ஞாயிறு, ஏப்ரல் 22, 2007

ஐப்பீ

செல்வராஜின் பதிவை ஆவலுடன் படித்துக் கொண்டே வந்ததில் கீழ்க்கண்ட வரிகள் சற்று நெருடலாக இருந்தன:

"“ஓ… என் ஐ.பி முகவரியை நீ ஏன் சொன்னாய்”, என்று பொங்குவதில் அவ்வளவு விஷயம் இல்லை. அப்படி ஒன்றும் அது அதி இரகசியம் இல்லை. நீங்கள் செல்லுகிற ஒவ்வொரு இடத்திலும் ஐ.பி முகவரியைச் சொல்கிறீர்கள். நீங்கள் பின்னூட்டம் இடும் ஒவ்வொரு பதிவிலும் உங்கள் முத்திரையையும் அடையாளத்தையும் விட்டு வருகிறீர்கள்."

இதில் மூன்றாம், நானகாம் வாக்கியங்களில் முழு உடன்பாடு. (இரண்டாம் வாக்கியத்தைப் பற்றி, பிறகு) ஆனால் அவற்றைக் கொண்டு முதல் வாக்கியத்தை நியாயப்படுத்த முடியாது என்பது எனது கருத்து. செல்லுமிடமெல்லாம் ஐப்பீ முகவரியைத் தெரிவிப்பது எனது சொந்தத் தேர்வின் விளைவு (result of my personal choice) - எனது நம்பிக்கைக்குப் பாத்திரமான தளங்களுக்கு மட்டுமே செல்கிறேன், அவற்றிற்கு எனது கணினியின் முகவரியைத் தெரிவிக்க வேண்டும் என்ற முழுமையான புரிதலின் பேரில், மற்றும் அவை அதனை துஷ்பிரயோகிக்க மாட்டா, என்ற நம்பிக்கையின் பேரில்.

இப்போது இரண்டாம் வாக்கியம். அப்படி ஒன்றும் அது அதி இரகசியம் இல்லைதான் - நானே அதைத் தெரிவிக்கும் பட்சத்தில். நான் தெரிவிக்காத ஒரு நபருக்கு அது தெரியவருமானால், எனது பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டதாகவே அதை எடுத்துக் கொள்ள வேண்டும். வீட்டுக்கு ஆட்டோ அனுப்பக் கூடிய ஒருவரை எனது வீட்டு முகவரி சென்றடையுமானால் அது எவ்வளவு பாதுகாப்பான ஒரு நிலைமையோ, அவ்வளவு பாதுகாப்பான நிலைமையே, எனது ஐப்பீ, நான் தராத ஒருவரிடம் சென்று தஞ்சமடைவது. எனது ஐப்பீயைக் கொண்டு ஒருவர் என்னவெல்லாம் செய்யக்கூடும்? முதலில் எனது கணினியை ஊடுருவ முயற்சிக்கக் கூடும். அது முடிந்தால் அதில் spyware, malware, நிறுவக்கூடும். பிறகு எனது நடவடிக்கைகளைக் கண்காணிக்கக் கூடும். எனது சொந்தத் தகவல்களை (அலுவலக மின்னஞ்சல் / வங்கிக் கடவுசொற்கள், இத்யாதி) எனது அனுமதியின்றி பெற்றுக் கொண்டு, மோசடிகளை நிகழ்த்தக் கூடும். அல்லது எனது கணினியை ஒரு spam mail serverஆக மாற்றக்கூடும் :) இவையெல்லாம் செய்ய முடியாத படிக்கு எனது கணினியைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியதுதான். இருந்தும் நாளொரு மேனி, பொழுதொரு வண்ணமாக புதுப் புது வகையான ஊடுருவல்கள் தோன்றிக் கொண்டே இருக்கும் இன்றைய நிலையில், நமக்குத் தெரியாதவர்களை நமது சொந்தத் தகவல்கள் (ஐப்பீயும் இதில் அடக்கம்) சென்றடையா வண்ணம் உறுதி செய்து கொள்வதே சிறந்த பாதுகாப்பு நடவடிக்கை.

இப்போது முதல் வாக்கியம். மேற்கூறிய காரணங்களால், எனது ஐப்பீ unauthorized நபர்களை அடைவது பற்றி நான் கவலையாவது கொள்ள வேண்டும். அது குறித்து பொங்கலாமா, கூடாதா என்பது சூழ்நிலையைப் பொறுத்தது. என்னுடன் வணிக உறவு வைத்திருக்கும் ஒரு சேவை வழங்குனர் எனது பாதுகாப்பை சமரசம் செய்தால் ஒரு வேளை அவரிடம் பொங்குவேனோ என்னவோ. அப்படி எந்தவொரு உறவும் இல்லாத இடங்களில் எனது சொந்தத் தகவல்களை (மீண்டும், ஐப்பீயும் இதில் அடக்கம்) வெளியிடுவது at my own riskஏ ஆகும், அவை எந்த நேரமும் சமரசம் செய்யப்படலாம் என்ற முழூ புரிதலின் பேரில்.

5 கருத்துகள்:

அ. இரவிசங்கர் | A. Ravishankar சொன்னது…

நம் IPஐ நாமே ஒருவருக்குத் தெரிவிப்பது வேறு. நம் IP தெரிந்த ஒருவர் நமக்குத் தொடர்பில்லாத இன்னொருவருக்கு நம் அறிவுக்குட்படாமல் அதைத் தெரிவிப்பது / விற்பது வேறு. குற்றமாகக் கூட ஆகலாம். இதற்காகத் தான் எல்லா இணைய நிறுவனங்களும் privacy policy கொள்கைகள் அறிவிக்கிறார்கள். சட்டத்தைத் தவிர தனிநபர்களுக்கு ஒருவரின் அனுமதி இன்றி IP ஐ வெளிப்படுத்துவது தவறே.

முக்கியமான வேறுபாட்டைச் சுட்டிக் காட்டி உள்ளீர்கள். நன்றி

முகமூடி சொன்னது…

படித்த போதே எனக்கும் தோன்றியது... நான் இப்படி எழுதியும் வைத்தேன் "செல்வராஜ், நீங்கள் பல இடங்களில் உங்கள் வீட்டு முகவரியை சொல்கிறீர்கள். உங்கள் வீட்டு தபால்காரனில் ஆரம்பித்து, டிஷ் ஆண்டனா பொருத்த வருபவன் வரை நிறைய பேருக்கு உங்கள் வீட்டு முகவரி தெரிந்தும் இருக்கும். அதற்காக அதில் யாராவது ஒருவர் இந்த இடத்தில் வசிக்கும் செல்வராஜே என்று போஸ்டர் அடித்து ஒட்டினாலும், ஏன் சொன்னாய் என்று பொங்குவதில் இருக்கும் அர்த்தம்/அர்த்தமற்றை பற்றியும் சிறு குறிப்பு வரைவீர்களா?"

ஆனால் இந்த பின்னூட்த்தை அங்கே விடாததற்கு ஒரு காரணம் உங்கள் மேற்கோளில் வரும் நான்காம் வாக்கியம்தான்.

(இந்த ச.சாக்கில்.சி.பா பத்திக்கு மன்னிக்க) செல்வராஜ் பதிவிலோ வேறெங்கோ நானாக விரும்பி அடையாளத்தை முத்திரையை விடுவதில் ஒன்றும் ப்ரச்னை இல்லை.. ஆனால் பொதுவாக "வாலை சுருட்டி பேசாமல் இருந்த/க்கும்" மக்களின் ஐப்பீக்களையும் தார்மீக சம்பந்தமில்லாமல் போஸ்டர் அடித்து ஒட்டிவிட்டு வீடியோ பாட்டு கேட்கும் மக்கள் ரெட்டை வேச கொல்லன்கள் இரும்படிக்கும் இடத்தில் ஈயின் சத்தம் கேட்டால் என்ன கேட்காவிட்டால் என்ன என்றே அமேதி.

மற்றபடி ஐடண்டிட்டி தெஃப்ட் பற்றியும், செக்யூர் ட்ரான்ஸாக்ஷன்ஸ் பற்றியெல்லாம் கண்டிப்பாக தெரிந்திருக்கும் செல்வராஜ் ஐப்பீயை பற்றி சொல்வது நியாயமாகத்தான் இருக்கும்/இருக்க வேண்டும் என்று எல்லாரையும் போல் நாமும் நம்புவோமாக.

இரா. செல்வராசு (R.Selvaraj) சொன்னது…

வாய்ஸ் ஆன் விங்ஸ்: (ஒரு தெளிவிற்காக இதே பின்னூட்டத்தினை என் பதிவிலும் இட்டு வைக்கிறேன்).

==
முதலில் ஒன்றைத் தெளிவுபடுத்த விழைகிறேன். இங்கு, இப்பதிவில் வெளியாகும் கருத்துக்கள்/பதிவுகள் நான் தனி ஒரு வலைப்பதிவனாக எழுதுவதே. தமிழ்மணம், டி எம் ஐ நிர்வாகத்தின் சார்பில் எழுதப்படுபவை அன்று/அல்ல.

இரண்டாவது, தனிப்பட்ட முறையில் நான் யாருடைய ஐ.பி முகவரியையும் கண்காணிப்பதில்லை. யாருடையதையும் யாரிடமும் வெளிப்படுத்தியது இல்லை.

இனி,
வாய்ஸ் ஆன் விங்ஸ் பதிவினை ஒட்டி:

திரித்தல்கள் நிறைந்த வலையுலகில் தவறான பிம்பங்கள் பரவக் கூடாதே என்ற எண்ணத்திலும், சம்பந்தப்படாதவர்கள் ஐபி பற்றிய வீண் பயம் கொள்ளக் கூடாதே என்ற எண்ணத்திலும், அதே சமயம், மறைமுகமாய் இருக்கிறோம் என்ற குறைப்புரிதலால் இரகசியமாய் யாரை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பெயரின்றி ஏசிவிட்டுச் சென்றுவிடலாம் என்று நினைப்பவர்களுக்கு, அப்படிச் செய்தால் மாட்டிக் கொள்ள வாய்ப்புக்கள் அதிகம் என்கிற செய்தியையும் சொல்ல விழைந்ததே இப்பதிவு.

இயன்றவரை கவனமாக எழுதினாலும் என்னுடைய பத்தியொன்று தவறான புரிதலைத் தந்துவிட்டதோ என்று அஞ்சுகிறேன். வருத்தப்படுகிறேன். இப்போதும் தனிப்பட என் கருத்தைத் தான் இங்கு வைக்கிறேன் (தமிழ்மணம் சார்பில் அல்ல).

ஆதாரமின்றியும் அவதூறாகவும் தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்குத் தமிழ்மணம் தக்க பதில்களைச் சொல்லியிருக்கிறது. அதன் பிரைவசி பாலிசியும் அதனை அவர்கள் உறுதியாகக் கடைப்பிடிப்பதையும், யாருக்கும் (ஐபி உட்பட) எந்த அந்தரங்கத் தகவல்களையும் அது தரவில்லை என்று சொல்லியிருப்பதையும் நான் நம்புகிறேன். இனியும் தராது என்றே நம்பிக்கை வைத்திருக்கிறேன்.

அதற்கு மாறாகத் தமிழ்மணம் தனிப்பட்ட தகவல்களை வெளிப்படுத்துகிறது என்றால், அதனை எதிர்ப்பதிலும், அங்கிருந்து எல்லா வகையிலும் விலகிக்கொள்வதிலும் நானே முதல் ஆளாக இருப்பேன்.

தமிழ்மணமோ, தேன்கூடோ, வேறெந்தத் திரட்டியுமோ அன்றி, சிறு நிரல்துண்டுகளை வைத்து யார் வேண்டுமானாலும் ஐபி முகவரிகளைக் கண்டுபிடிக்கலாம் என்பதனால், வீணாகப் பொதுப்பதிவர்களின் குழப்பத்தை அதிகரிக்க ஆதாரமின்றித் திரட்டிகள் மீது குற்றச்சாட்டுகள் தெரிவிக்க வேண்டியதில்லை என்பதும் நான் சொல்ல விழைந்தது.

==

இது உங்கள் ஐயங்களைத் தெளிவுபடுத்தியிருக்கும் என்று நம்புகிறேன்.

Voice on Wings சொன்னது…

செல்வராஜ்,

உங்கள் இடுகையை எழுதுவதற்கான பின்னணிக் காரணங்கள் புரிகின்றன. எனக்கு அதில் உவப்பில்லாத பகுதியை மட்டுமே சுட்டியிருக்கிறேன். ஐப்பீயைப் பற்றிய பயம் கொள்வது நியாயமானதே என்பதை என் பார்வையிலிருந்து விளக்கியிருக்கிறேன், அதுவும் முற்றிலும் நுட்ப ரீதியாகவே.அதை எந்தவொரு திரட்டி / தளம் / வலைப்பதிவை மையமாக வைத்தும் எழுதவில்லை.

உங்கள் பதிவில் இன்னொரு இடத்திலும் நான் வேறுபடுவது - அனானிமைசர் சேவைகளைப் பற்றிய உங்களது (சற்று) எள்ளலான தொனி. ஐப்பீயைப் பற்றிய பயம் நியாயமானது என்ற என் கோணத்திலிருந்து, அனானிமைசரைப் பயன்படுத்துவதும் ஒரு பாதுகாப்பு உத்தியே என்று எனக்குப் படுகிறது.

உங்கள் வருகைக்கும் தெளிவுப்படுத்தலுக்கும் நன்றி, செல்வராஜ் :)

*****************

ரவிசங்கர்,

கூட்டாளிகளான நமக்குள்ள நன்றியெல்லாம் எதுக்கு? ;)


*****************

முகமூடி,

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :) உங்கள் ச.சா.சி.பா. ஒன்றும் புரியவில்லை. இதையே வாய்ப்பாகப் பயன்படுத்தி எனது ச.சா.சி.யைப் பாடிவிடுகிறேன்.

எனது வலைப்பதிவில் எந்த ஐப்பீ கண்காணிப்பானும் கிடையாது. வருபவர்களின் ஐப்பீ விபரங்கள் கூகிளாண்டவருக்கே வெளிச்சம். ஆகவே, யாரும் அடையாளம் குறித்த பயமின்றி தங்கள் பொன்னான கருத்துகளை விட்டுச் செல்லலாம் :)

*************

இறுதியாக, பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள் - எனது ஐப்பீயைக் கண்காணிக்காவிட்டால் அதிக முறை உங்கள் வலைப்பதிவுக்கு வருகை தர வசதியாக இருக்கும். ஆகவே, (முடிந்தால்) தங்கள் வலைப்பதிவிலுள்ள கண்காணிப்பான்களை அகற்றி விடவும், நன்றி.

CROWN TRUST FINANCIAL LOAN FIRM !!! சொன்னது…

நாங்கள் தற்போது சரிபார்ப்புக்கு சரியான செல்லுபடியாகும் அடையாள அட்டையுடன் 2% வட்டி விகிதத்தில் மிதக்கும் கடன் திட்டத்தை வழங்குகிறோம்.
உங்களுக்குத் தேவையான எந்தவொரு கடனுக்கும் உங்கள் கடன் கோரிக்கையை அனுப்பலாம்.
நாங்கள். 5,000.00 அமெரிக்க டாலர் முதல் கடன்களை வழங்குகிறோம். $ 50,000,000.00 அமெரிக்க டாலர்.
அதிகபட்சம் ஐந்து (5) முதல் ஐம்பது (50) ஆண்டுகள் வரை நீண்ட கால கடன்.
நாங்கள் பின்வரும் வகை கடனை வழங்குகிறோம்: திட்ட கடன், மறுநிதியளிப்பு கடன், வணிக முதலீட்டு கடன்கள், கார் அல்லது வாகன கடன்கள், மாணவர் கடன், கடன் ஒருங்கிணைப்பு,
வீட்டுக் கடன்கள், தனிநபர் கடன்கள், பயண மற்றும் விடுமுறைக் கடன், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கடன்.
உங்கள் நாட்டில் எங்கள் நிறுவனத்தின் பிரதிநிதியாக இருக்கக்கூடிய ஒரு நபரும் எங்கள் நிறுவனத்திற்கு தேவை.
மின்னஞ்சல் வழியாக எங்கள் CROWN TRUST FINANCIAL LOAN FIRM அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்: crowntrustfin Financialloanfirm@gmail.com

எங்கள் நிதி சலுகையில் நீங்கள் ஆர்வமாக இருந்தால், எங்களிடமிருந்து கடனைப் பெற விரும்பினால், எங்களைத் தொடர்புகொண்டு கீழே உள்ள விவரங்களை எங்களுக்குத் தரவும், அது தேவைப்படும்
கடன் தொகை விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் அதற்கேற்ப தொடங்கவும்.

பெயர்: ___________________________
பெயர்: ____________________________
பாலினம்: _______________________________
திருமண நிலை: _______________________
தொடர்பு முகவரி: ______________________
நகரம் / ஜிப்: ________________________
நாடு: ______________________________
பிறந்த தேதி: ________________________
கடனாக தேவையான தொகை: ________________
கடன் காலம்: ________________________
மாத வருமானம் / ஆண்டு வருமானம்: _________
தொழில்: ___________________________
கடனுக்கான நோக்கம்: _____________________
தொலைபேசி: ________________________________
தொலைநகல்: __________________________________

இந்த விவரங்களை அங்கீகரிக்கும் வகையில் ஒப்பந்தம் உட்பட நன்கு கணக்கிடப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் அனுப்பப்படும்.

உங்கள் ஆதரவுக்கு நன்றி!
வாழ்த்துக்கள்,
CROWN TRUST நிதி கடன் நிறுவனம்!