திங்கள், ஜூன் 01, 2009

GMail பயனர்களுக்கான OpenID

தமிழ்மணம் பரிந்துரை நிரல் இப்போது OpenIDயைக் கேட்கிறது. பிளாக்கர்.காம் / வேர்ட்பிரஸ்.காம் பதிவு வைத்திருப்பவர்கள் தங்களது பதிவின் முகவரியையே OpenIDஆகப் பயன்படுத்தலாம் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் பதிவர் அல்லாதவர்கள் எந்த OpenID முகவரியைத் தருவது என்று (நான் உட்பட) பலரும் குழம்பிப் போயிருக்கிறோம்.

Yahoo mail பயனர்கள் பிரச்சனையின்றி http://username@yahoo.com என்ற முகவரியை வழங்கி தங்களது அடையாளத்தை உறுதி செய்து கொள்ளலாமென்று தெரிய வருகிறது. ஆனால் Gmail அத்தகைய வசதியைத் தராமல் கொஞ்சம் சிக்கலான வகையில் OpenID ஆதரவைத் தருகிறது. தமிழ்மணம் போன்ற ஒரு தளத்தில் நமது Gmail முகவரி மூலமாக OpenID சோதனையைத் தாண்டுவது எப்படி? அதற்கான செய்முறை கீழே வழங்கப்பட்டுள்ளது:
  • OpenID பயன்படுத்துவதற்கு முன்பு http://openid-provider.appspot.com/ என்ற தளத்திற்குச் சென்று 'login' சுட்டியைச் சொடுக்குங்கள். Google தளத்திற்கு redirect செய்யப்படுவீர். அங்கு, பயனர் விவரம் மற்றும் கடவுச் சொல்லை அளித்து login செய்யுங்கள்.(Google தளத்திற்கே சென்று login செய்வதால் இது முற்றிலும் பாதுகாப்பானது. Phishing போன்ற கவலைகளுக்கிடமில்லை)
  • மீண்டும் http://openid-provider.appspot.com/ பக்கத்திற்கே redirect செய்யப்படுவீர். ஆனால் இப்போது அப்பக்கத்தில் உங்களுக்கான OpenID முகவரி தரப்பட்டிருப்பதைக் காணலாம். (அது http://openid-provider.appspot.com/gmail-username என்ற உருவில் இருக்கும்)
  • இந்த முகவரியையே தமிழ்மணம் மற்றும் (OpenIDயைக் கோரும்) இதர தளங்களிலும் வழங்கி உங்கள் அடையாளத்தை உறுதி செய்து கொள்ளலாம்.

18 கருத்துகள்:

லக்கிலுக் சொன்னது…

சூப்பர். இதைப் பயன்படுத்தி உங்களுக்கு ஒரு ஓட்டும் போட்டிருக்கிறேன் :-)

- யெஸ்.பாலபாரதி சொன்னது…

//லக்கிலுக் said...

சூப்பர். இதைப் பயன்படுத்தி உங்களுக்கு ஒரு ஓட்டும் போட்டிருக்கிறேன் :-)
//

mee to thala.. :)

சென்ஷி சொன்னது…

// லக்கிலுக் said...

சூப்பர். இதைப் பயன்படுத்தி உங்களுக்கு ஒரு ஓட்டும் போட்டிருக்கிறேன் :-)//

me too

Voice on Wings சொன்னது…

லக்கிலூக், பாலபாரதி மற்றும் சென்ஷி, வருகைக்கும் சோதனை வோட்டுக்களுக்கும் நன்றி :)

ஏனோ, பஸ்மாசுரன் கதை நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை :)

- யெஸ்.பாலபாரதி சொன்னது…

//ஏனோ, பஸ்மாசுரன் கதை நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை :)//

அய்யையோ.. மைனஸ் குத்துக்கும் எனக்கும் தொடர்பு இல்லை. :(

thamizhparavai சொன்னது…

நன்றி...
பாசிட்டிவ் ஓட்டு குத்திட்டேன்...

Voice on Wings சொன்னது…

பாலபாரதி, no tension :) பிளஸ்ஸோ, மைனஸோ எல்லாமே சோதனைக் குத்துகளாத்தான் இருக்கும்ன்னு நினைக்கறேன்.

இராம்/Raam சொன்னது…

கலக்கல்... :)

////ஏனோ, பஸ்மாசுரன் கதை நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை :)//

அய்யையோ.. மைனஸ் குத்துக்கும் எனக்கும் தொடர்பு இல்லை. :(//

LOL

இராம்/Raam சொன்னது…

VoW,

சின்ன வேண்டுகோள்,

//OpenID பயன்படுத்துவதற்கு முன்பு http://openid-provider.appspot.com/ என்ற தளத்திற்குச் சென்று 'login' சுட்டியைச் சொடுக்குங்கள். Google தளத்திற்கு redirect செய்யப்படுவீர். //

இந்த இடத்திலே லிங்க் சாமி'யே (with target="_blank")அருள்பாலிக்க வைங்கயுங்களேன்.... Ctl + c, ctl + v பண்ண கஷ்டமா இருக்கு.... ஹிஹி

Voice on Wings சொன்னது…

இராம், இப்படியெல்லாமா கலாய்க்கிறது? :) 'வேண்டுகோள்'ன்னு பாத்துட்டு சீரியசா வேற படிக்க ஆரம்பிச்சேன் :)

தமிழ்ப்பறவை, பாஸிடிவ்வா குத்தியதற்கு நன்றி :)

Suresh சொன்னது…

romba romba useful thalaiva since blogger id it says some problem this is good

Suresh சொன்னது…

vottum pottachu

ரவி சொன்னது…

என்னோட ஓட்டும் உமக்குத்தான்...

லக்கிலுக் சொன்னது…

அண்ணே!

அப்படியே கள்ள ஓட்டும் போடுவது எப்படின்னு சொல்லிக் கொடுத்தீங்கன்னா ரொம்ப ஹெல்ப்பா இருக்கும் :-)

பெயரில்லா சொன்னது…

தகவலுக்கு நன்றி!

Voice on Wings சொன்னது…

சுரேஷ், செந்தழல் ரவி, வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி.

லக்கிலூக், :)

உமையாள், அறிமுகப்படுத்திய முறையைக் கொண்டே நீங்கள் பின்னூட்டமிட்டிருப்பது பாராட்டப்பட வேண்டியது. Blogger பதிவுகளுக்கு இது தேவைப்பட்டிருக்காது (Google Account ஆதரவு இருப்பதால்). ஆனால் Blogger அல்லாத (மற்றும் அனானிமஸ் கமென்ட் அனுமதிக்காத) வலைப்பதிவுகளில் இந்த OpenID மிகவும் பயனுள்ளதாக இருக்கும் (பின்னூட்டுபவர்கள், பதிவர்கள் ஆகிய இரு சாராருக்குமே). இது பராவலானால் comment spamஐ ஒழிக்க captcha போன்ற சோதனைகளை வைக்க வேண்டியதில்லை, பதிவில் OpenID ஆதரவை அளித்தால் மட்டுமே போதுமானது. ஆகவே, உங்கள் முயற்சிக்கு நூறு மதிப்பெண்கள் தருகிறேன் :)

cheena (சீனா) சொன்னது…

ஓட்டுப்போட்டுட்டேன் - தகவலுக்கு நன்றி

Jackiesekar சொன்னது…

அன்புள்ள நண்பருக்கு போன முறை எனக்கு கருவிபட்டை பிரச்சனை வந்த போது தாங்கள்தான் எனக்கு சரி செய்து கொடு்த்தீர்கள், தற்போது ஒரு சிறு பிரச்சனை அதை தாங்கள் எப்படி சரி செய்ய வேண்டம் என்று சொல்லுங்கள்...எனக்கு பதிவின் கழே கமென்ட் வரகின்றது அதற்க்கு கீழே கருவிப்பட்டை வருகின்றது இப்படி இருப்பதால் 45 கமெண்ட்டு கீழே வருவதால் நண்பர்கள் ஓட்டு போட சிறு தயக்கம் காண்பிக்கின்றனர்,

அதாவது கருவிப்பட்டைக்கு கீழே கமெண்ட் வர வேண்டும்.


உங்கள் பதிலுக்காக

ஜாக்கிசேகர்