Denzel போதைப் பொருட்கள் தடுப்புத்துறையைச் சார்ந்த காவலதிகாரி. நீதியை, நியாயத்தை நிலைநாட்ட வேண்டிய நிலையில், தானே அவற்றை மீறுபவர். இருந்தும் சமுதாயத்திற்கு நல்லதே செய்கிறோமென்ற அசைக்க முடியாத நம்பிக்கை. ஓநாய்களை வீழ்த்த, தானும் ஒரு ஓநாயாக இருக்க வேண்டுமென்பது அவரது நியாயப்படுத்தல். (அவரது பயிற்சியில் ஓநாயைப் போல் ஊளையிடக் கற்றுக் கொடுப்பதும் ஒரு அங்கம்). தம்மிடம் பயிலும் அதிகாரியை துப்பாக்கி முனையில் மிரட்டுவது, தானும் போதைப்பொருளைப் புகைத்து, பயிற்சி பெறுபவரையும் (துப்பாக்கி முனையில்) புகைக்க வைப்பது, குடித்து விட்டு வாகனமோட்டுவது, தெருவில் பிடிபட்ட சிறு குற்றவாளியை சட்டப்படி தண்டிக்க வழி செய்யாமல், அவன் மீது வன்முறையைப் பிரயோகித்து, அவனிடமிருக்கும் சில்லரை பணத்தையும் அபகரித்துக் கொள்வது, போதைப்போருள் இருக்கிறதா என்று சோதனையிடச் சென்ற வீட்டில், ஒன்றுமில்லை என்று தெரிந்த பின் (வீட்டுக்காரர்களை வேறொரு அறையில் துப்பாக்கி முனனயில் உட்கார வைத்துவிட்டு) அவ்வீட்டிலிருந்த பணப்பெட்டியிலிருந்து பணத்தை திருடுவது, நான்கு மில்லியன் டாலர்கள் திருட்டுப்பணம் பிடிபட்ட இடத்தில், ஒரு மில்லியனை தனக்கும் தனது அதிகாரிகளுக்கும் பகிர்ந்தளித்து விட்டு, மூன்று மில்லியன் டாலர்களே கிடைத்ததாக அறிக்கை கொடுப்பது, அதற்கான சாட்சியை அழிப்பதற்காக அப்பணத்தை வைத்திருந்தவரை (முற்றிலுமாக அவர் corner செய்யப்பட்ட நிலையில்) கொலை செய்து, ஏதோ encounter நடந்து அதில் தற்காப்புக்காகச் செய்யப்பட்ட கொலையைப் போல் ஜோடனை செய்வது.............. இப்படி அவரது சாகசங்கள் பலவிதம். பிடிபட்ட திருட்டுச் சொத்தில் தனக்கும் பங்குண்டு என்ற அசைக்க முடியாத நம்பிக்கை, சமூக நலனுக்காக தான் செய்யும் அத்துமீறல்கள், சட்ட விரோதங்கள் ஆகிய எல்லாம் நியாயமானவையே என்ற வலுவான கருத்து, இப்படி ஒரு முரணான பாத்திரமே Denzelஉடையது.
இதற்கு நேரெதிர் குணமுடையவர்தான் அவரிடம் பயற்சி பெறுவதற்காக சேரும் Ethan Hawke. அவரது மேலதிகாரியின் போக்குடன் சற்றும் உடன்படாமல், அவரோடு போரிட்டு இறுதியில் வீழ்த்துகிறார். மிகத் திறமைசாலி. (குற்றங்களைக் கண்டு கொள்வதில்) கூர்மையானப் பார்வை , வேகம், விவேகம், அனைத்தும் கிடைக்கப்பெற்ற ஒரு அதிகாரி. அவரது திறமையே அவரது மேலதிகாரி Denzelஐ மிகவும் கவருகிறது. Ethan தனக்கு ஒரு பொக்கிஷமாகத் திகழ்வார் என்று நம்புகிறார் Denzel. தனது அத்துமீறல்களை மட்டும் கண்டு கொள்ளாமலிருந்தால் நன்றாயிருக்குமே என்ற ஒரு ஆதங்கம்தான் :)
Denzelஐ இப்படியொரு negative roleஇல் இதுவரை பார்த்ததில்லை. The Preacher's Wife, Hurricane, John Q போன்ற படங்களால் என்னை மிகவும் கவர்ந்த நடிகரவர். முதல் முறை இப்படத்தைப் பார்த்தபோது ஏமாற்றமாக இருந்தது, Denzelஐ இப்படிச் செய்து விட்டார்களேயென்று. இரண்டாம் முறை தக்க முன்னேற்பாடுகளுடன் (Old Monk, Club Soda, Kurkure etc etc.) பார்க்க உட்கார்ந்ததால், அவரது நடிப்பை நன்கு ரசிக்க முடிந்தது :) யதார்த்தம் சமரசம் செய்யப் பட்டது போல் தெரியவில்லை. இது போன்ற நிகழ்வுகள் நடைமுறையில் நடக்கக்கூடியதாகத்தான் பட்டது. படம் முழுவதிலும் எங்கும் செயற்கைத்தனம் இருந்ததாகவே உணர முடியவில்லை. சன் டிவி பாணி தீர்ப்பிலிருந்து ("மொத்தத்தில்......” etc etc) உங்களுக்கு விடுதலையளிக்கிறேன். :)
தமிழ்ப்பதிவுகள் திரை விமர்சனம்
3 கருத்துகள்:
என்னாங்க திடீர்னு இந்த படத்துக்கு... ரொம்ப நாளக்கி முன்னாடி பாத்தது... நான் ரொம்ப நேரம் வரக்கும் (அந்த் பாத் டப் காட்சி) டென்சல் இதெல்லாம் அந்த கத்துகுட்டிக்கு ஏதோ விசேஷ பயிற்சி தர்றதுக்காக செய்றாரோன்னு ஒரு சந்தேகத்தோடவே பாத்தேன்.. விறுவிறுப்பான படம்.
// என்னாங்க திடீர்னு இந்த படத்துக்கு... ரொம்ப நாளக்கி முன்னாடி பாத்தது...//
அண்மையில்தான் இப்படத்தைப் பார்த்தேன். நம்மூர் திரையரங்குகளில் வந்ததா என்று தெரியவில்லை. DVD / VCD ஆர்வலர்களுக்குப் பயனுள்ளதாக இருக்குமேயென்றுதான் இந்தப் பதிவு. ஆங்கிலப் படங்களைப் பார்த்து தமிழ்ப் படமெடுப்பவர்களுக்கும்........ :)
Your review is helpful in holiday season. Shall check this movie out.
Denzel is a capable actor. I was also impressed with his directorial debut 'Antwone Fisher'
கருத்துரையிடுக