செவ்வாய், பிப்ரவரி 03, 2009

ஈழம்: இனி நாம் செய்யக் கூடியது

வருகிற நாட்கள் தமிழக மக்கள் இலங்கை நிலவரம் குறித்து தங்களது நிலைப்பாட்டை (அழுத்தமாக) வெளிப்படுத்தும் வகையில் அமையும்ன்னு நம்பறேன். நாளை ஒரு வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறப் போகுது. அது மாபெரும் வெற்றியடையணும்ங்கறது என்னோட ஆழ்ந்த விருப்பம். கொஞ்சம் கூட வெட்கம், தன்மானம் போன்ற எதுவுமில்லாத திமுகவும் போர்நிறுத்தம் கோரி (யாரு கிட்ட?) ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி பிப்ரவரி ஏழாம் தேதி ஒரு போராட்டத்தை அறிவிச்சிருக்கு. (தேசிய அளவில் கவனிப்பைப் பெறுவதற்காகவாவது திமுக போன்ற கட்சிகளின் பங்களிப்பு தேவைப்படுவது ஒரு வருத்தமான நிலை) மக்களாகிய நாம் உடனடியா செய்யக்கூடியது இது போன்ற போராட்டங்களுக்கு ஆதரவு தந்து அவற்றை வெற்றி பெறச் செய்வதுதான். அடுத்த கட்டமா என்ன செய்யலாம்ன்னு எனக்குத் தோன்றிய சில எண்ணங்களை இங்க பதிவு செய்கிறேன்.

தற்போதைய தமிழக விரோத காங்கிரசின் ஆட்சி இன்னும் சில மாதங்களில் முடிவுக்கு வருது. நாடாளுமன்றத் தேர்தல் மே மாதம் வாக்கில் நடக்கலாம்னு தெரிய வருது. (இன்னும் மூன்று மாதங்கள்தான்). நம் ஆறு / ஏழு கோடி தமிழர்களின் தயவால் ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் இந்தத் தமிழக விரோத காங்கிரசும், இஸ்லாமிய விரோத பா.ஜ.க.வும் நம் முன் வந்து scavenging for votes நடவடிக்கையில் ஈடுபடப்போறாங்க. நாம் உறுதி செய்ய வேண்டியது, இவற்றில் மற்றும் இதிலிருந்து எந்தவொரு பிரதிநிதியும் இந்திய நாடாளுமன்றத்திற்கு அனுப்பப் படக்கூடாது. தமிழக விரோத காங்கிரசும், இஸ்லாமிய விரோத பாஜகவும் நம் தயவில்லாமலேயே மத்தியில் ஆட்சியை அமைத்துக் கொள்ளட்டும். நம்மை எவ்வகையிலும் பிரதிநிதித்துவப்படுத்தாத இந்தக் கட்சிகளுக்கு நாம் ஆதரவு தரவேண்டியதில்லை. இதன் நோக்கம் இந்தியா என்னும் அரசமைப்பால் நம் உணர்வுகள் மதிக்கப்படவில்லை என்பதை அழுத்தமாகப் பதிவு செய்வதுதான். இனிமேலும் இந்தியப் பாராளுமன்ற மக்களாட்சியில் நம்பிக்கை வைக்கத் தயாராயில்லை என்பதை அழுத்தமாகப் பதிவதுதான் இதனால் ஏற்படும் பலன்.

காஷ்மீர் தேர்தலில் 60% வாக்குப் பதிவு என்பதை வைத்து காஷ்மீர் மக்கள் இந்தியாவுக்கு ஆதரவளித்துள்ளனர் என்று நிறுவ முயலுகின்றன இந்திய ஊடகங்கள். அதே அடிப்படையில் இந்திய அரசுக்கு நம்மிடம் ஆதரவில்லை என்பதையும் நாம் வாக்குச்சாவடிகளுக்குச் செல்லாமல் பதிவு செய்வோம். (இதன் விளைவாக என்னென்ன மாறுதல்கள் தமிழக வரலாற்றில் ஏற்படக்கூடும் என்பது எவரது கணிப்புகளுக்கும் அப்பாற்பட்டது).

சற்றே ambitious ஆன மேற்கூறிய திட்டத்தைப் போலவே, மற்றொரு திட்டம். ஊடகப் புறக்கணிப்பு. நம்முடைய சந்தா / patronageஇன் அடிப்படையில் இயங்கிக் கொண்டு, ஆனால் நமக்கு எதிரான பரப்புரைகளை மேற்கொள்ளும் செய்தி / காட்சி ஊடகங்களைப் புறக்கணிப்பது. அமெரிக்கக் கறுப்பினப் போராட்டத்தில் Montgomery bus boycott என்ற நிகழ்வு குறிப்பிடத்தக்கது. அங்கு பேருந்துகளில் கடைப்பிடிக்கப்பட்ட இன ஒதுக்குமுறைக்கு எதிராக அதன் பயணிகள் ஒட்டுமொத்தமாக பேருந்துகளைப் புறக்கணித்தனராம். அதன் விளைவாக அங்கு பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டு, பிறகு அந்த ஒதுக்குமுறை சட்ட விரோதமானது என்று தீர்ப்பானது. Dangers of Tamil Chauvinism என்று பத்தி எழுதும் நாளிதழ்களை அவற்றின் சிங்கார சென்னைத் தலைமை அலுவலகத்திலேயே திவாலாகும் நிலையை நம்மால் ஏற்படுத்த முடியும். நம் பிரச்சனை குறித்து தேசியத் தொலைக்காட்சிகளை விடக் குறைவான coverage செய்யும் தமிழ் சீரியல் / மானாட்ட மயிலாட்டத் தொலைக்காட்சிகளை அனைவரும் புறக்கணித்தால், அவற்றின் TRP கணக்குகளெல்லாம் அடிவாங்கி அவற்றின் விளம்பர வருவாய்களை பாதிக்கும். அதன் பிறகாவது நம் பிரச்சனைகளை முன்நிறுத்துவார்கள் என்று தோன்றுகிறது. Let's vote with our (non) voting & (non) buying power.

தற்போது கொந்தளிப்பு நிலையிலிருக்கும் தமிழுணர்வாளர்கள், உயிர்த் தியாகம் போன்றவற்றில் ஈடுபடுவதை விடுத்து, தமது எதிர்ப்பை மேற்கூறிய உத்திகள் மற்றும் அதற்கான பரப்புரைகள், போன்றவற்றில் செலவிட வேண்டும் என்பதே எனது விருப்பம்.

7 கருத்துகள்:

Voice on Wings சொன்னது…

பதிவை வெளியிட்ட போது தமிழ்மண முகப்பில் வராத காரணத்தால், ஒரு கவன ஈர்ப்பு / கயமை பின்னூட்டம் :)

இரா. செல்வராசு (R.Selvaraj) சொன்னது…

VoW, வேறுபட்ட சிந்தனை. நடைமுறைச் சாத்தியம் பற்றித் தொலைவில் இருப்பதால் தெரியவில்லை. நடத்திக் காட்ட முடிந்தால் பெரும் தாக்கத்தை உண்டாக்கும் என்று எண்ணுகிறேன்.

Voice on Wings சொன்னது…

நல்வரவு, செல்வராஜ். நடத்திக் காட்ட முடிவது சற்று (அல்லது ரொம்பவே) கடினமான செயல்தான், ஆனால் முடியாததல்ல. இலங்கையில் தமிழர்கள் தேர்தலைப் புறக்கணித்துள்ளார்கள். இந்தியாவிலும் காஷ்மீரில் இத்தகைய போராட்ட முறை கடந்த காலங்களில் வெற்றிகரமாகக் கையாளப் பட்டுள்ளது. தமிழகத்திலேயே கூட கிராம / தொகுதி அளவில் இத்தகைய போராட்டம் நடத்தப்பட்டுள்ளது என்று நினைவு.

உருவ பொம்மை எரிப்பு, அதை துடைப்பத்தால் / செருப்பாலடிப்பது போன்ற சிறுபிள்ளைத்தனமான எதிர்ப்பு வடிவங்களை விட சற்று தீவிரமான வகையில் (அதே சமயம் உயிரிழப்புகளின்றி) நம் ஒட்டு மொத்த எதிர்ப்பையும் வெளிப்படுத்த வேண்டும் என்பதே எனது விருப்பம்.

அவன்யன் சொன்னது…

you are 100 percent right

பெயரில்லா சொன்னது…

உணர்வுள்ளவர்கள் தேர்தலைப் புறக்கணிக்கும் போது ,உணர்வு அற்றவர்கள் தேர்தலில் வாக்களித்து காங்கிரசினை வெற்றி பெறச் செய்வார்கள் தானே. இதை விட காங்கிரசுக்கு எதிர்த்து வாக்களிப்பது நல்லது.

Voice on Wings சொன்னது…

முகுந்தன், வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி.

அனானி, காங்கிரஸுக்கு எதிராக யாருக்கு வாக்களிப்பது? பாஜகவுக்கா? (குஜராத்தும் அயோத்தியும், மங்களூரும் நினைவுக்கு வந்து போகின்றன.) அதிமுகவுக்கா? (அவர்களது ஈழ / தமிழர் விரோத நிலை உலகறிந்தது) Anyway, உங்கள் யோசனைக்கு நன்றி :)

ராஜ நடராஜன் சொன்னது…

You got a point.Wish practically it would happen.