சனி, ஜூலை 02, 2005

சேதுசமுத்திரம் - பலன்கள் குறித்து நிபுணர்கள் ஐயம்

சேதுசமுத்திரத் திட்டம் நிறைவடைந்த பின் தமிழகத்தில் பாலும் தேனும் ஓடப்போகிறது என்று எண்ணிக் கொண்டிருப்பவர்களுக்கு:

நிலைமையைத் தெளிவு படுத்தும் NDTV செய்திக்குறிப்பு


சுருக்கமாகக் கூறவேண்டுமென்றால்:
  • மேற்கிலிருந்து வரும், 30000 டன்கள் வரை கொள்ளளவுள்ள கப்பல்கள், இந்தக் கால்வாயை உபயோகித்தால், அவை பயணத்தில் 24 மணி நேரம் வரை குறைக்கலாம் என்று திட்டத் தலைவர் திரு.என்.கே.இரகுபதி கூறுகிறார்.
  • ஆனால் இத்துறை நிபுணர்களோ வேறு விதமாகக் கருத்து தெரிவிக்கின்றனர். உதாரணத்துக்கு,
    • கப்பல்கள் முன்னை விட மிகப் பெரிதாகிவிட்டதால் அவைகளில் பலவற்றால் இக்கால்வாயை உபயோகிக்க இயலாது. ஆகவே, அவைகள் எப்படியும் இலங்கையைச் சுற்றியே வரவேண்டும். எடைவாரியாகப் பார்த்தால், 60இலிருந்து 70 சதவிகிதம் வரையிலான கப்பல்ப் போக்குவரத்து, இக்கால்வாயைப் பயன்படுத்த முடியாமல் இலங்கையைச் சுற்றியே வரவேண்டும் என்று ஓய்வு பெற்ற சென்னைத் துறைமுகத்தின் துணைத்தலைவர் திரு.இராமகிருஷ்ணன் கூறுகிறார்.
    • மேலும், சிக்கனமான வேகத்தில்(economic speed) பயணித்தாலேயே கப்பல்களால் எரிபொருள் சிக்கனத்தைப் பெற முடியும். இக்கால்வாயில் அது சாத்தியமாகாத காரணத்தால் எரிபொருள் செலவில் கப்பல்களுக்கு மிகுந்த மாற்றமெதுவுமிருக்காது என்று முன்னாள் உலக வங்கி ஆலோசகர் திரு.கே.ஆர்.ஏ.நரசய்யா கூறுகிறார்.
அதிகார வட்டாரங்களிலும், இத்திட்டம் குறித்து பலத்த ஐயம் நிலவுகிறது. திட்ட அதிகாரிகள் முன்வைக்கும் இலக்கங்கள் எதுவும் நம்பும்படியாக இல்லை என்ற எண்ணமே மேலோங்கியிருக்கிறது. இவ்வளவு கேள்விகளிருந்தும், தி.மு.க. இதை முன்னெடுத்துச் செல்வதிலேயே குறியாக இருக்கிறது.

6 கருத்துகள்:

தெருத்தொண்டன் சொன்னது…

சேது சமுத்திரத் திட்டத்தின் தொடக்கவிழா சிறப்பாக நடைபெற்று முடிந்தது. 150 ஆண்டு தமிழர்களின் கனவு நனவாகப் போகிறது. 2400 கோடி ரூபாயில் ஒரு கூட்டணி சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற முயல்கிறது என்று சிலர் விமர்சிக்கிறார்கள். இன்றைய விழாவில் டாக்டர் ராமதாஸ் கலந்து கொள்ளவில்லை.(புறக்கணிப்பு?). வைகோவின் முகத்தில் மகிழ்ச்சி தெரியவில்லை. ஒருவித பதற்றத்துடன் இருந்தமாதிரி தெரிந்தது. திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட திமுக தலைவர்கள் முகத்தில் மட்டுமே வெற்றிக் களிப்பு தெரிந்தது.

சோனியா காந்தி சுற்றுச்சூழல் மற்றும் மீனவர் நலன் பாதுகாக்கப்படும் என்றார். அந்நியச் செலாவணியும் வணிகமும் தமிழகத்தில் பெருகி ஓடும் என்பதே இன்று தலைவர்களின் பேச்சின் பிரதான அம்சம்.

ரொட்டி இல்லை என்றால் என்ன? எல்லோரும் கேக் சாப்பிடலாம்.
தெருத்தொண்டன் , http:theruththondan.blogspot.com

பெயரில்லா சொன்னது…

சேது சமுத்திரம் ஆழப்படுத்தும் திட்டத்தில்
திமுகவுக்கு சுரண்ட வாய்ப்பு இருக்குமா?

Voice on Wings சொன்னது…

தொண்டரே, உங்களுக்கு உங்க பதிவுலயே விடை குடுத்துருக்கேன். அதுசரி, நீங்க கோவைப் பக்கமா? ;)

அனானிமஸ், எல்லா திட்டங்கள் போல் இதிலும் ஊழல் செய்ய வாய்ப்புகள் இருக்கலாம். ஆனால், தி.மு.க.வின் நோக்கம் சில கோடிகளை சம்பாதிப்பது மட்டுமே எனத் தோன்றவில்லை. இதை ஒரு சாதனையாகக் காட்டி தமிழர்களின் நெஞ்சில் ஒரு நீங்கா இடம் பெறுவது ஒரு முக்கிய நோக்கமாக இருக்கலாம், எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தால் பெற்ற ஆதாயம் போல். வருகிற சட்டசபைத் தேர்தலிலும் இது உதவலாம் என்பதும் ஒரு ஊகம். என்ன காரணமோ, தமிழ் நாட்டு அரசியல் எனக்குத் தெளிவாகப் புரிவதில்லை :)

பெயரில்லா சொன்னது…

In yesterdays The Hindu news,

Indian Navy Commander says, Sethu Canals main objective is for Military purpose....then only commercial....

I too suspect that...

Voice on Wings சொன்னது…

anonymous, can you provide the link of that news item? I think it is just an attempt to appeal to the patriotic and nationalist sentiments and garner a nation-wide support for the project. (as in, anybody opposing the project can be projected as an anti-national).

The channel imposes size and speed limits for the ships (max speed of 8 knots or about 15km/hour for a distance of 167kms). I'm not sure if our warships and aircraft carriers can pass through this channel, and if travelling at this speed will offer them any strategic advantage. I understand that Indian warships can do 60km/hour in a normal sea.

தெருத்தொண்டன் சொன்னது…

நான் கோவை பக்கம் இல்லை. ஆனால் இப்போது நான் எந்தப் பக்கம் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.