சனி, நவம்பர் 03, 2007

சில சுட்டிகள், பின்னூட்டங்கள்........

சில நாட்கள் முன்பு வவ்வால் என்ற பதிவருடன் அவரது சேதுசமுத்திரம் பற்றிய இடுகை குறித்து விவாதம் செய்து கொண்டிருந்தேன். அதில் நான் இட்ட பின்னூட்டம் ஒன்றின் ஒரு பகுதி:
உங்களது தங்க நாற்கர உதாரணம் குறித்து - நாட்டின் ஒரு பகுதியை மற்றொரு பகுதியோடு துரிதமாக இணைப்பதற்கு அந்தத் திட்டம் உதவலாம். அதனால், நாடெங்கிலுமுள்ள விவசாய மற்றும் இதர உற்பத்தியாளர்களுக்கு புதிய சந்தை வாய்ப்புகள் ஏற்படுவது போன்ற ஆதாயங்கள் கிடைக்கலாம். (அத்திட்டத்தைப் பற்றியும் எனக்கு விமர்சனமுள்ளது. ஆனால் அது குறித்து வேறொரு சமயம் பேசுவோம்)

ஆனால் சேது திட்டத்தால் சென்னையும் தூத்துக்குடியும் இணையப்போவதில்லை என்று நினைக்கிறேன். கடல்வழிப் பாதையை விட மேலான சாலைவழி / இரயில் வழிப்பாதைகள் இவ்விரு நகரங்களையும் ஏற்கனவே இணைத்துக் கொண்டுதான் உள்ளன. கடல்வழி என்பது உலகின் இதர பகுதிகளுக்குச் சரக்குகளை அனுப்புவதற்கு அல்லது பெறுவதற்குத்தான். அத்தகைய பயணங்கள் வாரக்கணக்கில் அல்லது மாதக்கணக்கில் நீடிப்பவை. அப்பயணத்தில் ஒரு இருபத்தி நான்கு மணி நேரங்கள் குறைவதால், ஒரு சிறு சதவிகித லாபம் அக்கப்பல் முதலாளிகளுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என்றே வைத்துக் கொள்வோம். அப்படி ஒரு லாபம் கிடைத்தாலும் அது அவர்களது நலனுக்கே அல்லவா? மேலும், நீங்களே கூறியிருப்பது போல், நம் துறைமுகங்களின் செயல்பாடுகள் காரணமாக பெட்டங்களை ஏற்றி இறக்குவதற்கே எப்படியும் வாரக்கணக்கில் தாமதம் ஏற்படும் நிலையில், ஒரு இருபத்தி நான்கு மணி நேர சேமிப்பினால் யாருக்கென்ன ஆதாயம் பெரிதாகக் கிடைத்து விடப் போகிறது?

இது போன்ற கேள்விகளால், ஒரு சாமானியனுக்கு எவ்வகையிலும் இத்திட்டத்தால் பலனில்லை என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது. உங்கள் கருத்துகளை அறிய விரும்புகிறேன்.
இதைத் தொடர்ந்து, Sondham என்பவர் ஆங்கிலத்தில் ஒரு பின்னூட்டத்தை வழங்கியிருந்தார். அது கீழ்வருமாறு:

At 12:48 PM, Sondham said…

Around 30 years ago, Dubai was a desert in the Arabian Gulf. Now, due to the government's effort to create infrastructures, it is a hot spot in the world map. It was possible because of many many mega projects, for that the government poured billions of Dirhams. Now many ships passing Dubai and there is no major Airline that did not touch Dubai. Import and export became a major source of income for the government. World major events being hosted in Dubai and the International Cricket Board shifted from England to Dubai and so on. Dubai became the hub between West and the East. Example of finished and ongoing projects in Dubai: (search in internet by name for details):

Dubai dry dock
Dubai Internet City
Dubai Gold City
Dubai Airport
World Class Hotels (Burj al Arab)
Dubai Media City
Dubai Palm Island
Dubai World Trade Centre
Dubai Knowledge village
Dubai Educationalal city
Dubai Property
Dubai Sports City
Dubai International City
Burj Tower
Mega Malls
dubai Marina Area
Dubai Land
Discovery Gardens
The Palm Jumeirah
Palm Diera
Hydropolis
Dubai Water front
The Lagoons
The Business Bay
Aqua Dubai
Dubai Maritime City
Dubai Techno Park
The Lost City
Dubai Aviation City
Silicon Oasis
Jabel Ali New Airport
Ski Doom at Dubailand
formula one world theme park
The world (300 man mand islan)
Exhibition City
Golf City
Dubai Metro (12.45 Billion Dirhams)
Bridges & tunnel over 2 km sea bay

...
many more

As I knew, most of the finished projects are successful ones and the ongoing too attracting the world to invest.

If the government calculate about 'individual citizen's benefit out of these projects' or 'profit and loss by Dirhams and Fils', before executing them - could it be achieved??

What we are talking is not even one percent of the total cost of the above projects where we are second largest populated country in the world.

அதற்கு வவ்வாலின் விமர்சனமற்ற ஆமோதிப்பு கீழ்வருமாறு:

At 4:49 PM, வவ்வால் said…

சொந்தம் ,
நன்றி!

அருமையான ஒரு கருத்தை சுருக்கமாக சொல்லி இருக்கிங்க, நான் பக்கம் பக்கமா தமிழில் சொன்ன பிறகும் அது எப்படினு ஆரம்பபுள்ளிக்கே திரும்ப வராங்க மக்கள் இதுல நீங்க ஆங்கிலத்தில சில உதாரணங்கள் காட்டி சொல்வதை எப்படி புரிந்துக்கொள்வார்கள் என்று தெரியல?

இப்படி சொர்க்கபுரியாக விவரிக்கப்படும் (மற்றும் நாமும் அதை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்படும்) துபாய் குறித்து சில தகவல்கள் அண்மையில் வெளிவந்துள்ளன. சில சுட்டிகள் நிலைமையை புரிய வைக்க உதவலாம்:
சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகளின் அதிசயிக்கத்தக்க வளர்ச்சிக்குப் பின்னால், நம் தெற்காசிய நாடுகளிலிருந்து பிழைப்பு தேடிச் சென்ற மலிவுக் கூலி உழைப்பாளிகளின் அவல நிலை மறைந்திருக்கிறது. அவர்களைச் சுரண்டாமல் இந்நாடுகள் இத்தகைய வளர்ச்சியை அடைந்திருக்காது என்றே கூறலாம்.

நாமும் இந்நாடுகளைப் பின்பற்ற வேண்டும், மாபெரும் திட்டங்களை அதிரடியாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும், என்ற அடிப்படையில் செயல்படும் நமது வலதுசாரி அரசுகளும், அவற்றின் கொள்கைகளுக்கு சாமரம் வீசும் பதிவர்களும் விரைவில் உண்மை நிலையை உணருவார்கள் என்று நம்புவோம் :)

2 கருத்துகள்:

Balaji Chitra Ganesan சொன்னது…

நீங்க பதிவிட்டு நீண்ட நாட்களுக்கு அப்புறமா நான் பின்னூட்டமிடுறேன்.

1. சேதுக் கால்வாய் வழியா செல்லும் கப்பல்களிடமிருந்து பணம் வசூலிக்கப் போறாங்களே?

2. அரசாங்கம் Golden Quadrangular, Sethu Canal மாதிரி கட்டமைப்புப் பணிகளில் பணம் செலவழிக்கிறது ஏழைகளுக்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்கித்தருமே?

3. சிக்கப்பூர், துபாயோடெல்லாம் நாம் நம்மை ஒப்பிட்டுக் கொள்ளக் கூடாதுதான். ஆனா இந்தியக் கடற்கரையெங்கும் சிறு சிறு துறைமுகங்கள் அமைப்பது என்பது, பெரிய துறைமுகங்களை efficient ஆக்குவது மற்றும் தரைவழிச் சாலைகளை மேம்படுத்துவது போன்றவற்றைவிட செலவு குறைந்ததுன்னு நினைக்கிறேன்.

Voice on Wings சொன்னது…

பாலாஜி, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :)

வளர்ச்சித் திட்டங்களுக்கு நான் எதிரி கிடையாது. நீங்கள் கூறியபடி பொருளாதார அடிப்படையில் இத்திட்டங்கள் வெற்றியடைவதாகவே வைத்துக் கொள்வோம். அவற்றுக்காகப் பணம் செலவழிப்பதைப் பற்றி எனக்கு எந்த எதிர்ப்பும் கிடையாது.

எனது கவலையெல்லாம், பழங்குடிகள், விவசாயிகள், மீனவர்கள், கைவினைக் கலைஞர்கள், squatters என்று நம்மால் முத்திரை குத்தப்பட்ட சேரி வாழ் மக்கள் போன்றவர்கள் இந்தத் திட்டங்களால் பெரும் பாதிப்புக்குள்ளாவது பற்றிதான். எந்த மறுயோசிப்புமின்றி இவர்களை கிள்ளுக்கீரைகளாக பிடுங்கி எறிந்து விடக்கூடிய மனநிலையைத்தான் நம் ஆட்சியாளர்கள் அன்றிலிருந்து இன்று வரை கொண்டிருக்கிறர்கள். ஒரு மலபார் ஹில்ஸோ, அல்லது ஒரு பெசன்ட் நகரோ ஒரு வளர்ச்சித் திட்டத்துக்காகக் காவு கொடுக்கப்படுமா எந்நாளாவது? ஒரு மலபார் ஹில்ஸுக்கு ஒரு நாளும் வரமுடியாத ஒரு நிலைமை ஒரு சாத்தான்குளத்திற்கு அல்லது ஒரு ராஜ்மஹாலுக்கு எளிதில் வந்து விடுவதே நம் நாட்டில் சமத்துவம் எந்த அளவிற்கு நடைமுறையிலுள்ளது என்று வெளிச்சம் போட்டுக் காட்டி விடுகிறது.