வெள்ளி, ஏப்ரல் 14, 2006

காத்திருந்து..... காத்திருந்து.......

வேளை கெட்ட வேளையில்
உனை miss பண்ணும் இதயத்தை
சாந்தப் படுத்திடவே

குறுஞ்செய்தியும் அனுப்பி
அழைப்பும் விடுத்தேன்,
கிடைத்ததா, கண்மணியே?

காத்திருக்கேன்் இங்கு
தூதுவனை நோக்கியே,
வருவாய் நீயென்றே.

டிவியும் சலித்ததின்று,
இன்னிசையும் இறைச்சலாய்
தோன்றுதே, என்ன செய்வேன்?

சீக்கிரம் வந்துன்னைச்
சீண்டுமின்பம் தா,
தாமதிக்காதே, அன்பே.

அதுவரை வரிகளை
ஒடித்துக் கவிதை போல்
வடித்து வலையேற்றுவேனே.


4 கருத்துகள்:

SnackDragon சொன்னது…

//பாசாங்கு கவிதை //
? ;-)

Voice on Wings சொன்னது…

கார்த்திக்,
பாசாங்குக் கவிதை = வடிவமைப்பினால் கவிதையைப் போன்ற தோற்றத்தை அளிக்கும் ஒரு சொற்களின் கோர்வை :)

Sri Rangan சொன்னது…

இரவி,வணக்கம்!

குடிசார்மயப்படுத்தப்படும் இன்றைய நுட்பங்கள் மனிதத் தேவைகளோடு மிக நெருக்கமுறுவதும்,அதன் வாயிலாக உணர்வுகளோடு அதுவும் தொடர்பாடுவதும், வளர்ச்சியுறுவதும் சமுதாயத்தில் இயல்பாகிவிடும்.கவிதையில் பாசாங்கு என்பது எதிர்பார்ப்பிலிருக்கும் தேவைகளைச் சுமக்கவைக்கும் முயற்சி.

உணர்வுகளின் வெளிப்பாடுதாம் படைப்பாவது.அதுள் கவிதைக்கென்றொரு பிரத்தியேக மதிப்பீடுகளைக் கட்டிவைத்து-இது போலி,பாசாங்கு என்பதெல்லாம் வீண்!வேண்டுமானால் யாப்பு,இலக்கண வகைக்குள் அடங்காத-ஓசை நயமற்ற,சந்தமற்ற என்ற சுட்டல்களோடு மனிதவுணர்வினது வெளிப்பாடுகளைப் பார்ப்பதே சரியானது.இந்தவுணர்வுவெளிக்கு அப்பாற்பட்ட எந்தப்படைப்பும் அமரத்துவமாகி விடுவதில்லை.எல்லாமே ஒவ்வொருவரினதும் அநுபவத்துக்கும்,கற்பனையாற்றலுக்கும், மொழியறிவுக்கும் உட்பட்டு உயர்ச்சி,சிறப்படைவதுமாக இருக்கும்வேளையிலேயே இந்த உணர்வுகள் மனித மனவெளிகளுக்குள் உரசிக்கொள்கின்றன.-அவ்வளவுதாம்!

மேலெழுத்தப்பட்ட உணர்வு நறுக்கு ஒருவரினது தேவையின் வெளிப்பாடு.அது கவிதையாவது அல்லது பாசாங்காவது மற்றவரினது பார்வையிலல்ல!மாறாக அது இன்றைய மனித அநுபவத்தைச் சொன்னாலே அது கவிதைதாம

Voice on Wings சொன்னது…

ஆரோக்கியம், வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

ஸ்ரீரங்கன், உங்கள் பார்வை எனக்கு பிடித்திருக்கிறது. பெரும்பாலும் நான் கவிதை போன்றவற்றில் இறங்குவதில்லை, அதற்கான திறமையோ ரசனையோ இருந்ததில்லை என்பது முக்கிய காரணம். நீங்களே குறிப்பிட்டது போல், ஒரு 'தேவையின் வெளிப்பாடு' என்று வேண்டுமானால் குறிப்பிடலாம், நான் எழுதியுள்ளதை :)