ஞாயிறு, ஏப்ரல் 26, 2009

ஆபத்தான ஜெயா ஆதரவுப் போக்கு

ஜெயலலிதா தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவிச்சி நிறைய பதிவுகள் வந்துக்கிட்டு இருக்கு. இரண்டு தினங்களுக்கு முன்புதான் அவரோட நேர்காணல் ஒன்றை ஒரு ஆங்கிலத் தொலைக்காட்சியில் (CNN-IBNன்னு நினைவு) பார்த்தேன். "இலங்கைத் தமிழர்கள் வேறு, புலிகள் வேறு", "பிரபாகரன் தீவிரவாதி கிடையாதுன்னு சொன்னதால கருணாநிதி மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்ஞ்சிருக்கணும் / ஆட்சி கலைக்கப் பட்டிருக்கணும்", "அதைக் கேட்டுக் கொண்டு சோனியா காந்தி ஏன் அமைதி காத்துக்கிட்டு இருக்காங்க? அவங்க காங்கிரஸ் தலைவி கிடையாதா? ராஜீவ் காந்தியின் விதவை கிடையாதா?"ன்னெல்லாம் பேசியது எல்லார் மனதிலும் பசுமையா இருந்திக்கிட்டு இருக்கும்போதே அடுத்த நாள் அந்தர் பல்டி அடித்து தமிழ் ஈழக் கோரிக்கையை வைக்கறாங்க. அவங்க இதுக்கு முன்னாடி பேசிய "ஈழத் தமிழர்கள்ன்னு யாரும் கிடையாது, இலங்கைத் தமிழர்கள்ன்னுதான் இருக்காங்கன்னு" கண்டுபிடித்துத் தெரிவித்த கருத்துகளெல்லாம் கூட யாரும் மறந்திருக்க முடியாது. இது போன்ற குறுகிய காலத்திற்குள் தெரிவித்த எதிர்மறையான கருத்துகளே நிறைய இருக்கும்போது, அவரது ஆட்சிக்காலத்தில் ஈழத்தவர்களுக்கு கிடைத்த அவமதிப்பு (காண்க இன்றைய கானா பிரபாவின் பதிவு) போன்ற நிகழ்வுகளை எல்லாம் நாம் மறந்தாலும் ஈழத் தமிழர்கள் மறக்கமாட்டாங்க.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்ன்னு ஒருத்தர் இலங்கைக்குப் போய் விடியோ பிடிச்சிக்கிட்டு வந்தாராம். அதைப் பாத்து இவங்க மனம் மாறினாங்களாம். தமிழகத் தமிழர்கள் இந்தப் பூச்சுற்றலுக்கெல்லாம் காதைக் காட்டிக்கிட்டு இருந்தாலும் ஆச்சரியமில்லை. (அதுதான் நடந்துக்கிட்டும் இருக்கு). ஈழம்ங்கிற தனி நாடு கோரிக்கையை இவங்க ஆதரிக்கறாங்களா, அப்படீன்னா அந்த கோரிக்கையை முன்வைத்துப் போராடும் விடுதலைப் புலிகளுக்கு இவங்க ஆதரவு தெரிவிக்கறாங்களான்னு விவரமா தெரியல. ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் இவங்க 'separate state' கோருவதா செய்தி வருது. அப்படீன்னா தமிழர்களுக்குன்னு ஒரு தனி மாநிலத்துக்குத்தான் இவங்க ஆதரவளிக்கறாங்களான்னு யோசிக்கத் தோணுது. (இவங்க வரும் நாட்களில் அப்படி ஒரு அந்தர் பல்டி அடிக்கவும் சாத்தியமிருக்கு) விடுதலைப் புலிகளை ஆதரிக்காம தனி ஈழத்துக்கு ஆதரவுங்கிற நிலைப்பாடு எடுக்கறவங்க எனக்கு ஆபத்தானவங்களாவே படறாங்க. மதில் மேல் பூனை போன்றவங்கதான் இவங்கல்லாம்.

தமிழக / புதுவைத் தொகுதிகள் நாற்பதும் இவங்க கையில் சிக்கும் நிலையில், அதைப் பயன்படுத்தி மத்தியில் ஆளும் கூட்டணியில் இடம் பிடிச்சிட்டு, பழையபடி (ஈழ விவகாரத்தைப் பொறுத்த வரை) முருங்க மரம் ஏறக்கூடியவங்களாதான் இவங்க எனக்கு தெரியறாங்க. தேசிய அளவில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும் போலத் தெரியுது. அப்போது தமிழகத்தில் அதிமுக கூட்டணி அதிக இடங்களைப் கைப்பற்றும் பட்சத்தில், அது பாஜகவின் இயல்பான கூட்டணிக் கட்சியா (கருத்தியல் / பாசிசம் போன்ற ஒற்றுமைகளின் அடிப்படையில்) அமைந்து விடும் வாய்ப்பிருக்கு. ஆக, அதிமுக கூட்டணிக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வெற்றியும் இந்துத்வாவுக்குக் கிடைக்கும் வெற்றியே. (மற்றும் ஈழப் போராட்டத்துக்குக் கிடைக்கும் தோல்வியே)

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கும் அது சாதகமான நிலைமையாகவே இருக்கும்ன்னு எனக்குத் தோணுது.

17 கருத்துகள்:

Machi சொன்னது…

எதிரியை விட துரோகி மோசமானவன் என்பது உண்மையல்லவா?

பெயரில்லா சொன்னது…

Tamil and Saivam are both held in high regards by Tamil of Eelam. There is no new need for Hindutva there.

On the other hand, I do think these people would be better of as muslims.

-kajan

பெயரில்லா சொன்னது…

உங்கள் கருத்துடன் ஒத்துப்போகிறேன். இன்றைய நிலையிலே காங்கிரஸ் முற்றாக தமிழ்நாட்டிலிருந்து ஒழியவேண்டும். கருணாநிதியும் சேர்ந்து சாயவேண்டும். அதேநேரத்திலே இந்த அம்மணி முழுதாக வெற்றி பெறவுங்கூடாது. நாளொரு நாக்கும் பொழுதொரு பேச்சும் கொண்டவர் இவர்.

ஈழத்தமிழர் சார்பு வேட்பாளர்கள் அவர் சார்ந்த கூட்டணி சாராது வெல்ல வேண்டும். காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்குக் கட்டுப்பணமும் கிட்டக்கூடாது.

ஜெயலலிதாவின் வெற்றி மட்டுப்படுத்தப்பட்ட வெற்றியாக அவருக்குப் புரியும்வகையிலே அமையவேண்டும்.

Voice on Wings சொன்னது…

குறும்பன், துரோகி வீழ்த்தப்ப்பட வேண்டியவனே. ஆனால், குறுகிய கால ஆதாயங்களுக்காக நண்பனைப் போல் நடிக்கும் எதிரி மிக மோசமானவன்/ள் என்பதுவும் உண்மையே. இவர்களை விட '49 ஓ' / எண்ணற்ற சரத்பாபுக்கள் / டிராஃபிக் ராமசாமிகள் மேலானவர்கள் என்பது எனது தாழ்மையான கருத்து.

காஜன், சைவம் / வைணவம் குறித்து எனக்கு எந்த ஆட்சேபனையுமில்லை, அவை வீட்டின் நான்கு சுவர்களுக்குள் பின்பற்றப்படும் வரை. அத்வானி / மோடி / ஜெயலலிதாக்கள் அதைத் தெருவுக்குக் கொண்டு வருவதுதான் பிரச்சனையே.

அனானி, ஒத்த கருத்துக்கு எனது நன்றி.

Sri Rangan சொன்னது…

//ஆக, அதிமுக கூட்டணிக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வெற்றியும் இந்துத்வாவுக்குக் கிடைக்கும் வெற்றியே.//

100% right.

ரவி மிகவுண்மையான பதிவு இது.உங்களோடு உடன்படுகிறேன்!

ஆ.ஞானசேகரன் சொன்னது…

தற்போழுது நாம் என்ன முடிவுக்கு வந்தால் நமக்கும் தமிழர்களுக்கும் நல்லது... யாராவது சொல்லுங்களேன்

பெயரில்லா சொன்னது…

//அவரது ஆட்சிக்காலத்தில் ஈழத்தவர்களுக்கு கிடைத்த அவமதிப்பு (காண்க இன்றைய கானா பிரபாவின் பதிவு) போன்ற நிகழ்வுகளை எல்லாம் நாம் மறந்தாலும் ஈழத் தமிழர்கள் மறக்கமாட்டாங்க.//
கானா பிரபாவை தவர மற்ற இலங்கைதமிழர்கள் எல்லாம் எப்பவோ அதை மறந்திட்டாங்க. அவர்களின் தாகமே தமிழ் அன்னை ஜெயலலிதாவின் வெற்றியே.

அ. இரவிசங்கர் | A. Ravishankar சொன்னது…

வழிமொழிகிறேன்.

பெயரில்லா சொன்னது…

In India, all say "It is not about evil versus good in our country, it is about choosing the lesser evil."

Look at the conduct of Karunanidhi and Congress. Right now, they are the bigger evil. Definitely not a difference from their past.

JJ is no different. But voting out Karunanidhi, will see an entirely different approach my him and his party members, in how they are approaching Eelam issue. In any case,

"Saakum pothu Annan thinnai-il irrukka koodathu"...

JJ and MK need to go. But VK is not the option:-( Where do people go?

-kajan

பெயரில்லா சொன்னது…

இன்று ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இணையத்தில் எழுதுபவர்களுக்கு எல்லாம் ஒரு ஒற்றுமை இருக்கிறது, அவர்கள் எல்லாம் வன்னியர்கள். அம்மா ஜெயித்துவிட்டால் சின்ன ஐயாவுக்கு பதிவி கிட்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு

ரவி சொன்னது…

இன்று ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இணையத்தில் எழுதுபவர்களுக்கு எல்லாம் ஒரு ஒற்றுமை இருக்கிறது, அவர்கள் எல்லாம் வன்னியர்கள். அம்மா ஜெயித்துவிட்டால் சின்ன ஐயாவுக்கு பதிவி கிட்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு


நானும் எழுதியுள்ளேன். நான் வன்னியர் இல்லை. எந்த முத்திரை குத்த முடியும் என்று யோசித்து சொல்லவும் போலி...

பெயரில்லா சொன்னது…

LOL,
Even I am not from that above community.

Find another reason. Wherever we go, we'll be identified as Tamil. Especially among Indians. Today, there are millions of Tamils whose lives are a question mark in Srilanka. The self-professed Tamil Leader, who could have intervened and stopped long before, is sitting. Did Congress look at the plight of Tamils and Bengalis pre-Bangladesh, the same way?

JJ is no better or worse than MK. For the people, voting for one or the other is the same, living-standard wise.

-Kajan

Machi சொன்னது…

////ஆனால், குறுகிய கால ஆதாயங்களுக்காக நண்பனைப் போல் நடிக்கும் எதிரி மிக மோசமானவன்/ள் என்பதுவும் உண்மையே.//

உங்களுக்கு இவன்\ள் எதிரி என்று தெரியும். ஆனால் இவ்வளவு நாள் கூட இருந்தே குழி பறித்த, நண்பன் போன்று நடித்த துரோகியின் பாதிப்பு மிக அதிகம், அது உங்களை மீண்டு வர முடியாமல் செய்து விடும். துரோகியை நம்பினால் அதோகதி தான்.

//இவர்களை விட '49 ஓ' / எண்ணற்ற சரத்பாபுக்கள் / டிராஃபிக் ராமசாமிகள் மேலானவர்கள் என்பது எனது தாழ்மையான கருத்து.//

உண்மை. நம்பி நம்பி கழுத்தறுத்த துரோகிக்கு இது பாடம் சொல்ல வேண்டிய நேரம், வாய்ப்பை வீணாக்கலாமா???

பெயரில்லா சொன்னது…

//செந்தழல் ரவி said...
நானும் எழுதியுள்ளேன். நான் வன்னியர் இல்லை. எந்த முத்திரை குத்த முடியும் என்று யோசித்து சொல்லவும் போலி...
//

ஐயா! பொட்டீகடையின் பதிவை பார்க்கவும், வெட்கங்கெட்டு போய் அதிமுகவுக்கு ஓட்டு கேட்கிறார் தமிழர் என்ற போர்வையில், அவர்களுக்கு வேண்டியதெல்லாம் பாமகவுக்கு ஓட்டு

Voice on Wings சொன்னது…

ஸ்ரீரங்கன், ஞானசேகரன், ரவிசங்கர் (ஸ்ரீ ஸ்ரீ? ;) ), செந்தழல் ரவி, குறும்பன், காஜன், மற்றும் அனானி நண்பர்கள், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஞானசேகரன்,

//தற்போழுது நாம் என்ன முடிவுக்கு வந்தால் நமக்கும் தமிழர்களுக்கும் நல்லது... //

அப்படி ஒரு நல்ல முடிவு எதுவும் இப்போது இருக்கிற மாதிரி எனக்குத் தெரியல :)

காஜன், அந்த 'lesser evil' யாருங்கிறதுலதான் பிரச்சனையே. வை.கோ. திருமா, ராமதாஸ் இவர்களில் யாராவது வருங்காலத்தில் வலுவான தலைவரா உருவெடுப்பாங்கன்னு நம்புவோம். அதுவரை 'lesser evil' யாரு என்பதில் மட்டுமாவது தெளிவா இருப்போம்.

அனானி (April 27, 2009 1:12 AM), உங்களோட கருத்து ஏற்கக் கூடியதா இல்லை. பொட்டிக்கடை சத்யாவின் பதிவுகளைப் படித்து வருவதால் அவர் குறித்து நீங்கள் கூறுவதையும் ஏற்கவில்லை.

அனானி (April 26, 2009 10:28 PM), 'தமிழ் அன்னை' ஜெயலலிதாவா? :) எனக்கு சிரிப்பு வருவதால் நீங்க நகைச்சுவைதான் செய்யறீங்கன்னு நம்பறேன் :)

குறும்பன், தமிழ் சசியின் இன்றைய பதிவில் ஒரு பின்னூட்டம் போட்டிருக்கேன். அதையே உங்களுக்கும் விடையா தெரிவிச்சிக்கறேன். (அதை சேமிச்சி வைக்கல்ல. அது வெளியாகும்போது பார்த்துக்கறீங்களா? சிரமத்திற்கு மன்னிக்கவும்)

பெயரில்லா சொன்னது…

Voice on Wings, இலங்கை தமிழர்கள் பலர் இப்போ ஜெயலலிதாவை தலையில் தூக்கி வைத்திருப்பதால் நீங்கள் நம்பின மாதிரி தமிழ் அன்னை ஜெயலலிதா எனறு நகைச்சுவையாக தான் சொன்னேன்.

Kasi Arumugam சொன்னது…

Agreed.