நேற்றே பாஸ்டன் பாலாவின் இடுகையில் இது குறித்து பின்னூட்டமிட்டேன்். அவ்வளவாக கவனம் பெறாததால்், இந்தத் தனிப்பதிவு.
இந்தியாவிலேயே பகுத்தறிவின் பாசறையாக விளங்கும் தமிழ்நாட்டில், ஒரு முன்னணி நாளிதழ் அதன் வாசகர்களுக்கு, இத்தேர்தலில் போட்டியிடும் சில பெண் வேட்பாளர்களைப் பற்றிய சில முக்கியத் தகவல்களை, 'நச்சென்று' வழங்கியுள்ளது. அத்தகவல்களைக் காண, கீழேயுள்ள படத்தைச் சொடுக்குக. (அது வழங்கியுள்ள அதிமுக்கியத் தகவல்களை சிவப்புக் கோடிட்டுக் காட்டியுள்ளேன்.)வாழிய செந்தமிழ், வாழிய நற்றமிழர், வாழிய பாரத மணித்திரு நாடு!
2 கருத்துகள்:
இப்ப மட்டும் என்ன கவனம் பெற்றதா? :-)
பெற்றது என்றே நம்புகிறேன், யக்ஞா. நாளிதழ்களில் இனிமேல் வரப்போகும் இத்தகைய வேட்பாளர் அறிமுகக் குறிப்புகளைப் பார்த்தால்தான் தெரியும், ஏதாவது மாற்றமிருக்கிறதா என்று.
ஒரே ஒரு பதிவு எழுதி நாட்டைத் திருத்தி விட முடியுமென்ற அதீத நம்பிக்கையெல்லாம் எனக்குக் கிடையாது. எனக்கு முற்றிலும் ஆபாசமாக தென்படும் ஒன்றைப் பற்றிய குறைந்தப்பட்ச எதிர்ப்பையாவது தெரிவிப்பதே என் நோக்கம். அது சம்மந்தப்பட்டவர்களாலும் மற்றவர்களாலும் கண்டுகொள்ளப்படுகிறதா என்பதெல்லாம் இரண்டாம் பட்சமே.
கருத்துரையிடுக