சனி, அக்டோபர் 29, 2005

ஒண்ணுக்கு அடிக்கும் போட்டி

அன்றாடங்காய்ச்சித் தமிழர்களே, தங்கள் காலரை (அப்படியொன்று இருந்தால்) தூக்கிவிட்டுக் கொள்ளுங்கள்! உங்கள் மொழி இப்போது செம்மொழி!!! அது மட்டுமல்ல, நம்மிடையே உள்ள நிதி படைத்தவர்களின் கருணையால் (மற்றும் தலையீட்டால்), இத்தகுதி வேறெந்த மொழிக்கும் கிடைக்கா வண்ணம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி......... எதுவும் நம் தமிழின் அருகில் கூட வரத் தகுதியற்று நிற்கின்றன. நாம் அடிக்கும் சிறுநீர் எவ்வளவு தூரம் பாய்கின்றது பார்த்தீர்களா?

யாருக்கு வேண்டும் காவிரி நீரும், குடிநீரும்? யாருக்கு வேண்டும் வேலை வாய்ப்புகள்? யாருக்கு வேண்டும் மழையில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படாத, பாதுகாப்பான குடியிருப்புகள்? மறந்து விடுங்கள் உங்கள் பட்டினிகளை! மறந்து விடுங்கள் உங்கள் அவலங்களை! அதற்கு பதிலாக உங்கள் செம்மொழியான தமிழை நினைத்துப் பாருங்கள்! இரண்டாயிரம் ஆண்டுகளாக இவ்வுலகில் பேசப்பட்டு வருகிறதாம். இதுவொன்றே போதாதா, நீங்கள் உயிர் வாழ? தமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா!!!

33 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

அடி வாங்கத் தயாரா?

உங்கள் உணர்வுகள் கேள்விக்குள்ளாக்கப்படும். உங்கள் ஜாதி முதல் தாய் வரை அனைவரும் இழுக்கப்படுவர்.

தமிழைப்பழித்தவனை தாய் தடுத்தாலும் விடாதவர் நிறைந்த .யிர் கொடுக்கும் கூட்டத்தின் நடுவே இப்படி ஒரு தைரியமான பதிவு.

Go.Ganesh சொன்னது…

ஹலோ வாய்ஸ்

நீங்க அடி வாங்கப்போறது உறுதின்னு நினைக்கிறேன். இருந்தாலும் உயிர் போனாலும் தமிழ் காப்பேன் என்கிறவர்கள் இன்றைய தேதியில் இல்லை.

ஆதரவு எப்படி வருகின்றதென்று பார்ப்போம்

joker சொன்னது…

தங்கள் ஆதங்கத்தில் நியாயமிருக்கிறது.
ஆனால்,"நவபாரதி" என்று "கன்னடத்தில்" படமெடுத்த
"தமிழன்" கணேசன் தலைமறைவாக இருக்கிறாராம்.
இது பற்றி தங்கள் கருத்தென்ன? (இந்த வார ஜீனியர் விகடன்
படிக்கவும்)

Vaa.Manikandan சொன்னது…

சோத்துக்கு இல்லைங்கறதுக்காக அம்மாவையும்,அப்பாவையும் பட்டினி போட முடியுங்களா?, தாய் மொழியும் அப்படித் தான்.இருக்கறாங்கனு சில பேரை சுட்டிக்காட்ட வேண்டாம். நான் மனிதர்களைப் பற்றிச் சொல்கிறேன்.

ENNAR சொன்னது…

என்ன இப்படி எழுதியிருக்கீங்க சம்பந்தா சம்பந்தமில்லாமல்

Voice on Wings சொன்னது…

அனானிமஸ் (#1) மற்றும் கணேஷ், என்னைப் பற்றி கவலை தெரிவித்ததற்கு நன்றி. உங்கள் கவலைகளை உண்மையாக்கும் பின்னூட்டங்கள் வரத்துவங்கிவிட்டன. :)

ஜோக்கர், நீங்கள் குறிப்பிடும் சம்பவம் பற்றி ஏதாவது சுட்டியளிக்க முடியுமா? அதற்கும் இந்தப் பதிவிற்கும் என்ன தொடர்பு?

மணிகண்டன், எனது பதிவைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். தாய்மொழியை வாழவைப்பது, அதற்குப் பெருமை சேர்ப்பது என்பது பற்றியல்ல என் எதிர்ப்பு. அதனையே ஒரு வியாபாரப் பொருளாக்கி, சாதனைப் பட்டியல்களில் காட்டி, அரசியல் ஆதாயம் தேடும் நபர்கள் / கூட்டங்களுக்குத்தான் என் எதிர்ப்பு. நான் கூறியதை அன்றே அழகாகப் பாடிவிட்டுப் போய்விட்டார்கள் நம் சான்றோர் - "எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே" என்று.

அனானிமஸ் #2, மிகவும் ரசித்தேன் உங்கள் பின்னூட்டத்தை. :) வீட்டிலும் இப்படித்தான் பேசுவீர்களா?

என்னார், பல்வேறு பிரச்சனைகளிருக்க "என் மொழிதான் செம்மொழி" என்ற மனோபாவத்திற்கும் ஒருவரின் ஒண்ணுக்கடிக்கும் திறமையின் மீதுள்ள பெருமையுணர்வுக்கும் அதிக வேறுபாடில்லை என்ற என் கருத்தை என் பதிவில் இட்டிருக்கிறேன். மாற்றுக் கருத்துக்களையும் மைனஸ் குத்துக்களையும் வரவேற்கிறேன். :)

Vaa.Manikandan சொன்னது…

//அதனையே ஒரு வியாபாரப் பொருளாக்கி, சாதனைப் பட்டியல்களில் காட்டி, அரசியல் ஆதாயம் தேடும் நபர்கள் / கூட்டங்களுக்குத்தான் என் எதிர்ப்பு.//

அப்படியெனில்,

//தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி......... எதுவும் நம் தமிழின் அருகில் கூட வரத் தகுதியற்று நிற்கின்றன.//

இது தேவையற்ற வக்கியம்தானே? நான் புரிந்து கொள்ள வில்லையா? அல்லது நீங்கள் வேறு பொருளில் எழுதி உள்ளீர்களா என்று தெரியவில்லை!

Go.Ganesh சொன்னது…

//உங்கள் கவலைகளை உண்மையாக்கும் பின்னூட்டங்கள் வரத்துவங்கிவிட்டன. :)//
வாய்ஸ் உங்க ஆதங்கத்தை புரிந்து கொள்ள முடிகிறது.

இன்றைய தேதியில் மக்கள் பிரச்சனைகள் பல இருக்க மொழிப்பிரச்சனையை மக்கள் பிரச்சனைகளுக்கு மேலாக சொல்லும் அரசியல்வாதிகளின் பெருமையுணர்வு தான் உங்களை இந்த அளவிற்கு பேச வைத்திருக்கிறது சரியா?

ஆனாலும் மொழியுணர்வுக்கு நீங்கள் ஒண்ணுக்கு அடிப்பதை உதாரணம் காட்டியிருக்க வேண்டாம்.

Voice on Wings சொன்னது…

மணிகண்டன்,

//தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி......... எதுவும் நம் தமிழின் அருகில் கூட வரத் தகுதியற்று நிற்கின்றன.//

இதைத்தான் தற்போது சாதனையாகக் காட்டும் முயற்சிகள் நடைபெறுகின்றன. செம்மொழியாகக் கருதப்படுவதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியிருக்க வேண்டும் என்று விதிகள் அண்மையில் மாற்றப் பட்டுள்ளனவாம். இதனால், செம்மொழித் தகுதிக்கு முயற்சித்து வந்த மற்ற மொழிகளுக்கு அவ்வாய்ப்பில்லாமல், தமிழின் தனித்துவம் பாதுகாக்கப் பட்டிருக்கிறதாம்.

இதனாலெல்லாம் தெருவில் நிற்கும் தமிழனுக்குக் கிட்டிய ஆதாயம்? Zilch!!!

ஜோ / Joe சொன்னது…

//இதனாலெல்லாம் தெருவில் நிற்கும் தமிழனுக்குக் கிட்டிய ஆதாயம்?//

உங்களுக்கு எவ்வளவு நஷ்டம்-ன்னு சொல்லுங்க .முடிஞ்சா நஷ்ட ஈடு தர கூட்டு முயற்சி எடுக்குறேன்.

ஜோ / Joe சொன்னது…

////இதனாலெல்லாம் தெருவில் நிற்கும் தமிழனுக்குக் கிட்டிய ஆதாயம்?//

கீழ்கண்டவற்றையும் உம்ம லாஜிக்-கில் சேர்த்துக்கொள்ளவும்

வருஷா வருஷம் மக்கள் பணத்துல எதுக்கு சுதந்திர தினம் கொண்டாடனும் ?இதனாலெல்லாம் தெருவில் நிற்கும் இந்தியனுக்கு கிட்டிய ஆதாயம்?

எதுக்கு ஊரு ஊருக்கு காந்தி சிலை அரசாங்க செலவில் வைக்கணும் ?இதனாலெல்லாம் தெருவில் நிற்கும் இந்தியனுக்கு கிட்டிய ஆதாயம்?

எதுக்குங்க தேசிய கீதத்துக்கு மரியாதை கொடுக்கணும் ?இதனாலெல்லாம் தெருவில் நிற்கும் இந்தியனுக்கு கிட்டிய ஆதாயம்?

எதுக்கு காந்தி மண்டபம் கட்டணும் ?இதனாலெல்லாம் தெருவில் நிற்கும் இந்தியனுக்கு கிட்டிய ஆதாயம்?

எதுக்கு செத்தவனுக்கு மாலை மரியாதை ? இதனாலெல்லான் அவன் பிழைத்து வந்துடுவானா?

எதுக்கு நீங்க இந்த மாதிரி மாஞ்சு மாஞ்சு பதிவு போடணும் ?இதனாலெல்லாம் குப்பனுக்கும் சுப்பனுக்கும் சுபிட்சம் வந்திடுமா என்ன?

Voice on Wings சொன்னது…

ஜோ, என்ன நஷ்டமென்று பதிவிலேயே (2nd para) பட்டியலிட்டிருக்கிறேன். ஈடு செய்ய முடிந்தால் நன்றியுள்ளவனாக இருப்பேன்.

ஜோ / Joe சொன்னது…

நண்பர்களே,
தமிழ்மொழி செம்மொழி ஆக்கப்பட்டதால் தனிப்பட்ட ஆதாயம் எதுவும் கிடைக்காததோடு ,மிகவும் நொந்து போய் மன உளைச்சலுக்கு ஆட்பட்டிருக்கும் நம் நண்பர் Voice on Wings அவர்களுக்கு ,நம் மொழி பெருமைப்படுத்த பட்டது கண்டு உளம் மகிழும் அனைவரும் நஷ்ட ஈடு கொடுக்க கடமைப்பட்டிருக்கிறோம் .இதில் ஆர்வம் உள்ளவர்கள் எனக்கு தெரிவிக்கவும்.

Dharumi சொன்னது…

"மாற்றுக் கருத்துக்களையும் மைனஸ் குத்துக்களையும் வரவேற்கிறேன். :)"
இனிதான் என் '-' குத்தைக் குத்தவேண்டும்! ஏனென்றால்,நிச்சயமாக தமிழ் செம்மொழியாக ஆனதில் உங்களுக்கும் மகிழ்ச்சி இருக்கும் என்று நம்புகிறேன். உங்கள் கோபம் எல்லாம் "அதனையே ஒரு வியாபாரப் பொருளாக்கி, சாதனைப் பட்டியல்களில் காட்டி, அரசியல் ஆதாயம் தேடும் நபர்களை"ப் பார்த்துதான்; இல்லையா? இது எங்கும் நடப்பதுதான்; புதிதில்லையே? அது நம்மைப் பாதிக்கவிடுவது நம் தவறு.அவர்களின் 'சாதனைப்பட்டியல்களை' வைத்தா நீங்களும், நானும் ஓட்டுப் போடப் போகிறோம்; இல்லையே.
ஏதோ நமது அரசியல்வாதிகள் இந்த ஒரு தப்பைமட்டும் பண்ணுவதுபோல அதைப் பெரிசு படுத்தவேண்டுமா?

ஜனரஞ்சகமாக இருக்கவேண்டும் என நினைத்து இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்தீர்களா? தவறு. Does it not stink?

அவதாரம் viji சொன்னது…

//கீழ்கண்டவற்றையும் உம்ம லாஜிக்-கில் சேர்த்துக்கொள்ளவும்

வருஷா வருஷம் மக்கள் பணத்துல எதுக்கு சுதந்திர தினம் கொண்டாடனும் ?இதனாலெல்லாம் தெருவில் நிற்கும் இந்தியனுக்கு கிட்டிய ஆதாயம்?

எதுக்கு ஊரு ஊருக்கு காந்தி சிலை அரசாங்க செலவில் வைக்கணும் ?இதனாலெல்லாம் தெருவில் நிற்கும் இந்தியனுக்கு கிட்டிய ஆதாயம்?

எதுக்குங்க தேசிய கீதத்துக்கு மரியாதை கொடுக்கணும் ?இதனாலெல்லாம் தெருவில் நிற்கும் இந்தியனுக்கு கிட்டிய ஆதாயம்?

எதுக்கு காந்தி மண்டபம் கட்டணும் ?இதனாலெல்லாம் தெருவில் நிற்கும் இந்தியனுக்கு கிட்டிய ஆதாயம்?

எதுக்கு செத்தவனுக்கு மாலை மரியாதை ? இதனாலெல்லான் அவன் பிழைத்து வந்துடுவானா?

எதுக்கு நீங்க இந்த மாதிரி மாஞ்சு மாஞ்சு பதிவு போடணும் ?இதனாலெல்லாம் குப்பனுக்கும் சுப்பனுக்கும் சுபிட்சம் வந்திடுமா என்ன?//

ரொம்ப நல்லா கேட்டீங்க ஜோ..

Voice on Wings சொன்னது…

தருமி, உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் ('-' குத்தியிருந்தால், அதற்கும்) நன்றி. உங்களுக்கு ஒரு விளக்கவுரை அளிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

//நிச்சயமாக தமிழ் செம்மொழியாக ஆனதில் உங்களுக்கும் மகிழ்ச்சி இருக்கும் என்று நம்புகிறேன்.//

என் வீடு, என் ஊர் என்பது போல் என் மொழி என்ற பெருமை எப்போதும் உண்டு. வள்ளுவனையும் கம்பனையும் பாரதியையும் தந்த மொழி என்பதால் மேலதிகமானப் பெருமையும் உண்டு. இணையத்தில் இந்திய மொழிகளிலேயே அதிகமான அளவில் கையாளப்படும் மொழி என்றப் பெருமை நிச்சயமாக உண்டு (தொடர்ந்து வலைப்பதிவதும் அதனால்தான்). இந்தப் பெருமையானது இம்மொழி தோன்றி ஐநூறு ஆண்டுகள் ஆயினவா, ஆயிரம் ஆண்டுகள் ஆயினவா, இரண்டாயிரம் ஆண்டுகள் ஆயினவா என்பதையெல்லாம் வைத்து மாறுபடாத, நிலையான ஒன்று. பள்ளிக்காலத்திலிருந்தே தமிழ் ஒரு பண்டைய மொழி என்பது தெரிந்த செய்தி. இந்நிலையில், கடந்த ஒராண்டுக்கும் மேலாக, தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் வெளியிட்டு வரும் 'செம்மொழி' அறிக்கைகளால் எனது தமிழின் மீதான பெருமை அதிகரித்ததா என்று கேட்டால் இல்லை என்பதுதான் என் விடை. ஒரு அரசியல் கட்சியோ, அரசோ, வேறு அமைப்புகளோ ஒரு மொழியின், கலாச்சாரத்தின் பாரம்பரியத்தை ஆக்கவோ, நீக்கவோ முடியாதென்பது என் நிலைப்பாடு. அதைச் செய்ததாக யாராவது பறைசாற்றினால், அதை அபத்தமாகத்தான் நான் கருதுகிறேன்.

நான் பதிவிலேயே குறிப்பிட்டது போல், காவிரி நதி நீர்ப் பங்கீடு, குடிநீர் வசதி, குடிசை மாற்று, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்சினைகள் மற்றும் பதிவில் குறிப்பிடாத உயிர்கொல்லி நோய்களின் பரவல், பெண் சிசு கொலைகள், கல்வி நிலை மேம்படுத்தல் போன்ற பல உடனடிப் பிரச்சனைகள் எதிர்நோக்கியிருக்க, இவற்றில் கவனம் செலுத்தாமல், ஒரு வெட்டி பந்தா விஷயத்தைச் சாதனையாகக் காட்டி விளம்பரம் பெறும் அரசியல் அமைப்புகளைச் சரியாக அடையாளம் காட்டுவதே இப்பதிவின் நோக்கம். ஜனரஞ்சகமாக இருக்க வேண்டுமென்று அல்லாது மனதில் பட்டதை எழுத வேண்டுமென்ற உந்துதலில்தான் அவ்வாறு தலைப்பிட்டேன். Pissing contest என்று ஆங்கிலத்தில் கையாளப்படும் சொற்றொடரைத் தமிழ்ப்படுத்தியது ஒரு அதிர்ச்சி விளைவை ஏற்படுத்திவிட்டதோ என்னவோ.

மாற்றுக் கருத்துக்களைத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. யாருடைய மொழியுணர்வையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை என்றும் கூறிக்கொள்கிறேன். அவ்வாறு புரிந்து கொள்ளப்பட்டது வியப்பளிக்கிறது.

பெயரில்லா சொன்னது…

இப்படிப் பேசியே காவிரி, வேலைவாய்ப்பு எதயும் தீர்க்க மாட்டோம், மொழி சாகிறதயும் கண்டுக்க மாட்டோம். சும்மா அப்படியே தேமேண்னு இருந்தா மகிழ்ச்சியா வாய்ஸ்?

ரெண்டையும்தான் கவனிச்சு நடவடிக்கை எடுக்கணும். ஆக்கபூர்வமா சிந்தியுங்க...

-L-L-D-a-s-u சொன்னது…

வருஷா வருஷம் மக்கள் பணத்துல சுதந்திர தினம் கொண்டாடுவதை , சிலை அரசாங்க செலவில் வைக்கிறதை , செத்தவனுக்கு மாலை வைக்கிறதையெல்லாம் சாதனை என்று சொல்வது எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தம் இப்போது அரசியல்வாதிகளால் அரங்கேறுகிறது ..


விங்க்ஸ் ..

பின்னூட்டத்தில் உங்கள் விளக்கம் அருமை ..

//யாருடைய மொழியுணர்வையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை என்றும் கூறிக்கொள்கிறேன்//


இது ஏன் தேவைப்படுகிறது ? இங்கு கருத்து பரிமாற்றம் செய்யும்போது மனது புண்படுவதாக சொல்வது புரியவில்லை .. கமல் நடிப்பை புகழும்போது ரஜினியை இகழ்வதாக கருத்தாக்கம் ஆகிறது .

ஜோ / Joe சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
-L-L-D-a-s-u சொன்னது…

தமிழை வைத்து பிழைப்பு நடத்தும் 'குற்றம்' புரிந்தவனுக்கல்லவா குறுகுறுக்கவேண்டும்?

ராம்கி சொன்னது…

ஆதங்கம் புரிகிறது..வாழ்த்துக்கள்.

எப்போதுமே அரசியலில் உண்மையான பிரச்னைகளுக்கும் உணர்ச்சி மயமான பிரச்னைகளுக்கும் போட்டி இருக்கிறது.

வாய்ப்பு கிடைக்கும்போது உணர்வு தொடர்பான பிரச்னைகளுக்கும் தீர்வு காண முன்னுரிமை கொடுக்கலாம்.

ஐ.மு.கூ அரசின் பல நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. தமிழகம் தொடர்பான சாதனைகள் கூட அவர்கள் பார்வையில் சாதனைதான். ஆனால் சேது போன்ற சர்ச்சைகளும் இருக்கின்றன தான்.

பதிவில் ஆதங்கம் போய் ஆத்திர தொனி தெரிகிறதோ என்னவோ? அதைத்தான் அடக்க முடியாது, ஆத்திரத்தை அடக்கலாமே.

ஜோ / Joe சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
Voice on Wings சொன்னது…

அனானிமஸ், உங்கள் கருத்துக்கு நன்றி. ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டுமென்பதில் சந்தேகமில்லை. அதை எப்படிச் செய்வது என்பதில் வேறுபடுகிறோமென்று நினைக்கிறேன். மொழி சாகிறதா என்பதில் ஐயமிருக்கிறது. ஆனால் மனிதர்கள் சாகிறார்கள், அரசுகளின் உதாசீனத்தால். அது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.

தாசு, என்னுடன் நீங்களும் உடன்படுவது குறித்து மகிழ்ச்சி. எனது பதிவின் நோக்கம் யாரையும் புண்படுத்துவதல்ல என்னும்போது, அவ்வாறு புரிந்து கொள்ளப்பட்டதால், நான் தெளிவு படுத்த வேண்டியிருந்தது.

ஜோ, உங்கள் கருத்தில் நீங்கள் உறுதியாக இருப்பது பாராட்டப்பட வேண்டியது. அதே போல், மற்றவர்களின் உறுதியும் பாராட்டப்பட வேண்டியதே. இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் இல்லை.

ராம்கி, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. ஐ.மு.கூ, தே.ஜ.கூ.விற்கு ஒரு நல்ல secular மாற்று என்பதில் சந்தேகமில்லை. அதிலுள்ள தமிழகத்தைச் சேரந்த அங்கத்தினர், தமிழக மக்களின் நலனை மனதில் கொண்டு செயல்படலாமென்பது என் தாழ்மையானக் கருத்து. ஒரு கடுமையான விமர்சனத் தொனிக்காக முயற்சித்தேன். ஆத்திரத் தொனியாக வெளிப்பட்டுவிட்டது போலும். :)

ஜோ / Joe சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
ஜோ / Joe சொன்னது…

வாய்ஸ்,
//யாருக்கு வேண்டும் காவிரி நீரும், குடிநீரும்? யாருக்கு வேண்டும் வேலை வாய்ப்புகள்? யாருக்கு வேண்டும் மழையில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படாத, பாதுகாப்பான குடியிருப்புகள்? மறந்து விடுங்கள் உங்கள் பட்டினிகளை! மறந்து விடுங்கள் உங்கள் அவலங்களை!//

உங்களுடைய சமூக அக்கறை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது .மேலே நீங்கள் சொல்லியிருப்பவையெல்லாம் உணர்வு பூர்வமான பிரச்சனைகளை விட முக்கியமானவை என்பதில் எனக்கும் சந்தேகம் இல்லை ..ஆனால் காவிரியும் குடிநீரும் ,வேலை வாய்ப்புக்களும் ,பாதுகாப்பான குடியுருப்புக்களும் ,பட்டினியும் தீர்ந்துவிடக்கூடிய சாதகமான ஒரு தருணத்தில் ,தமிழை செம்மொழியாக்க அரசாங்கம் செலவிட்ட நேரமும் ,பொருட்செலவும் அதீத அக்கறையும் மட்டுமே..அந்த முக்கியமான பிரச்சனைகள் தீர்ந்து விடக்கூடிய சாத்தியக்கூருகளை சிதைத்து விட்டது போல இங்கே நீங்கள் கருத்துருவாக்கம் செய்வது உங்கள் நோக்கத்தை தெளிவுபடுத்துகிறது.

ஏதோ அரசு எந்திரமே தமிழ் செம்மொழியாக்கும் முயற்சியில் முடங்கிப்போய் ,மேற்சொன்னவற்றை நிறைவேற்றும் தருணத்தை தடுத்துவிட்டதாக உங்கள் வாதம் இருக்கிறது .நாட்டில் அரசாங்கத்தின் எத்தனையோ அறிவிப்புகள் மக்கள் முன்னேற்றத்திற்கு நேரடித்தொடர்பு இல்லாமல் இருக்கிறது .ஒரு நாட்ட்டின் பழமையான மொழியை ,வரலாற்றை பாதுகாத்து அது பற்றிய அறிவை அடுத்த தலைமுறைக்கும் ,உலக அரங்கிலும் கொண்டு செல்ல வேண்டியதும் ஒரு அரசாங்கத்தின் கடமை தான் .தமிழ் செம்மொழி ஆக்கப்பட்டது தமிழனின் தனிப்பட்ட ஆதாயத்திற்காக அல்ல .தமிழர் அல்லாத பிறர் நம் மொழியின் பழமையை ,பண்பாட்டை அறிந்து அதன் மூலம் நம்மை நெருங்கி வருவதற்குத் தான்.

பரபரப்பை ஏற்படுத்த வேண்டுமென்றோ ,அல்லது வித்தியாசமாக எழுதி பிறர் பாராட்டை பெறவோ எழுதும் போது கொஞ்சமாவது சம்பந்தத்தோடு எழுதுங்கள்

G.Ragavan சொன்னது…

தமிழ் செம்மொழியானதில் மகிழ்ச்சிதான். அதில் எந்த வருத்தமும் இல்லை. ஆனால் அது மட்டும் போதாதென்று சொல்கின்றீர்கள். புரிகிறது. ஆனாலும் நீங்கள் சொல்ல வந்ததை விட தமிழ் செம்மொழியானதைப் பற்றிய கருத்துதான் முன்னிற்கிறது.

நிச்சயமாக அரசியலில் விலை போகும் சரக்குகளில் ஒன்று தமிழ். இன்னொன்று மதம். இரண்டும் நல்லபடியே விலை போகும்.

சுதர்சன் சொன்னது…

//இப்படிப் பேசியே காவிரி, வேலைவாய்ப்பு எதயும் தீர்க்க மாட்டோம், மொழி சாகிறதயும் கண்டுக்க மாட்டோம். சும்மா அப்படியே தேமேண்னு இருந்தா மகிழ்ச்சியா வாய்ஸ்?//

அது :)

Voice on Wings சொன்னது…

ஜோ, செம்மொழி அறிக்கை விடுக்க அதிக அளவிலான உழைப்பும் பொருட்செலவும் தேவையென்று நான் கூறவில்லை. ஆகவே, நான் சொல்ல வந்ததாக நீங்கள் அனுமானம் செய்வதை ஒரு சரியான புரிதலாக நான் கொள்ள மாட்டேன். தமிழைச் சிறப்பிக்க எடுத்துக் கொண்ட முயற்சிகளால், உண்மைப் பிரச்சினைகளை கவனிப்பது தடைப்பட்டுப் போனது என்று நான் ஒரு போதும் கூறவில்லை. உண்மைப் பிரச்சினைகளைத் தீர்க்க இயலாதவர்கள், மொழியுணர்வுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு, மக்களின் கவனத்தைத் திசை திருப்புகிறார்கள் என்பதுதான் நான் சொல்ல வந்தது, சொல்வது எல்லாம். நண்பர் ராகவன் குறிப்பிட்டது போல், பா.ஜ.க.வும், முஸ்லிம் லீக்கும் மக்களின் மத உணர்வை வைத்து விளையாடுவது போல் நம் அரசியல்வாதிகள் நம் மொழியுணர்வை வைத்து விளையாடுகிறார்கள். தமிழரல்லாத தமிழ் ஆர்வலர்கள் யாரும் நம் இந்திய அரசு தமிழைச் செம்மொழியாக அறிவிக்கும் வரை காத்திருக்கவில்லை. நான் பள்ளியில் படிக்கும் நாட்களிலிருந்தே ஜப்பானியர்களும், ஐரோப்பியர்களும், அமெரிக்கர்களும் தமிழைக் கற்று, ஆய்வுகள் நடத்தி வந்திருக்கின்றனர். நான் வெகுவாகக் கையாளும் இணையத் தமிழ் அகராதி, IITS Online Tamil Lexicon ஆகும். இது ஜெர்மனியில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தால் பராமரிக்கப் படுகிறது. இவ்வாறு பல உதாரணங்களை அளிக்கலாம். பரபரப்புக்காக எழுதப்பட்ட பதிவு என்றக் குற்றச்சாட்டை மறுக்கிறேன். தனது ஊடக பலம், தொண்டர்கள் பலம், அரசாங்கச் செல்வாக்கு ஆகியவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு கோடிக்கணக்கான மக்களைச் சென்றடையும் நிலையில், பரபரப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அமைப்புகளின் செயல்களுக்கான எதிர்வினையை, சில நூறு பேர்களே படிக்கும் இந்த வலைப்பதிவு உலகத்திலாவது பதிப்பது ஜனநாயகத்தின் கட்டாயம் என்றே நான் கருதுகிறேன். (பி.கு. - உங்களது சில பின்னூட்டங்களை அகற்றியதற்கு மிகவும் நன்றி.)

ராகவன், சுதர்சன், உங்கள் வருகைக்கும் பின்னுட்டத்திற்கும் நன்றி.

-L-L-D-a-s-u சொன்னது…

//உண்மைப் பிரச்சினைகளைத் தீர்க்க இயலாதவர்கள், மொழியுணர்வுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு, மக்களின் கவனத்தைத் திசை திருப்புகிறார்கள்//

மிகவும் அழகாக சொல்லியுள்ளீர்கள் விங்க்ஸ் .. தமிழை அழிக்கவேண்டும் என்று இங்கு யாரும் கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கவில்லை .. மத உணர்வை வைத்து அரசியல் செய்வதை எதிர்ப்பவன் அந்த மதத்திற்கு எதிரானவன் என்று கூறுவது எவ்வளவு அறீவீனமோ அவ்வளவு அறிவீனம் த்மிழை வைத்து பிழைப்பு நடத்துபவர்களை எதிர்ப்பவர்களை தமிழ் துரோகிகள் என்று பொருள் கூறுவது ...

betterlovemaking சொன்னது…

Hey....you have a wonderful virginia divorce law
blog here. I also have a virginia divorce law
site full of useful information. Please stop by when you get time.

Thank you

முகமூடி சொன்னது…

// உண்மைப் பிரச்சினைகளைத் தீர்க்க இயலாதவர்கள், மொழியுணர்வுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு, மக்களின் கவனத்தைத் திசை திருப்புகிறார்கள்//

இதெல்லாம் நரம்பு முறுக்கேறியவர்களுக்கு புரியாது...

ஜோ / Joe சொன்னது…

//பா.ஜ.க.வும், முஸ்லிம் லீக்கும் மக்களின் மத உணர்வை வைத்து விளையாடுவது போல் நம் அரசியல்வாதிகள் நம் மொழியுணர்வை வைத்து விளையாடுகிறார்கள்.//
உண்மை .அதை நான் மறுக்கவில்லை .அதே நேரத்தில் தமிழ் என்றாலே எரிச்சலும் காழ்ப்புணர்வும் கொண்டவர்கள் அரசியல் வாதிகளின் இந்த விளையாட்டை எதிர்க்கிறோம் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு ஒட்டுமொத்த தமிழுணர்வையே பழிக்கிறார்கள் .விளையாடுகிறார்கள் .எப்படி அரசியல்வாதிகளின் இந்த முயற்சிகளுக்கு உள்நோக்கம் இருக்கிறதோ அது போலவே இதை எதிர்க்கிற பலருக்கும் உள்நோக்கம் இருக்கிறது. இரண்டு பேரையும் நான் எதிர்க்கிறேன் .ஆனால் தமிழுக்கு சிறப்பு கிடைத்தால் அதனால் மகிழ்கிறேன் .அது யாரால் எந்த நோக்கத்திற்காக செய்யப்பட்டிருப்பினும் அதைப்பற்றி கவலையில்லை.

உங்களுடைய கடைசி பின்னூட்டத்தில் இருக்கிற முதிர்ச்சி உங்கள் பதிவில் இல்லை .என் கருத்தில் மாற்றம் இல்லை.

முத்து(தமிழினி) சொன்னது…

திரு.ஜோ வின் பெரும்பாலான கருத்துக்கள் சரியே.

விங்ஸ் அவர்களே , பரபரப்புக்காக இந்த பதிவை நீங்கள் பதித்தீர்கள் என்றால் உங்களுக்கு வெற்றியே. மொழி எதிரிகளுக்கும் சந்தோஷமே. குத்து குத்தென்று குத்தி விட்டார்கள்.

சில பின்னூட்டங்களை நீக்கி வீட்டீர்களே? ஏன்?


இன்றைய சூழ்நிலையில் எந்த விஷயத்தையும் யார் செய்தார்கள் என்று பார்க்கவேண்டாம். என்ன செய்தார்கள் என்று பாருங்கள்.

ராம்தாஸே ,கருணாநிதியோ தமிழ் வளர்த்தால் நீங்கள் ஏன் கோபப்படவேண்டும்?
இந்த இடத்தில் நீங்கள் ராம்தாஸ்,கருணாநிதி ஆகியோரை மறந்துவிட வேண்டும்.தமிழை நினைக்கவேண்டும்.

ஜெயலலிதா ஜெயேந்திரரை அரஸ்ட் செய்தால் அவர் குற்றம் செய்தாரா என்றுதான் பார்க்க வேண்டும். ஜெயலலிதாவை திட்டுவது தவறு. அது மாதிரிதான் . காந்தி வந்துதான் பாவிகளை தண்டிக்க வேண்டுமா என்ன?