வியாழன், ஜனவரி 03, 2008

போதும் புது வருடம்

ஒரு சக வலைப்பதிவர் ஒருத்தங்க தப்பித் தவறி தன்னோட புது வருட வாழ்த்துச் செய்தியை ஒரு நீளமான மின்னஞ்சல் பட்டியலுக்கு அனுப்பிட்டாங்க. அதுக்குப்புறம் தவறை உணர்ந்து மன்னிப்பும் கேட்டுக்கிட்டாங்க. அதோட "reply to all' பண்ண வேண்டாம்ன்னு வேண்டுகோள் வேற வச்சிட்டாங்க. ஆனா, வேண்டுகோளுக்கெல்லாம் செவி சாய்க்கிற ரகமா நாம? அடுத்த புத்தாண்டு வரைக்கும் இந்த வாழ்த்துச் செய்திகள் வந்துக்கிட்டே இருக்கும் போல இருக்கு.

அந்தப் பட்டியல்ல தமிழ் தெரியாதவங்க பலரோட மின்னஞ்சல் இருக்கு. அதோட, பலரின் அலுவலக மின்னஞ்சல்கள் வேற அதில இடம் பெற்றிருக்கு. முக்கியமான அலுவலக மடல்களை எதிர்பாத்துக்கிட்டு இருக்கும்போது நம்ம பதிவுலகத்தோட விளையாட்டுத்தனமான வாழ்த்துச் செய்திகள் வந்துக்கிட்டே இருந்துதுன்னா (அதுவும் புரியாத மொழியில), அது ஏற்படுத்தக் கூடிய எரிச்சலை என்னால உணர முடியுது. மேலும் மேலும் நம்ம பதிவுலக நட்புக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தறோம்ன்னாவது நாம உணரணும்.

புது வருடம் போதும். அடுத்த வேலையை கவனிப்போம். அதெல்லாம் முடியாது, நான் வாழ்த்தித்தான் ஆவேங்கறீங்களா? அப்பொன்னா ஆளை வுடுங்க, நான் இந்த விளையாட்டுக்கு வரல்ல.

26 கருத்துகள்:

Boston Bala சொன்னது…

புத்தாண்டு வாழ்த்துகள் :)

அ. இரவிசங்கர் | A. Ravishankar சொன்னது…

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவனாக ஒரு மறுமொழிக் கயமை :)

அப்புறம் உங்க பதிவில் captchaவை நீக்கலாமே?

பொன்ஸ்~~Poorna சொன்னது…

நன்றி... வருட ஆரம்பமே இப்படி ஒரு சொதப்பல் :(( ஆனா தப்பு என்னோடது.. மத்தவங்களை ஒண்ணும் சொல்றதுக்கில்லை..

துளசி கோபால் சொன்னது…

அடடா..... அப்படியா ஆச்சு?

போட்டும். புதுவருட நல் வாழ்த்து(க்)கள்.
இது இந்த வருசத்துக்கும் அடுத்த வருசத்துக்கும் சேர்த்து:-))))

பெயரில்லா சொன்னது…

வர வர இணைய 'ஆச்சார்யர்கள்' தொல்ல தாங்கலப்பா..

இரா. செல்வராசு (R.Selvaraj) சொன்னது…

நான் ஒன்றைப் பற்றி எழுத நினைத்த அன்றே சற்று முன்னதாக நீங்கள் அதைப் பற்றி எழுதிவிடுவது இது இரண்டாவது முறை! :-) முதல்முறை சொல்லவில்லை, அதுவும் பதிவர் வட்டம் குறித்தது தான்.

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்து.

Voice on Wings சொன்னது…

பாபா, ரவிசங்கர், பொன்ஸ், துளசி, அனானி, செல்வராஜ், உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள், மற்றும் நன்றி.

பொன்ஸ், விபத்துகள் நடக்கக்கூடியவைதான். இதுனால உங்களுக்கு உங்க அலுவலக / இதர தொடர்புகளோட எதுவும் பிரச்சனை வரலைன்னா நல்லது. இனிமே கவனமா இருங்க :)

செல்வராஜ், "great people think alike"ன்னு நினைச்சிட்டு போவோம் :) அந்த வாக்கியத்தோட இரண்டாம் பாகமெல்லாம் நமக்கெதுக்கு ;)

- யெஸ்.பாலபாரதி சொன்னது…

எனக்கும் கூட அதே மெயில் வந்தது.., ரிப்ளே ஆல் போட வேண்டாம்னு கேட்டுக்கொண்ட பின்னும்... நம்மவர்களின் ”ஆர்வக்கோளாறினை” நினைத்தால்.. எரிச்சல் தான் மேலிடுகிறது. வேற என்னத்த சொல்ல..!

இந்த புத்தாண்டு அவருக்கு மட்டுமல்ல.. நமக்கும் ஒரு பாடத்தை சொல்லிக்கொடுத்து துவங்கி இருக்கிறது. :)

இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.

பெயரில்லா சொன்னது…

VoW, இதுக்கு ஏன் இவ்ளோ டென்சன்? புத்தாண்டு வாழ்த்துகள் தானே :-), 'உங்க பாஸ் மேஜைக்குக்கு கீழே குண்டு வைப்பது எப்படி' ன்னு 'எக்கசக்கமா' ஒரு இமெயில் ஃபார்வேர்ட் அனுப்பற விஷயத்தில இப்படி நடந்தா கோச்சுக்கலாம் :-)...

புத்தாண்டு வாழ்த்துகள்.

பினாத்தல் சுரேஷ் சொன்னது…

மேற்படி "தவறை" செய்தவன் என்னும் முறையில், மன்னிப்பு தேவையானால் கேட்டுக்கொள்கிறேன்.. ஆனால், இகாரஸ் சொன்னதுபோல, வாழ்த்துதானே என்பதால் குற்ற உணர்ச்சி எல்லாம் இல்லை :-)

Voice on Wings சொன்னது…

சுரேஷ், மன்னிப்புல்லாம் (எனக்கு) வேண்டாம். ஒரு வேளை நீங்க அது பதிவர்கள் பட்டியல்ன்னு நினைச்சு அனுப்பியிருக்கலாம். ஆனா, முதல் மடலை அனுப்பியவரின் பல அலுவலக தொடர்புகளும் அந்தப் பட்டியல்ல இருந்தாங்கங்கறதுதான் நான் சொல்ல வந்தது. அகர்வால்களுக்கும், தண்டியாலாகளுக்கும் நாம என்ன பேசிக்கறோம்ன்னே புரியாம போக வாய்ப்பிருக்கு, அதனால இப்படி தொடரும் மடல்களால கோபம் ஏற்பட வாய்ப்பிருக்கு. தெரிஞ்சவங்க கிட்டயிருந்து வந்தாதான் அதுக்கு பேரு வாழ்த்து. தெரியாதவங்க கிட்டயிருந்து வந்தா அதுக்கு வேற பேரு இருக்கு.

பாலாபாரதி, வாழ்த்துக்கு நன்றி, உங்களுக்கும் என்னோட வாழ்த்துக்கள். அந்த மடல் உங்களுக்கு மட்டும் வரல்ல, அந்தப் பட்டியலைப் பார்த்தா, அது இந்த உலகத்தில இருக்கிற எல்லா ஜீவராசிகளுக்கும் போயிருக்குமோன்னு தோணுது :)

பிரகாஷ், உங்களுக்கும் என்னோட புத்தாண்டு வாழ்த்துக்கள். வாழ்த்து மட்டுமா வந்தது? n x n-1ன்னு கடி ஜோக்கெல்லாம் வேற வந்ததே? :) (அதை அனுப்பிய புண்ணியவான் என்னை மன்னிப்பாராக)

லக்கிலுக் சொன்னது…

புத்தாண்டு ஆரம்பமே அசத்தலா இருக்கே? :-)))))

அப்பதிவர் கேட்டுக் கொண்டபின்னும் ஸ்பாம் செய்தாவது வாழ்த்துக்கள் சொல்வேன் என்று அடம்பிடித்து வாழ்த்து சொன்னவரை வன்மையாக கண்டிக்கிறேன்!

Voice on Wings சொன்னது…

லக்கிலூக், மேற்படி நபரை நானும் உங்களுடன் சேர்ந்து, ஆனால் உங்களை விட வன்மையாக கண்டிக்கிறேன் :)

பெயரில்லா சொன்னது…

எச்சூஸ்மீ! இதை forward to all போட எதும் program கீதா?

பெயரில்லா சொன்னது…

புது வருஷம் அதுவுமா, பூர்ணாவுக்கு வந்த சோதனை..?

நானும் reply all
போட்டு வாழ்த்தலாம் என்று நினைத்தேன். அதற்குள் பாலாவிடமிருந்து
இந்த இடுகையைக் குறிப்பிட்டு தனி மடலே கிடைத்ததால் நல்லவேலை..
தப்பித்தார்கள்.

பதிவுலகத்தினர் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்க வளமுடன்..!

பெயரில்லா சொன்னது…

ஏன்மா அனாவ்சியமா அலுத்துக்குறீங்க? இந்தப் பட்டியல்ல கடைசியா எல்லாத்துக்கும் வாழ்த்து அனுப்புனவன்குற முறையிலும் போன வருசம் இந்தக் கொடுமையை செஞ்சவன் என்ற பெருமையிலும்(?!!) ஒண்ணு சொல்றேன் - நல்லா கேட்டுக்குங்க.

நானே அனுப்புனதுல பாதி போய் சேரலையேன்னு கடுப்புல இருக்கேன் ஆனா இதுல ஒரே ஒரு சந்தோசம் என்னன்னா எங்க தலை பாலபாரதியை நாங்க அனுப்புனது எரிச்சல் படுத்தியிருக்குங்குறதுதான். இதுக்காகவே நான் இன்னொரு வாட்டி எல்லாருக்கும் அனுப்பலாம்னு இருக்கேன்

பொன்ஸ், இதுல தப்பெல்லாம் ஒண்ணுமில்ல. ஆனா தயவுசென்ப்ஜ்சு இதை அனுப்பாதீங்கன்னு சொன்னீங்க பாருங்க. அதுதான் சொதப்பல். அந்தத் தப்பை மட்டும் செய்யவே செய்யாதீங்க. பதிவர்கள் கிட்ட மட்டும் இதைச் செய்யாதேன்னு சொன்னா செஞ்சு முடிச்சுட்டுத்தான் மறுவேலையே பார்ப்போம். இதெல்லாம் தெரியாம.. அதுசரி! பொம்பளைதான நீங்களூம் :-))))))

பொழுதுபோகாத
சாத்தான்குளத்தான்

இராம்/Raam சொன்னது…

நானெல்லாம் Reply to ஆனை'ன்னு தாப்பா கொடுத்தேன்.... :))

பெயரில்லா சொன்னது…

///இந்த புத்தாண்டு அவருக்கு மட்டுமல்ல.. நமக்கும் ஒரு பாடத்தை சொல்லிக்கொடுத்து துவங்கி இருக்கிறது. :)///

தலை, தலைமறைவா போனாலும் உம்ம காமெடி மட்டும் குறையவே குறையாது போல. :-)))

சாத்தான்குளத்தான்

பெயரில்லா சொன்னது…

சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தீங்களே :-)... இந்த இடுகைக்குப் பிறகு, கம்முன்னு இருந்தவங்க எல்லாம் முழிச்சுகினு, சரமாரியா பூந்த் வெளையாடறாங்க. நல்லா இருங்கைய்யா :-)

Kasi Arumugam சொன்னது…

பிரகாசு,

நான் தான் முட்டாள் தனமா பொன்சுக்கு மட்டும் பதில் போட்டுட்டனோன்னு நினைக்க வைக்குது இப்ப மக்கள்ஸ் அனுப்புற மயிலெல்லாம். இப்படியே போச்சுன்னா, நானும் ரிப்ளை ஆல் போட்டு இன்னொண்ணு அனுப்பிருவேன். அந்தக் கொடுமையிலிருந்து தப்பிக்க, அட் லீஸ்ட் இந்த இடுகையையாவது முடக்குங்கய்யா வாவு:-)

Voice on Wings சொன்னது…

reply to all போட்டவன், உங்களுக்கு இல்லாத programஆ? கூகிள்ல தேடினீங்கன்னா வேண்டிய program கிடைச்சிடப்போகுது. அப்பறமென்ன, என்சாய் பண்ணுங்க :)

அனானிமஸ், //நானும் reply all
போட்டு வாழ்த்தலாம் என்று நினைத்தேன். அதற்குள் பாலாவிடமிருந்து
இந்த இடுகையைக் குறிப்பிட்டு தனி மடலே கிடைத்ததால் நல்லவேலை..
தப்பித்தார்கள்.// நன்றி, நல்லா இருங்க :)

ஆசீப், உங்களோட பெருமைக்குரிய காரியத்துல நான் தலையிட விரும்பல்ல. ஆனா, //அதுசரி! பொம்பளைதான நீங்களூம் :-))))))// இந்த ஆண் மைய்யக் கருத்துக்கு என்னோட எதிர்ப்பை (ஒரு பாதுகாப்புகாக) தெரிவிச்சிக்கறேன்.

பிரகாஷ் & காசி, இந்த இடுகையை படிச்சிட்டு போய் யாரும் மடலனுப்பற மாதிரி தெரியல. மடலை அனுப்பிட்டு இங்க வந்து attendance குடுக்கறாங்கன்னு நினைக்கறேன். :) அப்படி இந்த இடுகைதான் பிரச்சனைன்னா அதை நீக்கறதுக்கு நான் தயார்.

பெயரில்லா சொன்னது…

இந்த இடுகையை முடக்கினால் மீண்டும் அனைவருக்கும் ஒருமுறை புத்தாண்டு வாழ்த்து அனுப்புவேன் என்று மிகுந்தபணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சாத்தான்குளத்தான்

பெயரில்லா சொன்னது…

gmailல் filter messages like this and deleteனு போட்டு வைச்சிருக்கேன். வாழ்க ஜிமெயில். VoW சொல்வது மாதிரி தெரிந்தவர்களிடம் இருந்து வந்தா தான் வாழ்த்து.

வெட்டிப்பயல் சொன்னது…

எனக்கு வீட்ல ஒரு வாரமா இண்டர் நெட் வேலை செய்யல. ஆபிஸ்ல GMAIL Access இல்லை. iGoogleல பார்த்தா எனக்கும் அந்த மெயில் வந்திருக்கு போல. யாராவது எனக்கு பதில் "Reply to All" பண்ணிடுங்களேன்.

Unknown சொன்னது…

அடடா, இந்த 'கொண்டாட்டங்கள்'ல நம்மளாலே கலந்துக்க முடியலையேன்னு ஒரு சிறு வருத்தம் இருக்கு :)

அதுசரி, அலுவலக மெயில் ஐடிய சொந்த விஷயங்களுக்காக பயன்படுத்தக் கூடாதுன்னு உங்களுக்கு 'எத்திக்ஸ் ஏகாம்பரம்' யாரும் சொல்லலயா?

1997-ல மொத மொதல்ல ஈமெயில் ஐடி கெடச்ச 'மெதப்புல' சக ஊழியர்கள் (ஒரு 150 இருக்கும்!) எல்லாருக்கும் (பெரிய தலைங்க உள்பட!) ஜோக் அனுப்பி அவதிப் பட்டது ஞாபகம் வருது :)

Boston Bala சொன்னது…

---அந்தத் தப்பை மட்டும் செய்யவே செய்யாதீங்க. பதிவர்கள் கிட்ட மட்டும் இதைச் செய்யாதேன்னு சொன்னா செஞ்சு முடிச்சுட்டுத்தான் மறுவேலையே பார்ப்போம்.---

அதானே ;)