எந்த அளவுக்கு பயன்படும் என்று போகப் போகதான் தெரியும், எனினும் நான் முயன்று தயாரித்த ஒரு Firefox Extension இதோ. (zip file உருவில் உள்ளது. Unzip செய்து உள்ளிருக்கும் .xpi fileஐ Firefoxஇன் "Open file" கட்டளை கொண்டு திறந்தால், extension நிறுவப்பட்டு விடும்.) இதன் செயல்பாடு பின்வருமாறு:
நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் ஒரு தமிழ் வலைபக்கத்திலிருந்து ஏதாவது ஒரு கலைச்சொல்லைத் தேர்வு / தெரிவு செய்து வலது-சொடுக்கல்(right-click) செய்தால், கிடைக்கப் பெறும் 'மெனு'வில் 'Tamil Wikipedia Search' என்றொரு வசதியிருப்பதைக் காணலாம். அதனை இயக்கினால், நீங்கள் தேர்வு செய்த சொல்லுக்கான தமிழ் விக்கிப்பீடியா பக்கம் இன்னொரு Tabஇல் திறக்கும். அதற்கு முன்பு, கீழே காட்டப் பட்டுள்ளதைப்போல் ஒரு உரையாடல் பெட்டி திறந்து, உங்கள் தேர்வை ஒரு முழுமையான, ஒருமையான சொல்லாக மாற்றியமைக்கக் கோரும்.்
உ-ம், 'சிலப்பதிகாரத்தில்', 'சிலப்பதிகார' போன்றவைகளை 'சிலப்பதிகாரம்' என்று மாற்ற வேண்டும். 'காடுகள்', 'மலைகள்' ஆகியவற்றை ஒருமைக்கு மாற்ற வேண்டும். அவ்வாறு செய்தால் உங்கள் தேடல் வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகம். இ-கலப்பை இருந்தால் இத்தகைய மாற்றங்களை எளிதில் செய்யலாம்.
மேற்கூறிய உரையாடல் பெட்டி கொண்டு இன்னொரு தந்திரமும் செய்யலாம். தேர்வு செய்த சொல்லுக்கு முன் 'en:' என உள்ளிடப் பட்டால்்டால், உங்கள் தேர்வுச் சொல் ஆங்கில விக்கிபீடியாவில் தேடப்படும். எனவே, நீங்கள் இதே extensionஐக் கொண்டு ஆங்கில வலை பக்கங்களிலும் விக்கிபீடியா தேடல்களை நிகழ்த்தலாம். Isn't it cool?
இன்றைய நிலையில் பெருவாரியான பக்கங்கள் தமிழ் விக்கிபீடியாவில் காலியாக உள்ளன. பலரும் இந்த செயல்பாட்டைக் கொண்டு தேடலில் ஈடுபட்டால் அதுவே பக்கங்களை நிரப்ப ஒரு ஊந்துதலாக இருக்கலாமென நம்புகிறேன். வலைப்பதிவர்களும் மற்ற இணைய படைப்பாளிகளும் ஆழ்ந்த கருத்தாக்கங்களை உருவாக்கும் பட்சத்தில், அவர்கள் பயன்படுத்திய அரிய சொற்களுக்கான ் விளக்கம் விக்கிபீடியா தளத்தில் இருக்கிறதா என இந்த வலது-சொடுக்கல் முறை கொண்டு ஒரு முறை சோதித்து, இல்லையென்றால் அதனை சேர்ப்பார்களேயானால் அது தமிழ் சமூகத்துக்கு ஆற்றும் தொண்டே ஆகும். இவ்வாறு சிறு துளிகள் பெரு வெள்ளமாகும்போது, நம் கிராமங்களிலும் , சிறு நகரங்களிலும் தமிழ்வழிக் கல்வி பயிலும் மாணவ மாணவியருக்கு ஒரு அறிவுப் பொக்கிஷத்தை உருவாக்கியவர்களாவோம்.
பயன்பாட்டில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் தயங்காமல் கேளுங்கள், என்னாலான உதவியை செய்கிறேன். இதனை மொஜில்லாவுக்கும் (update.mozilla.org) சமர்பித்திருக்கிறேன். பரிசோதித்துப் பார்த்து, பிறகு சேர்த்துக் கொள்வார்களென நம்புகிறேன்.
10 கருத்துகள்:
I think it is a Great Idea.
நல்ல முயற்சி. இந்த நீட்சியினை முகுந்த் (தமிழா.காம்)ற்கு அனுப்பிவையுங்கள். நானும் பரிந்துரைக்கிறேன். அடுத்த பயர்பாக்ஸ் தமிழ் வரும்போது இந்த நீட்சியினை உள்ளீடாகவே (built-in with the browser)தர தமிழ் திறமூல குழுவின் மூலம் முயல்கிறேன். நான் வெளியே இருந்து எழுதுவதால், இதனை பதிவிறக்கவில்லை. நீங்கள் mugunth at gmail dot com & narain at gmail dot com ற்கும் ஜிப் பைலை அனுப்பி விடுங்கள். நன்றி. தொடர்ந்து நிரலிகள் எழுதுங்கள்.
நல்ல யோசனை.
முயற்சிக்கு நன்றியும், பாராட்டுக்களும். இறக்கி நிறுவியுள்ளேன். ஒரு சில தினங்கள் முன் அலுவலகத்தில் உள்ள சீன நண்பர்கள் சிலர் தனது இணைய உலாவியில் ஆங்கில வார்த்தையை தேர்ந்தெடுத்து சொடுக்கி, அதற்கினையான சீன அருஞ்சொற்பொருள்/விளக்கம் படித்தனர். அப்போது வியந்தேன்... இன்று அதே போன்ற ஒன்றை கொடுத்திருக்கிறீர்கள்.
நீங்கள் கூறிய விக்கிபீடியாவில் தேடும் சொல் இல்லா பிரச்னைதான் பிரதானமாயிருக்கிறது.
ஆனால்,அப்படி right clickபண்ணும்போது பார்த்தது, உதாரணத்திற்கு "தேர்வு" என்ற சொல்லில் சொடுக்க, Search Web for "தேர்வு" என்று வர அதைக் கிளிக்கினால் கூகிளில் தேடி விடை கிடைக்கிறது. அதே தேர்வு - என்ற சொல்லுக்கு விக்கி-யில் பதில் இல்லை. அப்படியென்றால், இந்த தேடுதல் எந்தவகையில் பயன்படும் அல்லது எப்படி மேம்படுத்தலாம்!?
மீண்டும் நன்றி.
இறக்கிக் கொண்டேன். நன்றி.
karthik, narain, பரணீ, அன்பு, மற்றும் சுந்தரவடிவேல், உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி.
narain, நீங்கள் கூறியது போல் கோப்பை உங்களுக்கும் முகுந்திற்கும் மின்னஞ்சல் செய்கிறேன்.
அன்பு, நீங்கள் கேட்டிருப்பது நல்ல கேள்வி. இன்றைய நிலையில் கூகிள் பயனுள்ளதாகத் தோன்றலாம். எனினும், அது வழங்குவது தேடப்பட்ட சொல் இடம்பெறும் பக்கங்களையே. நீங்கள் தேடும் 'விளக்கம்' அப்பக்கங்களில் இல்லாமற் போகலாம். அதுவே, விக்கிபீடியாவிலோ நீண்ட விளக்கங்களை அளிக்கும் வசதியுள்ளது. உ-ம், சிங்கப்பூர் - இதனை வலது சொடுக்கிப் பாருங்கள், நான் கூறுவது தெளிவாகப் புரியும். இதனைப் போன்று எல்லா கலைச்சொற்கள் மற்றும் பெயர்ச்சொற்களுக்கும் விரிவான விளக்கங்கள் இருக்குமானால் நம் இணையத் தமிழ் சமுதாயம் எவ்வளவு பயன் பெறும்? இதுவே நாம் அனைவரும் கூட்டாக வளர்க்க வேண்டியதாகும்.
நல்ல முயற்சி! பாராட்டுகளும் நன்றியும்.
உங்கள் ஆதரவுக்கு நன்றி, இராதாகிருஷ்ணன்.
பதிவில் சில மாறுதல்களைச் செய்திருக்கிறேன். கீழேயுள்ள வரிகள் சேர்க்கப் பட்டிருக்கின்றன. கூடுதல் பலனளிக்கலாம் என நம்புகிறேன். நன்றி.
"மேற்கூறிய உரையாடல் பெட்டி கொண்டு இன்னொரு தந்திரமும் செய்யலாம். தேர்வு செய்த சொல்லுக்கு முன் 'en:' என உள்ளிடப் பட்டால்்டால், உங்கள் தேர்வுச் சொல் ஆங்கில விக்கிபீடியாவில் தேடப்படும். எனவே, நீங்கள் இதே extensionஐக் கொண்டு ஆங்கில வலை பக்கங்களிலும் விக்கிபீடியா தேடல்களை நிகழ்த்தலாம். Isn't it cool?"
உங்கள் விளக்கத்துக்கு ரொம்ப நன்றி... VoW
அதோடு இன்னொரு போனஸும் இப்போ கொடுத்துருக்கிறீங்க...
முயற்சிசெய்து பார்க்கிறேன்..en: மீண்டும் பாராட்டுக்கள்.
கருத்துரையிடுக