ஞாயிறு, அக்டோபர் 12, 2008

Caravanserai

எண்பதுகளில் கல்லூரியில் படிச்சவங்க, அதுவும் மேற்கத்திய இசை பரிச்சயம் உள்ளவங்களுக்கு Carlos Santanaவை தெரியாம இருக்காது. அவரோட Black magic woman ரொம்ப பிரபலம். மற்ற பாடல்களும்தான். முஸ்தஃபா...... முஸ்தஃபா....... பாட்டு கேட்டிருப்பீங்க 'இசைப்புயல்' ஏ.ஆர். ரஹ்மானோட இசையில். அதோட மூலம் Santanaவின் Esperando என்ற பாடல்தான். அவரோட Oye como va, Open Invitation, Soul Sacrifice, Jingo போன்ற பாடல்களையும் நீங்க எங்கயாவது கேட்டிருக்கக் கூடும் (இசைப்புயல் / வெள்ளங்களின் திரைப்பாடல்களாவோ, அல்லது தொலைக்காட்சி விளம்பரங்களாவோ). Santanaவோட பெரும்பான்மையான பாடல்கள் இது போன்ற radio-friendly (அதாவது, 'வெகுசன ரசனைக்கேற்ற'ன்னு தமிழ்ல சொல்லலாம்) எனப்படும் வகையைச் சார்ந்தவை. அந்தக் காரணத்தினாலயே தீவிர இசை ரசிகர்கள் மத்தியில் இத்தகைய பாடல்கள் பெரு மதிப்பைப் பெறுவது கிடையாது. ஆனா இதுக்குல்லாம் விதிவிலக்கா ஒரு ஆல்பம் தந்திருக்காரு Santana. அவ்வளவா பிரபலமடையாத அந்த ஆல்பத்தின் பெயர்தான் Caravanserai. அதைப் பற்றிய அனுபவப் பகிர்வுதான் இந்த பதிவு.

ஒரு பாலைவனத்தில் caravan ஒன்றுடன் பயணம் செய்வது போன்ற உணர்வை ஏற்படுத்துவதுதான் இந்த இசைத் தொகுப்பின் நோக்கம். எதுக்கு பாலைவனத்தில் பயணம் செய்யணும்ன்னெல்லாம் கேக்க மாட்டீங்கன்னு நம்பறேன் :) ஒரு தனியறையில் வேண்டிய 'வசதிகள்' செய்து கொண்டு இத்தகைய பயணங்களை மேற்கொள்வது எல்லா வகையிலும் பயன் தரக்கூடும் :) ஒரு பாடல் தொகுப்பு என்ற உணர்வே ஏற்படாமல், முதலிலிருந்து இறுதி வரை ஒரே பாடலைக் கேட்பது போன்ற ஒரு உணர்வை வலுவாக ஏற்படுத்துகிறது இந்த இசைத்தட்டு. இது போல் இருப்பதை concept album என்பார்கள். ஒரு பொது கருத்துடன் எல்லா பாடல்களும் பொருந்தி வருவது போல் இருக்கும்.

இசை என்பது கருவிகளில் / குரலில் காட்டும் மேதமை என்பதைக் கடந்து, ஒரு அனுபவம், ஒரு உணர்வு, ஒரு ஆழ்மனப் பரிமாற்றம் (subconscious communication) என்ற தளங்களிலிருந்து அணுகினால் இந்த இசைத் தொகுப்பு ஒரு இணையற்ற விருந்தாக அமையக்கூடும். ஒரு மாதிரிக்காக ' பேரண்டத்திலுள்ள எல்லா அன்பும்' (All the love of the Universe) என்ற தலைப்பு கொண்ட இந்தப் பாடலை இங்கே இணைத்திருக்கிறேன்.



(பாடலின் climax கட்டம் கொஞ்சம் விடுபட்டுவிட்டது :) ஒட்டகங்களின் நாலு கால் பாய்ச்சலை முழுமையாக அனுபவிக்க முடியாததற்கு வருந்துகிறேன்)

குறிப்பட்டுச் சொல்லணும்னா, guitar, bass மற்றும் drumsஇன் இடைவிடாத உரையாடல்கள், மற்றும் மொத்தத்தில் அதன் காலத்தை வென்ற தன்மை (timelessness), ஆகியன இந்தத் தொகுப்பை மற்ற இசைத்தட்டுகளிலிருந்து வேறுபடுத்தும். Radio-friendly பாடல்களே பெரும்பாலும் பரிச்சயமானவர்கள் இந்த இசைத் தொகுப்பை அணுகும்போது ஒரு முழு விருந்துக்கு தயாராகச் செல்லுங்கள். மனரீதியாக என்ன எதிர்வினைகளை ஏற்படுத்தும் என்பதைச் சொல்ல முடியாததால், இதைத் தனிமையில் கேட்பது சிறந்தது.

பி.கு. - இது போன்ற நல்ல இசை பற்றிய பகிர்வுகளை இந்தத் தளத்தில் சேகரித்து வருகிறேன். விரும்பினால் அங்கேயும் வருகை தாருங்கள்.

2 கருத்துகள்:

பெத்தராயுடு சொன்னது…

//அவரோட Black magic woman ரொம்ப பிரபலம். மற்ற பாடல்களும்தான். //

I knew him through Maria Maria song.

Voice on Wings சொன்னது…

பெத்த ராயுடு, சில வருடங்களுக்கு முன் Supernatural என்ற தொகுப்பின் மூலமாக மறு பிரவேசம் செய்தார் Santana. நீங்கள் குறிப்ப்பிட்ட பாடல் அதிலிருந்ததுதான்.

பல முன்னோடி நட்சத்திரங்களுடனான கூட்டு முயற்சியாக வெளிவந்து அவருக்கு பல Grammy விருதுகளைப் பெற்றுத் தந்தது இந்தத் தொகுப்பு. அதைத் தொடர்ந்து (அதே பாணியில்) Shaman என்று மற்றொரு தொகுப்பையும் வெளியிட்டு, அதுவும் ஹிட்டானது.

இவற்றைக் குறை கூறவில்லை - ஆனாலும் இவை வணிக நோக்கத்துடன், பெருவாரியான ரசிகர்களை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்டவை என்பதால் இசை ரீதியான சமரசங்களுடனேயே இவை வெளிவந்தன. தீவிர ரசிப்புக்கு இவை அதிகம் தீனி போடவில்லை என்பதே எனது தாழ்மையான எண்ணம் :) பதிவில் குறிப்பிட்ட radio-friendly வகைப் படைப்புகள்தான் இவையும் :)