வெள்ளி, ஜூலை 18, 2008

'))'))')) said...

நிறைய Blogger பதிவுகளில் பின்னூட்டப் பகுதியைப் பார்த்தா தலைப்பில் காட்டப்பட்ட மாதிரிதான் பின்னூட்டாளரின் பெயர் தெரியுது. இது ஏன் இப்படின்னு கொஞ்சம் நோண்டிப் பார்த்தேன். Firebug நீட்சியைக் கொண்டு பரிசோதித்துப் பார்த்த போது பின்னூட்டியவருக்கான code கீழ்க்கண்டவாறு இருந்தது:

<script>document.write(to_unicode(
'<script>document.write(to_unicode(
'<script>document.write(to_unicode(
'<script>document.write(to_unicode('யாத்திரீகன்'))</script>

ஒரே நிரல் எப்படி பல முறைகள் recurse ஆகியிருக்கு பார்த்தீங்களா? அதற்கு பதிலா, இப்படி இருந்திருந்தா இந்தப் பிரச்சினை இருந்திருக்காது:

<script>document.write(to_unicode('யாத்திரீகன்'))</script>
[குறிப்பு: இது தவறாகும். கீழே 'பிற்சேர்க்கை' என்ற குறிப்பைக் காண்க]

அல்லது, இப்படி இருந்திருந்தாலும்:

யாத்திரீகன்

to_unicode() என்ற நிரல் எதற்காக புகுத்தப்பட்டிருக்குன்னு தெரியல. இடைப்பட்ட காலத்தில் (பிளாக்கர் பீட்டா காலத்தில்) தமிழ் எழுத்துகள் தெரியாம accented ஐரோப்பிய எழுத்துகளா தெரிஞ்சதை சரிபண்ண யாராவது (ஜெகத் / கோபி?) உருவாக்கியிருக்காங்களோ என்னவோ.

சரி, இந்தப் பிரச்சனை உங்க பதிவில் இருந்தா அதை எப்படி சரி பண்றதுன்னு ஒரு கேள்வி இருக்கலாம். அதற்கான (குத்துமதிப்பான) விடை:
1. பிளாக்கர் dashboard சென்று 'Layout' -> 'Edit HTML' பகுதிக்கு போங்க.

2. அங்க Download Full Template அப்படீன்னு ஒரு சுட்டி இருக்கும். சொடுக்குங்க.

3. தரவிறங்கிய templateஐ இரு பிரதிகள் எடுத்து வச்சிக்கோங்க. ஒன்றுக்கு original.xml என்றும் மற்றொன்றுக்கு modified.xml அப்படீன்னும் பெயர் குடுங்க.

4. இப்போ, modified.xmlஐ Notepadஇல் திறந்து, கீழ்க்கண்ட string இருக்கும் வரியைத் தேடிக் கண்டுபிடிங்க:
<a expr:href='data:comment.authorUrl' rel='nofollow'>

5. அந்த மொத்த வரியையும் (அதாவது <a expr:href='data:comment.authorUrl' rel='nofollow'> என்பதில் தொடங்கி </a> என்பது வரை இருக்கும் நிரல் பகுதியை) கீழ குடுத்துருக்கிற மாதிரி மாற்றி அமையுங்க (i.e. replace the entire line as given below):
<a expr:href='data:comment.authorUrl' rel='nofollow'><data:comment.author/></a>

இதைச் செய்த பிறகு, பலமுறை recurse ஆகும் <script>document.write(to_unicode.........</script> என்ற நிரல் முற்றிலுமாக நீக்கப்பட்டிருக்கும் . அதுதான், நமது குறிக்கோள்.

6. இந்த திருத்ததை சேமித்துக் கொண்டு, மீண்டும் 'Layout' -> 'Edit HTML' பகுதிக்கு போங்க. அங்க Upload a template from a file on your hard drive வசதியைப் பயன்படுத்தி, நீங்கள் மாற்றிய modified.xml கோப்பை வலையேற்றுங்க. இதைச் செய்யும்போது சில சமயம் "We're sorry, but we were unable to complete your request." என்பது போன்ற பிழைச் செய்திகள் வரலாம். அப்படீன்னா சரியான ராகு காலத்தில் இதைச் செய்யத் தொடங்கினீங்கன்னு அர்த்தம். ஒரு 1 - 2 மணி நேரம் கழித்து முயற்சி செய்து பாருங்க. வேலை செய்யலாம். (i.e. there's a problem at Blogger end, which might become ok after sometime).

7. திருத்திய templateஐ வலையேற்றிய பிறகு, பெரும்பாலும் இந்தப் பிரச்சனை சரியாகி இருக்கும். "உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணா"ங்கிற மாதிரி புதுப் பிரச்சனைகள் எதாவது வந்ததுன்னா, எந்த மாற்றமும் செய்யாத original.xml கோப்பை வலையேற்றுங்க. பழைய பிரச்சனைகளோட இயங்கும் தளம் மீண்டும் கிடைக்கும்.

பிற்ச்சேர்க்கை:

நண்பர் சின்னப்பையனின் பதிவில் ' said...' என்றுதான் பின்னூட்டாளர்களின் பெயர் தோன்றுகிறது (அதாவது அவர்களின் பெயர் தோன்றுவதே இல்லை). பரிசோதனையில் தெரிய வந்தது, code கீழ்க்கண்டவாறு இருக்கிறது:
<script>
document.write(to_unicode('ச்சின்னப் பையன்'))
</script>

அதாவது no recursions. அப்படியும் கூட, to_unicode நிரல் இருப்பதாலேயே பின்னூட்டாளர்களின் பெயர் மறைந்து விடுகிறது. ஆகவே, அதை முற்றிலுமாக நீக்குவதுதான் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாக அமையும்.

37 கருத்துகள்:

Mathuvathanan Mounasamy / cowboymathu சொன்னது…

எனக்கு அப்படி இல்லைங்க. ஆனா உங்கட இந்த உதவி வரவேற்கத்தக்கதே. நன்றிகள். தொடர்ந்து செய்யுங்க.

மதுவதனன் மௌ.

சென்ஷி சொன்னது…

ப்ளாக்கர் பீட்டாவுக்கு மாறிய காலத்தில் இந்த தொல்லை இருந்தது. ஜெகத் அல்லது கோபி என்று ஞாபகம் இல்லை. இதை சரிசெய்வதற்கான நிரலியையும் பதிவு ஏற்றி உதவியிருந்தார்கள். அதை உபயோகித்தப்பின் இந்த தொல்லை வந்ததில்லை. அந்த பதிவு தேடிப்பார்த்து சுட்டி தருகிறேன்.

உங்கள் சிறப்பான முயற்சிக்கு நன்றிகள் :))

Voice on Wings சொன்னது…

நன்றி, மதுவதனன்.

சென்ஷி, அது வேறு பிரச்சனை. இப்போது வருவதைப் போல் அடைப்புக் குறிகள் வராது. உ-ம் 'சென்ஷி' என்பது சென்ஷி என்று தோன்றிக் கொண்டிருந்தது ஜெகத் அல்லது கோபி அந்தப் பிரச்சனையை சரி செய்ய இந்த to_unicode நிரலியை அமைத்திருக்கலாம். இப்போது பீட்டா standardize ஆன பிறகு அந்தப் பிரச்சனை வருவதில்லை என்பதால், இப்போது to_unicode நிரல் தேவையில்லை என்பது என் அனுமானம். 'பலிகடா' யாராவது கிடைத்தால் இதை முயற்சி செய்து பார்க்கச் சொல்லலாம் :)

பொன்ஸ்~~Poorna சொன்னது…

VoW,
This comes because some old version of my பதிவு மேம்பாட்டுக் கருவி was not checking the existing to_unicode function before adding the same again.

It should not be the case for new bloggers - who use this page now.

I wanted to create a page for removing the duplicates. But I need to find out how to do that in Java Scripting :) அந்தப் பக்கம் நம்ம அறிவு அவ்வளவு தான்..

அன்புடன்
பொன்ஸ்

Voice on Wings சொன்னது…

வருக, பொன்ஸ். இப்போ புரிந்து விட்டது, culprit யாருன்னு :) (just joking)

நான் புதிய பிளாக்கர், புதிய வார்ப்புருதான் பயன்படுத்தறேன். இந்த to_unicode நிரல் இல்லாமலேயே தமிழ் பெயர்கள் நல்லாதான் காட்டப்படுது. ஆகவே, இந்த நிரலை நீக்கினால் இந்த brackets பிரச்சனை தீரும்ன்னு நினைக்கறேன்.

Voice on Wings சொன்னது…

பொன்ஸ், பதிவை update செய்திருக்கேன். உங்க கருவியில் to_unicode புகுத்தும் optionஐ முற்றிலும் நீக்கி விடுங்கள். அதுதான் பிரச்சனைக்குக் காரணி போல் தோன்றுகிறது.

பெயரில்லா சொன்னது…

//'பலிகடா' யாராவது கிடைத்தால் இதை முயற்சி செய்து பார்க்கச் சொல்லலாம் :)//
Check with "Andaiayal" Arul-selvan http://andaiayal.blogspot.com/2008/07/blog-post_15.html

இரா. செல்வராசு (R.Selvaraj) சொன்னது…

நன்று. இதுபோன்ற உருப்படியான சேவைகள் தான் தேவை.

பரிசல்காரன் சொன்னது…

ஆஹா! அருமை! இத இதத்தான் நான் எதிர்பார்த்தேன்!

நானும் இந்த மாதிரி வலைப் பதிவர்களுக்கு உதவும் ஒரு பதிவை நேற்று எழுதி இன்று வெளியிட்டேன்.

இது போன்ற பதிவர்களுக்குதவும் குறிப்புகளை எடுத்து கையேடு போல வெளியிடும் யோசனை ஒன்று உள்ளது. அதற்கு இந்தப் பதிவையும் எடுத்துக் கொள்ளலாமா? சம்மதமென்றால் எனக்கு மின்மடலில் தெரிவிப்பீர்களா? (kbkk007@gmail.com)

அன்புடன்
-கிருஷ்ணா

Voice on Wings சொன்னது…

வெங்கட்ராமன், நன்றி. இதே பிரச்சனையைக் கொண்ட வேறு பதிவுகளையும் பார்த்திருக்கிறேன். மக்கள் சட்டம், நாமக்கல் சிபி, கயல்விழி / வருண், பெருந்தேவி, லதானந்த், ஆகியவர்களின் பதிவுகள் நினைவுக்கு வருகின்றன. அவர்கள் எல்லோருமே இதைச் செய்து இக்குறையை நீக்கலாம்.

செல்வராஜ், நன்றி. தமிழ்மணம் கருவிப்பட்டையைச் சேர்க்கும் பக்கத்திலும் இந்த to_unicode நிரலைப் புகுத்தும் option உள்ளது, அதுவும் by default தேர்வு செய்த நிலையில். இதனாலேயே பல புதியவர்களின் பதிவில் இந்த நிரல் புகுந்து கொள்கிறது என்று நினைக்கிறேன். இதை நீக்க ஆவன செய்ய வேண்டும்.

பரிசல்காரன், தாராளமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். கொஞ்சம் பேச்சு நடையில் எழுதியிருக்கிறேன். அதை நீங்கள் அச்சுக்கேற்றவாறு மாற்றி வழங்கினாலும் சம்மதமே.

இரா. செல்வராசு (R.Selvaraj) சொன்னது…

VoW, இங்கு பின்னூட்டிய மறுநிமிடமே தமிழ்மணம் நுட்பக்குழுவில் தெரிவித்திருக்கிறேன். விரைவில் அது சரி செய்யப்படும்.

கோவை விஜய் சொன்னது…

இதேபோல் "புகைப்பேழை" ல் உள்ளது . ஒருவரின் பின்னுட்டம் இந்தக் குறையை சுட்டிக் காட்டியுள்ளது.

//எம் எல் ஏ said...
பின்னூட்டம் போடரவங்க பேரு பதிவின் கீழ் தெரியமாட்டேங்குது பாருங்க !

யாரு என்ன சொல்றாங்கன்னே தெரியலே! சட்டமன்றம் மாதிரி இருக்கு !//


சரி செய்ய அருமையாய் தகவல் தந்தைமைக்கு நன்றி

http://pugaippezhai.blogspot.com

Voice on Wings சொன்னது…

விஜய், உங்கள மாதிரி ஒருத்தரத்தான் தேடிக்கிட்டு இருக்கேன். முயற்சி செய்து பார்த்து விட்டு, பிரச்சனை தீர்ந்ததான்னு தெரிவியுங்க. :) All the best!

Perundevi சொன்னது…

குரல் வடிவத்துக்கு,

காலையில் முயற்சி செய்தேன். சரியாகவில்லை. upload செய்யும்போது இப்படி வருகிறது:
"Your template could not be parsed as it is not well-formed. Please make sure all XML elements are closed properly.
XML error message: Content is not allowed in prolog."
என்ன செய்வது?
:( :(

Voice on Wings சொன்னது…

பெருந்தேவி, Download Full template என்பதைச் சொடுக்கி, அதில் கிடைக்கும் template கோப்பை எனக்கு மின்னஞ்சல் செய்வீர்களா? தேவைப்படும் மாற்றங்களைச் செய்து திருப்பி அனுப்புகிறேன். எனது மின்னஞ்சலை எனது ப்ரோஃபைலில் காணலாம்.

arulselvan சொன்னது…

என் பதிவிலும் இப்படித்தான் இருந்தது. to_unicode பகுதியை நீக்கினவுடன் சரியாகி விட்டது.
Thanks for the tip.
அருள்


>>>>>

Voice on Wings சொன்னது…

அருள், எனது தீர்வை முயன்று பார்த்து உறுதி செய்ததற்கு நன்றி. இதனால் மற்றவர்களுக்கும் இது வேலை செய்யும் என்ற நிச்சயத்தன்மை கிடைத்திருக்கிறது. அவர்களும் இதனால் பயன் பெறுவார்கள் என்று நம்புவோம்.

சின்னப் பையன் சொன்னது…

ஓ... சூப்பர்... இருங்க... சரி செய்து பாக்கறேன்...

சின்னப் பையன் சொன்னது…

வாவ்... கலக்கிட்டீங்க.. பிரச்சினை தீர்ந்தது. ரொம்ப ரொம்ப நன்றி...

பதிவை நான் மிஸ் பண்ணிட்டாலும், மெயிலிட்டதற்கு நன்றி....

Voice on Wings சொன்னது…

ச்சின்னப்பையன், நன்றி. ஒரு வாசகனாக, எனக்கும் இந்தப் பிரச்சனை பல பதிவுகளில் இருப்பது ஒரு குறையாகவே இருந்து வருகிறது. (அதனால்தான் மெயிலெல்லாம் எழுதி தொல்லை கொடுக்க வேண்டியதாகி விட்டது :)
)

இந்த பாதிப்புள்ள மற்ற பதிவர்களும் இதை விரைவில் சரி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கயல்விழி சொன்னது…

Voice on wings,

THANK YOU SO MUCH for your help.
கமெண்டாக தெரிவித்தமைக்கு ரொம்ப நன்றி.

என்னுடைய சின்ன சஜஷன்: நோட் பேடில் கோடை தேடி கண்டுபிடிப்பது சிரமமாக இருக்கிறது. ஒரிஜினல் காப்பியை சேமித்து வைத்தவுடன், ப்ளாகில் இருக்கும் "Edit HTML" உபயோகித்து கோடை மாற்றுவது சுலபமாக இருந்தது. ஏதாவது பிரச்சினை வந்ததென்றால் பழைய டெம்ப்ளேட்டை மீண்டும் டவுன்லோட் பண்ணிவிடலாம், No harm done.
(என்னுடைய தனிப்பட்ட கருத்து)

Voice on Wings சொன்னது…

கயல்விழி, மிக்க மகிழ்ச்சி :)

நீங்க சொன்ன படியும் செய்யலாம்தான். அதற்கு Expand widgets என்பது தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். (அதை மறந்துவிட வாய்ப்பிருக்கிறது.)

Notepadஇல் தேடிக் கண்டுபிடிப்பதில் என்ன சிரமம்? 'Find' வசதி கொண்டு வேண்டியதை ஒரு நொடியில் கண்டுபிடித்து விடலாம். நீங்கள் manualஆகத் தேடினீர்களோ என்னவோ.

Anyway, it's a matter of preference. எனக்கு codeஐ எனது கணினியில் edit செய்வதுதான் விருப்பம் :) வேறு சிலருக்கு வேறு மாதிரி இருக்க வாய்ப்பிருக்கிறது.

கயல்விழி சொன்னது…

//Notepadஇல் தேடிக் கண்டுபிடிப்பதில் என்ன சிரமம்? 'Find' வசதி கொண்டு வேண்டியதை ஒரு நொடியில் கண்டுபிடித்து விடலாம். நீங்கள் manualஆகத் தேடினீர்களோ என்னவோ.//

சிரமமெல்லாம் ஒன்றுமில்லை. கோடின் மற்ற பாகங்களை மனிபுலேட் பண்ண முயற்சி பண்ணியதால், it was just hard on my eyes thats all. Like you said it's personal preference I guess.

Thanks for the help again!

TBCD சொன்னது…

முன்மாதிரிகளை மாற்றும் போது இந்த மாதிரி பிரச்சனையில் சிக்கியிருக்கேன்

குறிப்பா மாற்றியமைத்த முன்மாதிரிகளில்,,

அதுக்கு உடனே பிளாக்கர் பழைய மாதிரியயை போட்டு, பின் நீக்கி என்று பரிசோதித்து, வழி கண்டுப்பிடித்தேன்..

நுட்பம் தெரியாததால்..தலையயைச் சுற்றி மூக்கைத் தொட்டேன்..

இனிமேல் பிரச்சனை வந்தால்...உங்க வழி பயன்படுத்திக்கிறேன்..

Voice on Wings சொன்னது…

tbcd, வார்ப்புருவை மாற்றியதால் பிரச்சனை வந்திருக்காது. அதன் பிறகு தமிழ்மண கருவிப்பட்டையை இணைக்க பொன்ஸ் / குழலியின் கருவியைப் பயன்படுத்தி இருப்பீர்கள். அதனால் இந்த பிரச்சனைக்கூரிய to_unicode நிரலும் சேர்ந்து கொண்டிருக்கும்.

இனி கவலையின்றி வார்ப்புருவை மாற்றலாம். கருவிப்பட்டையை இணைக்கும்போது மட்டும் கவனமாக இந்த to_unicode optionஐ deselect செய்துவிடுங்கள். (அதை அகற்றக் கோரியிருக்கிறேன். விரைவில் செய்யப்படலாம்).

Ramya Ramani சொன்னது…

நன்றி பயனுள்ள பதிவு

Voice on Wings சொன்னது…

நல்வரவு, ரம்யா :)

superlinks சொன்னது…

வணக்கம் தோழர்
உங்களுக்கு லிங்க் கொடுத்துள்ளேன்
பாருங்கள்.

Perundevi சொன்னது…

அனுப்பியிருக்கிறேன் வாய்ஸ். நன்றி.

Voice on Wings சொன்னது…

superlinks, நன்றி. உங்கள் தொடுப்புகளின் தொகுப்பு நன்றாக உள்ளது.

பெருந்தேவி, உங்கள் பதிவிலும் இந்தப் பிரச்சனை இப்போது சரியாகி இருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி :)

Selva Kumar சொன்னது…

நன்றி...VoW

சரண் சொன்னது…

நீண்ட நாட்களாக தீர்க்க வேண்டுமென்றிருந்தேன். இந்தப் பதிவின் உதவியால் சரி செய்து விட்டேன். மிக நன்றி.

Voice on Wings சொன்னது…

வழிப்போக்கன் மற்றும் சூர்யா, நல்வரவு.

ப்ரசன்னா சொன்னது…

என் பதிவிலும் இந்தப் பிரச்சனை இருந்தது. உங்களின் வழிகாட்டல் மூலம் இப்போது சரியாகி விட்டது. நன்றி. நன்றி. நன்றி

Voice on Wings சொன்னது…

மிக்க மகிழ்ச்சி, பிரசன்னா.

ரவி சொன்னது…

நன்றி நன்றி நன்றி !!!!!!!

Jackiesekar சொன்னது…

தலைவரே நீங்க சொன்னது போல நான் எதோ ராவு காலத்துலதான் இந்த பிரச்சனையை கையில் எடுத்து இருப்பன்னு தெரியுது. எப்படி பண்ணாலும் வரமாட்டேன் என்கிறது வேறு வழி ஏதாவது உள்ளதா விளக்கவெண்டும் சாமியோவ் , அல்லது உதவி பண்ணுங்க சாமியோவ். பின்னுட்டம் போடும் யார் பேறும் தெரியமாட்டேங்குது