அதுல ஒரு சிக்கல் என்னன்னா, <script> எனப்படும் நிரல்கள் அவை தரவிறங்கற வரைக்கும் வேறெதைவும் தரவிறங்க விடாதுங்களாம். இங்க Yahoo!வோட நிபுணர் என்ன சொல்லியிருக்காருன்னு கொஞ்சம் படிச்சிப் பாருங்க. குறிப்பா:
- With scripts, progressive rendering is blocked for all content below the script. Moving scripts as low in the page as possible means there's more content above the script that is rendered sooner. (அதாவது, ஒரு நிரல் தரவிறங்கும்போது, அதுக்குக் கீழே இருக்கற மத்த பகுதிகள் தரவிரங்கறதுக்கு 'தடா' விதிக்கப்படுது. ஆனா, நிரலை பக்கத்துக்கு எவ்வளவு கீழே நகர்த்த முடியுமோ அவ்வளவு கீழே நகர்த்திட்டோம்ன்னா, அதுக்கு மேல் உள்ள பகுதிகளுக்கு விரைவா தரவிறங்கறதுக்கான வாய்ப்பு கிடைக்குது)
- While a script is downloading, however, the browser won’t start any other downloads, even on different hostnames. (அதாவது, ஒரு நிரல் தரவிறங்கிகிட்டு இருக்கும்போது, மற்ற பகுதிகளை தரவிறக்கறதுக்கு முயற்சி கூட செய்யாது நம்ம உலாவி)
- (Matrixஐப் போல்) Part 1, Part2ன்னு இருக்கிற எல்லா தமிழ்மண நிரலோட பாகங்களையும் ஒண்ணா சேருங்க.
- அதை அப்படியே கீழே படத்துல காட்டியிருக்கிற இடத்தில் (பின்னூட்டப் பகுதியில் கடைசியில்) ஒட்டுங்க. (</Blogger> என்பதற்கு முன் உள்ள </ItemPage>க்கு சற்று மேலே.)
பிற்ச்சேர்க்கை: இன்றுதான் இப்பதிவை Bloggerஇன் புதிய பதிப்புக்கு (with "Blogger Layouts") மேம்படுத்தினேன். அதற்கான கருவிப்பட்டையைக் கீழ் நகர்த்தும் செய்முறை பின்வருமாறு:
- (கீழே படத்திலிருப்பது போல்) Expand widget templates என்பது தேர்வு செய்திருக்க வேண்டும்
- Comment block இருக்குமிடத்தைக் கண்டு கொள்ள வேண்டும். Templateஇல் <b:include data='post' name='comments'/> என்ற வரிதான் அது.
- இந்த comment blockஇற்கு அடுத்த வரியில் தமிழ்மண கருவிப்பட்டைக்கான மொத்த நிரலையும் சேர்க்க வேண்டும் (கீழே படத்தில் காட்டியுள்ளதைப் போல்).
- நிரலை தமிழ்மணத்தின் இந்தப் பக்கத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். (ஆனால் அதில் part 1, part 2 என்றிருக்கும் பாகங்களை ஒன்றாக சேர்த்து மேலே காட்டியுள்ளபடி ஒட்ட வேண்டும்.)
33 கருத்துகள்:
நல்ல ஆலோசனை VoW. தகவலுக்கு நன்றி.
திறந்த மூலமாக்கினா என்ன மாதிரி சௌகரியங்கள் வரும் அப்படிங்கறதுக்கு இந்த பதிவு ஒரு உதாரணமா?
:-) :-) :-)
வருகைக்கு நன்றி, சத்தியா.
திறமூலத்தினால வர்ற சங்கடங்களைத் தீர்ப்பதற்காக எடுத்துக் கொண்ட கூடுதல் முயற்சியினால் ஏற்பட்ட நல்விளைவு இந்தப் பதிவுன்னு வேண்ணா சொல்லலாம் :)
குழப்பத்தினிடையேயும் தீர்வு கண்டதற்கு நன்றி.
இப்போது தமிழ்மணம் திரட்டி 'டிக்கர்'லே இந்தப் பதிவு காட்டுது. கவனிச்சீங்களா?
நா. கணேசன்
இரவி,நீங்க ஒவ்வொரு நுட்பமாகச் சொல்லிக்கொண்டு போவீர்கள்,நானும், அதைப் போன்றே முயற்சியெடுக்க முனைவேன்.மீளவும், அது பஞ்சிபிடித்த வேலைபோலவும்,கடுமையானதாகவும் இருக்கும்.என்ன செய்கிறது-பாதியில் விட்டுவிடுவேன்!எனினும்,இதை கட்டாயம் முயற்சித்துப் பார்க்கணும்.அப்போ-அனைத்தும் நன்றி.கூடவே, மலரப்போகும் புதுவருடத்தில் எல்லா சௌகரியங்களும் பெற்று நலமாக வாழ வாழ்த்து-முன்கூட்டியே சொல்லிக்கொள்கிறேன்!
ப.வி.ஸ்ரீரங்கன்
VOW, நல்ல முயற்சி மற்றும் ஆலோசனை.
மிக்க நன்றி!
சொ. சங்கரபாண்டி
மணியன், கணேசன், ஸ்ரீரங்கன் மற்றும் சங்கரபாண்டி, உங்கள் அனைவருக்கும் நன்றி, மற்றும் எனது புது வருட நல்வாழ்த்துக்கள் :)
Post updated for Blogger 'Layout' template.
தமிழ்மணத்தின் உதவிப்பக்கங்களிலோ, FAQ பகுதியிலோ இந்தப் பரிந்துரையை சேர்த்தால் வசதியாக இருக்கும் :)
பாபா, செய்யப்படும் என்று நம்புவோம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :)
தகவலுக்கு நன்றிங்க.
என்ன,
மேலேயிருந்த கருவிப்பட்டையை கீழே தள்ளிட்டீங்க :)))
இருந்தாலும் கைமேல் பலன் கிடைத்தது. கருவிப்பட்டை மேலே இருந்தப்ப தரவிறக்கம் சில வினாடிகள் முழிக்கும். இப்ப உடனே -பளிச்சின்னு தரவிறக்கம் நடைபெறுகிறது.
மீண்டும் நன்றி.
நீங்கள் சொல்லி இருக்கும் ஆலோசனைப்படி விரைவாக வலைப்பதிவு திறக்கக்கூடும், ஆனால் கருவிப்பட்டைப்போட்டதாலேயே , தமிழ்மணம் செயல் இழந்தால் பதிவுகள் படிக்க முடியாமல் போகும் என்பது சரியல்லவே. எனக்குலாம் எப்போதும் வலைப்பதிவுகளைப்படிக்க முடிந்தது, நான் எனது புக்மார்க்கில் இருக்கும் பதிவுகளை எல்லாக்காலத்திலும் தடை இன்றிப்படித்து வந்து இருக்கிறேன்.
கருவிப்பட்டை மேல இருக்கோ , கீழ இருக்கோ,
தெளிவா சொல்லுங்க, தமிழ் மணம் செயல் இழந்தால் பதிவுகளை படிப்பதில் சிரமம் வருமா, வராதா?
என்னைப்பொறுத்த வரை அப்படிலாம் வராது என்பதே எனது அனுபவம்.
முஸ்லிம், உங்க வலைப்பதிவுக்குப் போய் பார்த்தேன். நான் பார்த்தவரை நீங்க ஒருத்தர்தான் (என்னைத் தவிர) இந்த மாற்றத்தைச் செய்திருக்கீங்கன்னு நினைக்கறேன். மத்தவங்களும் இதை செஞ்சி பலனடைவாங்கன்னு நம்புவோம். "இப்ப உடனே -பளிச்சின்னு தரவிறக்கம் நடைபெறுகிறது." அப்படீன்னு நீங்க சொன்ன அதே அனுபவம்தான் என்னுடையதும் :)
வவ்வால், உங்களோட கேள்விக்கு பொதுப்படையான விடை எனக்குத் தெரியாதுன்னுதான் நான் இடுகையிலயே சொல்லியிருக்கேன். ஒவ்வொருத்தரோட அனுபவம் வேறுபடலாம். பல வாசகர்கள் வேகம் குறைவான உலாவும் மையங்களிலிருந்து படிக்க வாய்ப்பிருக்கு. எல்லாரும் அகலப்பாட்டை இணைப்பு உடையவங்கன்னு அனுமானிக்க முடியாதில்லையா? என்னோட அனுபவம் - ஒரு அகலப்பாட்டை இணைப்பிலயே பதிவுகளை திறக்க முடியாமதான் இருந்தது உலாவியின் javascript வசதியை தடை செய்யும் வரை.
நீங்க சொன்னதுபோல் செஞ்சுட்டேன். இப்போ வேகமா என் பதிவு உடனே வருது.நன்றி.
நன்றிகள் நண்பரே... தினமும் முயன்று உங்கள் ஆலோசனையில் இன்னிக்கு வெற்றி அடைஞ்சுட்டேன்..:)
வேகமா பக்கம் திறக்கற மாதிரி தான் உணருகிறேன்..
தொடருங்க உங்கள் சேவையை.. நன்றிகள்..
கருவிப்பட்டை மட்டும் இல்ல, என் பதிவுல இருக்கிற பிற எல்லா embedded items, javascriptஐ அழைக்கும் விசயங்களை ஒட்டு மொத்தமா தூக்கிட்டேன். இப்ப super fastஆ இறங்குது. இது எப்படி இருக்கு :)
any ideas for Wordpress sites?
சாமான்யன், மிக்க மகிழ்ச்சி.
ரசிகன்,
//தினமும் முயன்று உங்கள் ஆலோசனையில் இன்னிக்கு வெற்றி அடைஞ்சுட்டேன்..:)//
இதில் அவ்வளவு சிக்கல் ஒண்ணும் கிடையாதே? இரண்டு நிமிடத்தில் செஞ்சிடலாம்ன்னுதான் நினைச்சிக்கிட்டு இருக்கேன். உங்களுக்கு என்ன குழப்பங்கள் வந்ததுன்னு சொன்னா, மெலும் தெளிவா எழுத முயற்சி பண்றேன்.
Anonymous, your sarcasm is appreciated.......not :)
சிறில், இதே conceptஐ மற்ற தளங்களுக்கும் பயன்படுத்தலாம். உங்க தளத்தின் templateஐ ஒரு text fileஆ எனக்கு மின்னஞ்சல் செய்தீங்கன்னா, அதுக்கான மாற்றங்களை சொல்றேன்.
சிறில், singlepost.php கோப்பிலே, பதிவு முடியற இடத்துல ஒட்டுங்க
தகவலுக்கு நன்றி.
தமிழ்மணத்தில் எனது பதிவு
வரமறுக்கிறது
திகழ்மிளிர், எனக்கும் தமிழ்மணத்திற்கும் 'வழங்குனர்' - 'பெறுனர்' உறவுதான். :) அவ்வப்போது குறைகள் கூறுவதோடு எனது வேலை முடிவடைகிறது. தமிழ்மணம் சார்பாக தற்போது(!) எந்த உதவியும் வழங்க முடியாத நிலையில் இருக்கிறேன் :)
திகழ், உங்க பதிவுல கருவிப்பட்டையில இருக்கிற பொத்தானை அழுத்தி பாத்திங்களா? அப்படிச் செய்யலன்னா தமிழ்மணத்துக்கு உங்க இடுகையைப் பத்தின தகவல் போய் சேராது.
VoW, wordpress பயனர்கள் பலரும் தமிழ்மணம் கருவிப்பட்டை நீட்சி பயன்படுத்துறாங்க. இதில என்ன மாறுதல் செய்யலாம்னு சொன்னா உதவும்.
இதே நீட்சியைப் பயன்படுத்தும் போது permalinksல் post title வருவது போல் கொடுத்தாலும் சிக்கலாகுது. இதற்கான மாற்றங்களைப் பரிந்துரைத்தாலும் உதவியாக இருக்கும்.
ஐயா,
எனது வலைப்பதிவினை தமிழ்மணத்தில் புதுப்பிக்க இயலவில்லை. கடந்த ஒரு திங்களாக கீழ்க்காணும் பிழை வருகிறது.
வலைப்பதிவு முகவரி: http://deepaktamil.wordpress.com/
தஙகளின் உதவி மிகவும் தேவைப்படுகிறது.
நன்றி.
Deepak Vasudevan
கருவிப்பட்டைப் பயன்பாட்டின் தொடக்க காலத்திலிருந்தே பெயரிலி அண்ணர் தனது கருவிப்பட்டையை அடியில்தான் வைத்திருந்தார். 'ஏன்ரா உந்த மனுசன் உப்பிடி வைச்சிருக்கு?' என்று அடிக்கடி யோசிப்பதுண்டு.
இந்தத் 'தரவிறக்கத் தாமதம்' பற்றிய அறிவுடன்தான் அப்படி வைத்திருந்தாரா?
அப்படியானால் அதை மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுக்காமல் அமுக்கி வைத்திருந்த கஞ்சத்தனத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். ;-)
அதை வெளியிட்ட உங்களைப் பாராட்டுகிறேன்.
நன்றி.
என்னுடைய வலப்பக்கத்திலும் மாற்றம் செய்தபிறகு, வேகமாக தரவிறக்கம் நடைபெறுகிறது.
என் மனங்கனிந்த நன்றி...
தீபக், உங்களுடையது wordpress.com தளம் என்பதால் கருவிப்பட்டையை நிறுவி பின்னூட்டங்களைத் திரட்டும் வசதி உங்களுக்குக் கிடையாது. இடுகைகளைத் திரட்டும் வசதி மட்டுமே உள்ளது. அதுவும் நடைபெறவில்லை என்றால் நீங்கள் தமிழ்மணத்திற்கு மின்னஞ்சல் அனுப்பி விசாரியுங்கள்.
வசந்தன், பெயரிலியை உன்னிப்பா 'வோச்' பண்ணா நல்ல யோசனைகள் கிடைக்கலாம்ங்கறீங்க? செஞ்சிடலாம் :)
இக்பால், மிக்க மகிழ்ச்சி.
நண்பரே !! என்னுடைய பதிவுகளில், இடுகைகள் திரட்டப் படுகின்றன - ஆனால் மறுமொழிகள் திரட்டப் படுவதில்லை. மட்டுறுத்தல் செய்திருக்கிறேன். தமிழ் மண அறிவிப்புகள் எங்கே செய்ய வேண்டும் > உதவினால் நன்றிஉடையவளாக இருப்பேன்.
செல்விஷங்கர், complaints at thamizmanam.com என்ற முகவரிக்கு மடலெழுதிப் பாருங்கள்.
என்னுடைய வலைப்பதிவில் இந்த மாற்றத்தை செய்து விட்டேன். ரொம்ப நன்றிங்க.
புது டெம்ப்ளேட் மாத்திட்டு,அதனால பதிவு தரவிறங்காம ரொம்ப அவஸ்தைப்பட்டேன்.இப்ப உங்க உதவியால சரி செஞ்சிட்டேன்.
நன்றிகள் நண்பரே... தினமும் முயன்று உங்கள் ஆலோசனையில் இன்னிக்கு வெற்றி அடைஞ்சுட்டேன்..:)
வேகமா பக்கம் திறக்கற மாதிரி தான் உணருகிறேன்..
தொடருங்க உங்கள் சேவையை.. நன்றிகள்..
மிக்க நன்றி நண்பரே... சமீபகால தமிழ்மண பிரச்சனையிலிருந்து விடுதலை கிடைத்தது..
நன்றி என்று ஒரு வார்த்தையில் என் மகிழ்ச்சியை தெரிவிக்க முடியவில்லை தோழரே....இருந்தாலும் மிக்க நன்றி..
கருத்துரையிடுக