ஈழப் பிரச்சனை குறித்து தமிழிலேயே பெரும்பாலும் விவாதிச்சிக்கிட்டு இருக்கோம். அதனால தமிழரல்லாதவங்களுக்கு இதப் பத்தி போதிய அளவு தெரியாம போகும் வாய்ப்பிருக்கு. அதிலும் நம்ம பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் ஆட்சியே கவிழக் கூடிய ஒரு முடிவை எடுக்கப் போறாங்க. அதற்கான காரணங்கள், பின்புலம் என்பதையெல்லாம் வெளியுலகுக்கு எடுத்துச் சொல்ல நமக்கு மவுண்ட் ரோட் மஹா விஷ்ணுங்கதான் இருக்காங்க. அவர்கள் வெளியிடப் போகும் நச்சுக் கருத்துகளுக்கு ஒரு மாற்றுப் பார்வையாகவாவது நம் கருத்துகளைப் பதிவது அவசியமாகிறது.
இத்தகைய நோக்கங்களோட ஒரு ஆங்கிலப் பதிவு எழுதியிருக்கேன். அதை இங்கே காணலாம். இந்தப் பிரச்சனை குறித்து தெளிவு பெற விரும்பும் தமிழரல்லாத நட்பு வட்டங்களுக்கு (நீங்கள் விரும்பினால்) இதை சுட்டலாம். உங்களோட மதிப்பிற்குரிய கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன.
2 கருத்துகள்:
இரவி,
உங்களது ஆங்கில இடுகையை மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள். இன்றைய சூழலில் மிகத்தேவையான இடுகை.
தமிழரல்லாத இந்திய நண்பர்கள் பலருக்கு அனுப்ப வசதியாக இருந்தது.
நன்றி - சொ.சங்கரபாண்டி
சங்கரபாண்டி, வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி.
ஜீ மெயில், யாஹூ மெயில், போன்ற மின்னஞ்சல் தளங்களிலிருந்து பலர் வந்து பதிவைப் பார்வையிட்டிருந்ததை வருகைப் பதிவேட்டிலிருந்து தெரிந்து கொண்டேன். செய்தி பலருக்கும் பரவுகிறது என்று மகிழ்வாக இருந்தது. நம் கோரிக்கைகள் / உணர்வுகளிலுள்ள நியாயங்களையாவது மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே எனது அவா.
மேலும், நம்மவர்களிடையே உள்ள 'ஆங்கிலேயர்களுக்கும்' அவர்களது மொழியில் ;) நம் நிலையை வெளிப்படுத்தினால், காலங்காலமாக ஹிந்து படித்து ஏற்படுத்திக் கொண்ட நிலைப்பாடுகளை கொஞ்சம் மீள் பரிசோதனைக்கு உட்படுத்தவாவது உதவலாம் என்ற எண்ணமும் ஒரு காரணம்.
கருத்துரையிடுக