புதன், பிப்ரவரி 20, 2008

எரிதத் தடை

சமீப காலமா பதிவுலகில் பல வகையான எரிதங்கள் சுத்திக்கிட்டிருக்கு. அதை எப்படி எதிர்கொள்றதுன்னு சில உதவிக் குறிப்புகள்:

இந்த மடல்களை Report spam செய்யறதுனால எந்த பிரயோசனமும் இருக்காது. எவ்வளவு முகவரிகளைத்தான் தடை செஞ்சிக்கிட்டே இருக்க முடியும்? (அந்தப் பட்டியல்ல ஆயிரக்கணக்கான முகவரிகள் இருக்கும் போலயிருக்கு). மேலும், தானாகவே அஞ்சல் செய்து கொள்ளும் virus mail போன்றவற்றை report செய்தால், நண்பர்களின் முகவரிகள் (அவர்கள் எந்தத் தவறும் செய்யாத போது) தடை செய்யப்படும் ஆபத்தும் இருக்கு.

அதை விடப் பிரயோசனம் இல்லாத வேலை, 'reply to all' போட்டு தன்னை மட்டும் பட்டியல்ல இருந்து நீக்கி விடும்படி வேண்டுகோள் வைக்கறதுதான். அதைப் பின்பற்றி ஒரு பத்து பேர் அதே வேண்டுகோளை வைப்பாங்க (தன் பங்குக்கு யாரோட முகவரியையும் நீக்காம. அவங்களாலையே செயல்படுத்த முடியாத ஒண்ணை எப்படி மத்தவங்க கிட்ட இருந்து எதிர்பாக்க முடியுதோ தெரியல).

எனக்குத் தெரிஞ்சி இதை வெற்றிகரமா வீழ்த்தக்கூடிய ஒரு உத்தி - mail filters. சில விதிகளைக் குறிப்பிட்டு, இத்தகைய மடல்கள் உங்க அஞ்சல் பெட்டிக்கே வராம அழிக்கப்பட்டு விடும்படி உங்கள் மின்னஞ்சல் கணக்கை setup செய்யலாம். உ-ம், subject lineஐ குறிப்பிட்டு, இந்த subjectடோட வர்ற எல்லா மடல்களையும் அழிக்க சொல்லலாம். அல்லது ஒரு குறிப்பிட்ட நபர் கிட்டயிருந்து வர்ற மடல்களை தடுக்கலாம். அல்லது, மடலில் குறிப்பிட்ட சொற்கள் இடம்பெற்றிருந்தா அவற்றை filter செய்ய சொல்லலாம் (e.g. 'pls remove me', 'வாழ்த்துக்கள்', etc).

வருத்தமான விஷயம் என்னன்னா, இந்த மாதிரி filter செய்யறதுக்கான options ரொம்ப குறைச்சலா இருக்கு. ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேலான பெறுனர்களுக்கு அனுப்பப்படும் மடல்கள் (i.e. recipient-count > n) எல்லாத்தையும் தடுக்கும்படி ஒரு filtering option இருந்தா இது எல்லாத்தையும் ஒழிச்சிட்டு நிம்மதியா இருக்கலாம். கூகிள், யாஹூ நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் இந்த வேண்டுகோளை உங்க பெரிய தலைங்க கிட்ட போட்டு வையுங்க மாஹா ஜனங்களே!

20 கருத்துகள்:

பினாத்தல் சுரேஷ் சொன்னது…

ஆக்சுவலா இந்த ரிமூவ் மீ மக்கள்தான் சாவடிக்கறாங்க :-)

ILA (a) இளா சொன்னது…

அப்பாடா நீங்க ஒருத்தராவது வந்து இதைப் பேசறாங்களே. ஏதோ நான் மட்டும்தான் கத்துறேன்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனா ஒரு விஷயம் பதிவுலகத்துல இருக்கிற அத்தனை பேரின் மின் மடல்களும் ஒரே இடத்துல கிடைக்கச் செய்தததுக்கு நன்றி!(தப்போ சரியோ)

Voice on Wings சொன்னது…

சுரேஷ், உண்மைதான். ரிமூவ் மீன்னு மடல் அனுப்பறவங்களோட அபத்தத்தை நானும் குறிப்பிட்டிருக்கேன்.

இளா, இது பற்றி உங்களுக்கு கோபம் இருப்பது நல்லதே. ஆனா அதை வெளிப்படுத்த, நீங்களும் அனைவருக்கும் எரித மடல் அனுப்பியதில் எனக்கு உடன்பாடு கிடையாது. மேலும்,
//பதிவுலகத்துல இருக்கிற அத்தனை பேரின் மின் மடல்களும் ஒரே இடத்துல கிடைக்கச் செய்தததுக்கு நன்றி!(தப்போ சரியோ)//
இந்த வரிகள் எனக்கு அவ்வளவு ஏற்புடையதா இல்லை.
1. அந்த விநியோகப் பட்டியலில் உள்ள பலர் பதிவுலகத்துக்குத் தொடர்பில்லாதவர்கள்.
2.அதிலுள்ள பதிவுலகத்தினரும், பெரும்பாலோர் தங்கள் மின்மடலை பொதுவில் வெளிப்படுத்தவில்லை. ஆகவே, அது ஒரு personal mailing listதான், தவறுதலாக பொதுவில் வெளியாகி விட்டது. அதை எந்தக் காரணத்திற்காகப் பயன்படுத்தினாலும் அது abuseதான்.
3. (என்னைப் போன்ற) மின்முகவரிகளை பொதுவில் வைத்தவர்களும், தாங்கள் spam செய்யப்படுவதற்கு ஒப்புதல் தெரிவித்து பொதுவில் வைக்கவில்லை. one-to-one பரிமாற்றங்களுக்கு வசதி செய்யும் நோக்கத்துடன் அதை வெளியிட்டிருக்கிறோம்.
ஆகவே, அந்தப் பட்டியலை எக்காரணத்திற்காகவும் பயன்படுத்தும் எண்ணமிருந்தால் அதை உடனே கைவிடவும்.

ILA (a) இளா சொன்னது…

//ஆகவே, அந்தப் பட்டியலை எக்காரணத்திற்காகவும் பயன்படுத்தும் எண்ணமிருந்தால் அதை உடனே கைவிடவும்.//
அண்ணே, என்னமோ அதை வெச்சுதான் பொழப்பு நடத்துற மாதிரி இல்லே சொல்றீங்க. ஆளை விடுங்கப்பா..நான் என்ன மார்க்கெட்டிங் நிறுவனமா நடத்திட போறேன்?

Voice on Wings சொன்னது…

இளா :)

பொன்ஸ்~~Poorna சொன்னது…

:( மறுபடியும் சாரி....

Subject filter தான் நானும் போட்டிருக்கேன். வேற எதுவும் செய்யத் தெரியலை.. உங்களுக்கு "ரிமூவ் மீ"ன்னா, எனக்கு வேலை மெனக்கெட்டு அந்த மடலை எனக்கே forward பண்ணி, 'உங்களால எத்தனை தொல்லை பாருங்க' என்பது மாதிரி மடல் வருது :( என்ன செய்யறதுன்னு தெரியலை. அது மாதிரி மடல்களுக்குப் பதில் கொடுக்கும் தெம்பு கூட இப்ப இல்லை :(

I sincerely wish I can do something about it..

இரா. செல்வராசு (R.Selvaraj) சொன்னது…

வரும் மடல்களை அழித்துவிட்டு எல்லோரும் அமைதியாய் இருந்துவிடுவது ஒன்று தான் இப்போதைக்கு செய்யமுடிகிற உருப்படியான ஒன்று. வேறு ஒன்றும் தோன்றவில்லை. ஆனாலும், அந்தப் பட்டியலை சேர்த்து வைத்திருக்கிற யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் அண்மையில் வந்தது போல் எரிதம் அனுப்பலாம். என்ன வடிகட்டி போட முடியும்? குறைந்தபட்சம் அனுப்புபவர்கள் முகவரிகளை வெட்டி bcc:யில் போட்டாலாவது பரவாயில்லை. ReplyAll வழியாகப் பரவாமல் இருக்கும்.

பொன்ஸ், தவறுதல் யார்க்கும் எளிது. உங்களுடைய ஆரம்ப வேண்டுகோளுக்குச் செவிசாய்க்காமல் இன்னும் மடல்களை அனுப்பித் தள்ளுபவர்களுக்கு நீங்கள் பொறுப்பாளியாக மாட்டீர்கள். பொதுவில் கிடக்கிற மின்முகவரிகளைச் சேர்த்து யாரோ எரிதம் அனுப்புகிறார்கள் என்று வைத்துக் கொள்ள வேண்டியது தான். அதற்குத் தக்கவாறு ஒவ்வொருவரும் நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டியது தான். மிஞ்சிப் போனால் இப்படிப் பொதுவில் பதிவில் எழுதி குறைந்தபட்சம் ReplyAll போட்டு 'என் முகவரியை நீக்கு' என்று கேட்காமல் இருங்கள் என்று கேட்டுக் கொள்ள வேண்டியது தான்.

Voice on Wings சொன்னது…

பொன்ஸ், நிச்சயமா உங்களை சுட்டவில்லை. உங்களுடைய நிலை ரொம்ப தர்மசங்கடமானதுன்னு எனக்குப் புரியுது. இன்னொரு எரிதமும் சுத்திக்கிட்டிருக்கு - 'check out this movie site'ன்னு. சில நாட்களுக்கு முன்பு 'shelfari'ன்னு ஒண்ணு பரவலா வந்துக்கிட்டிருந்தது. இத்தகைய மடல்கள் எல்லாத்துக்கும் சேர்த்துதான் என்னோட உதவிக் குறிப்பு :) subject filter, keyword filter இப்படி சில உத்திகளை கடைப்பிடிச்சி இதை மொத்தமா நிறுத்தலாம் (உங்களுக்கு வர்ற forwarded பொலம்பல்களையும் சேர்த்து :))

செல்வராஜ், நீங்கள் கூறுவது போல் இப்போதைக்கு அமைதியாக இருப்பதுதான் சிறந்தது. அந்தப் பட்டியலை எக்காரணத்துக்கும் பயன்படுத்துவது தவறான செயல் என்ற உணர்வையாவது ஏற்படுத்தலாம் (குறிப்பாக, அது பற்றிய மகிழ்ச்சியை வெளிப்படுத்துவோருக்கு ;) ).
மடல் சேவை வழங்குனர்கள் (Google, Yahoo போன்றவர்கள்), அவர்களது வடிகட்டும் வசதியை நான் இடுகையில் குறிப்பிட்டுள்ளது போல் விரிவாக்கினால், இது போன்ற மடல்களை மொத்தமாக வடிகட்டி நிறுத்தும் வாய்ப்புள்ளது.

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

ஓ ஃபில்டர் உபயோகிக்கப் பழகவில்லை.. இப்படி வந்துகொண்டிருந்தால் அடுத்து அதுவும் பழகத்தான் வேண்டி இருக்கும்..
பொன்ஸ் அனுப்பிய போதும் சரி இப்போதும் சரி.. யாருமே யோசிப்பதாகவே தெரியவில்லை..
நீக்குங்கள் என்று கேட்டு மெயில் அனுப்புபவர்கள் எப்போது நிறுத்துவாங்கன்னே தெரியல.. ஒருத்தர் சொன்னா அதையே திருப்பி சொல்லும் அளவு தான் நம் மக்கள் இருக்கிறார்களா .. ஆச்சரியமா இருக்கிறது எனக்கு..

ILA (a) இளா சொன்னது…

Gmailல் இந்த வசதி உள்ளது. அதைத்தான் முதல் வேளையாக நான் செய்ததது. Yahooல் filter வேலை செய்யவில்லை.
Gmail- Settings-filter-create filter- இங்கே இந்த பிரச்சினைக்கு Subject filter உபயோகப்படுத்துங்க.

இரா. செல்வராசு (R.Selvaraj) சொன்னது…

இளா, சப்ஜெக்ட் ஃபில்டர் ஒன்றே நிவாரணி அல்ல. முகவரிப் பட்டியலை எடுத்து புதிதாய் ஒரு திரியை ஆரம்பித்து யார் வேண்டுமானாலும் அனுப்ப முடியும். அப்போது ஒவ்வொரு திரிக்கும் filterஐ இற்றைப் படுத்த வேண்டியிருக்கும்.

இப்பதிவில் VoW சுட்டியது போல recipient-count > n போன்ற வடிகட்டுகள் இருந்தால் மட்டுமே ஓரளவு நிவாரணம் தேட முடியும்.

Unknown சொன்னது…

//இந்த மடல்களை Report spam செய்யறதுனால எந்த பிரயோசனமும் இருக்காது. எவ்வளவு முகவரிகளைத்தான் தடை செஞ்சிக்கிட்டே இருக்க முடியும்?//

இது முற்றும் சரி அல்ல...
ஜிமெயில் போன்றவை நாம் Report ஸ்pam மெயில்களில் இருந்து Pattern Matching க்கு தேவையான தரவுகளை பெறுகின்றன. இது Spam Filters இன் செயல் திறனை அதிகரித்து எமக்கு வரும் எரிதங்களை கட்டுப்படுத்தும்.

மேலும்
இங்கே
வாசிக்கவும்.

Voice on Wings சொன்னது…

நிமல், தகவலுக்கு நன்றி. நீங்கள் கூறுவது உண்மையாயிருந்தால் நல்லது.

அப்படி report spam செய்தால் அனுப்புனரும் ஒட்டுமொத்தமாக blacklist செய்யப்படுவாரா என்பதுதான் தெரியவில்லை. அப்படியானால் அதுவே reply to all செய்வோருக்கு ஒரு disincentiveஆக இருக்கக்கூடும் என்ற வகையில் அது நல்லதே.

சில நேரம் நண்பர்களிடமிருந்து virus mails (அவர்களின் ஈடுபாடின்றி) வருகின்றன. அவற்றை report செய்வதால், நண்பர்களின் மின் முகவரிகள் blacklist ஆகுமானால் அது விரும்பத்தகாததே.

Unknown சொன்னது…

//அப்படி report spam செய்தால் அனுப்புனரும் ஒட்டுமொத்தமாக blacklist செய்யப்படுவாரா என்பதுதான் தெரியவில்லை. //
எனக்கு தெரிந்த வரையில், இது personalized. அதாவது நான் report spam செய்தால் அந்த அனுப்புனர் முகவரி எனக்கு spam, அதிலிருந்து எனக்கு வருபவை எரிதங்களாகவெ கருதப்படும். ஆனால் ஒட்டுமொத்தமாக blacklist செய்யப்படுவது சாத்தியமில்லை.

Voice on Wings சொன்னது…

நிமல், எது spam என்பது ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வேறுபடாது. நீங்கள் report செய்தது spam என்று கூகிளால் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அது ஒட்டுமொத்தமாக அனைவருக்குமே செயல்படுத்தப்படும் என்றே தோன்றுகிறது. நீங்கள் கூறுவது filterஇன் செயல்பாடு. அது ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.
இதுதான் எனது புரிதல், தவறாகவும் இருக்கலாம்.

Unknown சொன்னது…

ஆம், நீங்கள் கூறுவதிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது...

ஆனாலும் உதாரனத்திற்கு blogger இலிருந்து வரும் ஒரு notification அஞ்சலை யாராவது ஒருவர் Report spam செய்தால் அதற்காக அந்த முகவரியை ஒட்டுமொத்தமாக தடைசெய்ய முடியாது தானே...

அது தான் எனக்கு உள்ள சந்தேகம்.. எனக்கும் நிச்சயமாக தெரியாது... யாராவது கூகிளாண்டவரின் பணியாளர்தான் உறுது செய்ய வேண்டும்... :)

மேலும் இங்கேயும்...

Voice on Wings சொன்னது…

நிமல், நம்மால் 'report' அதாவது முறையீடு மட்டும்தான் செய்ய முடியும். ஒரு மடல் குறித்து பலரும் முறையீடு செய்தால், அது உண்மையிலேயே எரிதம் எனக் கண்டுகொள்ளப்படுமென்று நினைக்கிறேன். இந்தப் பக்கத்தில் Community clicks என்ற பகுதியைப் பார்வையிடவும்.

இப்போது அதே முகவரியிலிருந்து மேலும் இரு எரிதங்கள் வந்துள்ளன. அவை இரண்டையும் 'report spam' செய்திருக்கிறேன். மேலும் பலரும் இவ்வாறு முறையீடு செய்தால் அந்த முகவரியை ஒட்டுமொத்தமாகத் தடை செய்யலாம். (அதற்குப் பிறகு அந்த நபர் வேறொரு முகவரியிலிருந்து அனுப்பக்கூடும்) அடுத்த சுற்று remove me மடல்கள் வருவதைத் தடை செய்ய keyword filter அமைத்திருக்கிறேன் . அந்த நபரின் முகவரியையும் sender filter அமைத்து தடை செய்திருக்கிறேன். இது ஒரு முழு நேர வேலையாகி விடும் போலிருக்கிறது.

சேதுக்கரசி சொன்னது…

//இந்த மடல்களை Report spam செய்யறதுனால எந்த பிரயோசனமும் இருக்காது.//

இதில் எனக்கு மாற்றுக்கருத்து உண்டு. மடல் வந்த சிலமணிநேரத்தில் பல டஜன் மக்கள், அல்லது நூத்துக்கணக்கான மக்கள் ஸ்பாம் அழுத்தினால் அதற்குப் பலன் இருக்குமென்று நினைக்கிறேன். வேறொரு சமயம் (வேறு மின்னஞ்சல் தொடர்பாக) இதைச் செய்தபோது விரைவில் பலன் கிடைத்தது. இத்தனைக்கும் இருவேறு முகவரிகளிலிருந்துதான் ஸ்பாம் அழுத்தினேன், அதற்கே பலன் கிடைத்தது என்று நம்புகிறேன்.

பெயரில்லா சொன்னது…

情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣,情趣,情趣,情趣,情趣,情趣,情趣用品,情趣用品,情趣,情趣,A片,A片,情色,A片,A片,情色,A片,A片,情趣用品,A片,情趣用品,A片,情趣用品,a片,情趣用品

A片,A片,AV女優,色情,成人,做愛,情色,AIO,視訊聊天室,SEX,聊天室,自拍,AV,情色,成人,情色,aio,sex,成人,情色

免費A片,美女視訊,情色交友,免費AV,色情網站,辣妹視訊,美女交友,色情影片,成人影片,成人網站,H漫,18成人,成人圖片,成人漫畫,情色網,日本A片,免費A片下載,性愛

情色文學,色情A片,A片下載,色情遊戲,色情影片,色情聊天室,情色電影,免費視訊,免費視訊聊天,免費視訊聊天室,一葉情貼圖片區,情色視訊,免費成人影片,視訊交友,視訊聊天,言情小說,愛情小說,AV片,A漫,AVDVD,情色論壇,視訊美女,AV成人網,成人交友,成人電影,成人貼圖,成人小說,成人文章,成人圖片區,成人遊戲,愛情公寓,情色貼圖,色情小說,情色小說,成人論壇


情色文學,色情小說,情色小說,色情,寄情築園小遊戲,情色電影,aio,av女優,AV,免費A片,日本a片,美女視訊,辣妹視訊,聊天室,美女交友,成人光碟

A片,A片,A片下載,做愛,成人電影,.18成人,日本A片,情色小說,情色電影,成人影城,自拍,情色論壇,成人論壇,情色貼圖,情色,免費A片,成人,成人網站,成人圖片,AV女優,成人光碟,色情,色情影片,免費A片下載,SEX,AV,色情網站,本土自拍,性愛,成人影片,情色文學,成人文章,成人圖片區,成人貼圖

- யெஸ்.பாலபாரதி சொன்னது…

தல.. என்ன கொடுமை இது.. இந்த பதிவு காலத்தை கடந்த பதிவு.
அவசரத்தேவைக்காக வந்தால்..
ஜப்பானிய மொழியில் பின்னூட்டம்.. அத்தனையும்.. மேட்டர் சுட்டிகளுடன் என்று எலிக்குட்டி சேதனையில் தெரிகிறது.

பார்த்து.. அழித்துவிடக்கூடாதோ!