சனி, மார்ச் 05, 2005

ஆராய்ச்சி நெ.1

செட்டப்ப மாத்தி, கெட்டப்ப மாத்தி, அப்பன் வெச்ச பேர மாத்தி......... என்று ஒவ்வொறு செயல்பாடாக மாற்றம் செய்து, எனது முதல் படைப்பாக இந்த வரிகளை வழங்குகிறேன். ஆங்கிலம் அளிக்கும் எளிமை இதில் இல்லாவிட்டாலும், கொஞ்சம் கொஞ்சமாக முயற்சித்தால் தமிழும் எளியதாகிவிடும் என நம்புகிறேன்.

மேல இருக்கறது பெருசுங்களுக்கு! இப்பொ வயசு பசங்களுக்கும் பொண்ணுங்களுக்கும் ஏத்த மாதிரி கொஞ்சம் பேச்சு! ஏதொ ஒரு வருஷமா இங்கிலிஷ்ல எழுதிக்கிட்டிருந்தேன், அங்க இங்க. திடீர்னு, நம்ம மொழியிலயும் கொஞ்சம் எழுத ஆசை வந்துடுச்சு. அதான், இப்படி தூக்கம் கூட இல்லாம ராத்திரி பூரா உக்காந்து ஆராய்ச்சி செஞ்சிக்கிட்டு இருக்கேன், அதையும் இதையும் டவுன்லோட் பண்ணிக்கிட்டு.

எழுத இயலாதவன் என நினைத்தேன், பரவாயில்லை.... இரு பத்திகள் எழுதிவிட்டேன். 'சாதிகள் இல்லையடி பாப்பா' என்ற பாரதியின் கூற்றுப்படி (பாரதியை நினைவுகூர்ந்தாகி விட்டது) எழுத்திலும் சாதிகள் இல்லை என உறுதியாக நம்புகிறேன். பாடப்புத்தக தமிழிலும் எழுதுவேன், பாமர மொழியிலும் எழுதுவேன். தமிழாசிரியர்கள் மன்னிக்கவும், உங்கள் உதவி பள்ளிகளில் தேவைப்படலாம். இங்க நான் நெனச்சதுதான், நான் எழுதியதுதான்.

மென்மேலும் தமிழில் பதிப்பேன் என்ற எதிர்பார்புடன், மகிழ்வுடன், அன்புடன், கொஞ்சம் பேஜாருடன்.......... விடைபெறுகிறேன்.

3 கருத்துகள்:

நற்கீரன் சொன்னது…

முதல் வரிகள். மிகவும் நன்று.
தமிழில் மேலும் எழுத வாழ்த்துக்கள்.

வசந்தன்(Vasanthan) சொன்னது…

வருக வருக. தமிழ்மணம் உங்களை வரவேற்கிறது.

Voice on Wings சொன்னது…

நற்கீரன் மற்றும் வசந்தன், உங்கள் ஊக்குவிப்புக்கு மிகவும் நன்றி :) தமிழில் தட்டெழுத்து சற்று கடினமாக உள்ளது. இருந்தாலும் முயற்சிக்கிறேன் அதிகம் எழுத. நம் கணினித்திரையில் தமிழை காணும் இன்பம் பெற எதையும் செய்யலாமென நினைக்கிறேன் :)