சனி, நவம்பர் 19, 2005

கிராமிய மணம்

தற்போது வெளிவரும் திரையிசைப் பாடல்கள் பெரும்பாலும் மேற்கத்திய அல்லது நகர்ப்புறத்துப் பாணியைச் சார்ந்தவைகளாக இருக்கின்றன. இவ்வகைப் பாடல்கள் கவனத்தைக் கவர்ந்தாலும் நிலைத்து நிற்பதில்லை. பாடலில் ஒரு கிராமிய மணம் வீசினால்தான், அது மேலும் சிறப்படைந்து அமரத்துவம் பெறுகிறது. இசையமைப்பாளருக்கும் அவரது திறமையின் மற்றொரு பரிமாணத்தை வெளிப்படுத்தும் ஒரு மேடையாகத் திகழ்கிறது கிராமிய இசை.

நான் மிகவும் விரும்பும், ரஹ்மானின் இசையில் வெளிவந்த சில கிராமியப் பாடல்களின் ஒலிப் பட்டியலைத்(playlist) தொகுத்துள்ளேன். அதே போல் இளையாராஜாவுக்கும் முயன்றிருக்கிறேன். அவர் தனது நீண்ட அனுபவத்தில் அளித்த நூற்றுக்கணக்கான படங்களிலிருந்து முடிந்த வரை நல்ல கிராமிய வாசம் கொண்ட பாடல்களைத் தொகுப்பதென்பது தீவிரமானதொரு முயற்சியாகத்தான் இருந்தது. இது பல இளம் பருவத்து நினைவுகளைக் கிளறி விட்ட ஒரு அனுபவமாகவும் இருந்தது என்பது சொல்லத் தேவையில்லாத ஒரு கொசுறுச் செய்தி.

மேற்கூறிய ஒலிப்பட்டியல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். (யாம் பெற்ற இன்பம்......... etc etc) இதனைப் பெற, கீழ்க்கண்ட செய்முறையைப் பின்பற்றுங்கள்:
  1. முதலில் இந்தக் கோப்பை உங்கள் கணினியில் இறக்கிக் கொண்டு unzip செய்து கொள்ளுங்கள். arr_folk.mia, il_folk.mia என்று இரு கோப்புகள் கிடைக்கும்.
  2. பிறகு, http://www.musicindiaonline.com தளத்திற்குச் சென்று உங்களுக்கு ஒரு பயனர் கணக்கு ஏற்படுத்திக் கொண்டு, login செய்யுங்கள்.
  3. அங்கு User Panel பெட்டியில் View Albums என்ற சுட்டியைச் சொடுக்குங்கள். அதைத் தொடர்ந்து வரும் Your Albums என்ற திரையிலுள்ள Import என்ற பொத்தானை அழுத்துங்கள். ஒரு உரையாடல் பெட்டி திறந்து இறக்குமதி செய்ய வேண்டிய கோப்பின் விவரத்தைக் கேட்கும். Browse பொத்தானை அழுத்தி, நீங்கள் முதலில் இறக்கிக் கொண்ட .mia கோப்புகளைக் குறிப்பிட்டு, ஒலிப்பட்டியல்களை இறக்குமதி செய்யுங்கள்.
  4. இறக்குமதிக்குப் பிறகு, Your Albums திரையில், ஒலிப்பட்டியல்களின் பெயருடன் சுட்டிகள் தென்படும். அவற்றில் உங்களுக்கு வேண்டியதைச் சொடுக்கினால், ஒரு ஒலிப்பான் (media player) திரை தோன்றி, பட்டியலிலுள்ள பாடல்கள் ஒன்றன் பின் ஒன்றாக உங்கள் கணினியில் இசைக்கப்படும். இதில் shuffleஐத் தேர்ந்தெடுத்தால், பாடல்களின் வரிசை (sequence) கலைந்து random முறையில் பாடல்கள் இசைக்கப்படும்.
ஒரு சில மணி நேர இன்பத்திற்கு நான் உத்தரவாதமளிக்கிறேன். பல அருமையான பாடல்கள் இத்தளத்தில் இல்லாத காரணத்தால் இப்பட்டியல்களிலிருந்து விட்டுப் போயின. (உ-ம், திருடா திருடா, கருத்தம்மா, கிழக்குச் சீமையிலே, மகுடி, முள்ளும் மலரும், தனிக்காட்டு ராஜா, ஆகிய படங்களில் இடம் பெற்ற சில கிராமியப் பாடல்கள்)

இறக்குமதி செய்து கொண்ட ஒலிப்பட்டியல்களை விரும்பும்போதெல்லாம் கேட்கலாம். மேற்கூறிய செய்முறை பிடிபட்டவுடன் நீங்களும் உங்கள் விருப்பப் பாடல்களைத் தொகுத்து, இதைப்போலவே அனைவருக்கும் வழங்கலாம். இதை ஒரு மீம் போலவும்்லவும் செய்யலாம், பலருக்கும் ஆர்வமிருந்தால். (ஒரே லாம்....லாம்.......லாம்தான் :) ) ரசனையை பற்றிய சுய தம்பட்டம், குறிப்பிட்ட இசையமைப்பாளர் / பாடகர் / இசைவகை / காலகட்டம் ஆகியவற்றின் மேன்மையைப் பறைசாற்றுதல், அலுவலக நேரத்தை உருப்படியாக செலவழித்தல்......... என்று இதனால் பல பயன்கள் உள்ளன ;)

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

நீங்கள் தேடம் படப்பாடல் சிலவேளைகளில் இங்கு கிடைக்கலாம்!!!!http://www.tamilsongs.net/

Voice on Wings சொன்னது…

வருகைக்கும் தகவலுக்கும் நன்றி, நண்பரே. www.smashits.com தளத்தையும் பார்வையிட்டேன். music indiaவில் கிடைக்காத பாடல்கள் சிலவற்றை அங்கு கண்டேன். ஆனால் அங்கும் சில பாடல்கள் இல்லாமல் music indiaவில் இருந்தன. ஒலிப்பட்டியல்களை உருவாக்கும் வசதி, அவற்றை ஏற்றுமதி / இறக்குமதி செய்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதி, விளம்பரத் தொந்தரவுகள் இல்லாத ஒலியோடைகள் (audio streams) என்று பல காரணங்களால் music india ஒரு நல்ல சேவையாகத் தோன்றியது. நீங்கள் குறிப்பிட்ட தளத்தையும் முயன்று பார்க்கிறேன், நன்றி.

Boston Bala சொன்னது…

Good concept. Thx for sharing. I am used to Raaga; but ur post may make me switch ;-)

Voice on Wings சொன்னது…

Hi BB, thx for dropping by. Raaga plays ads before the songs, and they can be irritating :)