ஆங்கிலப் பாடகர் Sting பாடிய Desert Rose என்னும் பாடலை பலர் கேட்டிருக்கலாம். அந்தப் பாடலின் சிறப்பம்சமே அதன் நடுவில் வரும் அரபி வரிகள்தான். அந்த பொன்னான வரிகளுக்குக் குரல் கொடுத்தவர் ஷெப் மாமி (Cheb Mami) என்னும் மற்றொரு அல்ஜீரியர். ஜீவனுள்ள அவரது குரல் கொண்டு உலகின் பல முன்னணி இசைஞர்களோடு கூட்டு சேர்ந்து வெற்றிப் பாடல்கள் பலவற்றை அளித்தவர். இவரும் முன் கூறிய கலீதும் 'ராய்' (Räi) எனப்படும் இசைவகையின் முடிசூடா மன்னர்களாகப் போற்றப் படுகின்றனர்.
இந்த இசைவகைக்கு ஒரு அற்புதமான பின்னணி உண்டு. மாக்ரேப் (Maghreb) என அழைக்கப் படும் அல்ஜீரியா மற்றும் மொரொக்கோ நாடுகள் உள்ள பகுதிகளில் தோன்றியதே இந்த ராய் இசை. முதலில் பெண்களால் தோற்றுவிக்கப் பட்டு, நாளடைவில் ஆண்களும் பின்பற்றி தன்வசப்படுத்திக் கொண்டனர் என அறிகிறேன். கருத்து சுதந்திரம் மற்றும் எழுச்சி மிக்க பாடல்களாயிருந்தன எனக் கேள்வி. மதம் மற்றும் அரசுக்கு மாற்றுக் கருத்துகள் தெரிவிக்கும் வகையிலும் வரிகள் இருந்தனவாம். மத்திய கிழக்கு என்றாலேயே ஏதோ அடக்கி ஒடுக்கப் பட்ட கலாசாரம் என்ற stereotypeகளை உடைத்தெறிவதாக இருந்தது இச்செய்தி. காதல், அது தரும் ஏமாற்றங்கள், வேலையின்மை, வறுமை போன்ற வருத்தங்களைப் பாடல்களாக்கும் Blues போன்ற ஒரு இசை வகையே இந்த ராய். ஆரம்ப காலங்களில் ஷேக்கா ரிமிட்டி (Cheika Rmitti) எனும் பெண்மணியே ராயின் ராணியாகத் திகழ்ந்தவர். பெண்ணியக் கருத்துகளை முன் வைத்துப் பாடினார் எனத் தெரிகிறது. ஷேக்கா என்றால் மிகவும் மதிப்பிற்குரிய அறிஞர் என்பதன் பெண்பாலாகும். அத்தகைய அடைமொழியை இப்பெண் பாடகர் பெற்றாரென்பது அந்த சமூகத்தில் அவருக்கிருந்த செல்வாக்கையே குறிக்கிறது.
பிற்காலத்தில் அல்ஜீரியர்கள் பலர் வேலைவாய்ப்பு தேடி Franceக்கு குடிபெயர்ந்தனர். அங்கு அவர்கள் சந்தித்த இடர்பாடுகள், இனவெறிப் பாகுபாடு என்று ராய் பாடல்களின் மூலக் கருத்துகள் பெருகிக்கொண்டே வந்தன. இசையைப் பொருத்தவரையில், மேற்கத்தியப் பாதிப்புகள் இடம்பெறத் தொடங்கின. Oud எனும் தந்திக் கருவி, derbouka எனும் தாளக் கருவி மற்றும் வயலின், ஆர்மோனியம் போன்ற பாரம்பரியமான அரேபிய இசைக்கருவிகளுடன் நவீனக் கருவிகளான keyboard, guitar, bass, drums, special effects ஆகியனவும் சேர்ந்து கொண்டன. பிறகென்ன, காட்டில் இசை மழைதான். மொழியைப் பொருத்தவரையில் அரபி பிரதானமென்றாலும், பல முக்கியமான பாடல்கள் Frenchஇலும் உள்ளன.
மேற்கூறிய கலீத், ஷெப் மாமி இவர்களுடன் முன்னணியில் திகழும் மற்ற ராய் பாடகர்கள் ரஷித் தாகா(Rachid Taha), ஷெப் அஸ்னி(Cheb Hasni) மற்றும் ஃபாதல் (Faudel) போன்றோர். தாகா தோற்றத்திலும் இசையிலும் Bruce Springsteenஐ நினைவு படுத்துகிறார். பாரம்பரிய ராயுடன் Heavy rockகை கலந்தளிப்பது அவரது சிறப்பு. ஷெப் அஸ்னி அல்ஜீரியாவில் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப் பட்டாரெனத் தெரிகிறது. பிற்போக்குவாதம் தலைதுக்கினால் ஒரு கலாசாரத்துக்கு எவ்வளவு தீமைகளை விளைவிக்கக் கூடுமென்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு.
இன்னொறு கொசுறுச் செய்தி. நாம்மில் பலர் இந்த ராய் பாடல்களைப் பற்றித் தெரியாமலே அவற்றைக் கேட்டிருகிறார்கள். எப்படி என்கிறீர்களா? தமிழ்த் திரையுலகின் வாயிலாகத்தான். "ஏ ஷப்பா, ஏ ஷப்பா, நெனச்ச கனவு பலிக்காதா" என்ற திரைப் பாடலை கேட்டிருப்பீர். அது கலீத் பாடிய ஒரு பாடலின் நகலே. வேறு உதாரணங்கள் குறித்து தெரியவில்லை. நம் இசையமைப்பாளர்கள் ராய் பாடல்களிலிருந்தும் மேற்கத்திய பாடல்களிலிருந்தும் தாராளமாகவே சுட்டிருக்கிறார்கள் எனத் தோன்றுகிறது.
சரி, கொஞ்சம் வம்பு தும்புகளிலிருந்து விடுபட்டு விஷயத்துக்கு வருவோம். எனக்கு மிகவும் பிடித்த ராய் பாடல்களை அவற்றின் Real audio ஒலியோடைகளுடன், இங்கு பட்டியலிடுகிறேன். க்ளிக்குங்கள், ஒலிக்கப்படும்! (கொஞ்சம் 'lo-fi'யாக இருக்கும், பொறுத்துக் கொள்ளுங்கள்.)
- Aicha (Khaled)
- El Arbi (Khaled)
- C'est la nuit (Khaled)
- Parisien du nord (Cheb Mami with French hip-hop singer K-Mel)
- The Best Times (Cheb Mami with 'Aswad', a Reggae band)
- Hay Woudi (Cheb Mami)
- Rani Maak El-Yoom (Cheb Mami)
- Tzazae (Cheb Mami)
- Barra Barra (Rachid Taha)
- Ya Rayah (Rachid Taha)
- Nokta (Rachid Taha)
- Medina (Rachid Taha)
10 கருத்துகள்:
இதேப்போல், இவர்களின் கலவைப் போலவே இஷம அப்பாஸின் நாரீ, நாரீ கேட்டிருக்கிறீர்களா? ஹிந்தி, உருது, ஆங்கிலம், அரபி கலந்து நன்றாக காக்டெய்ல் அடித்திருப்பார். அதுவும், கொஞ்சமே சுஃபி வகையில், 99 names of allah என்றொரு பாடலும் இப்படியே இருக்கும், கொஞ்சம் ஆன்மிகமும், கொஞ்சமும் மிஸ்டிக் தனமையும், கொஞ்சம் மேற்கத்தியத்தனமும் சேர்ந்திருக்கும் பாடல்கள். சரி MP3 கிடைக்குமா ;-)
இதில் Cheika Rmittiயைப்பற்றி மட்டும்
Rai's hard-drinking diva எனப் படித்திருக்கிறேன்! மற்றத்தகவல்கள், பாடல்சுட்டிகளிற்கும் நன்றி, பதிவு படிக்க இலகுவாக நன்றாக இருந்தது.தொடர்ந்து எழுதுங்கள்
the Tamil Music Director Sirpi has lifted a lot of songs straight from Arabian Music, "kathalin Formula" in periya veetu maapillai is a note-to-note copy of habibi.. Alli alli anarkali is also an "inspired" version.. even rukkumani -rukkumani of Roja..
Our music directors are catering to the public who do not have access to Arabian Songs.
இந்த மாதிரியே பிறநாட்டு இசைகள் பற்றிய அறிமுகங்கள் நம்ம தமிழ்மணம் மக்களுக்கு அள்ளி விடுங்க. இசையை பற்றி எழுதுபவர்கள் ரொம்ப குறைவு. அதற்கு தானுங்கோ இந்த வேண்டுகோள்.
Narain, Hisham Abbasஇன் Nari Nari என்னிடமும் உள்ளது. அருமையான பாடல். அதே தொகுப்பிலுள்ள Albi எனும் பாடலும் எனக்குப் பிடித்தவொன்று. நான் சுட்டிய www.salmiya.net தளத்திலிருந்து Real audio கோப்புக்களை இறக்கமும் செய்யலாம் (*.rm files). http://moroccan.salmiya.net/songs/cheb-k/, http://moroccan.salmiya.net/songs/mami/, http://moroccan.salmiya.net/songs/taha/ ஆகிய பக்கங்களில் உங்களுக்கு பெருவாரியான பாடல்கள் கிடைக்கும். MP3 மட்டுமே வேண்டுமென்றால் http://www.coolgoose.com தளத்தில் உறுப்பினராகப் பதிவு செய்துகொண்டு, பாடகர் பெயரால் தேடிப் பாருங்கள். சில பாடல்கள் கிடைக்கலாம்.
பொடிச்சி, உங்கள் ஆதரவுக்கு மிகவும் நன்றி. என்னால் முடிந்த மட்டும் முயற்சிக்கிறேன்.
சுரேஷ், நான் நினைத்தேன், நீங்கள் கூறிவிட்டீர். பம்பாய் படத்தில் வரும் 'அந்த அரபிக் கடலோரம்' பாட்டு எப்படியோ? என்க்கு அப்பாடலின் மேலும் ஒரு வலுவான டவிட்டு :)
விஜய், என்னால் முடிந்த அளவு அல்வா சிடியின் பெருமையைக் கிண்டுகிறேன், சாரி, காப்பாற்றுகிறேன் :) நானும் அங்கே பிறந்தவன் தான் என்ற முறையில் இதச் சொல்லுதேன் :)
Wow what a coincidence. just this saturday i recorded aicha from the radio. was planning to make a post.
Pls do talk in detail. Middle eastern music always soothes me.
Montreal has lot of Algerian immigrants. My favourite radio channel broadcasts middle eastern music. Will try to findout some online radios.
Narain, i have some mp3. will try to post them soon.(left the mp3 in my cousin's place. will upload it next week)
niraiya ezuthunga voiceoverwings.
நம்ம தேவா சாரு மூளைய கசக்கி(?) போட்ட சலாமியா... சுண்டக்கஞ்சி சோறுடா... பாடலைக்கூட ஏதோ ஒரு உருது ஆல்பத்தில் கேட்ட ஞாபகம். அதனுடைய மூலம் உங்களுக்கு தெரிஞ்சா துடுப்பு குடுங்களேன்.
--பாண்டி
மதி, அயிஷாவைப் பற்றிய பதிவை கண்டிப்பாக எழுதுங்கள். Middle Eastern இசையில் எனக்கும் மிகுந்த ஏடுபாடென்றாலும், Räi போன்ற அதன் நவீன வடிவங்களையே மிகவும் விரும்புகிறேன். உங்களூரில் அல்ஜீரிய மக்கள் வெகுவாக உள்ளனர் என்கிறீர்கள். அது அவர்களின் French புலமையால் இருக்கலாம். Montreal Quebecஇலா இருக்கிறது? மன்னியுங்கள், என்னுடைய பூகோள அறிவில் கொஞ்சம் கோளாறு :)
பாண்டி, தேவா மூளைய கசக்கினாரோ இல்லியோ, நீங்க என்ன கசக்கிட்டீங்க :) நீங்கள் சொல்லுகிற பாடலை நான் கேட்டதாக நினைவில்லை. ஆனால் தேவாவைப் பற்றி கூறவேண்டுமென்றால், அவரது 'அகிலா அகிலா' Bob Marley பாடிய Buffalo Soldiers எனும் பாடலின் அட்சர சுத்தமான நகல். மேலும் 'மனம் விரும்புதே' பாடல் நம் வயலின் வித்தகர் எல் சுப்பிரமணியத்தின் ஒரு fusion instrumentalஇன் direct lift. :)
இந்தப் பதிவை படித்து ஆதரித்த அனைவருக்கும் நன்றி :) உங்கள் வாழ்வில் இசைமழை பொழியட்டும்!
அருமையான பதிவு.
உங்களுடைய எல்லா சந்தேகங்களையும் http://www.iespana.es/i2fs/ இங்கு தீர்த்துக்கொள்ளுங்கள்.
கருத்துரையிடுக