திருமணத்திற்குத் தாலியோ, சேர்ந்து வாழ்வதற்குத் திருமணமோ தேவையில்லைன்னுதான் நினைக்கறேன். திருமணம் என்பதே பொருளாதாரம் சம்மந்தப்பட்டதுதான். இருவருக்குமே பொருளாதாரக் கட்டாயங்கள் இல்லாத போது (அப்படி அமைவது பலருக்கு சாத்தியமாகாமல் போகலாம்), திருமணம் என்ற ஏற்பாடும் தேவையற்றதுதான்.
புகுந்த வீடு பொறந்த வீடு வகையறாக்களைப் பற்றி கருத்து கூற விரும்பல்ல. (ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் வீட்டில் மற்றவர்களுக்கு வேலையில்லை என்பது எனது கருத்து)
தாலி கட்டுதல் பெண்ணடிமைத்தனம்தான். வேறு மதங்களில் இருவருக்கும் மோதிரம் அணிவிக்கும் பழக்கமுள்ளது. அது ஒரு சமத்துவ நிலையாகப் படுகிறது. இங்கு மனைவிக்கு மட்டும் தாலி என்னும் போது, அது ஒரு பக்க சாய்வு நிலையாகத் தெரிகிறது.
திருமணத்திற்குப் பிறகு வேற்று மனிதர்களுடன் காதல் கொள்ளலாமான்னா, அது கூடாதுன்னுதான் தோணுது. Free love பற்றி எனக்கு அவ்வளவு பரிச்சியம் கிடையாது. 'இருவருக்கும் சம்மதமென்றால் இருவரும் வேற்று மனிதர்களைக் காதலிக்கலாம்' அப்படின்னுல்லாம் சொல்ற அளவுக்கு எனக்கு இன்னும் முதிர்ச்சி ஏற்படல்ல.
fantasyகளை ஒருவருக்கொருவர் தெரியப்படுத்துவதா வேண்டாமா என்று பொதுப்படையாக கூற முடியாது. வாழ்க்கைத் துணையின் மனநிலையைப் பொறுத்து அதை அவரவர்கள் முடிவு செய்வது நல்லது.
*********
இவையெல்லாம் திருமணத்திற்கு தாலி தேவையா? அப்படீன்னு ஒருத்தர் வெளியிட்டிருக்கிற இடுகைக்கு நான் அளித்த பின்னூட்டம். பொது நலன் கருதி அதை இங்க மீள் பதிவு செஞ்சிருக்கேன் :)
3 கருத்துகள்:
Voice on Wings,
//(ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் வீட்டில் மற்றவர்களுக்கு வேலையில்லை என்பது எனது கருத்து)
//
அதாவது, அவங்க கல்யாணம் பண்ணியோ, பண்ணாமலோ, தனியா வாழணுமுன்னு சொல்றீங்க, சரி, வயதான / உடல் நலமில்லாத பெற்றோர் இருந்தால் என்ன செய்வது ????
எ.அ.பாலா
பாலா, நான் நீங்கள் குறிப்பிடும் விதிவிலக்கான சூழ்நிலைகளை மனதில் கொண்டு எழுதல்ல. கேள்வி 'புகுந்த வீட்டிற்குச் செல்லும் பெண்'ணைப் பற்றி இருந்ததால், அந்த சூழ்நிலையை (அதாவது, அதிகாரம் செலுத்தக்கூடிய பெற்றோர் என்ற நிலையை) மனதில் கொண்டே எனது கருத்தைத் தெரிவித்தேன்.
திருமணமே பொருளாதார பாதுகாப்பை முன்னிறுத்தி ஏற்பட்டுள்ள ஒரு வழக்கம். பொருளாதார பாதுகாப்பை தவிர வேறு உபயோகங்கள் திருமணங்களுக்கு இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. 'திருமணப் பந்தத்தினை மீட்டெடுப்பதற்கான' சட்டங்கள் (Restitution of Conjugal Rights) இருந்தாலும் விரும்பாத ஒரு கணவனையோ அல்லது மனைவியையோ நடைமுறையில் சேர்ந்து வாழ வைப்பது நீதிமன்றங்களால் முடியாத காரியம். எனவேதான் தனது குடிமக்களுக்கு சமுதாய, பொருளாதார பாதுகாப்பை அளிக்கவல்ல வளர்ச்சியடைந்த நாடுகளில் தற்போது திருமண பந்தமில்லாமல் 'long term relationship' என்று அழைக்கப்படும் மனமொத்த இருவர் சேர்ந்து வாழும் முறை பரவலாக பின்பற்றப்படுகிறது. இந்த முறையில் வாழ்வதால் பல அனுகூலங்கள் இருக்கின்றன. இந்தியாவும் அவ்வாறு பொருளாதார வளர்ச்சி பெறும் எதிர்காலத்தில் இங்கும் மெல்ல மெல்ல அத்தகைய முறை பின்பற்றப்பட போகிறது. மும்பை போன்ற நகரங்களில் மேல்தட்டு மக்கள் சிலர் ஏற்கனவே அப்படி வாழ்கின்றனர். தகுந்த பொருளாதார பாதுகாப்பு இருக்கையில் இப்படி வாழ எண்ணம் கொள்ளும் யாரும் இம்முறையை தாராளமாக கடைபிடிக்க முடியும். 'இது அந்நிய கலாச்சாரம் இல்லை. காந்தர்வ முறை என்று தி நூல்களில் சொல்லப்பட்ட இந்திய கலாச்சாரத்தின் நவீன வடிவம்தான்’ என்ற வாதமும் வைக்கப்பட இயலும். எது எவ்வாறாயினும், கணவன் மனைவிக்கிடையே நிலவும் அன்பும், ஒருவரையொருவர் சார்ந்திருக்கும் தன்மையைத் தவிர வேறு எந்த தாலியும் திருமண பந்தத்திற்கு வேலி இல்லை...
http://marchoflaw.blogspot.com/2006/09/blog-post_27.html
கருத்துரையிடுக