புதன், அக்டோபர் 15, 2008

என்னக் கொடும, சரவணன்?

பொருளாதார மேதைகள் மன்மோகன் சிங்கும், ப. சிதம்பரமும் (துணைக்கு மாண்டேக் சிங் ஆலுவாலியாவும்) ஆட்சி புரிந்து கொண்டிருக்கும் இந்தப் பொன்னாளில், பங்குச் சந்தை, பொருளாதாரம் எல்லாம் சரிஞ்சி போச்சு. அதுக்கு அவங்கதான் காரணம்ன்னு சொல்ல வரல்ல. (அவங்க என்ன செய்வாங்க பாவம்?) ஆனா, அத சரி செய்யறேன் பேர்வழின்னு மக்களோட வரிப்பணம் ரூ.80,000 கோடி (ரொம்ப சின்ன தொகையா படுதுல்ல?) திருப்பி விடப்பட்டிருக்கு (கேட்டா infusing funds into the systemமாம்). என்னவோ liquidity crisisன்னு பேசிக்கறாங்க. இந்த மாதிரி விவகாரங்களில் ஒரு சாமானியனை விட மோசம்தான் என்னோட அறிவு. Google (என்ன மாதிரி moronகளுக்குல்லாம் அது ஒண்ணதானே இருக்கு?) பண்ணி பாத்தா, வாங்கின (அல்லது முதலீடு செய்து தயாரித்துள்ள) பொருள விக்கமுடியாம போறதுதான் liquidity crisisன்னு தெரிய வருது. ரொம்ப நல்லதுங்க. இதுக்கு ரூ.80,000 கோடி இல்ல, அதுக்கும் மேலயே தாராளமா infuse பண்ணலாம்.

என்ன, கொஞ்சம் யோசிச்சி பாத்தா liquidity crisisல்லாம் நமக்குப் புதுசான்னு கேக்கத் தோணுது. கடனை வாங்கி விவசாயம் செய்யறான். பிறகு அறுவடைக்கு அப்பறம் விளைச்சலுக்கு விலையா, போட்ட பணம் கூட திரும்பக் கிடைக்க மாட்டேங்குது. அப்போ யாரும் liquidity crisis பத்தி பேசலையே? ரூ.80,000 கோடி எல்லாம் திருப்பி விடப்படல்லையே பாதிக்கப்பட்டவங்களுக்கு? இதுல தமாசு என்னன்னா பங்குச் சந்தை சரிவால mutual fundகளும் சரிஞ்சிருச்சாம். (என்ன ஆஸ்ச்சர்யம்?) அதை சரிகட்டறதுக்காக ரூ.20,000 கோடி infuse செய்யப்பட்டிருக்கு. Mutual fund என்பதே பங்குச் சந்தை செயல்பாட்டைப் பொருத்ததுதான். தொலைக்காட்சியில் mutual fund விளம்பரத்தைப் பார்த்தா, அதில் வேக வேகமா ஒரு disclaimerஐ படிப்பாங்க. அது என்னன்னா, "Mutual fund investments are subject to market risks. Investors are requested to read the offer documents carefully before investing" என்பதுதான். ஆக, சேவை வழங்குனர்களுக்கு நன்றாகவே தெரிந்த ஒரு சாத்தியம், அவர்களும் அவர்களது முதலீட்டாளர்களுக்கு சரியாக எச்சரிக்கை செய்து தயார்படுத்திய ஒரு நிகழ்வு, உண்மையில் நிகழ்ந்துவிட்டது. இதுக்கு ஏன் அரசாங்கம் 20,000 கோடியை infuse செய்யணும்? அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை FDயில் போடாமல் risk எடுத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு அரசு ஏன் மக்கள் வரிப்பணத்தில் பாதுகாப்பு வழங்க வேண்டும்?

இப்படி மக்கள் (அல்லது அவர்களில் ஒரு சிறு பகுதியின்) நலன் காக்கும் அரசின் நடவடிக்கையை வரவேற்காம நான் ஏன் கேள்வி கேக்கறேன்னு தோணலாம். நாடு முழுக்க விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட போதோ, இல்ல சுனாமி வந்தப்பவோ, இல்ல பீஹாரில் வெள்ளம் வந்து கோடிக்கணக்கான மக்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்த போதோ, எவ்வளவு ஆயிரம் கோடி liquidity infuse பண்ணப்பட்டதுன்னு தெரியல. ஆனா இப்பொ, IT துறையை ஒத்த டாம்பீகத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிதித் துறையின் நலன் காக்க, மாத சம்பளக் காரரகளிடமிருந்து திரட்டப்பட்ட வரிப்பணம் (தண்ணியாக) செலவாகிக் கொண்டிருக்கறது. அப்பொன்னா, மக்கள் நலன் என்பதெல்லாம் அதில் ஒரு சிறு பகுதியினருக்குதான் (நிதி, வர்த்தகத் துறையினர்களுக்குத்தான்) பொருந்துமா? என்னக் கொடும, சரவணன்?

14 கருத்துகள்:

வெங்கட்ராமன் சொன்னது…

சரியான கேள்விதான்
சத்தியமா பதில் கிடைக்காது.

பெயரில்லா சொன்னது…

If they answer also you can't understand.. :-))
Avarkal theory yee veru.

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

/என்ன மாதிரி moronகளுக்குல்லாம் அது ஒண்ணதானே இருக்கு?/

:))

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

CRR தான் அட்ஜஸ்ட் பண்ணியிருப்பதாகப் படித்தேன். கடன் கொடுத்திருக்கிறார்களா என்ன? யாருக்குன்னு கொடுப்பாங்க...

crr rate adjustment அப்பப்ப பண்றதுதானே?? பணப்புழக்கம் அதிகமாயிருந்தா ரேட்டை அதிகரிப்பதும், பணப்புழக்கத்தை அதிகப்படுத்த ரேட்டை குறைப்பதும் வாடிக்கைதானே...

தெரியவில்லை. தயவுசெய்து விளக்கவும்.. - என்னால் கூகிலில் எல்லாம் தேட முடியாது :)

superlinks சொன்னது…

hi,
viosit my blog..

பெயரில்லா சொன்னது…

கவலைப்பட வேண்டாம். மக்களின் வரிப்பணம் என்றால் அதுவும் IT போன்ற துறைகளில் இருந்து பெறப்பட்டதுதான். இந்தியாவில் விவசாயம் மூலம் ஈன்ற வருமானத்துக்கு வரி கிடையாது. எனவே வினை விதைத்தவர்கள் வினை அறுக்கிறார்கள்.

பெயரில்லா சொன்னது…

நியாயமான கேள்வி. அவர்கள் செய்வது கொடுமை

Voice on Wings சொன்னது…

வெங்கட்ராமன், அனானிகள் #1 & #2, ஜ்யோவ்ராம் சுந்தர், superlinks, மற்றும் SuNa,

உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

**********

சுந்தர்,

தொலைக்காட்சியில் பார்த்த செய்திகள், சட்டென்று இணையத்தில் கண்டுபிடிக்க முடியவில்லை. Google உதவி கொண்டு ;), நான் தேடிய வரை எனக்குக் கிடைத்த சுட்டிகள்:

- Mutual fund நிறுவனங்களுக்கு மத்திய வங்கி அளித்திருக்கும் நிதி உதவி (Rs.20,000Cr.)

- Lending institutionsக்கு மத்திய வங்கியின் உதவி (Rs.25,000 Cr.)

- வங்கிகளுக்கு Liquidity Adjustment Facility (LAF) வாயிலாக அளித்த உதவி (Rs.65,000 Cr.)

- இது புதிய செய்தி: விமானப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு bailout package கோரப்பட்டுள்ளது (Rs.4750 Cr.)

இந்தப் பணமெல்லாம் திரும்பப் பெறப்படுமா, அல்லது யானைக்குத் தீனி போட்ட மாதிரிதானான்னு தெரியல.

*********

SuNa,

மக்கள்ன்னா IT துறையில் இருப்பவர்கள் மட்டும்தான்னு நினைக்க வேண்டாம். எவ்வளவோ மாத சம்பளக்காரர்கள் IT-அல்லாத துறைகளிலும் பணியாற்றிக்கிட்டு இருக்காங்க. நீங்க சொல்ற விவசாயிகளும், வருமான வரி கட்டுவதில்லையே தவிர, அவர்கள் காலில் போட்டுக் கொள்ளும் செருப்பு, உடுத்தும் உடை, எல்லாத்துக்கும் அரசுக்கு வரி கட்டிக்கிட்டுதான் இருக்காங்க. மொத்தத்தில் நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியல. IT மக்களிடம் திரட்டப்பட்ட பணமாகவே இருந்தாலும், அதை வாரி இறைத்து செலவு பண்ணலாம்ங்கறீங்களா?

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

நீங்கள் கொடுத்திருக்கும் சுட்டியிகளிலிருந்து தெரிவது, அரசு liquidity தானே அதிகப்படுத்தியிருக்கிறது. எங்கே கடன் கொடுத்தார்கள்.

அதாவது, பணப்புழக்கம் குறைவாக இருப்பதால், crr ஐ குறைப்பது, வங்கிகளின் பண இருப்பதை அதிகப்படுத்துவது (அதன்மூலம் அவர்களால் கடன்வழங்க முடியும்).. இதுதானே நடந்திருக்கிறது.

இல்லை, பணம்தான் கொடுத்திருக்கிறார்களா??? அமெரிக்காவில் செய்யப்போவதைப்போல் இங்கில்லை என்பது என் புரிதல். விளக்கவும்.

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

/மக்களின் வரிப்பணம் என்றால் அதுவும் IT போன்ற துறைகளில் இருந்து பெறப்பட்டதுதான்./

உண்மையில் பல ஐடி நிறுவனங்களுக்கு வரியே கிடையாது (software technology parks). வருமான வரி மட்டுமல்ல, சுங்கவரி, கலால் வரிகூடக் கிடையாது.

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

stp/ehtp/eouகளுக்கு கொடுக்கும் வரிச்சலுகைகளைப் பற்றி ஒன்றும் சொல்லாதவர்கள், விவசாயத்திற்குத் தரப்படும் சலுகைகளைப் பற்றி மட்டும் நீட்டி முழக்கிக் கொண்டு வந்துவிடுவதை என்ன சொல்ல??

Voice on Wings சொன்னது…

சுந்தர்,

வங்கிகளுக்கு அவர்களது வைப்பு நிதியிலிருந்து எடுத்து செலவு செய்ய அரசு அனுமதி தந்ததைப் போல் கூறுகிறீர்கள். (ஏதோ என்னுடைய உண்டியலிலை உடைத்து அதிலிருந்து பணத்தை எடுத்துக் கொள்ள அனுமதிக்கும் என் பெற்றோரைப் போல் :) )

ஆனால் நான் கொடுத்த சுட்டிகளில் அரசு நிதியளித்திருப்பதாக தெளிவாகவே வந்திருக்கிறதே? உ-ம்:

Finance Minister P Chidambaram said RBI will provide Rs 25,000 crrore to lending institutions immediately, reports CNBC-TV18. "It will give Rs 7,500 crore to commercial banks and Rs 17,500 crore to Nabard, or National Bank for Agriculture and Rural Development."

அதே போல்,

As part of the move, the RBI will conduct a 9% special repo auction for Rs 16,500 crore.

ஏலமெல்லாம் விடறாங்கன்னா, கஜானாவிலிருந்து பணம் போகுதுன்னுதானே நினைக்கத் தோணுது? 9% என்பது கடனுக்கான வட்டியா இருக்கலாம். அதே பக்கத்தில்,

The recent steps by the Reserve Bank of India (RBI) are welcomed by the mutual fund industry because it does provide a special window for mutual funds to borrow against the kind of liquidity squeeze that they are seeing currently."

Liquidity Adjustment Facility மூலமா ரூ.62,500 கோடி வழங்கப்பட்டதுன்னு பாத்தோம். அந்த LAFன்னா என்னன்னு இங்க விளக்கியிருக்காங்க:
http://www.bankingindiaupdate.com/laf.htm

அதாவது, வெறும் 5-6% வட்டிக்கு கடனா அவ்வளவு பெரிய தொகை வழங்கப்பட்டிருக்கு.

இவ்வளவு பணத்தை கடனா குடுக்கணும்னா, வேற நலத் திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள், எல்லைகளைக் காத்துக் கொண்டிருக்கும் படையினருக்கு ஊதிய உயர்வு....... இதுக்கெல்லாம் தேவையான பணம் இல்லாம போகலாமுன்னு என்னோட 'பொதுப் புத்தி' சொல்லுது :) உண்மை நிலவரம் எப்படியோ?

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

/provide Rs 25,000 crrore to lending institutions immediately/

அதுதான் VoW. அரசோ அல்லது ரிசர்வ் வங்கியோ எங்கே நிறுவனங்களுக்குத் தருகிறார்கள். lending institutions - அதாவது வங்கிகளுக்குத்தானே தருகிறார்கள். இது liquidityஐ அதிகப்படுத்துவதுதானே...

special repo auctionம் அப்படித்தானே.. ஒரு வசதி அவ்வளவே.

இப்ப, அமெரிக்காவுல aigக்கு அரசு நேரடியா பணம் கொடுக்குது. அந்த மாதிரி இல்லைன்னு சொல்ல வந்தேன்.

பொதுப் புத்தி சில சமயம் சரியாவும் சொல்லும் :)

நன்றி, VoW.

பெயரில்லா சொன்னது…

(法新社倫敦四日電) 英國情色大亨芮孟a片的公司昨天說,芮孟av日前成人影片av女優世,享壽八十二歲;這位身價上億的房地產日本av開發商,部落格a片經在倫成人av推出第一場脫衣舞表演。

成人網站
芮孟的財產估計av女優達六億五千萬英鎊成人影片(台a片av女優情色近四成人百億),由於他名下事業大多分布在倫敦夜生色情a片色情區蘇活區sex,因此擁有「蘇成人網站情色之王」的稱號。
部落格

他的公司「保羅芮成人影片孟集團」旗下發a片行多種情色雜誌,包括「Raavdvdzzle」、情色電影「男性世界」以及「Mayfair」。色情影片


芮孟本名傑福瑞.安東尼.奎恩,父親色情為搬運承包商。芮孟av成人光碟五歲離開學校,矢言要在表演事業留名,起先表演讀av心術,後來成為巡迴歌舞雜耍表演的製作人。


許多評a片下載論家認為,他把情色情色電影表演帶進主流社會成人電影,一九五九年主成人網站持破情色視訊天荒的脫衣舞表演,後來更靠著在蘇活部落格區與倫敦色情西區開發房地產賺得大筆財富。

a片下載
有人形成人電影容芮孟是英國的海夫納,地位AV片等同美國的「花花公子」創辦人海夫納。