வியாழன், பிப்ரவரி 16, 2006

இடுகைகளை எளிதில் tag செய்ய...........

கடந்த சில வாரங்களை, எனக்குத் தோன்றிய ஒரு யோசனையைச் செயல்படுத்துவதில் செலவழித்தேன். அதன் விளைவாக ஒரு Firefox நீட்சியை (அதாங்க, extension) உருவாக்கியிருக்கிறேன். அதை நிறுவிக்கொள்ள இங்கு சொடுக்குங்கள்.

உங்கள் இடுகைகளைத் தமிழ்மணத்தில் வகைப்படுத்துவது போலவே, tags எனப்படும் சொற்களாலும் வகைப்படுத்தலாம். ("இத இன்னும் எவ்ளோ வாட்டிப்பா சொல்லுவே", என்று சலித்துக் கொள்ளாதீர்கள் :) ) 15 -16 பொதுவான வகைகளுக்குள் ஒன்றாக உங்கள் இடுகைகளை வகைப்படுத்திய பின், அதை இன்னும் specificஆக வகைப்படுத்தினால் வருங்காலத் தேடல்களுக்கு வசதியாகயிருக்கும். உ-ம், 'ரஜினிகாந்த்' என்றோ, 'சுஜாதா' என்றோ, 'பெரியார்' என்றோ, 'கர்நாடக இசை' என்றோ, 'பின்நவீனத்துவம்' என்றோ, உங்கள் இடுகையை வகைப்படுத்தினால், உங்கள் பதிவு எதனைப் பற்றி, என்ற pointed information கிடைப்பதோடு மட்டுமல்லாமல், இச்சொற்களைக் கொடுத்துத் தேடுபவர்களுக்கு, ஒரு நபர் / நிகழ்வு / துறையைப் பற்றி வலையுலகில் என்னவெல்லாம் பேசப் பட்டதோ / படுகிறதோ அவையனைத்தும் தொகுக்கப்பட்டு, ஓரிடத்தில் வழங்கப்படும் சாத்தியமேற்படுகிறது. பதிவர்களாகிய உங்களுக்கு, இதனால் உங்கள் பதிவு பிற்காலத்திலும் படிக்கப்படலாமென்ற பலன் கிட்டுகிறது, அதுவும் ஒத்த மனதுடைய வாசகர்களால். வலைவாயில்களில் ஒரு சில மணி நேரங்களோ அல்லது ஒரு சில நிமிடங்களோ (இப்பொழுதெல்லாம் வைரஸ் தொல்லை அதிகரித்து விட்டதாமே? :) ) கிடைக்கும் கவனத்தை விட, ஒரு வாசகர் தேடிக் கண்டுபிடித்து உங்கள் பதிவுக்கு வரும் நிலையில், உங்கள் எழுத்து அதிகமாகப் பாராட்டப்படக் கூடிய வாய்ப்பிருக்கிறது. ஓன்றுக்கு மேற்பட்ட tagsஐக் கொண்டு உங்கள் இடுகையை வகைப்படுத்துவதும்் சாத்தியமே. சரி, இதற்கு மேல் taggingஐ மார்க்கெட்டிங் செய்யப்போவதில்லை. எனது நீட்சியின் செயல்பாடுகளைப் பார்ப்போம்.

இடுகைகளை tagging செய்ய நீளமான html நிரல்களை எழுத வேண்டியிருக்கிறது. "அதெல்லாம் கணினி அறிவு படைத்தவர்களுக்கே, நமக்கும் அதற்கும் சம்மந்தமில்லை" என்று நீங்கள் ஒதுங்கியிருக்கலாம். இந்த html சிக்கல்களெல்லாம் இல்லாமலேயே இடுகைகளை tag செய்ய முடிவது எனது நீட்சியின் ஒரு செயல்பாடு. மற்றொன்று, இந்த tagகளை உள்ளீடு செய்யாமல், முன்தொகுக்கப்பட்ட பட்டியல்களிலிருந்து (i.e. precompiled lists) தேர்வு செய்ய முடிவது. கீழே கொடுக்கப்பட்ட நீட்சியின் இடைமுகத்தைப் (interface) பார்த்தால் இது நன்கு புரிபடும் (அசல் அளவில் காண, படத்தைச் சொடுக்குங்கள்):


இப்பட்டியல்களை உருவாக்கி, மற்ற பதிவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதியுமுண்டு. ஏற்கனவே ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளுக்குமான பட்டியல்களை உருவாக்கி, நீட்சியுடன் இணைத்து வழங்கியிருக்கிறேன். அதில் திருப்தியடையாதவர்கள், அவர்களே புதுப் பட்டியல்களைத் தயாரித்து வழங்கலாம். சீன மொழியிலும் பட்டியல்களை உருவாக்கலாம் (என்று நினைக்கிறேன், முயன்று பார்க்கவில்லை. Frenchஇல் கொஞ்சம் முயன்று பார்த்தேன் ;) ) இது போல் பட்டியல்களிலிருந்து தேர்வு செய்யும் முறையினால், அனைவரும் பொதுவான tagsஐப் பயன்படுத்தும் வாய்ப்பு அதிகரிக்கிறது. (உ-ம், இன்று 'தமிழ்ப்பதிவுகள்' என்று பலரும் பயன்படுத்துவது போல். அவ்வாறில்லாமல், 'சினிமா', 'திரைப்படம்', 'திரை விமர்சனம்', 'திரைப்பார்வை', 'கீத்துக்கொட்டாய்' என்று அதே விஷயத்தை ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாக tag செய்தால், இப்பதிவுகள் ஓரிடத்தில் தொகுக்கப் படாமல் வெவ்வேறு tagsஇன் கீழ் சிதறி விடுகின்றன.)

இன்னொரு பயன்பாடு - ஒரு tagஐ நீங்கள் பயன்படுத்தினால், அதே tagஉடன் வெளியான மற்ற பதிவுகளையும் படிக்க விரும்புவீர்கள் என்ற அனுமானத்தில், அந்த tagஇற்கான RSS தொகுப்பை நிகழ் புத்தகக்குறியாக (Live Bookmark) சேர்த்துக் கொள்ளும் வசதி. இத்துடன், பதிவை வெளியிட்ட பிறகு, தானே technoratiஐ ping செய்வதற்கும் வசதியுண்டு. நீங்கள் பலவாளுமை கொண்ட, பல பதிவுகளைப் படைப்பவராக இருந்தால், அவற்றின்் url பட்டியலையும் நீட்சியிடம் கொடுத்து, அதிலிருந்து எந்தப் பதிவை பற்றி ping செய்ய வேண்டுமோ அதைத் தேர்வு செய்து கொள்ளலாம். இவையெல்லாம் எனது விளக்கங்களால் புரியாவிட்டாலும், நீட்சியைப் பரிசோதித்தால் புரியுமென்று நம்புகிறேன்.

உங்கள் எல்லா தேர்வுகளையும் செய்த பின், 'Generate code' என்ற விசையை அழுத்தினால், தேவைப்படும் html நிரல் உருவாக்கப் பட்டுவிடும். அதன் பிறகு, உங்கள் பதிவின் editorஇல் வேண்டிய இடத்திற்கு cursorஐ நகர்த்திக் கொண்டு போய், 'paste' (Ctrl-V) கட்டளையை இட்டால்், tagsஸுக்கான நிரல் இடுகையில் புகுத்தப் பட்டு விடும். அதன் பிறகு, பின்விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் publish செய்து விட வேண்டியதுதான். குறிப்பிட்ட புத்தகக் குறிகளும் உருவாக்கப் பட்டிருப்பதைக் காணலாம். மேலும்், ping அறிவிப்பும்் குறிப்பிட்ட நேர இடைவெளிக்குப் பிறகு தானாகவே வெளியிடப்படும்.

இது பதிவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்குமானால்் மகிழ்ச்சியடைவேன். இதைப் பற்றிய விரிவான தகவல்களை ஆங்கிலத்தில் இங்கு வழங்கியிருக்கிறேன். Mozillaவுக்கும் இதை சமர்ப்பித்திருக்கிறேன். இப்பதிவும் இந்த நீட்சியைக் கொண்டே tag செய்யப்பட்டுள்ளது :)

14 கருத்துகள்:

Boston Bala சொன்னது…

Excellent! Thank you.

If only U can integrate the del.icio.us/scuttle bookmarking to categorize the blogger/blogspot's posts, I will attain blog nirvana :D

(3 ways to use del.icio.us for categories in blogger - Freshblog)

Sri Rangan சொன்னது…

இரவி;வணக்கம்!
தங்கள் உழைப்புக்கு நன்றி.பதிவிறக்கஞ் செய்துள்ளேன்.பின்பு விரிவாகப் பரிசீலித்துவிட்டு இன்னும் எழுதுவேன்.
அன்புடன்
ப.வி.ஸ்ரீரங்கன்

Ram.K சொன்னது…

அட நல்லாயிருக்கே இது.
முயற்சி பண்ணி பார்க்கிறேன்.
நன்றி

Kanags சொன்னது…

வொய்ஸ் ஒன் விங்ஸ், உங்கள் கோப்பை தரவிறக்கம் செய்தேன். நன்றி!
//(tagutil.zip என்பதை tagutil.xpi என்றுப் பெயர் மாற்றி, அதை Firefox 'open file'ஆல் திறந்தால், அது நிறுவிக் கொள்ளும்)//
பெயர் மாற்றி நிறுவிக் கொள்ளுதலை ஒருக்கா விளக்கமாகச் சொன்னால் நல்லது.

Voice on Wings சொன்னது…

bb, Thanks.

Dunno if i read your requirement correctly. I think you already might have attained nirvana with Technorati ;) From your technorati profile, i gather that these are the posts you have tagged as 'சினிமா'. You could periodically update your sidebar with such links that would serve as 'categories' for blogger. Does it serve your purpose? I know it's not as elegant (and automated) as WordPress categories, and I suppose, you will have to follow a similar approach even with del.icio.us.

******************
ஸ்ரீரங்கன்,

உங்கள் பரிசீலனைகளுக்குப் பிறகு உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்.

******************
பச்சோந்தி,

முயற்சி செய்து விட்டு, உங்கள் எண்ணங்களை அறியத் தாருங்கள் :)

******************
kanags,

உங்களது windows கணினி என்று நம்புகிறேன். அதில் Windows Explorer கொண்டு, நீங்கள் இறக்கிக் கொண்ட கோப்பின் பெயரை rename செய்ய வேண்டும். zip என்பதற்கு பதிலாக xpi என்று பெயர் மாற்றி, Firefoxஇன் File menuவிலுள்ள 'Open file' என்ற கட்டளையைக் கொண்டு இந்த xpi fileஐத் திறக்க வேண்டும். அவ்வாறு செய்தால், எனது நீட்சி Firefoxஇல் நிறுவிக் கொள்ளும். முயன்று பாருங்கள், சிக்கல்கள் வந்தால் தெரியப்படுத்துங்கள்.

மணியன் சொன்னது…

Thanks to you, I have also joined the wagon. I couldn't change file extn in windows explorer. I used command prompt.

Thanks a lot once again.

Voice on Wings சொன்னது…

மணியன்,

உங்கள் பதிவை இப்போதுதான் பார்த்தேன். இக்கருவியைக் கொண்டு tag செய்திருப்பது கண்டு மகிழ்ச்சி. கோப்பின் பெயரை மாற்றுவதிலுள்ள சிக்கலைப் பற்றி கூறியதற்கும் நன்றி.

********************
கனக்ஸ்,

உங்களாலும் Windows Explorerஇல் கோப்பின் பெயரை மாற்ற முடியவில்லை என்றால், கீழ்க்கண்ட வழிகளில் ஏதாவாதொன்றைப் பின்பற்றுங்கள்:

- Windows Explorer menuவில் View > Folder Options > View விற்குச் சென்று, 'Hide File Extensions for known file types' என்பதை uncheck செய்தால், tagutil.zip என்று கோப்பின் முழுப் பெயரும் தென்படும். அதை, tagutil.xpi என்று மாற்றிக் கொண்டு, Firefoxஆல் திறந்தால், நீட்சி நிறுவப்பட்டு விடும்.

(அல்லது)

- மணியன் செய்ததைப் போல், MS DOS promptஇல் நீங்கள் கோப்பைச் சேமித்துக் கொண்ட directoryக்குச் சென்று,

ren tagutil.zip tagutil.xpi

என்ற கட்டளையைக் கொடுங்கள். அதன் பிறகு அதனை Firefoxஆல் திறந்து, நீட்சியை நிறுவிக் கொள்ளுங்கள். இதில் சிக்கலிருக்காதென்று நம்புகிறேன்.

Kanags சொன்னது…

Voice on Wings, படித்த பழைய டொஸ் கட்டளைகள் படித்தது எல்லாம் மறந்து போயின. நினைவு படுத்தியமைக்கு நன்றிகள். நீட்சியை நிறுவியாகி விட்டது. இதன் பயன்பாட்டை ஆறுதாலகப் பார்த்து உங்களுக்கு அறியத்தருகிறேன். மீண்டும் நன்றிகள்.

Voice on Wings சொன்னது…

நிதானமாக உங்கள் கருத்துக்களை வழங்குங்கள்,கனக்ஸ். :)

Mozilla addonsஇல் சேர்த்துக் கொள்ளப்பட்டு விட்டதால், அந்த நேரடிச் சுட்டியையே பதிவில் இட்டிருக்கிறேன். இதனால், பெயர் மாற்றும் படலங்களுக்கெல்லாம் இனி தேவையிருக்காது :)

Badri Seshadri சொன்னது…

நேற்று நிறுவினேன். நன்றாக வேலை செய்கிறது.

நிற்க. Firefox 1.5.0.1 (Windows XP) நிறுவியுள்ளீர்களா? அதில் தமிழில் நேரடியாக உள்ளிடுவதில் சில சிரமங்கள் உள்ளன. கவனித்தீர்களா? எனது கடந்த சில பதிவுகளில் tag சிலவற்றைக் கவனித்திருப்பீர்கள்.

Voice on Wings சொன்னது…

பத்ரி, நன்றி :)

நானும் FF 1.5.0.1 தான் பயன்படுத்துகிறேன், ஆனால் Win'98இல். எ-கலப்பை (ஒருங்குறி) எனக்கு வேலை செய்யாதென்பதால், நீங்கள் கூறும் பிரச்சனையைப் பார்வையிட முடியவில்லை. நீங்கள் கூறும் தமிழ் உள்ளீட்டில் உள்ளப் பிரச்சனை பொதுவானதா (i.e. in this FF version), அல்லது எனது நீட்சியின் திரையில் மாத்திரமா?

உங்கள் ஒரு சில பதிவுகளை tag செய்திருப்பதைக் கவனித்தேன். சரியாகவே tag செய்யப்பட்டிருகின்றன. ஆனாலும், சில பதிவுகள் / tags, technoratiயில் சேர்க்கப்படவில்லை என்று தெரிகிறது (உ-ம், 'விளம்பரம்', 'வர்த்தகம்' என்று tag செய்யப்பட்ட பதிவுகள்). இது technoratiயில் உள்ள பிரச்சினைதான் என்று நினைக்கிறேன். அவ்வப்போது சில இடுகைகள் / tags அவ்வாறு சேர்த்துக் கொள்ளப் படுவதில்லை. Sent them an email request, to improve their service. Hopefully they will.

மேலும், ஒரு முறை ping செய்து விட்டு, அதன் பிறகு உங்கள் பழைய பதிவுகளை tag செய்தீர்களென்றாலும் பிரயோஜனமில்லை. ஏனென்றால் அவர்களது spider, மறு முறையிலிருந்து உங்கள் புது பதிவுகளை மட்டுமே கண்காணிக்கும். இது போன்ற சில விதிகளையும் நினைவில் வைத்துக் கொண்டால், இதன் செயல்பாட்டை நன்கு புரிந்து கொள்ளலாம்.

பெயரில்லா சொன்னது…

Good work, thanks.

1) Is it possible to tag our old posts ?

2) Is there a version for IE too in the making ?

Voice on Wings சொன்னது…

One guy,

1) If you want your old posts tagged, it can be done if you have never ever pinged technorati about your blog. What I mean is, when technorati bot/spider visits your blog for the first time, (I think) it takes a complete inventory of all your posts and their tags. Any subsequent changes you make like adding a tag to an old post etc will not make a difference, because it would only look for new content when it visits again, and not bother about the old posts.

Assuming you have already experimented with technorati pings for your blog, and now you want all your old posts tagged, the only way to do it is to create a mirror blog with a new URL, import all the old posts into it, tag them all and finally ping that URL to technorati. With this, all your old posts would get indexed with their tags. You dont need to update the mirror blog with your new posts, as technorati will pick them from your active blog (i.e. if you tag them & ping).

2) IE?? Wrong camp :) Well, I guess a desktop application can be developed on the same lines, using Java or VB or VC which will do the basic html generation and probably, even the other tasks. But I'm not planning anything in that direction though, as i'm not familiar with these development environments.

பெயரில்லா சொன்னது…

VOI, தங்கள் Tagutil ஐப் பாவித்துப் பயன்பெறும் வலைப்பதிவாளர்களுள் நானும் ஒருவன். இன்று எனது Firefox உலாவியை 1.5 இலிருந்து 2.0 க்கு upgrade பண்ணினேன். TagUtil, 2.0 க்கு compatible இல்லை என்று வருகின்றது. என்ன செய்யலாம்?