இதனை தமிழ்99 தட்டச்சு முறையால் பதிகிறேன். இம்முறையைப் பற்றி இந்த வலைப்பக்கத்தில் காணலாம். அதிலிருந்து ஒரு வரி: "It's said that no language keyboard in the world is now as simple as this! To represent 26 characters of English, you need 26 lower case and 26 upper case keys. But to represent 247 Tamil letters, you need only 31 keys! How laudable!" இது குறித்து அனுராக்கும் சில நாட்களுக்கு முன் பதிவிட்டார்.
தமிழ்99 முறையின் எளிமையைக் கணக்கில் கொண்டு நானும் இம்முறைக்கு மாறுகிறேன். இந்த மாற்றத்தை எளிமையாக்க ஒரு உபகரணத்தை உருவாக்கியுள்ளேன். இதிலுள்ள தமிழ்99 வடிவமைப்பைப் பார்த்துக் கொண்டே உள்ளீடு செய்வது கொஞ்சம் சுலபமாகும். "எவ்வாறு பார்த்துக் கொண்டே உள்ளீடு செய்வது, வேறொரு windowவைத் திறந்தால் இது minimize ஆகிவிடாதா" என்கிறீர்களா? அதற்குத்தான் நான் வலை மேய்ந்து இந்த நிரலியைக் கண்டு பிடித்திருக்கிறேன். இதனை நிறுவிக் கொண்டு, ஓடவிட்டு (run the 'exe' file), எனது 'தமிழ்99 வடிவமைப்பு' உதவித் திரையைத் தேர்வு செய்து, CTRL+ALT+T என்ற கலவையை அழுத்தினால், அதன் பிறகு இந்த உதவித் திரை எப்போதும் மறைந்து போகாது தோற்றமளித்துக் கொண்டே(i.e. always on top) இருக்கும். அதனைப் பார்த்துக் கொண்டே நீங்கள் தமிழ்99 முறையில் Notepadஇலோ, வேறு கணி-சார் மற்றும் உலாவி-சார் எழுதிகளிலோ உள்ளீடு செய்யலாம். வேண்டாத பொழுது உதவித் திரையை minimizeசும் செய்து கொள்ளலாம்.
8 கருத்துகள்:
உபயோகமான பதிவு.
கருவிகளை இனி தான் பார்க்கப் போகிறேன்.
ஆனால் ஊட்டி விட்டாலும் உண்ணாதவர்கள் தான் பலரும்.
:-(
உங்கள் வருகைக்கு நன்றி அனுராக். ஊட்டிவிட இன்னொரு முயற்சியையும் எடுத்திருக்கிறேன், பார்க்கலாம்.
மனமார்ந்த பாராட்டுக்கள், பயனுள்ள கருவியாக இருக்குமென நம்புகிறேன். முதல் வேலையாக இதை தரவிறக்கி பயன்படுத்தப் போகிறேன்.
பயனுள்ள பதிவு. முரசு எடிட்டரில் தானியங்கி ஒற்றுமுறை வேலை செய்யவில்லை. தவிர சொல்லின் ஈற்றில் வரும் ஒற்றுக்களை எவ்வாறு உள்ளிடுவது ?
மற்றபடி உங்கள் நிரலிகளுக்கு நன்ற.ி
அன்புடன்,
மணியன்
சுதர்சன், உங்கள் ஆதரவுக்கு நன்றி. என்ன, தமிழ்99க்கு மாறிட்டீங்களா? :)
மணியன், நீங்கள் கூறுவது உண்மைதான். முரசு அஞ்சல் எழுதி, தானியங்கு வசதியைத் தருவதில்லை. ஈ-கலப்பையில் அந்த வசதியைப் பெறலாம். ஒற்றெழுத்துக்களைப் பெற: க+ ஃ = க், ங + ஃ = ங்........ என்ற முறையைக் கையாளுங்கள்.
நண்பர் சுரதாவுக்கு ஒரு (அன்புக்) கோரிக்கை: (நான் உட்பட) பலரும் அதிகம் பயன் படுத்தும் உங்கள் புதுவைத் தமிழ் எழுதியில் தற்போதுள்ள romanized உள்ளீட்டு வசதியுடன், தமிழ்99இல் உள்ளிடும் வசதியையும் சேர்க்க முடியுமா? அவ்வாறு செய்தால், மிகவும் பயனுள்ளதாக இருக்குமென்று நம்புகிறேன்.
நன்றி
புதுவை தமிழ் எழுதியிலும் தற்போது தமிழ்99 முறை இருக்கிறது. ஆனால், புள்ளி வைக்கும் விதத்தில் அதில் சில குறைகள் இருக்கிறது. சுரதா யாழ்வாணன் அவர்களுக்கு தெரியப்படுத்துகிறேன். தற்போது, பயர்பாக்ஸ் தமிழ்விசை நீட்சியையும் சிறப்பாக உருவாக்கப்பட்டு வருகிறது
இது குறித்த என் இடுகை -
http://thamizhthendral.blogspot.com/2006/12/blog-post_08.html
கருத்துரையிடுக