புதன், அக்டோபர் 19, 2005

தணிக்கைகளற்ற ஓர் திரட்டி அமைப்பு

சமீபத்தில் தமிழ்மணம் திரட்டியில் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, சில வலைப்பதிவுகள் தமிழ்மணத்திலிருந்து பல்வேறு காரணங்களுக்காக நீக்கம் செய்யப்படுகின்றன என்றுத் தெரிய வருகிறது. தமிழ்மண நிர்வாகிகளின் இம்முடிவுடன் நான் உடன்படாவிட்டாலும், இதனை அவர்களது் சொந்த முடிவாகக் கருதி மதிக்கிறேன். எனினும், தமிழிணையத்தில் கருத்துச் சுதந்திரம், பன்மைத்தன்மை ஆகியவற்றின் வருங்காலம் குறித்த கவலைகளையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தப் பின்னணியில் எனக்குத் தோன்றும் யோசனையை இங்கு முன்வைக்கிறேன்.

Technorati என்ற இணையச் சேவையை இங்கு பலரும் அறிந்திருக்கலாம். அது வலைப்பதிவுகளுக்கான #1 தேடும் தளமாகும். இச்சேவை அளிக்கும் ஒரு வசதி, பதிவுகளின் வகைச்சொல்லை (category or tag) வைத்துத் தேடல்கள் நிகழ்த்தக்கூடிய வசதியாகும். இதனைச் சாதகமாக்கிக் கொண்டு, ஒரு தடைகளற்ற வலைப்பதிவுத் திரட்டும் அமைப்பை உருவாக்குவதே என் திட்டம். இதன்படி,
  • இதில் சேர விரும்பும் ஒவ்வொரு பதிவரும் ஒரு பொதுவான வகைச்சொல்லைக் கொண்டு அவரது ஒவ்வொரு பதிவையும் வகைப்படுத்த வேண்டும். உ-ம், 'தமிழ்ப்பதிவுகள்' என்பது நான் முன்மொழியும் வகைச்சொல். ஒவ்வொரு பதிவும் இவ்வகைச்சொல்லைக் குறிப்பிட்டே வெளியிடப்பட வேண்டும். இதனைச் செய்வது சுலபம்:
<a href="http://technorati.com/tag/தமிழ்ப்பதிவுகள்" rel="tag">தமிழ்ப்பதிவுகள்</a>

என்ற html நிரலித் துண்டை பதிவின் இறுதியில் சேர்த்துக் கொண்டால் போதும். (In 'Edit html' mode)
  • பதிவை வெளியிட்ட பின்னர், Technoratiயின் இந்த வலைப்பக்கத்திற்குச் சென்று உங்கள் வலைப்பதிவின் URLஐ உள்ளிட வேண்டும். அதன் பிறகு அதிகப்படியாக ஒரு மணி நேரத்திற்குள் உங்கள் பதிவு அவர்களது பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படுமாம்.
  • மேற்கண்டவாறு வகைப்படுத்தப்பட்ட பதிவுகளின் பட்டியலைக்காண http://www.technorati.com/tag/தமிழ்ப்பதிவுகள் என்றச் சுட்டியை உபயோகியுங்கள். தற்போது அங்கு எனது சோதனைப் பதிவுகள் சிலவற்றைக் காணலாம். இப்பட்டியலின் RSSஇன் சுட்டியும் இப்பக்கத்தில் காணலாம்.
தமிழ்மணத்திலிருந்து நீக்கப்பட்ட / நீங்கிக்கொண்ட, மற்றும் தம் கருத்துக்களுக்குத் தொடர்ந்து ஒரு வாசகர் வட்டத்தை விரும்பும் பதிவர்களுக்கும் அவர்களது விசுவாசிகளுக்கும் இது பயனுள்ளதாகயிருக்குமென்று நம்புகிறேன். யாருடையக் கட்டுப்பாட்டிலும் இல்லாததால், இது தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கப்பாற்பட்ட ஓர் அமைப்பாக இருக்கக்கூடுமென்று எதிர்பார்க்கிறேன்.


(This is how the 'tagging' appears in the post)

22 கருத்துகள்:

வானம்பாடி சொன்னது…

நன்றி VoW!

வானம்பாடி சொன்னது…

VoW, அந்த நன்றி, டெக்னொரட்டி பற்றிய அறிமுகத்திற்கு. நீங்கள் பாஸ்டன் பாலாவின் பதிவில் கேட்டிருந்த 'எல்லா தமிழ் பதிவுகளுக்குமான செய்தியோடை' வசதி இதன் மூலம் சாத்தியப்படுகிறது.

http://feeds.technorati.com/feed/posts/tag/தமிழ்ப்பதிவுகள்

Maravandu - Ganesh சொன்னது…

ஹாய்

ஹ்ம் பார்த்தேன்

நல்ல தெளிவான பதிவு

அங்க போயி தமிழ் னு தட்டி தேடுனா
பாலசுப்ராவினுடைய வலைப்பூ லிஸ்ட் ஆகுது

Boston Bala சொன்னது…

Tags are a good option. But it requires the blogger to make sure, (s)he add the required tag at the end of each post. Might become cumbersome in the long run.

AJAX seems very promising with effective useage in Google reader. Intelligent Auto discovery on feeds, new development like http://www.orangoo.com/ might be useful for a naive reader.

வானம்பாடி சொன்னது…

//But it requires the blogger to make sure, (s)he add the required tag at the end of each post//

But, you can add this at your post template so that you need'nt do it manually for each post.

Voice on Wings சொன்னது…

சுதர்சன், என் RSS பற்றிய கேள்விக்கான விடையும் Technoratiயிலேயே இருந்ததை நானும் கவனித்தேன், பதிவிலும் குறிப்பிட்டிருக்கிறேன்.

மரவண்டு கணேஷ், வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. தமிழ்ப்பதிவுகள் என்று உள்ளிட்டுத் தேடினால், நான் குறிப்பிட்டது போன்ற பதிவுகள் (i.e. those tagged as தமிழ்ப்பதிவுகள்) கிடைக்கலாம்.

வானம்பாடி சொன்னது…

//பதிவிலும் குறிப்பிட்டிருக்கிறேன். //
ஆமாம். நான்தான் சரியாக படிக்காமல் சொதப்பி விட்டேன்.

Unknown சொன்னது…

நன்றி வாஸ் ஆப் த விங்!!
என்னுடைய புதிய பதிவில் நீங்கள் சொன்னபடி செய்துள்ளேன்.
ஆனால் IE http://www.technorati.com/tag/தமிழ்ப்பதிவுகள் என்பதை சொதப்பிவிடுகிறது. FireFox நல்லா வேளை செய்கிறது

வானம்பாடி சொன்னது…

கல்வெட்டு,
தமிழ்ப்பதிவுகள் என்பதில் கடைசி 'ள்' சரியாக இருக்கிறதா பாருங்கள். எனக்கு IE 6ல் சரியாகவே வேலை செய்கிறது.

Voice on Wings சொன்னது…

Bala, like Sudharshan mentioned, the tag can be saved in the post template. But I do admit some cumbersomeness(!), as the blogger has to ping technorati manually after publishing every post (though the documentation suggests automated pings etc. I doubt if it works).

கல்வெட்டு, உங்கள் பதிவை tag செய்திருப்பதைக் கவனித்தேன். ஒவ்வொரு முறை பதிவிடும் போதும் ping செய்துவிடுங்கள்.

Sudharsan, Kalvettu is right as IE under Windows 98 does not accept unicode charecters in the address bar. Maybe you are using a later Windows version.

முகமூடி சொன்னது…

நல்லதொரு அறிமுகம்.

inomeno சொன்னது…

Thanks for the info

Kasi Arumugam சொன்னது…

நல்ல தகவல். பலரும் பயன்படுத்தினால் நல்லது.

வானம்பாடி சொன்னது…

//Maybe you are using a later Windows version.//
Yes, I use Windows XP Pro. But anyways I dont use IE. :)

Unknown சொன்னது…

நானும் Windows XP ல்தான் IE யை சோதனை செய்தேன்.

http://www.technorati.com/tag/தமிழ்ப்பதிவுகள் என்று browser ல் தட்டினால் JUNK ஆக வருகிறது.
ஆனால் http://www.technorati.com/tag/ என்றுதட்டி வரும் பக்கத்தில் "தமிழ்ப்பதிவுகள் " என்று தேடினால் சரியாக வருகிறது.

சுதர்சன், வாஸ் ஆப் த விங் உங்களின் விளக்கத்துக்கு நன்றி.

Sri Rangan சொன்னது…

மெத்தப் பெரிய உபகாரம்,அறிமுகத்துக்கும்-தொழில் நுட்ப அறிவுறத்தல்களுக்கும்!இந்தத் தேடியிலும் இணைந்திருப்பது மிக நல்லது.வருமுன் காத்தல் மகா உசிதம்!நன்றி Voice on Wings !

Voice on Wings சொன்னது…

முகமூடி, ஐநோமிநோ, காசி, சிறி ரங்கன், உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

கல்வெட்டு, ஒரு வேளை உங்களது கணினியில் Indic support நிறுவப்படாதிருக்கலாம். Check this page and perform only the 1st step under 'Enabling Indic support on Windows XP'. Thank you.

குழலி / Kuzhali சொன்னது…

ஒரு சிறிய பிரச்சினை, ஏதேனும் UNICODE எடிட்டர் இல்லையென்றால் http://www.technorati.com/tag/தமிழ்ப்பதிவுகள் என்பதை உலவியில் அடிப்பதில் பிரச்சினை வருகின்றது, எனவே http://www.technorati.com/tag/tamilblogs என்று வைத்துக்கொள்ளலாமே?

நன்றி

Voice on Wings சொன்னது…

குழலி, நீங்கள் கூறுவதைப் போன்ற சூழ்நிலையை நான் நினைத்துப் பார்க்கவில்லை. தனித்துவமானத் தமிழ்ச் சொல்லாக இருக்கட்டுமேயென்று நினைத்து இச்சொல்லைப் பரிந்துரைத்தேன். பலரும் கையாளத் தொடங்கி விட்ட நிலையில், இப்போது மாற்ற வேண்டாமேயென நினைக்கிறேன். உங்கள் பிரச்சினைக்கு ஒரு சுலபமான தீர்வு - உங்கள் வலைத்தளத்தின் sidebarஇல் 'Technorati தமிழ்ப்பதிவுகள்' திரட்டிக்கு சுட்டி கொடுத்தால், நீங்கள் எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும், உங்கள் பதிவிலிருந்து அதைத் திறக்கலாம். பாதிக்கப்பட்ட பதிவர்களுக்கும் வாசகர்களைப் பெற அது உதவியாக இருக்கும். இது, மற்ற பதிவர்களுக்கும் நான் விடுக்கும் ஒரு வேண்டுகோள்.

Boston Bala சொன்னது…

Oru nutpa kELvi:
How do you manage to get listed in Technorati without manually pinging?


I didn't do much. These were my steps, which might have lead to the automated pinging by Technorati:

1. Technorati Help: Blog Finder - Become a Technorati Member!

2. Technorati: Your Account: Claim your blog

Kasi Arumugam சொன்னது…

'என்னங்க ஆச்சு தணிக்கைகளற்ற ஓர் திரட்டி அமைப்பு'க்கு? பெரிசா யாரும் பயன்படுத்துற மாதிரி தெரியலையே!

பெயரில்லா சொன்னது…

情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣,情趣,情趣,情趣,情趣,情趣,情趣用品,情趣用品,情趣,情趣,A片,A片,情色,A片,A片,情色,A片,A片,情趣用品,A片,情趣用品,A片,情趣用品,a片,情趣用品

免費A片,美女視訊,情色交友,免費AV,色情網站,辣妹視訊,美女交友,色情影片,成人影片,成人網站,H漫,18成人,成人圖片,成人漫畫,情色網,日本A片,免費A片下載,性愛

情色文學,色情A片,A片下載,色情遊戲,色情影片,色情聊天室,情色電影,免費視訊,免費視訊聊天,免費視訊聊天室,一葉情貼圖片區,情色視訊,免費成人影片,視訊交友,視訊聊天,言情小說,愛情小說,AV片,A漫,AVDVD,情色論壇,視訊美女,AV成人網,成人交友,成人電影,成人貼圖,成人小說,成人文章,成人圖片區,成人遊戲,愛情公寓,情色貼圖,色情小說,情色小說,成人論壇

美女視訊,辣妹視訊,視訊交友網,免費視訊聊天,視訊,免費視訊,美女交友,成人交友,聊天室交友,微風論壇,微風成人,情色貼圖,色情,微風,聊天室尋夢園,交友,視訊交友,視訊聊天,視訊辣妹,一夜情

A片,A片,A片下載,做愛,成人電影,.18成人,日本A片,情色小說,情色電影,成人影城,自拍,情色論壇,成人論壇,情色貼圖,情色,免費A片,成人,成人網站,成人圖片,AV女優,成人光碟,色情,色情影片,免費A片下載,SEX,AV,色情網站,本土自拍,性愛,成人影片,情色文學,成人文章,成人圖片區,成人貼圖