சனி, ஜனவரி 28, 2006

தணிக்கை செய்ய மனமின்றி......

புதிய விதிகளைப் பின்பற்றி, எனது கருத்துப் பெட்டியில் தணிக்கை செய்யும் வசதியைச் செயல்படுத்தியிருந்தேன். ஆனால், மனம் ஒப்பாமல் அதை மீண்டும் செயலிழக்கச் செய்திருக்கிறேன். அதற்கு மாறாக, தமிழ்மணத்தின் அருமையான கருவிப்பட்டை வசதியை அகற்றி விட்டு, என் பதிவின் பின்னூட்டங்கள் முகப்புப் பக்கத்தில் திரட்டப் படாதவாறு மாற்றியமைக்கிறேன். இது தமிழ்மண நிபந்தனைகளுக்குட்பட்ட ஒரு செயலாக இருக்குமென்று நம்புகிறேன்.

இம்மாற்றங்களால் ஏற்படும் விளைவுகளாவன:

1. உங்கள் பின்னூட்டங்கள் முன்பிருந்ததைப் போலவே, உடனடியாக பொதுப்பார்வைக்கு வந்துவிடும். இதனால், என் பதிவின் மீதான உங்கள் உண்மையான கருத்துக்களை உடனுக்குடன் பொதுவில் வெளிப்படுத்த வசதியாக இருக்கும் (எனது ஈடுபாடு இல்லாமலேயே).

2. நட்சத்திரங்களைச் சொடுக்கி, உங்கள் ஆதரவையோ, எதிர்ப்பையோ தெரிவிக்கும் வசதி இனி இல்லாமல் போகிறது. ஒரு உற்சாக டானிக்காக இருந்து வந்த இந்த '+' குத்துக்களை நான் miss பண்ணப்போவது நிச்சயம். '-'களாக வந்து விழுந்தபோதும், என் கருத்து எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று அறிந்துகொள்ள முடிந்தது.

3. சுதந்திரத்திற்கான விலை - இனி வரும் பின்னூட்டங்கள் தமிழ்மண முகப்பில் திரட்டப்பட மாட்டா. இதனால் இப்பதிவிற்கு 2nd round, 3rd round views கிடைக்காமல் போகின்றன. ஆகவே, 1st roundஇலேயே எனது பதிவைப் படித்து விடுங்கள் :)

4. முன்பைப் போலவே, நீங்கள் பின்னூட்டமிடுவதற்கு பிளாக்கர் கணக்கை வைத்துக்கொண்டிருக்க வேண்டுமென்ற கட்டாயமெல்லாம் கிடையாது. அப்படி வைத்துக் கொண்டிருந்தாலும், என் வலைப்பதிவில் அதை வெளிப்படுத்த வேண்டிய நிர்பந்தம் கிடையாது. நீங்கள் தாராளமாக ஒரு anonymousஆக உங்கள் பின்னூட்டத்தை இட்டுச் செல்லலாம். நீங்கள் யாரென்பது எனக்கு முக்கியமல்ல, உங்கள் கருத்துதான் எனக்கு முக்கியம்.

5. முன்பைப் போலவே, கோணல்மாணலாகக் கொடுக்கப்பட்ட ஆங்கில எழுத்துக்களைச் சரியாக அடையாளம் கண்டு அவற்றை உள்ளிடக் கோரும் word verification போன்ற கட்டாயங்களை என் பதிவில் வைக்கவில்லை. ஆகவே, நீங்கள் பின்னூட்டமிடுவதற்கு, ஏழு மலைகள் எட்டு கடல்களையெல்லாம் தாண்டத் தேவையில்லை.

6. With freedom comes responsibility – என் பதிவில் எச்சப் பின்னூட்டங்களைக் காண நேரிட்டால், தயவு தாட்சண்யமின்றி அவை நீக்கப்படும். இது குறித்த தகவல்களை, பதிவின் கீழே, பின்னூட்டப் பகுதியின் இறுதியில் காணலாம்.

7. இதோடு, எனது பதிவில் எந்தவொரு வருகையாளர் விவரமும் திரட்டப்பட்டதில்லை, இனியும் அதற்கான உத்தேசமில்லை என்ற உத்தரவாததையும் இங்கே குறிப்பிட்டு விடுகிறேன். ஆகவே, உங்கள் privacyக்கு என்னால் எந்தத் தீங்கும் ஏற்பட வாய்ப்பில்லை.

இதுவரை என் பதிவுகளுக்குப் பச்சை விளக்கைக் காட்டி வந்த தமிழ்மணத்திற்கு நன்றி. மேற்கூறிய மாறுதல்களுக்குப் பிறகும் அது தொடரும் என்று நம்புகிறேன். இல்லையென்றாலும் நலமே. ஒரு வாசகர் என் பதிவைப் பற்றிய விமர்சனத்தை வெளியிடுவதற்கு என் ஒப்புதல் தேவை என்ற நிலையைத் தவிர்ப்பதே என் குறிக்கோள். இது தமிழ்மணத்தால் ஏற்றுக் கொள்ளப்படுமென்றால், மற்ற பதிவர்களும் இம்மாறுதல்களைச் செய்து வாசகரின் சுதந்திரத்தைக் காக்குமாறு வேண்டிக் கொள்கிறேன். நான் ஒரு பதிவன் மட்டுமல்ல ஒரு வாசகனும் கூட, என்பதால் இவ்வேண்டுகோள்.


5 கருத்துகள்:

சதயம் சொன்னது…

வாழ்த்துக்கள்...உங்களின் துணிச்சலான நடவடிக்கையை மற்ற நண்பர்களும் தொடர்வார்கள் என நம்புகிறேன்.

அன்புடன்
சதயம்

Sri Rangan சொன்னது…

இரவி,ஒரு கலகக் காரனாய் உயிர்த்திருப்பதனால் நிறைவானதைச் செய்கிறீர்கள்!ஆனால் தமிழ்ச் சமுதாயத்தின் குறைவிருத்தி மனதானது இந்த உங்கள் அற்புதமான ஜனநாயகப் பண்பைத் தமிழ் மணம் கடைப்பிடிக்க வீடுவதாவில்லை.நாம் திருந்தாதவரை(சமூகப் பொருளாதார வளர்ச்சியின் வி(ளை)ழைவே அச் சமூகம் ஏற்றம் பெறுவதென்றாலும்...) நமது ஜனநாயக முன்னெடுப்புகள் வளர்ச்சியடைவதில்லை.என்றபோதும் உங்கள் செயல் வரவேற்கத் தக்கது.இந்த ஜனநாயகப் பண்பைக் கேவலமாக்காது வாசகர்கள் பின்னூட்டிட்டால், உங்கள் செயலின் வெற்றியென்றே அது அர்த்தம்.வாழ்திக்கொள்கிறேன்.

அன்புடன்
ப.வி.ஸ்ரீரங்கன்

Voice on Wings சொன்னது…

சதயம், மற்ற பதிவர்களும் தங்கள் வாசகர்களுக்கு (அவர்களில் நானும் ஒருவன் என்பதாலும்) இதே வகையில் தங்கள் பதிவுகளை வழங்க வேண்டுமென்பதுதான் என் விருப்பமும்.

ஸ்ரீரங்கன், நீங்கள் மட்டுறுத்தலை ஆதரித்தாலும், எனது நிலைப்பாட்டைப் புரிந்து கொண்டு என் செயலுக்கு ஆதரவு தெரிவித்ததற்கு நன்றி. எனக்குக் கலகமெல்லாம் தெரியாது. முடிந்தவரை, சரியென்று நினைப்பதைப் பின்பற்றுவோமென்ற எண்ணம்தான்.

Kanags சொன்னது…

தேன்கூடு மூலமாக உங்கள் பதிவைக் காண நேர்ந்தது. வாழ்த்துக்கள்.

Voice on Wings சொன்னது…

Kanags, உங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி.