திங்கள், அக்டோபர் 01, 2007

கனம் கோர்ட்டார் அவர்களே!

தற்போது தமிழகத்தில் பந்த் நடத்தலாமா கூடாதான்னு ஒரு வழக்கு நடந்து அதுக்கு எங்க ஊரு உயர்நீதி மன்றத்தில ஒரு தீர்ப்பும் வழங்கினாங்க (மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தாம நடத்தலாம்ன்னு) . இந்த குழப்பவாதத் தீர்ப்பைப் பத்தி நான் எதுவும் சொல்லப் போறதில்லை. சரி, பிரச்சனைக்கு முடிவு கிடச்சிடுச்சின்னு நினைச்சிக்கிட்டு இருந்தப்போ, அவசர அவசரமா நீங்க சுப்ரீம் கோர்ட்ல ஞாயித்திக் கிழமையெல்லாம் வேலை செஞ்சி, அந்தத் தீர்ப்பை மாத்திச் சொன்னீங்களாம் -அதாவது, பந்த் நடத்தக்கூடாது, அது சட்ட விரோதமானதுன்னு.

என்னடா நம்ம கோர்ட்டாருங்க இப்படி ஞாயித்திக் கெழமையெல்லாம் வேலை செய்யறாங்களேன்னு அப்படியே புல்லரிச்சி நிக்கும்போது, உங்களப் பத்தின வேற சில தகவல்கள் ஞாபகம் வந்து உறுத்த ஆரம்பிச்சுது. அதாவது, உங்கள மாதிரி கோர்டடு்களோட ஆமை வேக செயல்பாட்டால நம்ம நாட்டுல மூணு லட்சம் பேர் குற்றம் நிருபிக்கப் படாமலேயே சிறையில் வருஷக் கணக்கா வாடிக்கிட்டிருக்காங்க என்பது போன்ற தகவல்கள். நிலம இந்த மாதிரி இருக்கும்போது, இந்த தமிழக பந்த் விவகாரத்தில் மட்டும் ஏன் உங்களோட அதீத ஈடுபாடுன்னு கொஞ்சம் யோசிக்க வச்சிட்டீங்க. இப்படி ஞாயித்திக் கிழமையெல்லாம் வேலை செஞ்சி உங்களோட மத சார்பின்மையை காட்டிக்கிட்டது உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியதுதாங்க. பொதுமக்கள் நலனில் உங்களுக்கு இருக்கற அக்கறையை நான் மெச்சிக்கறேன்.

இன்னிக்கி காலையில சில செய்திகளை படிச்சேங்க. எங்க கலைஞர் ஐயா இந்தியில பேசினாராம், உண்ணாவிரதம் இருக்காராம். மாநிலம் முழுவதும் பல உழைப்பாளர் சங்கங்கள் வேலை நிறுத்தம் செய்யறதுனால, தமிழகத்தில் கிட்டதட்ட பந்த் சூழ்நிலைதான் நிலவுது, அப்படியிப்படீன்னு கேள்விப்பட்டேங்க. அதாவது, நீங்க ஓவர்டைம் செஞ்சி குடுத்த தீர்ப்பு, கிட்டத்தட்ட செல்லுபடியாகாத மாதிரிதாங்க. வருத்தமான செய்திதான், என்ன பண்ணறது?

இப்பிடி செய்திகள மேஞ்சிக்கிட்டே வரும்போது இது கண்ணுல பட்டுதுங்க - அதாவது இன்னிக்கி நீங்க புடுங்கி மாதிரி ஏதோ பேசியிருக்கீங்களாம் (SC pulls up TN govt என்பதன் தமிழாக்கம் ;-) ) , மக்கள் தேர்ந்தெடுத்த அரசை கவிழ்க்கணும் அது இதுன்னு. மறுபடியும் சில தகவல்கள் ஞாபகத்துக்கு வந்து உறுத்துதுங்க. அதான், முன்னாடி காவிரி நீர் பிரச்சனை, முல்லைப் பெரியார் பிரச்சனைன்னெல்லாம் வந்தப்போ எங்களுக்கு நியாயமா கிடைக்க வேண்டிய தண்ணி பத்தி நீங்களும் தீர்ப்பு சொன்னீங்க. அப்போ, சம்மந்தப் பட்ட எதிர் தரப்பு மாநிலங்கள் உங்க தீர்ப்பை நிராகரிச்சி, உங்க ஆணைய செயல்படுத்தாம முரண்டு பிடிச்சாங்க. இப்போ நீங்க தமிழக அரசை குற்றம் சாட்டற அதே contempt of courtதான் அவங்களும் செஞ்சாங்க. இப்போ தமிழக அரசை கலைக்கணும்ன்னு கூக்குரல் விடற நீங்க, அப்போ மட்டும் என்ன சிறைச்சிக்கிட்டா இருந்தீங்க?

12 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

'சிறைச்சிக்கிட்டா இருந்தீங்க?'நஹி!

'சிரைச்சுக்கிட்டா இருந்தீங்க'தான் சரி.

பெயரில்லா சொன்னது…

அப்ப நீங்க சப்போர்ட் பண்ணற தமிழக அரசு கோர்ட்டுக்குப் போச்சா இல்லை செரச்சுக்கிட்டு இருந்துச்சா?..

இன்னைக்கும் கோர்ட் ஒண்ணும் தானா கூப்புட்டு கண்டிக்கல்ல, எதிர்/எதிரிக்கட்சி திருப்பியும் போயி கதவத் தட்டினதாலதான் இப்படி ஒரு தீர்ப்பு.....

தன் தலைவருக்காக (கண்டிப்பாக தமிழகத்துக்காக அல்ல) எல்லாத்தையும், எல்லோரையும் எதிர்க்கும் கழக உடன்பிறப்பே...நீ கொஞ்சமானும் நிதானமா இரு...அது தான் உனக்கும், உன் குடும்பத்துக்கும் நல்லது.....திடிரென டீவி சானல் ஆரம்பிக்கவும், பெற்ற மகளை எம்பி ஆக்கவும் உன்னால் முடியாது என்பதை மனதிலிருத்து.. ஹிஹிஹி

மாயாவி...! சொன்னது…

இப்படி அசடா இருக்கேளே...

அவா சொல்றான்னா அதுல ஏதாவது அர்த்தம் இருக்கும்னேன்...

அருண்மொழி சொன்னது…

//அப்போ மட்டும் என்ன சிறைச்சிக்கிட்டா இருந்தீங்க?//

I strongly object your honour. நாட்டின் உயர்ந்த ஜாதிகளை சேர்ந்த மனுநீதிமான்களை கேவலப்படுத்த வேண்டாம். புலி பசித்தாலும் புல்லை தின்னுமா?. அது போல அவா பசித்தாலும் சிரைக்கமாட்டா!!!.

அருண்மொழி சொன்னது…

Your honour, the மிஷ்டேக் is with கருணாநிதி. ஏதாவது ஒரு மாவட்டத்தில் பந்த் நடத்தியிருந்தால் அவா கண்டுக்கமாட்டா. ஆனா ஒரு மாநிலம் fullஆ நடத்தலாமா? ரொம்ப தப்பு.

பெயரில்லா சொன்னது…

இதே சுப்ரீம் கோர்ட்டுக்கு ஜெ.வை எதிர்த்து போனது உங்க கழகம் தானே, உங்க பொதுச் செயலாளர் தானே கேஸ் போட்டார்?. அப்போ இந்த கோர்ட் மனுகோர்ட்டா இருந்ததா இல்லை கழகத்தின் உடன்பிறந்த கோர்ட்டா இருந்ததா?

எப்படிய்யா இப்படி உங்க நோக்கத்துக்கு எதிரா (தவறு, இது உங்க நோக்கம் கூட கிடையாது, உங்கள் ஆண்டகையின் நோக்கம்) ஒன்று நடக்கிறது (அ) எதிர்ப்புன்ன உடன் அதனை மனு மண்ணாங்கட்டின்னு சொல்ல தெரியுது?

அசுரன் சொன்னது…

//இப்பிடி செய்திகள மேஞ்சிக்கிட்டே வரும்போது இது கண்ணுல பட்டுதுங்க - அதாவது இன்னிக்கி நீங்க புடுங்கி மாதிரி ஏதோ பேசியிருக்கீங்களாம் (SC pulls up TN govt என்பதன் தமிழாக்கம் ;-) ) , மக்கள் தேர்ந்தெடுத்த அரசை கவிழ்க்கணும் அது இதுன்னு. மறுபடியும் சில தகவல்கள் ஞாபகத்துக்கு வந்து உறுத்துதுங்க. அதான், முன்னாடி காவிரி நீர் பிரச்சனை, முல்லைப் பெரியார் பிரச்சனைன்னெல்லாம் வந்தப்போ எங்களுக்கு நியாயமா கிடைக்க வேண்டிய தண்ணி பத்தி நீங்களும் தீர்ப்பு சொன்னீங்க. அப்போ, சம்மந்தப் பட்ட எதிர் தரப்பு மாநிலங்கள் உங்க தீர்ப்பை நிராகரிச்சி, உங்க ஆணைய செயல்படுத்தாம முரண்டு பிடிச்சாங்க. இப்போ நீங்க தமிழக அரசை குற்றம் சாட்டற அதே contempt of courtதான் அவங்களும் செஞ்சாங்க. இப்போ தமிழக அரசை கலைக்கணும்ன்னு கூக்குரல் விடற நீங்க, அப்போ மட்டும் என்ன சிறைச்சிக்கிட்டா இருந்தீங்க?//

Excellent...

இந்திய நீதிமன்றங்கள் மனு நீதி மன்றங்கள்தான் என்பது இது போன்ற பல்வேறு அதன் முரன்பட்ட மக்கள் விரோத நடவடிக்கைகளில் வெளி வந்துள்ளது. வெகு சிறப்பாக அம்பலப்படுத்தியுள்ளீர்கள். மொழி நடையும் அருமை... வாழ்த்துக்கள்.

அசுரன்

பெயரில்லா சொன்னது…

புதுக்கோட்டைக்கு ஒருமுறை இங்கிருந்த எனது நண்பர் அருணாச்சலத்தின் வீட்டுக்கு வந்தேன். நான் திருவாரூரிலிருந்து வர வேண்டும். நான் கிளம்ப வேண்டிய நேரத்தில் எனது மனைவிக்குப் உயிருக்குப் போராட வேண்டிய சூழ்நிலை. டாக்டர்கள் கை விட்டு விட்டார்கள். போவதா, வேண்டாமா என்று நான் தயங்கிக் கொண்டிருந்தேன்.அப்போது அருணாச்சலமே அங்கு வந்து விட்டார். மனைவியைப் பாருங்கள் என்றேன். எப்படியும் கூட்டம் நடத்த வேண்டும், விளம்பரம் எல்லாம் செய்து விட்டேன் என்றார் அவர். எனது மனைவியின் நிலையைப் பார்த்து அவரும் அழுதார். வீட்டில் உள்ளவர்களும் அழுதார்கள். இந்த நிலையில் கூட்டிச் செல்கிறீர்களே என்று அருணாச்சலத்திடம் கேட்டார்கள். கேட்டவர்களின் கண்ணீரைத் துடைத்து விட்டு, வாருங்கள் போகலாம் என்று அருணாச்சலத்துடன் இங்கு வந்தேன். பேசி விட்டுத் திரும்பிச் செல்ல ரயில்லோ, பேருந்தோ கிடைக்காத காரணத்தால் ஒரு லாரியில் ஏறி திருவாரூரைச் சேர்ந்தேன்.என்னுடைய மனைவியைப் பார்க்க உள்ளே போனால், மனைவியைப் பார்க்க முடியவில்லை. மனைவியின் சடலத்தைத்தான் பார்த்தேன்.-ரயில்லோ, பேருந்தோ கிடைக்காத காரணத்தால் ஒரு லாரியில் ஏறி திருவாரூரைச் சேர்ந்தேன்- Do you remember this? If you conduct Bandh how People who want to go and meet their family can use Bus or train or lorry! If you sufferd, you tom tom it for 100 years! But others suffering, you dont bother!

from thatstamil.com

Voice on Wings சொன்னது…

அனானி #1, திருத்ததிற்கு நன்றி :)

அனானி #2 & #3, என்னோட பதிவுல நான் இப்போதைய தமிழக அரசையோ அல்லது எந்தக் கழகத்தையுமோ சப்போர்ட் செய்யறேன்னு எங்கயுமே சொல்லல்லையே? மாறாக, என் சப்போர்ட் தமிழகத்திற்கே.

மாயாவி, :)

அருண்மொழி, 'நடுநிலை தவறாத' நீதி மன்றங்களின் உண்மை நிறங்கள் வெளிப்பட ஆரம்பித்து விட்டன. புலி பசித்தாலும் புல்லைத் தின்னாதுதான். ஆனா இவங்க தங்கள் மதவெறிக்காக எவ்வளவு கீழே வேண்டுமானாலும் இறங்குவாங்கன்னுதான் தோணுது.

அசுரன், மக்கள் விரோத மன்றங்களின் தோலை உரிப்பது இன்றைய சூழலில் அவசியமாகிறது. என் இடுகையில் கொடுத்துள்ள India Together சுட்டியைப் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி :)

அனானி #4, பந்த் / கடையடைப்பு என்பதை நான் முற்றிலும் ஆதரிப்பவனல்ல. அத்தியாவசிய சேவைகள் (மருத்துவ, போக்குவரத்து, மற்றும் அடிப்படை உணவகங்கள்) எந்தத் தடையுமின்றி செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும் என்பதுதான் எனது நிலைப்பாடும். வேலை நிறுத்ததால் உயிரிழப்புகள் நேருவது மன்னிக்க முடியாத குற்றமே. அதை நான் ஒரு போதும் ஆதரிக்கவில்லை.

இப்பதிவின் நோக்கம் 'உச்ச' நீதி மன்றத்தின் இரட்டை நிலைப்பாட்டை எடுத்துக்காட்டுவதே. எனது அரசியல் நிலைப்பாடுகளை எடுத்துரைப்பதற்கல்ல இப்பதிவு.

செல்வராஜ் (R.Selvaraj) சொன்னது…

வாய்ஸ், இவ்விடுகையின் கருத்தில், கோபத்தில் முழுமையாக உடன்பாடு உண்டு. ஆனால், இதன் நடையும் மொழியும் சற்றே முறுவலுடன் ஆச்சரியப்பட வைக்கிறது :-)

Voice on Wings சொன்னது…

செல்வராஜ், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

செய்தியைப் படித்த அதே சூட்டில் எழுதியது, தோன்றிய எண்ணங்கள் அப்படியே எழுத்து வடிவமாகி விட்டன. சுய தணிக்கை (எழுத்துப் பிழை / கருத்துப் பிழை திருத்தங்கள்) என்ற நிலையை எல்லாம் எட்டுவதற்கு முன்பே வெளியிட்டும் விட்டேன் :) இனி மாற்றுவதால் பயனில்லை என்று நினைக்கிறேன். மனிதனின் அடிப்படைத் தேவைகள் மறுக்கப்படும் போது இங்கிதம், நாசூக்கு, போன்றவற்றுக்கு அதிகம் மெனக்கெட முடிவதில்லை :)

பெயரில்லா சொன்னது…

情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣,情趣,情趣,情趣,情趣,情趣,情趣用品,情趣用品,情趣,情趣,A片,A片,情色,A片,A片,情色,A片,A片,情趣用品,A片,情趣用品,A片,情趣用品,a片,情趣用品

A片,A片,AV女優,色情,成人,做愛,情色,AIO,視訊聊天室,SEX,聊天室,自拍,AV,情色,成人,情色,aio,sex,成人,情色

免費A片,美女視訊,情色交友,免費AV,色情網站,辣妹視訊,美女交友,色情影片,成人影片,成人網站,H漫,18成人,成人圖片,成人漫畫,情色網,日本A片,免費A片下載,性愛

情色文學,色情A片,A片下載,色情遊戲,色情影片,色情聊天室,情色電影,免費視訊,免費視訊聊天,免費視訊聊天室,一葉情貼圖片區,情色視訊,免費成人影片,視訊交友,視訊聊天,言情小說,愛情小說,AV片,A漫,AVDVD,情色論壇,視訊美女,AV成人網,成人交友,成人電影,成人貼圖,成人小說,成人文章,成人圖片區,成人遊戲,愛情公寓,情色貼圖,色情小說,情色小說,成人論壇


情色文學,色情小說,情色小說,色情,寄情築園小遊戲,情色電影,aio,av女優,AV,免費A片,日本a片,美女視訊,辣妹視訊,聊天室,美女交友,成人光碟

A片,A片,A片下載,做愛,成人電影,.18成人,日本A片,情色小說,情色電影,成人影城,自拍,情色論壇,成人論壇,情色貼圖,情色,免費A片,成人,成人網站,成人圖片,AV女優,成人光碟,色情,色情影片,免費A片下載,SEX,AV,色情網站,本土自拍,性愛,成人影片,情色文學,成人文章,成人圖片區,成人貼圖