சில தினங்களாக பல தமிழ்ப் பதிவுகளை படித்து வருகிறேன். மிகுந்த மகிழ்ச்சி தரும் அனுபவமாக இருந்தது. ஒரே ஒரு குறை (குறை கூராமல் இருக்க முடியுமோ?) - பல பதிவுகளில் நான் கண்ட சொற்கள்.
Let's take the simplest of words. 'Comments' - பதிவு உலகத்தின் ஒரு இன்றியமயாத அம்சம் ;) இந்த எளிமையான சொல்லுக்கு நான் கண்ட தமிழ்ச்சொற்க்கள் - 'மறுமொழி', 'பின்னூட்டம்' (யப்பா!). என்னாங்க, சுலபமா 'கருத்து' இல்ல 'விமர்சனம்' அப்படின்னுட்டா நாங்களூம் கொஞ்சம் புரிஞ்சிப்போமில்ல? இருவத்தி அஞ்சு வருசமா தமிழ் நாட்டுல இருந்துருக்கேன், எனக்கே புரியலைங்க.
கொஞ்சம் பெரிய வார்த்தைகளைப் பார்ப்போம். 'அடிப்படைவாதம் / வாதி' - என்னாமோ சுகமா இல்லைங்க கேக்கறத்துக்கு. Fundamentalism என்ற ஆங்கில வார்த்தையின் part by part translationஏ ஆகும் இந்த 'அடிப்படைவாதம்'. என் குறை என்னவென்றால், இப்படி செய்வதன் மூலம், அந்த வார்த்தையின் அர்த்தத்தை கோட்டை விட்டு விடுகிறோமோ என்பதுதான். Fundamentalism என்பது தன் இன/மத/சாதிய வெறியைக் குறிக்கும் ஒரு சொல். "தும்பை விட்டு வாலைப் பிடி" என்பது போல, ஒரு சொல்லின் கருத்தை கைப்பற்றாமல், அதை துண்டங்களாக வெட்டி, ஒவ்வொரு துண்டுக்கும் ஒரு தமிழ் நிகர் கண்டுபிடித்து, அவைகளை மறுபடியும் ஒட்டு வேலை செய்து......... நல்ல தமிழாக்கம் தான் :)
Software - மென்பொருள். ஆகா! நான் மேற்க்கூறிய 'வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டு' translation algorithmமின் மற்றொரு பிரபலமான உதாரணம். :) 'செயலி' - எவ்வளவு அழகாக உள்ளது, அர்த்தமுள்ளதாகவும் கூட? பல அரிய செயல்களை நொடியில் செய்யக் கூடியதென்ற உணர்வைத் தரவில்லை? It suggests a 'task machine'! Compare it with மென்பொருள். ஏதொ ஒரு 'சோப்பளாங்கி' என நினைக்கத் தோன்றுகிறது. முன்னேற்றத் துறைகளின் உட்கருத்துக்களை நாம் தமிழுக்கு கொண்டு செல்லத் தவறினால் அது பல தமிழர்க்ளின் இழப்பே.
ஆமா, அது என்னாங்க அது 'ஊடகம்'? சத்தியமா எனக்கு புரியலைங்க. ஒரு தென்காசியிலோ அல்லது துடியலூரிலோ உள்ள, இணையகத்துக்குச் சென்று மணிக்கு பத்து ருபாய் கொடுத்து இணயத்தில் உலவும், ஒரு சாதாரண மனிதன் புரிந்து கொள்ளாத ஒரு எழுத்து எவ்வகையில் தமிழ்ச் சேவையாகும் என ஒரு ஐயம் எழுகிறது. இது தமிழ்ச் சேவையெல்லாமில்லிங்க, சுய சேவைதான்ங்கரீங்களா? :)
10 கருத்துகள்:
அதென்னங்க Voice on Wings இற்கு 'எண்ணங்களின் குரல்வடிவம்'
பேசாம, சிறகின் குரல் இன்னு எல்லோருக்கும் புரியிறாப்பல வெச்சிருக்க வேண்டியதுதானே?
ஆனாலும் பெயரிலிக்கு குசும்பு ஓவர் தான் :)
- இன்னொரு பெயரிலி .......
நல்ல விடயம். இவ்வாறான பல குறைபாடுகள் இருக்கின்றன. நாளுக்கு நாள் வளரும் விஞ்ஞானத்துடன் போட்டிபோடுவது இலேசானதா? ஆனால் தமிழ் வளர்க வாழ்க என்று கூச்சல் போடுவதை விட இப்படி ஏதோ செய்கிறார்கள் என சந்தோசப்படுங்கள். அல்லது இவ்விடயம் சம்பந்தமாக கூடுதல் ஆர்வம் இருந்தால் கொஞ்ச தமிழ்ப்புதிய சொற்களை உருவாக்குங்களேன்.
கோட்டை விட்டுட்டீங்க, பெயரிலி(களா) :) Voice on Wings இற்கும் 'எண்ணங்களின் குரல்வடிவத்திற்க்கும் மிகுந்த தொடர்பேதும் கிடையாது. VoW is just my blogger ID (inspired by a Kahlil Gibran's quote) whereas the latter is my blog title, which roughly translates to 'voicing my thoughts'.
காசி, நீங்கள் கூறுவதும் சரியே. இருட்டுக் கூச்சல்களுக்கு மத்தியில் மெழுகுவத்தி வெளிச்சமாவது தேவையே. மிகுந்த மரியாதைகளோடு ஒரு யோசனை - 'விடயம்' என்பதற்கு பதில் 'செய்தி' எனலாமே :) 'விடயம்'னா கொஞ்சம் சுகமில்லாம இருக்கு :)
புதுச் சொற்க்கள் படைக்கும் ஆர்வமிருந்தாலும் திறமையில்லை என அடக்கத்துடன் ஒப்புக்கொள்கிறேன். இருக்கும் சொற்க்களையே பொருத்தமாக பயனித்து ஒரு தொழில்நுட்ப பதிவு ஒன்று எழுதும் ஆர்வமிருக்கிறது. பார்க்கலாம் :)
சொற்க்கள் --> சொற்கள்
Thanks, peyarili :) I appreciate very much :)
/காசி, நீங்கள் கூறுவதும் சரியே. இருட்டுக் கூச்சல்களுக்கு மத்தியில் மெழுகுவத்தி வெளிச்சமாவது தேவையே. //
அய்யய்யோ பெயரிலகளோட பெயரிலியா என்னையும் சேத்து குழப்பிட்டீங்கன்னு நினைக்கிறேன். நான் இப்பத்தான் முதல் முறையா இதைப் பார்க்கிறேன். எதுக்கு என் பேரைப்போட்டீங்கன்னு தெரியலை.
காசி, மன்னிக்கணும். மேலுள்ள 'தமிழ்ச்சங்கமம்' என்ற அன்பரின் சுட்டியைக் க்ளிக்கியதில் அவரது கவிதைகளின் முடிவில் 'காசி அனந்தன்' என ஒப்பமிட்டிருந்ததைக் கண்டேன். எனவே அவரை 'காசி' என்று நட்புரிமையுடன் அழைத்தேன். அது இப்படி இக்கட்டில் கொண்டு விடுமென்று கனவிலும் நினைக்கவில்லை :)
உலகத் தமிழ் மக்களுக்கொரு நற்செய்தி. ஒருவழியா 'ஊடகம்'னா என்னன்னு கண்டுபிடிச்சிட்டேங்க. இனிவரும் பதிவுகளில் அதை மேளதாளத்துடன் உபயோகிப்பதாக உத்தேசம் :)
புதிய வார்த்தைகள் எளிமையாக இருக்கவேண்டும், சரியாக இருக்கவேண்டும், ஆங்கில மொழிபெயர்ப்பாக இல்லாமல் தமிழ் வேர்ச்சொல் ஒன்றிலிருந்து கிளைத்திருக்கவேண்டும் என்பதெல்லாம் சரிதான். அதேபோல புதிய வார்த்தைகளைத் தமிழில் பார்க்கும்போது மட்டும் அதைப்புரியவில்லை என்று குறையாகச் சொல்லும் சிலர் அப்படி ஆங்கில வார்த்தைகளை பார்க்கும் போது மட்டும் அகராதிகளை நோக்கி ஓடுவதையும், அப்படி கடினமான வார்த்தைகளை பயன்படுத்துவதை பெருமையாகக் கருதுவதையும் நீங்கள் கவனிக்கவேண்டும்
தங்கமணி, நீங்கள் கூறுவது போல் தமிழுக்கு எதிராகவும் ஆங்கிலத்துக்கு ஆதரவாகவும் பாகுபடுத்தும் கும்பல்களை நானும் அறிவேன். என்னைப் பொருத்தவரை, தமிழோ, ஆங்கிலமோ அல்லது Norwegian மொழியோ, எதுவானலும் simple is best. கடினமான சொற்களை பயன்படுத்தி மொழிப் புலமைகளை வெளிக்காட்டிக் கொள்வதில் எனக்கு மிகுந்த உடன்பாடெதுவும் கிடையாது.
மொழி என்பது afterall எண்ணங்களை பரிமாறிக் கொள்ள உதவும் ஒரு கருவியே. புரிய வைத்தலே அதன் பிரதான பயன். பெரிய வார்த்தைகள் கொண்டு அலங்கரித்து விட்ட ஒரு எழுத்து சாமானியனைச் சென்றடையவில்லையென்றால், அவ்வெழுத்தால் சிலருக்கு மட்டுமே ஆதாயம்.
கருத்துரையிடுக