் பெட்டியிலேயே கடைசியில் இதையும் வெட்டியொட்ட வேண்டும் (i.e. within the text editor):

தமிழ்ப்பதிவுகள்

htmlஐப் பார்த்துவிட்டு சிலர் templateஇலெல்லாம் கைவைக்க, விளைவு வேறு விதமாகப் போய்விட்ட அனுபவத்தையெல்லாம் அறிய நேரிட்டது :) Wordpress, Blogsome போன்ற சேவைகளைப் பயன்படுத்துவோர், html எல்லாம் தேவையின்றி, அவர்களது category வசதி கொண்டு (category = தமிழ்ப்பதிவுகள்), பதிவுகளை tag செய்யலாம்.

3. துணைப்பிரிவுகள்: தமிழில் எழுதப்படும் பதிவு என்பதைக் கடந்து, வேறெந்த அடிப்படையில் உங்கள் பதிவை விவரிக்க முடியும்? எந்தத் துறை அல்லது துணைப்பிரிவைச் சார்ந்த பதிவு என்ற தகவல் பயனளிக்குமல்லவா? ஆகவே, தமிழ்ப்பதிவுகள் என்ற main tagஉடன், அரசியல், ஆன்மீகம், வர்த்தகம், நகைச்சுவை, இலக்கியம், இசை, திரைப்படங்கள் (reviews), புத்தகங்கள் (reviews), நுட்பம், கவிதைகள், கதைகள், பயணங்கள்........ இப்படி ஏதாவது ஒன்றையும் (அல்லது ஒன்றுக்கு மேலும்) additional tagஆக வழங்கினால், குறிப்பிட்ட துறையில் ஆர்வமுள்ளவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். இதைச் செய்வதற்கும் அதே முறையைப் பின்பற்ற வேண்டியதுதான், அதாவது, tagஇற்கான html நிரலைச் சேர்ப்பது:

[tag]

இதில், [tag] என்பதற்கு பதிலாக பதிவின் துணைப்பிரிவைக் குறிப்பிட வேண்டும். உ-ம்,

இசை
அரசியல்
வர்த்தகம்
திரைப்படங்கள் etc, etc.

டெக்னோராட்டி அளிக்கும் related tags வசதியைக் கொண்டு, தமிழ் tags அனைத்திற்குமிடையே உறவுமுறைகளை வளர்க்க முடியுமா என்றும் ஆராயவேண்டும். அவ்வாறு செய்தால் ஒரு பட்டியலுக்கான பக்கத்தில் மற்ற பட்டியல்களுக்கான சுட்டிகள் கிடைக்கும், அவற்றுக்குத் தாவிக் கொள்வது எளிதாகும். இப்பதிவிலேயே (இறுதியில்) அந்த ஆராய்ச்சியைத் தொடங்கியிருக்கிறேன்.

4.வேற்று கிரக மொழியில் tags: 'தமிழ்ப்பதிவுகள்' என்ற அருமையான தமிழ்ச்சொல் இருக்க, சிலர் அவர்களது பதிவுகளுக்கு வேற்று கிரக மொழிகளிலிருந்தெல்லாம் சொற்களைப் பிடித்து வந்து tag செய்கின்றனர். நிஜமாகத்தான் கூறுகிறேன், நம்பிக்கையில்லை என்றால் இங்கு காண்க. இத்தகைய செயல்களில் ஈடுபடும் தமிழின எதிரிகளைச் சரியாக அடையாளம் கண்டு அவர்களுக்குத் தக்க பதிலளிக்குமாறு தமிழ் கூறும் நல்லுலகத்தை வேண்டிக் கொள்கிறேன். அத்துடன், நீங்களும் இவ்வாறு வேற்று கிரக மொழியில் tag செய்ய வேண்டாமென்றும் கேட்டுக் கொள்கிறேன். (சொல்லாமல் விடப்படும் செய்தி - இந்த வேற்று கிரகப் பட்டியலில் எனது சில பதிவுகளும் அடக்கம். இது எப்படி நடந்தது என்று தெரியவில்லை. நம் தமிழினத்தைப் பிரித்தாள முற்படும் வேற்று கிரகச் சதியாக இருக்கக் கூடுமென்பதைத் தவிர வேறெதையும் உறுதியாகக் கூறுவதற்கில்லை)

5.டெக்னோராட்டிக்கு சுட்டி: உங்கள் பதிவின் templateஇல் டெக்னோராட்டிக்கு சுட்டி கொடுக்க விரும்பினால் இவ்வாறு கொடுங்கள்:

தமிழ்ப்பதிவுகள்

(Note: rel="tag" என்ற குறிப்பு இதில் இல்லாததை கவனிக்கவும். அக்குறிப்பை பதிவிற்குள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். பதிவிற்கு வெளியே templateஇலெல்லாம் பயன்படுத்தினால் indexingஇல் - அதாவது பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படுவதில் பிரச்சினை வருகிறது).

6.பறைசாற்றுதல்: சரியாக tagging எல்லாம் செய்து பதிவை வெளியிட்ட பின்னர், அதை டெக்னோராட்டியிடம் தெரிவிக்க வேண்டுமல்லவா? Ping எனப்படும் இந்நடவடிக்கை ஒவ்வொரு முறை புதுப் பதிவை வெளியிட்ட பிறகும் கண்டிப்பாக செய்ய வேண்டியது. ஆனால் ஒரு பதிவிற்கு ஒரு முறை ping செய்தால் போதும். அதற்கு மேல் செய்தால் டெக்னோராட்டி கோபித்துக் கொள்ளும். கல்லூரி நாட்களில் "உள்ளேன் ஐயா" என்று ஒரு முறைக்கு மேல் (அதாவது, வகுப்பில் இல்லாத மற்றவர்களின் சார்பாகவும்) குரல் கொடுத்தால் ஆசிரியருக்குக் கோபம் வருமல்லவா, அதே போலத்தான். பதிவிட்ட ஒவ்வொரு முறையும் ping செய்ய வேண்டுமா என்று வருந்தினால், அதற்குத் தீர்வு Wordpress போன்ற சேவைகள் அளிக்கும் auto-ping வசதி. இல்லாவிட்டால், டெக்னோராட்டியில் ஒரு பயனர் கணக்கு ஏற்படுத்திக் கொண்டு, உங்கள் வலைப்பதிவை அதற்கு அடையாளம் காட்டினால் (i,e, claim your blog), அது அவ்வப்போது உங்கள் வலைப்பதிவுக்கு வந்து "புது பதிவு க்கீதா?" என்று வேவு பார்த்து விட்டுப் போகும், இருந்தால் பட்டியலில் அதுவாகவே சேர்த்துக்கொள்ளும். ஆனால் இது நடைபெறுவதற்கு சில யுகங்களாகலாம் என்பதால், manual pingஏ சிறந்தது.

7.டெக்னோராட்டி vs. தமிழ்மணம்: இத்தகைய ஒப்பீட்டிற்கு அவசியமே இல்லை. ஏனென்றால் இவையிரண்டும் வெவ்வேறு பயன்களைத் தருபவை. தமிழ்மணம் என்பது நம் தமிழ் வலைப்பதிவு உலகின் சமூக நுழைவு வாயில். பல்வேறான நிகழ்வுகள், சண்டைகள் :), மீம்கள், நட்சத்திர வாரம் போன்ற சிறப்புப் பங்களிப்புகள், இன்னும் பல்வேறு மனித முயற்சிகளை (உ-ம், பிடித்த பதிவுகள் etc) ஒருங்கிணைக்கும் தளம். டெக்னோராட்டி ஒரு முற்றிலுமான நுட்ப சம்மந்தப்பட்ட, உணர்வுகளில்லாத (கொள்கைகளில்லாத) ஒரு இயந்திர வசதி. ஆகவே, ஒரு டெக்னோராட்டி நிரலை சேர்த்துக் கொள்வதால் ஒருவருடைய தமிழ்மண விசுவாசம் குறைந்து விடும்/விட்டது என்றெல்லாம் எண்ணத் தேவையில்லை. ஒரு sitemeter, clock போன்ற நிரல்களைச் சேர்ப்பது போலத்தான் இது. அதிகமான அளவில் பதிவர்கள் தங்கள் பதிவுகளை tag செய்வார்களென்றால், என்னைப் போன்ற வாசகர்களுக்கு Mini, sub-categories போன்ற அதி நவீன வசதிகளைப் பயன்படுத்துவதற்கு வாய்ப்பு கிட்டும். தமிழ் வலைப்பதிவு உலகம் இரண்டாயிரம் / மூன்றாயிரம் பதிவர்கள் என்ற எண்ணிக்கைகளைத் தொட்டு விடுமானால், அவற்றை வகை பிரிக்காமல் படிப்பதென்பது கடினமானதொரு முயற்சியாகி விடும். ஆதலினால், tag செய்வீர்.

(இந்த tag சிதறலைக் கண்டு இது ஏதோ சகலகலா வல்லவப் பதிவு என்று எண்ணிவிட வேண்டாம். tagகளிடையே உறவுகளை உருவாக்கும் முயற்சியிது)

5 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

தமிழில் தற்போது புதிதாக ஒரு வலைப்பதிவு திரட்டி ஒன்று தங்களுடைய எண்ணங்களுக்கு ஏற்ப திரட்டுகிறது.

பார்க்க

www.thenkoodu.com

இந்த வலைதிரட்டியில் தங்களது தனிப்பட்ட விருப்பங்களையும் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும்.

தமிழ் ஆர்வலன்

Boston Bala சொன்னது…

couple of quick thoughts/questions:

1. தமிழ்ப்பதிவுகள், திரைப்படங்கள், புத்தகங்கள், கவிதைகள் கதைகள் பயணங்கள்...

What is your take on 'கள்' and no plural, singular use. I am all for singualr use and not for adding the extra kaL :-)

2. Each link can be added with a 'rel=' attribute. This is still not yet clear for me and I need to brush/read up more before elaborating... நேரம் கிடைத்தால் இதைக் குறித்தும், tag based readers குறித்தும் அலசுங்களேன்

3. கூகிள் ரீடரிடம் 'லேபல்' என்று ஒன்று காணப்படுகிறதே! அதற்கும் 'டாக்'குக்கும் சம்பந்தம் உண்டா?

Voice on Wings சொன்னது…

BB,

1. I thought of plurals coz the tag URL and its label (i.e. its visible form) point to a list of posts(plural). Like clicking on தமிழ்ப்பதிவுகள் shows up the 100+ posts that have been tagged so, and likewise பயணங்கள், கவிதைகள் etc. Doesn't sound logical? Btw, some of these categories throw up some interesting old posts (which were categorised using WordPress, i think). Do check them out, if you like.

2. rel="tag" attributeஐ தேவையில்லாத இடங்களில் உபயோகித்தால் (like for giving link in the sidebar etc.) technorati குழம்பி விடுகிறது என்று நினைக்கிறேன். அத்தகைய பதிவுகள் அதன் பட்டியலில் ஏற்றுக் கொள்ளப்படுவதில் பிரச்சினை வந்ததாக நினைவு.

3. Reg. Google reader / tag based readers, i'm sorry, but i'm not familiar with them :( But i've seen the 'label' feature in Google Mail, and it serves the same purpose as a tag or a mail folder. So probably it is the equivalent of a tag. கேள்வி ஞானத்தை வைத்துக் கொண்டு வெகு தூரம் போக முடியாது போலிருக்கிறது :)

தமிழ் ஆர்வலன், உங்கள் தேன் கூடு நன்றாகவுள்ளது. அருகில் சென்றால் தேனீக்கள் கொட்டுமா? :)

Sri Rangan சொன்னது…

இரவி,உங்களின் விடா முயற்சியும் உறுதியும் வெற்றி பெறும்-பெறவேண்டும்!என்றும் என் வாழ்த்தும்,நன்றியும் உங்களுக்குண்டு.வணக்கம் எண்ணங்களின் குரல்!
நட்புடன்
ஸ்ரீரங்கன்

Voice on Wings சொன்னது…

உங்கள் பரிவான வார்த்தைகளுக்கு நன்றி, ஸ்ரீரங்கன்.