புதன், ஜனவரி 23, 2008

எப்படி வேண்ணா இருக்கலாம்

அண்மையில் சில பதிவுலக மூத்தவர்கள் வெளியிட்டிருக்கிற சில கருத்துகளால் வாயடைச்சி போயிருக்கேன். அந்த வியப்பை பதிவு செஞ்சிடலாமுன்னு.........

ஓஷோவையும் பெரியாரையும் ஒப்பிட்டு சுகுணா திவாகர் ஒரு இடுகை வெளியிட்டிருக்காரு. அதுல மு.சுந்தரமூர்த்தி பின்வரும் கருத்து தெரிவிச்சிருக்காரு:

//இருவரும் பாலுறவு இன்பத்தின் தேவையை வலியுறுத்தும் அதேவேளையில் கருவுறுதலை நிராகரிக்கின்றனர்.//

It should be quite opposit. Sexual pleasure is an incentive to engage in reproductive activity. All animals, except humans, engage in sexual activities for reproductive purpose and do not care for sexual pleasure at other times. Only humans turned this natural activity upside down--do it for pleasure even when not needed much like other human habits such eating more than we need to. And calls like this to have sex but shun the responsibility of bearing children sounds revolutionary but it is irrational. It tries to take women's liberation too far.
கொஞ்சம் சிரமம் பாக்காம அவரது கருத்தை மொழி பெயர்த்தோம்ன்னா:
உண்மையில் அதற்கு நேர்மாறாக இருக்க வேண்டும். இனவிருத்தியை ஊக்குவிப்பதற்கே உடலுறவு இன்பமயமானதாக உள்ளது. மனித இனத்தைத் தவிர மற்ற உயிரினங்கள் அனைத்தும் உடலுறவை இனவிருத்திக்காகவே மேற்கொள்கின்றன. அதிலுள்ள இன்பத்தை ஒரு பொருட்டாகவே எண்ணுவதில்லை. ஆனால் மனிதர்கள் மட்டும், (இனவிருத்தி என்கிற) தேவை இல்லாத போதும் இன்பத்திற்காக உடலுறவில் ஈடுபடுகிறார்கள், அவர்களது (தேவைக்கதிகமாக உண்பது போன்ற) மற்ற தேவையற்ற பழக்கங்களைப் போலவே. உடலுறவை ஆதரிக்கும் ஆனால் மகப்பேற்றை எதிர்க்கும் இத்தகைய அறைகூவல்கள் புரட்சிகரமானவையாகத் தோன்றலாம், ஆனால் அவை பகுத்தறிவு அடிப்படையில் எழுபவை அல்ல. இவை பெண் விடுதலையை வரம்புக்கு மீறி எடுத்துச் செல்பவை.
இந்தக் கருத்திலுள்ள அனுமானங்கள், போதிக்கப்படும் நெறிகள், ஒரு தனிநபர் முடிவுக்குள் மூக்கை நுழைக்கும் அத்துமீறல்............... இப்படி எதில் ஆரம்பிச்சி சொல்றது? உடலுறவு இன்பமா இருக்கு, சாப்பாடு இன்பமா இருக்கு, இசை இன்பமா இருக்கு, ஒரு மலரின் மணம் இன்பமா இருக்கு......... இவை அனைத்துக்கும் எதாவது காரண காரியம் இருந்துதான் இப்படி இன்பமா இருக்கா? அந்த காரணத்துக்கு கர்த்தா யாரு? 'இயற்கை அன்னை'ன்னு எதாவது கற்பிதமா? இன விருத்தி ஏற்படாம உடலுறவு கொண்டா யாருடைய உணர்வுகள் / நம்பிக்கைகள் புண்படுத்தப்படுது? நான் கூடலைக் கொண்டாடுவதால் உங்கள் தட்டிலிருக்கும் உணவு பறிக்கப்படுதா? மேலே கூறியிருக்கிற (போதும் நிறுத்திக்கோன்னு சொல்ற) கருத்துக்கும் மத அடிப்படைவாதத்திற்கும் என்ன வேறுபாடு? பெண் விடுதலைக்குன்னு எதாவது வரம்பு இருக்கா? யாருடைய விடுதலைக்கும் எதுவும் வரம்பு இருக்கா? அந்த வரம்பை விதிக்கும் யோக்கியவான் யாரு? அவருக்கு என்ன தகுதி?

இதைப்போலவே, நான் வாயடைச்சி போன இன்னொரு கருத்து, காசி 'ப்ளாக் பற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சி' என்ற இடுகையில் பின்னூட்டத்தில் தெரிவிச்ச பின்வரும் கருத்து:
ஆங்கில வலைப்பதிவுகளில் புனைவுகள் எழுதுபவர் பத்தில் ஒன்றுகூட இல்லை, ஆனால் தமிழனை கற்பனையிலேயே மூழ்கடிக்க போட்டிபோட்டுக்கொண்டு பத்திரிகைகளோடு இப்போது வலைப்பதிவுகளும் வரிந்துகட்டுகின்றன. இது சரியான அறிகுறியல்ல (இதை இங்கே சொல்வது பலருக்கும் பிடிக்காது என்று தெரிந்தாலும் இதுதான் உண்மை). காத்திரமான வாழ்வியல் சிந்தனைகள், அன்றாட வாழ்க்கைக்குப் பயனுள்ள தகவல்கள் அதிகம் எழுதப்படாததும், எழுதப்படுபவை கவனம் பெறாததும் இதனாலேயே. என்று எழுத்தாளனாகும் ஆசையை விட்டொழிக்கிறாரோ அன்றே ஒரு வலைப்பதிவர் தன் முழு வீச்சையும் வெளிப்படுத்த முடியும். மாறாக பத்தியாளனாக (columnist) ஆசை வையுங்கள் என வேண்டுகோளை முன்வைக்கிறேன்.
போதனைகள்........ போதனைகள்................. :) ஆங்கில வலைப்பதிவுகள் ஏதோ உயர்வான இடத்திலிருப்பவை என்பது போன்ற அனுமானங்கள். எது நல்ல 'அறிகுறி', எது அல்ல என்று அறிந்து தெளிந்த தொனி. என்ன மாதிரியான வெளியீடுகள் வெளி வரலாம்கிறத தீர்மானிக்கும் அதிகாரம் அதைப் படைப்பவரைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது. கோலம், சமையல் குறிப்பிலிருந்து, கடித் துணுக்குகள் வரை எதை வேண்டுமானாலும் ஒருவர் தனது பதிவில் வெளியிடலாம். போணியாகும் சரக்கு எதுவானாலும் அதைக் கடைப்பரப்பலாம். கதை கவிதைகளுக்கு ஒரு பெரிய வாசகர் வட்டம் இருக்கு நான் பார்த்த வரை. (நானும் அந்த வட்டத்துக்குள்ள இருக்கேன்.) அது நல்ல அறிகுறியா இல்லையா என்பது பற்றியெல்லாம் கவலைப்படாம அத்தகைய வெளியீடுகள் மேலும் மேலும் தொடரணும்.

இறுதியா சொல்லிக்க விரும்பறது............ எப்படி வேணா இருங்க.

11 கருத்துகள்:

ROSAVASANTH சொன்னது…

சுகுணாவின் பதிவை படிக்காமல் இந்த பதிவை படித்து, மேலே உள்ள ஆங்கில கருத்து ஓஷோவினுடையதாக நீங்கள் சொல்லி விமர்சிக்கிறீர்களோ என்று குழம்பி, தெளிவு வேண்டி பின்னூட்டம் இடப்போய், நல்ல வேளையாய் எழுதும் முன் சுகுணா பதிவிற்கு சென்று படித்ததால் இப்போது புரிகிறது.

மனித வரலாற்றில் பேசிய சமத்துவம், மேலும் மற்ற எல்லா வகை விடுதலை கருத்துக்களுமே ஒரு வகையில் இயற்கையானது என்று அந்தந்த காலகட்டத்தில் கற்பித்து கொண்ட விஷயங்களுக்கு எதிரானதாகவே இருந்திருக்கிறது. ஒரு வகையில் தேனிக்களும், எறும்பு சமுதாயமும் இயற்கையானது என்றால், அடிமை வழக்கம் கூட இயற்கையானது என்று வாதிட முடியும். இந்த வகை இயற்கையாக இருந்த அடிமை வழக்கத்தை விட்டுதான் நாம் இந்த கட்டத்தை அடைந்திருக்கிறோம். ஆகையால் என்னத்திற்காக இயற்கையாகவும், இயல்பான பகுத்தறிவு என்று தட்டையாய் தெரிவதையும் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுப் பார்கலாம். அடுத்து சற்று யோசித்து பார்த்தோமானால் இயற்கைக்கு எதிரானது என்று கருத்துவதும் (உதாரணமாக இனவிருத்தி தவிர்த்த பாலின்பம்) ஒரு வகையில் இயற்கைக்கான சட்டகத்திற்கு உள்ளேயே மேற்கொள்ளப்படும் முயற்சியே. அந்த வகையில் இயற்கையானது அல்லாதது என்று எதுவும் இல்லை என்றும் கொள்ளலாம் என்று தோன்றுகிறது.



அது சரி, விலங்குகள் `இயற்கையாக அமைந்த' உணர்வுகளின் போக்கில் செயல்படுவதை முன்வைத்து, மனிதன் தன் அறிவு கொண்டு யோசித்து பாலின்பம் மட்டும் போதும்,
வாரிசு வேண்டாம் என்று முடிவு செய்வது irrationalஆ?

சிறில் அலெக்ஸ் சொன்னது…

1. டால்ஃபின்கள் இன்பத்திற்காக செக்ஸ் வைத்துக் கொள்கின்றன என கேள்விபட்டிருக்கிறேன்.இங்கே உண்மை என்கிறார்கள்

2. மலருக்கு மணம் இருப்பது காரணங்களாலேயே. வண்டுகளை இழுக்க. அதன் மூலம் இனப்பெருக்க. சில மலர்கள் அழுகியவாடையை வீசி அந்தப் பகுதியில் அதற்கென இருக்கும் வண்டுகளை இழுக்கின்றன.

3. பதிவில் என்ன வேண்டுமானாலும் எழுதலாம். இதையும் படிச்சிருங்க.

4. ஒருவரின் சிந்தனையைத் தவிர மற்ற எல்லா விடுதலைகளுக்கும் எல்லைகள் இருக்கிறது. (என நினைக்கிறேன்)

மு. சுந்தரமூர்த்தி சொன்னது…

VoW,
You reaction makes an interesting reading and you have excellent imagination skills. Just relax and have as much sex and eat as much as you wish. I'll not stand in your (for that matter anyone else's way) as you seem to be afraid of :-)

Advocating sexual freedon and equality of men and women is one thing and advocating that women should refuse to conceive is quite another. Just because men cannot bear children, calling women to refuse to bear children is neither progressive nor scientific. When homo sapien species evolves with a reproductive system so that both men and women can conceive or science advances to the level of creating a baby entirely in vitro we can take the views of Periyar and Osho seriously. But, unfortunately, at least until then, the only way we can sustain the human race is the way it is now--women bearing children.

The views of Periyar and Osho are certainly absurd from a scientific viewpoint even as it sounds progressive. That is the point of my comment not against unlimited sex without a reproductive purpose.

Vasnath,
//மனிதன் தன் அறிவு கொண்டு யோசித்து பாலின்பம் மட்டும் போதும்,
வாரிசு வேண்டாம் என்று முடிவு செய்வது irrationalஆ?//

Just imagine an hypothetical situation in which all women in the world, with no exception, get this message at the same time and unanimously embrace this idea.

I am wondering how many progressive men among us would take this seriously and decide not to have children. We easilty get excited about progressive or idealistic solutions even though we cannot follow them ourselves. This particular view of Periyar has no more than a rhetorical value.

"மனிதப் பிறவி மிருகங்களை விட உயர்வானதல்ல" என்று பெரியார் கூறியுள்ளதையும் கவனிக்க வேண்டும்.

Voice on Wings சொன்னது…

ரோசாவசந்த்,

குழப்பத்திற்கு மன்னிக்கவும். அது சுந்தரமூர்த்தியின் கருத்து என்று குறிப்பிட்டிருக்கிறேன். மேலும் தெளிவாக எழுதியிருக்கலாமோ என்னவோ. செயற்கையானது என்பதால் பகுத்தறிவற்றதுன்னு முடிவு செய்து, அதை taboo ஆக்குவதைத்தான் நானும் விமர்சித்திருக்கிறேன்.

************

சிறில்,

1. டால்ஃபின் பற்றிய தகவலுக்கு நன்றி.

2. மலருக்கு மணம் இருப்பது வண்டுகளை கவர்வதற்கே என்ற காரணம் சரி. ஆனால் அதன் மணம் உங்களுக்கு ஏன் இன்பமாக இருக்க வேண்டும்? நீங்கள் அதன் இனவிருத்தியில் எந்தப் பங்கும் வகிக்கப் போவதில்லைதானே?

3. நான் வலைப்பதிவுகளை accessible content என்ற வகையில்தான் பார்க்கிறேன். அதற்கான இலக்கிய (அல்லது சமூக) நோக்கங்கள் எதுவும் இருந்தாக வேண்டும் என்ற தேவை இருப்பதாக நான் நினைக்கவில்லை. படைப்பவரின் நோக்கம் நிறைவேறினால் தொடர்ந்து படைப்பார். வாசகரின் நோக்கம் நிறைவேறினால் தொடர்ந்து வாசிப்பார். இடையில் வேறெந்த நாட்டமைகளுக்கும் தேவை இருப்பதாக நான் நினைக்கவில்லை.

4. ஒருவரின் விடுதலைகளுக்கு எல்லைகள் இருக்கலாம். அவற்றை நிர்ணயிப்பது யார் எனபதே எனது கேள்வி. (மற்றும் அந்த நபரைத் தவிர வேறெவருமில்லை என்பது எனது புரிதல்)

Voice on Wings சொன்னது…

சுந்தரமூர்த்தி, உங்கள் அனுமதிக்காக நான் காத்துக் கொண்டிருக்கவில்லை :) பெரியாரும் ஓஷோவும் ஒட்டுமொத்தமாக யாரும் இனவிருத்தி செய்யக்கூடாது என்று முழங்கவில்லை என்று நினைக்கிறேன். பாலுறவு விடுதலையையே இருவரும் முன்வைத்தார்கள், அதை அடைவதற்கான உத்தியாக கருத்தடையைப் பரிந்துரைத்தார்கள் என்பது எனது புரிதல். கட்டற்ற பாலுறவுக்கு எதிராக நீங்கள் கருத்து கூறவில்லையெனில் மிக்க மகிழ்ச்சி :) 'நூறு சதவீத பெண்களும் பெரியார் / ஓஷோவின் பரிந்துரையைப் பின்பற்றினால்' என்ற ரீதியில் செல்லும் உங்களது கற்பனை வளமும் அபாரமாகவுள்ளது.

SnackDragon சொன்னது…

வாய்ஸ்,

சீரியஸா எதுவும் இல்லை. "எப்படிவேணா இருங்க" ங்குறது போதனையா? இல்லையா? ;‍)

மு. சுந்தரமூர்த்தி சொன்னது…

//சுந்தரமூர்த்தி, உங்கள் அனுமதிக்காக நான் காத்துக் கொண்டிருக்கவில்லை :)
//

நல்லது :-)

//இந்தக் கருத்திலுள்ள அனுமானங்கள், போதிக்கப்படும் நெறிகள், ஒரு தனிநபர் முடிவுக்குள் மூக்கை நுழைக்கும் அத்துமீறல்...............//

இதப் பாத்து உங்க சுதந்திரத்தில் அத்துமீறுவதாக பயந்துட்டிங்களோன்னு நெனச்சேன் :-)

அனுமானங்கள், போதனைகள், அத்துமீறல்ன்னு சகட்டுமேனிக்கு கற்பனைக் குதிரையை தட்டிவிட்டிருக்கிறீர்கள். பெரியார்/ஓஷோவின் போதனைகளை விட என்னுடைய போதனைகளை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். கவலை வேண்டாம். :-)

//இருவரும் பாலுறவு இன்பத்தின் தேவையை வலியுறுத்தும் அதேவேளையில் கருவுறுதலை நிராகரிக்கின்றனர்.//

"It should be quite opposit" என்று நான் சொன்னதின் அர்த்தம் "பாலுறவு இன்பம் தேவை" vs "கருவுறுதலை நிராகரிக்கின்றனர்" என்கிற கோட்பாடுகள் எப்படி இயற்கைக்கு முரணானவை என்பதே. பாலுறவு இன்பம் தேவையல்ல, நுகர்வு. கருவுறுதல் மனித ஏற்பாடல்ல, இயற்கையின் ஏற்பாடு. இதில் எந்த பெண் விடுதலையுமில்லை. மாற்றப்படவேண்டியவை ஆண்கள் இயற்கை விதிகளைத் தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொண்ட ஏற்பாடுகளையே தவிர இயற்கை விதிகளை அல்ல.

"பாலுறவு கொள்ளுங்கள். ஆனால் குழ்ந்தை பெற்றுக்கொள்ளவேண்டாம்" என்று அரசாங்கமே சொல்கிறது. இதுவும் கூட பாலுறவு விடுதலையா?

இப்படிப்பட்ட கருத்தாக்கத்தை ஒரு புரட்சிகரமான கருத்தாக வைப்பதில் உள்ள அபத்தத்தை சுட்டிக்காட்டவே நான் எழுதியது. இதை மேலும் விவாதிக்குமளவிற்கு இதில் ஒரு வெங்காயமும் இல்லை.

சிறில் அலெக்ஸ் சொன்னது…

//ஆனால் அதன் மணம் உங்களுக்கு ஏன் இன்பமாக இருக்க வேண்டும்? நீங்கள் அதன் இனவிருத்தியில் எந்தப் பங்கும் வகிக்கப் போவதில்லைதானே?
//
it might entirely be incidental that flowers smell good to us too. Also this is not true with all flowers. Some flowers, in the wild, give foul smell to attract insects that are attracted to that smell.

கொஞ்சம் வீம்புக்கு யோசித்தால்...மோசமான மணம் தரும் பூக்களுள்ள செடிகளை அல்லது அழகில்லாத பூக்களுள்ள செடிகளை நாம் விரும்பி வளர்ப்பதில்லையே...அப்படி வளரும் செடிகள் ஒன்று insignificantஆக இருக்கும் இல்லை அவற்றின் வளர்ச்சிக்கு பிற உயிரின் (வண்டு, மனிதன்) உதவி தேவையில்லாமல் இருக்கலாம். பார்த்தீனியம், எருக்கு எல்லாம் காற்றில் பரவி வளரும்.


//ஒருவரின் விடுதலைகளுக்கு எல்லைகள் இருக்கலாம். அவற்றை நிர்ணயிப்பது யார் எனபதே எனது கேள்வி//
நிதர்சனத்தை கேட்கிறீர்களா அல்லது விருப்ப நிலையை(ideal) கேட்கிறீர்களா?

சிந்தனையைத் தவிர்த்த விடுதலைக்கு எல்லைகள் எங்கிருந்தெல்லாமோ வருகின்றன.
ஆனால் யோசித்துப் பார்த்தால் விடுதலை என்பது ஒரு மனநிலை எனத் தோன்றுகிறது.

Voice on Wings சொன்னது…

கார்த்திக், 'எதிர் போதனை', 'போதனை மறுப்பு' அப்படீன்னு எதாவது ஒண்ணா நினைக்கலாம் :)

************

சுந்தரமூர்த்தி,

சுகுணா பதிவிலிருந்த உங்கள் ஆங்கிலப் பின்னூட்டத்தைப் படித்து நான் புரிந்து கொண்டது - "மனிதனும் மற்ற விலங்கினங்களைப் போல் இனவிருத்திக்காக மட்டுமே பாலுறவு கொள்ள வேண்டும்" என்பதே. அதற்கான எதிர்வினைதான் அத்துமீறல் etc etc. இந்தப் பதிவில் 'இனவிருத்தி நோக்கமற்ற பாலுறவை' நீங்கள் எதிர்க்கவில்லை என்று தெளிவுப் படுத்தியதற்கு நன்றி.

//"பாலுறவு கொள்ளுங்கள். ஆனால் குழ்ந்தை பெற்றுக்கொள்ளவேண்டாம்" என்று அரசாங்கமே சொல்கிறது. இதுவும் கூட பாலுறவு விடுதலையா?//

அரசாங்கம் தனது கடமைகளை எளிமையாக்குவதற்காக இப்படிக் கூறுவதை அதன் ராஜதந்திரம், சாணக்கியம் என்று வேண்டுமானால் கூறலாம். அதன் நோக்கம் குடிமக்களின் பாலுறவு விடுதலை கிடையாது.

//இப்படிப்பட்ட கருத்தாக்கத்தை ஒரு புரட்சிகரமான கருத்தாக வைப்பதில் உள்ள அபத்தத்தை சுட்டிக்காட்டவே நான் எழுதியது.//

புரட்சிகரமானது என்று நான் எண்ணுவது - தனது கருத்தரிப்பை முடிவு செய்யும் உரிமை அப்பெண்ணிடமே உள்ளது என்ற இந்த இருவரின் கருத்தும் நம்பிக்கையும்தான். அந்த உரிமையைச் செயல்படுத்தும் பொருட்டே, பெண்களுக்கு கருத்தரிப்பை மறுக்குமாறு இவர்கள் பரிந்துரைத்தனர் என்று எண்ணுகிறேன்.

இன்றைய நிலையிலும் பெரும்பாலும் அந்த உரிமை / முடிவு ஒரு பெண்ணிடம் இருப்பதில்லை, பல நேரங்களில் அவள் கணவனிடமும் கூட இருப்பதில்லை, மாறாக அவர்களைச் சுற்றியிருக்கும் உறவினர்களிடமே உள்ளது.

தனக்கு விருப்பமில்லாத நிலையில், தனது கணவனின் / மற்றவர்களின் விருப்பத்திற்காகக் கருத்தரிப்பது பாலியல் அடிமைத்தனமே, அதற்கு விஞ்ஞான, பகுத்தறிவுக் காரணங்கள் எவ்வளவுதான் இருந்தாலும்.

*************
சிறில்,

நிதர்சனம்தான் தெரிந்ததாயிற்றே. Ideal நிலையைப் பற்றித்தான் கேட்கிறேன். நம் விடுதலைக்கான எல்லைகள் வெளியிலிருந்து வருவதை பல நேரங்களில் தவிர்க்க இயலாது. உ-ம், சுமூகமான பயணத்திற்கு போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிப்பதைப் போல். ஆனால் பல நேரங்களில் நமது personal spaceஇலும் நமக்கு எல்லைகள் வெளியிலிருந்து வரையப்படுகின்றன. அவற்றை மட்டுமாவது தீவிரமாக எதிர்க்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையும் ஆகும்.

Kasi Arumugam சொன்னது…

வாவ் அய்யா,

ஒரு வாசகனா நான் வெச்சது 'வேண்டுகோ'ளுங்க, அதை 'போதனை'யாக்கி 'வாயடைச்சிப் போய்' நின்னு நீங்க சொன்ன 'போதனை'யில் நான் வாயடைச்சிப் போகலைங்க.

மத்தபடி பெரியவங்க இங்க பேசுன முக்காவாசி சமாச்சாரம் இங்க 'அவுட் ஆஃப் சிலப'சுங்க.

எதுக்கும் கொஞ்சம் இங்க ஸ்மைலி போட்டுக்குறேங்க :-) :D ;-)

அம்புட்டுதேனுங்க.

Voice on Wings சொன்னது…

காசி அய்யா,

வாங்க, உங்களப் பத்தித்தான் பேச்சு.

"இதை இங்கே சொல்வது பலருக்கும் பிடிக்காது என்று தெரிந்தாலும் இதுதான் உண்மை" அப்படீன்னு நீங்க சொன்னதிலிருந்தே நீங்க வாயடைச்சி போக மாட்டீங்கன்னு ஒரு எதிர்பார்ப்பு இருந்துச்சுங்க. அது பொய்யாகலைன்னு தெரிஞ்சதில எனக்கும் மகிழ்ச்சிதாங்க.

வாசகரா வேண்டுகோள் வச்சா சரிங்க. ஒரு மருத்துவரா தெர்மாமீட்டர் வச்சி பாத்து 'ஒண்ணும் சரியில்ல'ன்னு சொன்ன மாதிரி இருந்துச்சுங்க, கொஞ்சம். அதான் பீதி கெளம்பி பேதியாயிருச்சு.

(நானும் கொஞ்சம் ஸ்மைலி போட்டுக்கறேன் :) )