வெள்ளி, மே 06, 2005

மாமனிதர் ராமர் பிள்ளை

முதற்கண் எனது மறுப்புரையை(disclaimer?) வாசித்து விடுகிறேன். தமிழ்மணத்தில் பல மாமனிதர்களை சிலாகித்து வந்துகொண்டிருக்கும் பதிவுகளால் ஊந்தப் பட்டு இதனை எழுதுகிறேன். அதனால் மேற்கூறிய மாமனிதர்கள் அனைவரும் ஒரே வகையைச் சேர்ந்தவர்கள் என்று பொருள் படும்படி என் பதிவு தோன்றுமானால் அதற்கு நான் பொறுப்பல்ல. மற்றபடி, இதே ரீதியில் இன்னும் நூற்றுக்கணக்கான பதிவுகள் எழுதப்படலாம் என்று நான் கருதுவதால், எனது இந்தப் பதிவு அவைகளுக்கு ஒரு template / சட்டகமாகப் பயன்படுமானால் மிகவும் மகிழ்ச்சியடைவேன். இப்பொழுது பதிவிற்குச் செல்வோம்.

ஏட்டுச் சுரக்காய் கறிக்குதவாதென்று பள்ளிப் படிப்பைத் துக்கியெறிந்த ஒருவரின் கண்டுபிடிப்பு, உலகெங்குமுள்ள பல மேதைகளை கலங்கடித்தது ஒரு மாபெரும் செய்தி. அத்தகைய சாதனையைப் படைத்தவர்தான் ராஜபாளையம் அருகிலுள்ள ஒரு கிராமத்திலிருந்து வந்த திரு.ராமர் பிள்ளை அவர்கள். மூலிகைகளை தண்ணிரில் சமைத்து அவற்றை எரிய வைத்த பெருமை அவரையே சேரும். உலகப் புகழ் வாய்ந்த அறிஞர்களும் விஞ்ஞானிகளும் அதனைக் கண்டு செய்வதறியாது பரிதவித்த நிலையை எழுத்துக்களால் விளக்க முடியாது. Wesley Bruce என்ற மேற்கத்திய விஞ்ஞானி திரு. பிள்ளை அவர்களை இவ்வாறு போற்றியிருக்கிறார். ரத்னா சௌத்திரி என்ற IIT விஞ்ஞானியோ "காற்றிலிருக்கும் carbon dioxideஐ இந்த மூலிகைச் சமையல் உறிஞ்சுகிறது போலும்" என்று தமக்கு தோன்றிய விளக்கத்தை அளித்து கௌரவித்தார். மத்திய அரசின் விஞ்ஞான மற்றும் நுட்பவியல் துறையின் செயலர் திரு.ராமமூர்த்தி அவர்கள், "நாம் ஒரு மிகப் பெரிய கண்டுபிடிப்பின் மீது உட்காந்து கொண்டிருகிறோம் என்பதில் சந்தேகமேயில்லை" என்று அறுதியிட்டுக் கூறினார். IIT - சென்னையிலுள்ள பொறியாளர்கள் சோதித்துப் பார்த்து, பெட்ரொலை விட திரு. பிள்ளை அவர்களின் எரிபொருளே சிறப்பாக உள்ளது என்று சான்றிதழ்கள் அளித்தனர். தமிழக அரசும் ஆந்திர அரசும் போட்டி போட்டுக் கொண்டு அவரை சிறப்பித்தன. நாடெங்கிலும் அவருக்கு விழா எடுத்துப் போற்றினார்கள்.

அவர் கடை பிடித்த செய்முறையைப் பார்ப்போம். சமையல் குறிப்பு பாணியில் கொடுத்தால் பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன். ஒரு சட்டியில் நீர் நிரப்பிக் கொள்ளவும். பிறகு, உங்களுக்குத் தோன்றிய மூலிகைகளையும் சருகுகளையும் அதில் போட்டு வேக வைக்கவும். ஒரு கொதி வந்தவுடன் இறக்கி வைத்துவிட்டு அதில் உப்பு, கொஞ்சம் மிளகு, வாசனைக்கு கறிவேப்பிலை, போனால் போகிறதென்று கொஞ்சம் citric acid், வெளியுலகறியாத (சிதம்பர ரகசியமாயிற்றே?) சில ரசாயனப் தூள்கள் ஆகியவை சேர்த்து உடனிருக்கும் stirrerஆல் நன்றாகக் கலக்கவும். இதற்கு முன் stirrerரில் நீங்கள் செய்ய வேண்டியவை: அது hollowஆக, குழாய் போல் இருப்பது மிக முக்கியம். இந்த stirrerரின் கீழ்பாகத்தை மெழுகினால் அடைத்து மூடவும். பிறகு hollow்ஆனஆனஆனஆனஆ ஆன stirrerரை benzene, toluene போன்ற எரிபொருட்களால் நிறப்புங்கள். stirrerரின் இத்தகைய நிலை உங்களுக்கு மட்டுமே தெரிந்திருப்பது அவசியம். ஆகவே, அது உலோகத்தால் ஆனதாக இருக்கவேண்டும். ஏனென்றால் உள்ளே இருப்பது வெளியில் தெரியக் கூடாது. கொதிநீரின் சூட்டில் stirrerரை விட்டு கலக்கும்போது அடிபாகத்திலுள்ள மெழுகு உருகி, benzene, toluene ஆகியவை உங்கள் மூலிகைச் சமையலில் சென்று கலக்கும். ஆக்கப் பொறுத்த பின் சிறிது நேரம் ஆறப் பொறுத்தால் benzene, toluene ஆகியவை தண்ணிரின் மேல் மிதக்கும், தண்ணிருடன் கலக்காத தன்மையுடையதால். அவற்றை நிதானமாக தண்ணிரிலிருந்து பிரித்தெடுத்து விடுங்கள். பிறகு, அதனை மூலிகை எரிபொருள் என்று அறிவித்து IIT பொறியாளர்களை விட்டு சோதனையிடச் செய்யுங்கள். அவர்களும் உங்கள் எரிபொருளே பெட்ரொலை விட நன்றாக இருக்கிறது என்று சான்றிதழ் வழங்குவார்கள். இவ்வாறாக, எளிய முறையில் திரு. பிள்ளை அவர்கள் எரிபொருள் தயாரித்து அதனை 1 லிட்டர் 1 ரூபாய் என்ற அடிமட்ட விலைக்கும் விற்க முன்வந்தார். அவரது தாரள குணத்தைப் பாரட்டும் கண்ணியம் கூட நமக்கில்லை.

போகப் போக அவரை ஏமாற்றுக்காரர் என்று விஞ்ஞானிகளும் செய்தி நிறுவனங்களும் சொல்லடிகளாலேயே அழித்து விட்டார்கள். போதாக்குறைக்கு CBI வேறு அவரை கைது செய்து சிறையிலடைத்தது. தமிழகத்தில் பிறந்து மாமனிதராக இருந்துவிட்டாலேயே தொந்தரவுகள்தான் போலும். ஏன் தான் மாமனிதர்களை மாமனிதர்களாகவே விட்டு வைப்பதில்லையோ இந்த கேடு கெட்ட ஜனங்கள்.

10 கருத்துகள்:

Muthu சொன்னது…

வாய்ஸாப்விங்,
நான் கல்லூரியில் படித்தபோது ராமர்பிள்ளை செய்தி ஹாட் டாபிக். எனது நண்பன் ஒருவன் ராமர்பிள்ளை ஊரிலிருந்து என்னுடன் கல்லூரியில் படித்தான். அவன் சொன்ன வார்த்தைகள்,
"...இந்த ஆள் ஏதோ மூலிகையில் இருந்து பெட்ரோல் எடுக்கறதா சொல்றாங்க, ஆனாலும் அவங்க வீட்டுல இருக்குறவங்க ஏன் மண்ணென்னைக் கேனோட ஊரு ரேஷன் கடைல கியூல நிக்கிறாங்கன்னு தெரியலை.."

பினாத்தல் சுரேஷ் சொன்னது…

Superb post! Excellent Satire.

dondu(#11168674346665545885) சொன்னது…

நல்ல அங்கதம்.

"...இந்த ஆள் ஏதோ மூலிகையில் இருந்து பெட்ரோல் எடுக்கறதா சொல்றாங்க, ஆனாலும் அவங்க வீட்டுல இருக்குறவங்க ஏன் மண்ணென்னைக் கேனோட ஊரு ரேஷன் கடைல கியூல நிக்கிறாங்கன்னு தெரியலை.."
அதானே?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Voice on Wings சொன்னது…

முத்து, ரேஷன் கடையில் வாங்கிய மண்ணெண்ணையும் மூலிகை எரிபொருள் தயாரிக்கத் தேவையான ஒரு மூலப்பொருளாகப் பயன்படுத்தப் பட்டிருக்கலாம் :)

சுரேஷ், டோண்டு ராகவன், உங்கள் பினனூட்டதுக்கு நன்றி :)

-L-L-D-a-s-u சொன்னது…

ராமதாஸ் போன்ற மாமனிதர்கள் வரிசையில் ராமர் பிள்ளையும் பற்றி தெரிவித்த உங்கள் பணியை தமிழினம் மறக்காது ..

பெயரில்லா சொன்னது…

அங்கதம் at its best..

aathirai சொன்னது…

வெளியுலகறியாத (சிதம்பர ரகசியமாயிற்றே?) சில ரசாயனப் தூள்கள் ஆகியவை சேர்த்து உடனிருக்கும் stirrerஆல் நன்றாகக் கலக்கவும்.

prachnai inge dhan ulladhu. appzudhe patent seidhirundhal ragasiyamaka vaikka vendiyadhillaye. patent seidhu vittu thozil nutpathai license seidhirukalam. ragasiyam ariviyalukku nalladhillai.


http://www.dalitstan.org/holocaust/negation/r_pillai.html

indha vishayathil rss thalayeedu veraya..

idhayum padingal.
http://www.csicop.org/si/2004-07/hoaxes.html

வானம்பாடி சொன்னது…

;-) அட்டகாசமான எள்ளல்.

மாயவரத்தான் சொன்னது…

//ராமதாஸ் போன்ற மாமனிதர்கள் வரிசையில் ராமர் பிள்ளையும் பற்றி தெரிவித்த உங்கள் பணியை தமிழினம் மறக்காது ..//


Good one LLDasu

arulmozhivarman சொன்னது…

எழுதலாம் என்று எழுதியுள்ளீர்கள் அவருக்கு எப்படி டொலுவின்,பென்சின் பற்றி தெரியும் அவரின் முயற்ச்சியை முறியடிப்பது ஏன் பெட்ரோலிய பகாசுர கம்பெனிகளாக இருக்காது..யோசிங்க சார்