சனி, பிப்ரவரி 23, 2008

எரிதப் பிரச்சனைக்குத் தீர்வு

ஒரு ஆயிரம் சொச்சம் பேர் இந்த மின்னஞ்சல் பட்டியல்ல மாட்டிக்கிட்டு முழிச்சிக்கிட்டு இருக்கோம் :) போன பதிவுல இந்தப் பிரச்சனைக்கு ஒரு தற்காலிகத் தீர்வு சொல்லியிருந்தேன். இப்போ இதுக்கு நிரந்தரமா ஒரு தீர்வு இருக்கும் போலயிருக்கு. நீங்க gmailஐப் பயன்படுத்துபவரா இருந்தா, நீங்க செய்ய வேண்டியதெல்லாம் இவ்வளவுதான்:
  • அந்தப் பட்டியல்ல இருந்து randomஆ ஒரு மின்னஞ்சலை தேர்ந்தெடுங்க. உங்களுக்கு முன்ன பின்ன தெரியாதவங்களா இருந்தா இன்னமும் நல்லது. (அந்தப் பட்டியல்ல இருக்கிற பெரும்பாலோர் அப்படிப்பட்டவங்கதான்)
  • இப்பொ Create a filter படிவத்தை திறங்க. அதில் "To" என்றிருக்கும் பெட்டியில் நீங்க தேர்தெடுத்த மின்னஞ்சலை ஒட்டுங்க. அதுக்கப்பறம் "Test search"ஐ அழுத்தினீங்கன்னா, இதுவரைக்கும் வந்த வேண்டாத மெயில் எல்லாம் அந்தத் தேடலில் கிடைக்கும். ஆக, வடிகட்டி வேல செய்யுதுன்னு அர்த்தம்.
  • இப்பொ next step பொத்தானை அழுத்துங்க. அதில் வரும் தேர்வுப் பட்டியலில், skip the inbox, delete it ஆகிய ரெண்டையும் தேர்வு செஞ்சி, create the filter பொத்தானை அழுத்துங்க. அவ்வளவுதான்.
இதுக்குப் பிறகு, true known, untrue unknown இப்படி யாரு அந்தப் பட்டியலைப் பயன்படுத்தி எரிதம் அனுப்பினாலும், மற்றும் அதுக்கு யாரு reply to all அனுப்பினாலும், அதெல்லாம் போயி சேருமிடம் குப்பைப் பெட்டிதான்.

13 கருத்துகள்:

Kasi Arumugam சொன்னது…

வாழ்க நீ எம்மான்!

பெயரில்லா சொன்னது…

neega romba nallavar

பினாத்தல் சுரேஷ் சொன்னது…

பில்டர் கண்ட பெருமாள் என்று உம்மை வரலாறு போற்றட்டும்.

நன்றிகள் பற்பல!

உண்மைத்தமிழன் சொன்னது…

கையெடுத்து கும்புடுறேன்.. நல்லாயிரு சாமி..

அ. இரவிசங்கர் | A. Ravishankar சொன்னது…

Vow, இது போல் யோசிச்சு நானும் ஒரு to வடிகட்டி போட்டேன். ஆனா, அந்த ஏதோ ஒரு மடல் முகவரி CCயில் இருப்பதால் வேலை செய்யுமான்னு சந்தேகமா இருக்கு. true unknown இன்னொரு எரிதம் அனுப்பினா உறுதிப்படுத்த உதவும் ;)

அ. இரவிசங்கர் | A. Ravishankar சொன்னது…

மன்னிக்கணும், true knownனு எழுதி இருக்கணும் :)

சேதுக்கரசி சொன்னது…

true known அனுப்பின ரெண்டு மடலையுமே report spam அழுத்தித் தள்ளிட்டேன். இதையே நூத்துக்கணக்கானவங்களும் செஞ்சா என்னன்னு தோணுது, அதுக்கொரு எஃபெக்ட் இருக்கும்னு நினைக்கிறேன்!

Voice on Wings சொன்னது…

காசி, அனானி, சுரேஷ், உண்மைத் தமிழன், உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி :)

ரவிசங்கர், அந்த random முகவரி 'cc'ல இருந்தாலும் நல்லா வேல செய்யுது.

சேதுக்கரசி, நிச்சயமா யாரு எரிதத்தை அனுப்பினாலும் அவங்களைப் பற்றி முறையீடு செய்து முடக்கலாம். ஆனா இப்பொ அந்தப் பட்டியல் 1000+ பேர் கிட்ட இருக்கு. இதுல யாரு வேண்ணா எரிதம் அனுப்ப வாய்ப்பிருக்கு - 'என்னோட புது தளத்தை வந்து பாருங்க', 'இவருக்கு உதவி செய்யுங்க, அவருக்கு உதவி செய்யுங்க'ன்னு. மற்றும் அப்படி நடக்கும்போது தவறாம பதில் போடற remove me ஆசாமிங்க வேற. இது எல்லாத்தையும் ஒழிக்கற one-time தீர்வுதான் நான் சொன்னது.

Nimal சொன்னது…

ஆமா...
இந்த முறை நன்றாக 'வேலைசெய்யும்' போல தெரியுது..

தகடூர் கோபி(Gopi) சொன்னது…

Vow,

நானும் நிறுத்துங்கன்னு சொல்லிப் பாத்தேன். இவங்க யாரும் இப்போதைக்கு திருந்தற மாதிரி தெரியலை.

To, Cc, From ன்னு இல்லாம
Has words: trueknown
Action: Skip Inbox, Delete it

என்று தெரிவு செய்து விட்டேன். இனி யாரு ReplyAll போட்டாலும் எனக்கு கவலையில்லை. :-)

Voice on Wings சொன்னது…

கோபி, நல்ல முடிவு :)

//நானும் நிறுத்துங்கன்னு சொல்லிப் பாத்தேன்.இவங்க யாரும் இப்போதைக்கு திருந்தற மாதிரி தெரியலை.//

நாயகன் பட வசனம்தான் ஞாபகத்துக்கு வருது :)

கலை சொன்னது…

நீங்க சொன்னபடி செய்தேன். ஆனால், test serach அழுத்தியும், அந்த வேண்டாத மெயில்கள் தேடலில் கிடைக்க மறுக்குது. என்னுடைய வடிகட்டி வேலை செய்யவில்லையா? :((

Voice on Wings சொன்னது…

கலை, அந்த மடல்கள் inboxஇல் இருந்தால்தான் Test Searchஇல் கிடைக்கும். அவற்றை உடனுக்குடன் delete செய்துவிட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். எப்படியும், வடிகட்டி இனிவரும் எரித மடல்களைத் தடுக்கவாவது உதவும்.