வெள்ளி, மே 18, 2007

கறுப்பு ஞாயிறு

எனது விசிறித்தனத்தை இப்படி அப்பட்டமாகப் பறைசாற்றிக் கொள்வதற்கு மன்னிக்க வேண்டும். கடந்த சில நாட்களாக இந்த Black Sabbath (BS? no way) எனப்படும் இசைக்குழுவின் இசையில் மூழ்கித் திளைத்திருக்கிறேன். இப்பொ என்ன Black Sabbath என்று நினைத்தீர்களென்றால் அதில் நியாயமுள்ளது. ஒரு முப்பது வருடங்களுக்கு முன்பு எழுதியிருக்க வேண்டிய இடுகையை இப்பொழுது எழுதுவதற்கு வலுவான காரணங்கள் இருந்தாக வேண்டும். அத்தகைய வலுவான காரணம், இந்த இசைக் குழு மீண்டும் இணைந்திருப்பதுதான். இணைந்து Heaven & Hell என்ற பெயரில் tour செய்து கொண்டிருக்கிறார்கள். (Black Sabbath என்ற பெயரை உபயோகிப்பதில் சில சட்டம் சார்ந்த சிக்கல்கள்.) அதை முன்னிட்டு The Dio Years என்ற அவர்களது தொகுப்பு அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. உண்மையைக் கூற வேண்டுமென்றால், எனக்கு Black Sabbath குறித்து அதிகம் தெரியாது என்பதை ஒப்புக் கொண்டாக வேண்டும். அவர்களது இசை மீது வெறித்தனமான விருப்பமேற்பட்டிருந்தாலும், அவர்களது ஒவ்வொரு தொகுப்பையும் வாங்கி அடுக்குமளவுக்கு மோசமான நிலையை இன்னமும் எட்டவில்லை.

இன்றைய heavy metal எனப்படும் இசைக்கு முன்னோடி என அறியப்படுபவர்கள் இந்த Black Sabbath குழுவினர்கள். எழுபதுகளில் தொடங்கி, தொடர்ந்து இசை ஆல்பங்களை வெளியிட்டு வந்திருக்கிறார்கள். எண்பதுகளில் அதன் முன்னணிப் பாடகரான Ozzy Osbourne குழுவிலிருந்து வெளியேற்றப்பட்டு, அவருக்கு பதிலாக Ronnie James Dio அந்த இடத்தைப் பிடித்தார். Dio அதன் பிறகு பல முறை குழுவிலிருந்து வெளியேறி, மீண்டும் இணைந்து கொண்டுள்ளார். இப்போதைய இணைப்பும் அத்தகையதே. எது எப்படியோ, ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான் இத்தகைய கூட்டுறவுகளால். Black Sabbath பற்றி பேசும்போது Ozzy Vs. Dio ஓப்பீட்டைச் செய்யாமலிருக்க முடியாது. Ozzy இருந்த காலத்தில்தான் குழுவின் ஆரம்பக் கால hit பாடல்கள் வெளிவந்தன. ஆனால், நாட்கள் செல்லச் செல்ல, அவரது ஈடுபாடு / திறமை / பங்களிப்பு ஆகிவை கேள்விக்கிடமாகியிருக்கலாம். குழுவுக்கு ஒரு புத்துணர்ச்சி தேவைப்பட்ட போது அவரது வெளியேற்றம் தேவையானதொரு மாற்றமாக இருந்தது. அவருக்கு மாற்றாக வந்த Dio ஏற்கனவே Rainbow இசைக்குழுவின் முன்னணிப் பாடகராக இருந்து, அதிலிருந்து வெளியேறியவர். (Rainbowவின் hit பாடல்களெல்லாம் Dio பாடியவைதான் என்பது எனது தாழ்மையான கருத்து. Black Sabbath விஷயத்திலும் அது உண்மையாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆனால் Ozzy பாடிய அவர்களது பல ஆரம்ப காலப் பாடல்கள் வெகு அருமையானவை) அவர் வந்து இணைந்ததும் வெளியான Heaven & Hell என்ற வெளியீடு பல உச்சங்களை எட்டியது. நிச்சயமாக Dio ஒரு சிறப்பான பாடகர் என்பதில் எந்தவொரு ஐயமும் கிடையாது. Ozzy பற்றி அப்படியெல்லாம் எதுவும் கூற விரும்பவில்லை :)

Black Sabbathஇன் இசைக்குச் செல்வதற்கு முன் கொஞ்சம் அவர்களது ஆன்மீகத்தைப் பற்றி: அபாரமான இசைத் திறமையைப் பெறுவதற்கான உத்திகளில் ஒன்று, சாத்தானிடம் ஆன்மாவை விற்பது (sell your soul to the devil), அதற்கு பதிலாக வேண்டிய கலைத் திறமையைப் பெற்றுக் கொள்வது, என்று மேற்குலகில் (விளையாட்டாக) ஒரு ஐதீகமுண்டு. விளையாட்டு வினையாகி விடுவது போல், பல இசைக்குழுக்கள் சாத்தானிய சடங்குகளில் ஈடுபடுவதாக வதந்திகள் பரவிக் கொண்டிருந்தன. பாடல் வரிகளிலும் உட்பொருள் வைத்து சாத்தானின் மகிமைகளைப் போற்றிக் கொண்டிருந்தன இசைக் குழுக்கள், அல்லது அவ்வாறு குற்றம் சாட்டப்பட்டன. இந்தக் கதைகளில் தனி கவனம் செலுத்திக் கொண்டு ஒரு கும்பல் அலைந்து கொண்டிருந்தது. இந்த வகையில், சாத்தானுடன் தொடர்பிருந்ததாக நம்பப்பட்ட குழுக்களில் ஒன்று இந்த Black Sabbathஉம் ஆகும். அவர்களது பாடல்களின் சிலிர்க்க வைக்கும் தொனியிலிந்து இது உண்மையாக இருக்கலாம் என்ற உணர்வு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

Black Sabbathஇன் தலைவர் என்று கருதப்படக்கூடியவர் அதன் கித்தார் கலைஞர் Tony Iommi. அவரது சிறப்புத்தன்மை அவரது ஆபாரமான, உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் riffs. riff - இதைத் தமிழ்ப்படுத்தணும்ன்னா, ஒரு பாடலோட இதயத்துடிப்பு மாதிரி திரும்பத் திரும்ப ஒலிச்சிக்கிட்டே இருக்குமே, அதுதான். ரிதம்ன்னு தவறா புரிஞ்சுக்காதீங்க. ரிதம் வெறும் தாளம் மட்டும்தான். riff அந்தத் தாளத்துக்கு மேல வர்ற அமைப்பு. ஒரு மெட்டை உள்ளடக்கிய, தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரு ஒலியமைப்பு. ஒரு பாடலின் moodஐ நிர்ணயிப்பது இந்த riffதான். Tonyயின் வாசிப்பில் இந்த riff பிரதானமாக ஒலிப்பதைக் காணலாம். Black Sabbathஇன் பல பாடல்களின் வெற்றிக்கு அவற்றின் கவர்ச்சிகரமான riffsஏ காரணம். (Ozzy அல்ல ;) ) riffs மட்டுமல்லாமல், அவரது solosஉம் (அதாங்க, தனி ஆவர்தனம்ன்னு சொல்வோமே, அது) நம்மை உயரங்களுக்கு எடுத்துச் செல்லக்கூடியவை. சொல்ல முடியாத உணர்வுகளையெல்லாம் ஏற்படுத்தக் கூடியவை.

Bill Ward இக்குழுவின் drums கலைஞர். பல பாடல்களில் அவரது அசத்தலான வாசிப்பைக் கேட்கலாம். ஒரு Jazz drummerஐப் போன்ற சுதந்திரமான, கலக்கலான வாசிப்பு, variations, அவ்வப்போது ஆச்சரியப்படுத்துவது, என்று, பாடல்களுக்கு drums ஒரு தனி பரிமாணத்தை வழங்குவதை மறுக்க முடியாது. அதே போல், குழுவின் bass guitar கலைஞரான Geezer Butlerஇன் வாசிப்பையும் கூர்ந்து கவனித்தால், அது பாடல்களுக்குப் புதுப் புது அர்த்தங்களைக் கற்பிக்கும். அருமையான (bass) solos, மற்றும் பாடல்களுக்கு வித்தியாசமான backing........ பல இடங்களில் leadஉடன் சேர்ந்து ஒலிப்பது, வேறு பல இடங்களில் leadஇலிருந்து தனித்து வேறு notes ஒலிப்பது, அப்படி இரு வேறு ஓலிகள் ஒருங்கிணைந்து ஏற்படுத்தும் பாதிப்பு, என்று உன்னிப்பாகக் கேட்டால் கூடுதல் பயன்களைப் பெறலாம்.

தனித்தனியாக குழுவினரின் அருமை பெருமைகளைப் பட்டியலிட்டு விட்டேன். மொத்தக் குழுவின் இசை எப்படி என்றுக் கேட்டீர்களென்றால், ஒரு eerie, அச்சமேற்படுத்தக் கூடிய தொனியில், அதே சமயம், மனதைக் கவரும் இசையை வழங்கியுள்ளனர் இந்த Black Sabbath குழுவினர். அடிமைப்படுத்தும் இசை. கவர்ந்திழுக்கும் தீமை (evil) :)

என்னிடமுள்ள இவர்களின் குறுவட்டுகள்:
இரண்டையுமே பரிந்துரைக்கிறேன். இவர்களைப் போன்ற பிற இசைக்குழுக்கள்: Deep Purple, Rainbow, Whitesnake, Uriah Heep..... (இவற்றில் எதாவது உங்களுக்குப் பிடித்திருந்தால், Black Sabbathஐ நம்பிக்கையுடன் கேட்கலாம். அல்லது Black Sabbath பிடித்துப் போனால் இவற்றையும் முயற்சிக்கலாம்).

உங்கள் வசதிக்காக, சில Black Sabbath பாடல்களை இணைத்திருக்கிறேன், கேட்டு மகிழுங்கள்.

Ozzy பாடிய Wicked World (பாடல் மட்டுமே, நிகழ்படம் கிடையாது):Dio ஒரு live நிகழ்ச்சியில் பாடிய Die Young என்ற பாடலின் ஒளிப்பதிவு:ஒன்றே குலம், ஒருவனே சாத்தான்!

6 கருத்துகள்:

அ. இரவிசங்கர் | A. Ravishankar சொன்னது…

நமக்கு இன்னும் - மாங்குயிலே பூங்குயிலே - தாண்டி இசை ரசனை வளரலை :)

VoW, உங்க பதிவின் முழு உள்ளடக்கமும் feed readerகளில் வர்ற மாதிரி settings மாத்த முடியுமா?

Voice on Wings சொன்னது…

நீங்க கேட்டுக் கொண்ட மாதிரி செய்தியோடையை மாற்றியிருக்கேன்.

மாங்குயிலே பூங்குயிலே-வும் நல்ல பாட்டுதானே? :)

அ. இரவிசங்கர் | A. Ravishankar சொன்னது…

நன்றி வாவ். அது நல்ல பாட்டு தான்..ஆனா, திரையிசை தாண்டி வேற இசை வடிவங்களுக்கு இன்னும் அறிமுகமாகல..

பெயரில்லா சொன்னது…

அறிமுகத்திற்கு நன்றி.
....
இன்னும் இவ்வகையான இசை வடிவத்தைக் கேட்டு இரசிக்கு மனோநிலைக்கு வரவில்லையென்றாலும், எப்பவாவது ஒருநாள் கேட்கத்தொடங்கும்போது இவ்விடுகை ஒருவகையில் உதவும் என நம்புகின்றேன் :-). நீங்கள் utubeல் பதிந்ததன் முதல் இசை வடிவம் பிடித்திருந்தது.

Voice on Wings சொன்னது…

dj, வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி :)

ஒரு வகையான இசைக்கு நன்கு பழக்கப்பட்டுப் போன செவிகளால் வேறு இசை வடிவங்களுக்கு அறிமுகமாவது சற்று கடினம்தான். எனக்கும் உங்கள் hip-hop பாணி இசை தொடக்கத்தில் அவ்வளவு விருப்பமாக இருக்கவில்லை. கொஞ்சம் reggae, அதிலிருந்து அரபி(Rai) என்று திசை மாறிக் கொண்டிருந்த எனது இசைப் பயணத்தில், ஒரு சில அருமையான அரபி-ஃபிரஞ்சு rap பாடல்களைக் கேட்கும் வாய்ப்பேற்பட்டது. e.g.
-"Parisien du Nord" by Cheb Mami and K-mel
-"Oran Marseille" by Khaled and IAM
இப்பாடல்கள் மூலமாக எனக்கும் hip-hop அறிமுகம் கிடைத்து அவற்றை கொஞ்சமாவது விரும்பி கேட்குமளவுக்கு வளர்ந்திருக்கிறேன் :)

அதுபோல் உங்களது பார்வையும் ஒரு நாள் heavy metal மீது விழும் என்று நம்புகிறேன்.

பெயரில்லா சொன்னது…

情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣,情趣,情趣,情趣,情趣,情趣,情趣用品,情趣用品,情趣,情趣,A片,A片,情色,A片,A片,情色,A片,A片,情趣用品,A片,情趣用品,A片,情趣用品,a片,情趣用品

A片,A片,AV女優,色情,成人,做愛,情色,AIO,視訊聊天室,SEX,聊天室,自拍,AV,情色,成人,情色,aio,sex,成人,情色

免費A片,美女視訊,情色交友,免費AV,色情網站,辣妹視訊,美女交友,色情影片,成人影片,成人網站,H漫,18成人,成人圖片,成人漫畫,情色網,日本A片,免費A片下載,性愛

情色文學,色情A片,A片下載,色情遊戲,色情影片,色情聊天室,情色電影,免費視訊,免費視訊聊天,免費視訊聊天室,一葉情貼圖片區,情色視訊,免費成人影片,視訊交友,視訊聊天,言情小說,愛情小說,AV片,A漫,AVDVD,情色論壇,視訊美女,AV成人網,成人交友,成人電影,成人貼圖,成人小說,成人文章,成人圖片區,成人遊戲,愛情公寓,情色貼圖,色情小說,情色小說,成人論壇

a片下載,線上a片,av女優,av,成人電影,成人,成人貼圖,成人交友,成人圖片,18成人,成人小說,成人圖片區,成人文章,成人影城,成人網站,自拍,尋夢園聊天室

A片,A片,A片下載,做愛,成人電影,.18成人,日本A片,情色小說,情色電影,成人影城,自拍,情色論壇,成人論壇,情色貼圖,情色,免費A片,成人,成人網站,成人圖片,AV女優,成人光碟,色情,色情影片,免費A片下載,SEX,AV,色情網站,本土自拍,性愛,成人影片,情色文學,成人文章,成人圖片區,成人貼圖