இன்னைக்கி எனக்கு ஒரு மின்மடல் வந்தது (அனுப்புனர் முகவரியில் செந்தில்ங்கிற பேர் இருந்தது). எதோ தளத்திலிருந்து எந்த கைப்பேசிக்கும் sms அனுப்பலாம்ன்னு. போய் பாத்தா Google தளம் மாதிரியே வடிவமைக்கப்பட்டிருக்கு. அப்பறம் உங்க google கணக்கையும் கடவுச்சொல்லையும் கேட்குது :) 'w3schools.in'ங்கிற domain name, whois பண்ணியதில் யாரோ சிவக்குமார்ன்னு ஒரு புண்ணியவான் பேர்ல register ஆகியிருக்கு. அவருக்கு இதுல சம்மந்தம் இருக்கான்னு தெரியல.
இதுதான் தள முகவரி. தப்பித் தவறி கூட உங்க கடவுச்சொல்லையெல்லாம் இந்த மாதிரி தளங்களில் குடுத்துடாதீங்க.
தமிழனை தமிழனே ஏமாற்றும் அவலம் என்னைக்குத்தான் நிக்குமோ?
7 கருத்துகள்:
மிகவும் நன்றி.
சுலபமாக ஏமாந்துவிட அதிக வாய்ப்புள்ளது.
அடப்பாவிகளா! இதை எப்படிங்க கண்டு பிடிக்கிறது? நான் லாகின் பண்ண சொன்னா பண்ணிடுவேன்..இந்த மாதிரி கூகிள் யாகூ லோகோ இருந்தா..
இதை படித்ததும் எனக்கு இப்ப பீதி ஆகி விட்டது..எந்தெந்த தளங்களை தவிர்க்கலாம்..
இல்லை எங்கேயுமே கடவுச்சொல்லை கொடுக்க வேண்டாம் என்று சொல்கிறீர்களா?
கொஞ்சம் விவரமா கூறினால் நன்றாக இருக்கும் ..
அட ஆமாங்க
நான் சும்மா பெயர் அண்ட் கடவுசொல் "கொய்யாலே" :-))))) னு கொடுத்தேன் உள்ளே போய் விட்டது :-(((((
இதுக்கு நீங்க பதில் கூறியே ஆக வேண்டும்..அதும் விவரமா :-))))
வடகரை வேலன், நல்வரவு (You're welcomeன்னு தமிழ்ல சொல்லிப் பாத்தேன் :) )
கிரி,
//நான் லாகின் பண்ண சொன்னா பண்ணிடுவேன்..இந்த மாதிரி கூகிள் யாகூ லோகோ இருந்தா..
இதை படித்ததும் எனக்கு இப்ப பீதி ஆகி விட்டது..எந்தெந்த தளங்களை தவிர்க்கலாம்..
இல்லை எங்கேயுமே கடவுச்சொல்லை கொடுக்க வேண்டாம் என்று சொல்கிறீர்களா?//
google.com / yahoo.com ஆகிய domain nameகளில்தான் கூகிள் அல்லது யாஹு கடவுச்சொற்களைக் கொடுக்கலாம். தள முகவரி மாறியிருந்தா, அவற்றைத் தவிர்ப்பதுதான் சிறந்தது.
ஓ. இன்னிக்கு எனக்கும் இதே மெயில் வந்தது. நல்லவேளை நான் உடனே அதை அழித்துவிட்டேன்..
ச்சின்னப் பையன், பதிவர்கள் பலருக்கும் இது போயிருக்கலாம்ன்னு ஊகிச்சதினாலதான் இந்தப் பதிவையே எழுதினேன்.
இத்தகைய மடல்களை எல்லாம் அழிப்பதற்கு பதிலா gmailஇல் உள்ள 'report phishing" போன்ற வழிகளைக் கடைபிடிச்சா, மத்தவங்களுக்கு எச்சரிக்கைச் செய்தியோட இம்மடல் காட்டப்படும் (அவங்களும் உஷாராவாங்க).
எனக்கும் இது போன்ற மெயில்கள் தொடர்ந்து வந்துக்கொண்டே தான் இருக்கிறது. தகவலுக்கு ரொம்ப நன்றி.
கருத்துரையிடுக